...

"வாழ்க வளமுடன்"

22 பிப்ரவரி, 2010

காளான் அல்லது மஷ்ரூம்…


முன்பெல்லாம் கிராமத்து வீதிகளில் கிடைத்து வந்த இலவச உணவு காளான்கள். இந்த காளான்களுக்கு மாபெரும் மருத்துவக் குணாதிசயங்கள் இருப்பதாக இப்போது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

***

பெண்களைப் பெரிதும் தாக்கும் மார்பகப் புற்று நோயை சுமார் 64 விழுக்காடு வரை தடுக்கும் வல்லமை இந்த காளானுக்கு உண்டாம். காளானுடன் பச்சைத் தேனீரும் (கிரீன் டீ ) அருந்துவோருக்கு மார்பகப் புற்று நோய் வரும் வாய்ப்பு 90 விழுக்காடு குறைகிறதாம்.

***

சீனாவில் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வின் நீட்சி பல்வேறு வடிவங்களில் தொடரும் என தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.காளானில் புற்றுநோயை எதிர்க்கும் குணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் அதன் விளைவாகவே இப்படிப்பட்ட ஆராய்ச்சிகள் நடப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

***கான்சருக்கு அளிக்கப்படும் மருந்துகளைப் போலவே காளானும் செயல்படுகிறதாம். அதாவது கான்சரை உருவாக்கும் ஆஸ்டிரோஜென் ஹார்மோனை தடுக்கும் அல்லது மட்டுப்படுத்தும் திறன் காளான்களுக்கு உண்டாம்.

***

கான்சர் எதிர்ப்புக்கும், காளானுக்கும் இடையேயான தொடர்பு சமீபகாலமாகவே பல்வேறு ஆராய்ச்சிகளை தூண்டி விட்டிருக்கிறது. அதில் ஒன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது.

***

அதாவது, காளான் சூப் தயாரித்துக் குடிப்பதனால் மார்பகப் புற்று நோயை குணப்படுத்த முடியுமா என்பதே அந்த ஆராய்ச்சி.ஆஸ்திரேலியாவிலும் ஒரு பெரிய ஆராய்ச்சி நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரம் பெண்களை வைத்து நிகழ்த்தப்பட்ட இந்த விரிவான ஆராய்ச்சி, கான்சருக்கான பிற காரணிகளையும் கருத்தில் கொண்டே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

***

காளான்களை உட்கொள்வதும், கூடவே கிரீன் டீ உட்கொள்வதும் கான்சரிலிருந்து விலகி இருக்க உதவும் என்பதையே இந்த ஆய்வு முடிவுகள் எடுத்துச் சொல்கின்றன.
நன்றி byசேவியர்sirippu.wordpress.com/2009/03/25/mushroom

காளான் பற்றிய அறியாத சில தகவல்கள்.

காளான்களில் கிட்டத்தட்ட 64,000 வகைகளுக்கு மேல காளான்கள் இருக்கு.

*காளான்கிறது ஸ்போர் அப்படின்னு சொல்லப் படுற விதை போல இருக்கிற ஒண்ணிலிருந்துதான் வளர ஆரம்பிக்கும். இந்த ஸ்போர்கள் ரொம்ப ரொம்ப எடை குறைவாயும் ரொம்பச் சின்னதாயும் இருக்கும். ஸ்போரிலிருந்து நூல் மாதிரியான அமைப்புக் கிளம்பி வளரும். இதுக்கு ஹைஃபே அப்படின்னு பேரு. இந்த ஹைஃபே இழை மாதிரி இருக்கும். சில வகைகள் வெறும் கண்ணால் பார்த்தாத் தெரியாது. மைக்ராஸ்கோப்பில்தான் தெரியும்!


***
மழை வரும் போது மண் வாசனைன்னுகூட சொல்லுவாங்களே! அது என்ன தெரியுமா? மண்ணிலே இருக்கிற காளான் ஹைஃபேக்கள் மழையால் தூண்டப் பட்டுச் சில கெமில்களை உற்பத்தி பண்ணும். அதோட வாசனையைத்தான் நாம மண் வாசனை அப்படிங்கிறோம்! சில காளான்கள் ரொம்ப துர் நாற்றம் கொண்டதாயிருக்கும். இன்னும் சிலது அருமையான வாசனையோட இருக்கும்!

***
காளான் ஒரே ஒரு செல்லால் மட்டுமே ஆன தாவரம்கிறதும் ரொம்ப ஆச்சரியமான விஷயம்! ஒரே செல் தாவரம்னாலும் இதாலே நன்மைகளும் உண்டு. தீமைகளும் உண்டு! பேக்கரிப் பொருள்கள் தயாரிக்கவும், பீர் தயாரிக்கவும் யீஸ்ட் ரொம்பப் பயன்படுது. அதே சமயம் தொண்டையிலும் வாயிலேயும் கொப்புளங்கள் உருவாக்கித் தொல்லை கொடுக்கிறதும் இந்த யீஸ்ட் காளான்தான்!
***

சில பேருக்குத் தொடைகளில் அரிப்பு ஏற்படுத்தும் காளான்களும் இருக்கு. சுகாதாரமில்லாத உள்ளாடைகளை அணியறது மாதிரியான காரணங்களில் அங்கே காளான் வளர்ந்து படர் தாமரை நோயை உருவாக்கும். பாதிக்கப் பட்ட மனித உடலோட ஒரு பகுதியப் பாருங்க.

***நிறையக் காளான் வகைகள் மருந்துகள் செய்யப் பயன் படுது! உதாரணமாப் பென்சிலின் அப்படிங்கிற முக்கியமான மருந்து பெனிசிலியம் அப்படிங்கிற காளான் வகையிலிருந்துதான் கிடைக்குது. இது ஒரு உயிர் காக்கும் மருந்து.*


உலகத்திலேயே பெரிய தாவரம் காளான் தான்.

*

இந்த வகை காளான், பட்டன் காளான் என்று அழைக்கப்படுகிறது.
இவை சமையலுக்குக்கும், உடல் நலத்துக்கும் ஏற்றது.

*


இன்னும் படிக்க விரும்பினால் இங்கே கிளிக் செய்யவும்.
http://lathananthpakkam.blogspot.com/2009/05/blog-post.html

*நன்றி லதானந்த்.

சிறுநீரகக் கற்களைத் தடுக்கும் ஆரோக்கியமான உணவு முறை

இன்று உணவு உண்பதென்பது போதைப் பொருள் போலாகிவிட்டது.

*


இனிப்புகள், பொரித்த உணவுகள், மாமிச வகைகள் போன்றவற்றிற்கு நாக்கு அடிமையாகிவிட்டது. அத்துடன் நவீன சமையல் முறைகள் கண்களைக் கவர்கின்றன.


*

நாசியைத் துளைத்து வாயில் எச்சில் ஊற வைக்கின்றன. சுவையும் அதிகம்.*


போதாக் குறைக்கு காதும் தனது பங்கிற்கு ஆசையைத் தூண்டுகின்றது. உதாரணமாக கொத்து ரொட்டி அடிப்பது காதில் விழுந்ததும் சிலருக்கு சாப்பிட வேண்டும் என்ற ஆசை பசியற்ற போதும் எழுகிறது.***நாம் ஏன் உணவு உண்கிறோம்?


*


நமது நாளந்த வேலைகள் மற்றும் செயற்பாடுகளுக்கான சக்தியைப் பெறுவதற்காகவே எமக்கு உணவு தேவைப்படுகிறது. நோய் வாய்ப்படாமல் தடுப்பதற்கும், நோயினால் பழுதடைந்த உடற் கலங்களை சீர்திருத்தம் செய்யவும் உணவு தேவை.


*அத்துடன் வளரும் இளம் பருவத்தில் உடல் வளர்ச்சிக்கும் உணவு அத்தியாவசியமாகும். ஆனால் இன்று உணவானது உடற் தேவைக்காக என்றில்லாது ஆசைக்காக என மாறிவிட்டது.*தேவைக்கு மீறி உண்பதால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பலநோய்களும் ஆரோக்கியக் கேடுகளும் மனிதனை சிமிக்கிடாமல் கொல்லுகின்றன.***ஆரோக்கியமான உணவு முறை

இவை வராமல் தடுக்க ஆரோக்கியமான உணவு முறை முக்கியமானதாகும்.


***உணவின் அளவு

*


ஆரோக்கியமான உணவின் முதல் அம்சம் உணவின் அளவாகும். எத்தகைய நல்ல உணவானாலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான். இதனால்தான் சென்னை இருதய நோய் நிபுணரான சி.சொக்கலிங்கம். அரை வயிற்றிற்குச் சாப்பிடுங்கள். கால் வயிற்றை நீரினால் நிரப்புங்கள். மிகுதி கால் வயிற்றை காலியாகவே வைத்திருங்கள் என்று சொன்னார்.***
வெற்றுக் கலோரி வேண்டாம்

*

இரண்டாவது அம்சம் உணவில் வெற்றுக் கலோரி நிறைந்தவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான போஸாக்குள்ள உணவுகளையே உண்பதாகும்.***
எவை ஆரோக்கியமானவை?

*


உங்கள் உணவின் பெரும் பகுதி பழவகைகள், காய்கறிகள், விதைகள் ஆகியவனவாக இருக்க வேண்டும். அரிசி, கோதுமை, குரக்கன் போன்ற அனைத்துத் தானிய வகைகளையும் தவிடு நீக்காமல் சாப்பிடுங்கள். கொழுப்பு நீக்கிய அல்லது குறைந்தளவு கொழுப்பு மட்டுமே உள்ள பாலுணவு வகைகளையே உணவில் சேருங்கள்.


*ஆரோக்கியமான உணவுமுறை என்பது நல்ல உணவுகளை அதிகம் சேர்ப்பது மட்டுமல்ல தவறான உணவுகளை முற்றாகத் தவிர்ப்பது அல்லது கட்டுப்படுத்துவதும் ஆகும். கோழி போன்ற பறவையின இறைச்சிகளை உண்கொள்வதுடன், ஆடு, மாடு, பன்றி போன்ற கொழுப்புள்ள இறைச்சிகளைத் தவிர்க்க வேண்டும். அல்லது அளவோடு உட்கொள்ள வேண்டும்*
பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், இனிப்பு ஊட்டப்பட்ட பானங்கள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை மிகக் குறைவாகவே சேர்க்க வேண்டும்.


*இவ்வாறான உணவு முறையைக் கைக் கொண்டால் மேற் கூறிய நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல், இருதய நோய்கள், அதீத எடை, புற்று நோய் போன்ற பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கலாம் என்பது பலரும் அறிந்த சேதியாகும்.***புதிய ஆய்வு

*


ஆனால் இப்பபொழுது வெளியாகியுள்ள ஒரு புதிய ஆய்வானது சிறுநீரகக் கற்கள் உண்டாவதையும் தடுக்கும் என்கிறது.

கிட்டத்தட்ட இரண்டு இலட்சம் பேரை உள்ளடக்கிய மூன்று வெவ்வேறு ஆய்வுகளின் தரவுகளைக் கொண்டு எட்டப்பட்ட முடிவு இதுவாகும்.

Brigham and Women's Hospital லில் உள்ள

Maine Medical Center சேர்ந்த டொக்டர் எரிக் டைலர் மற்றும் உதவியாளர்களும் செய்த ஆய்வு இதுவாகும்.

*


மேலும் அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்
http://www.renalbusiness.com/hotnews/healthy-diet-prevent-kidney-stones.html*

சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதற்கு காரணமாகக் கூடிய ஒருவரின் வயது, எடை, அருந்தும் நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் எடுத்தபோதும் அதற்கு மேலாக ஆரோக்கிய உணவானது சிறுநீரகக் கற்கள் தோன்றுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறதாம்.

*


***எமது சூழலில் அதிகம்


*எனக்கு சிறுநீரகக் கற்கள் இல்லையே நான் ஏன் கவலைப்பட வேண்டும் என எண்ணாதீர்கள். எமது நாட்டு சூழலில் பலருக்கு இது ஏற்படுகிறது. இவை பொதுவாக கடுமையான வயிற்று வலியை ஏற்படுத்துவதால் நோயாளர்களை அச்சம் கொள்ள வைக்கிறது.
*வலி என்பதற்கு மேலாக உயர் இரத்த அழுத்தம், சிறுநீரக வழுவல் போன்ற பல பாரதூரமான விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும் ஆதலால் அதிக கவனத்தில் எடுப்பது அவசியம். சிறுநீரகக் கற்கள் உண்டாவதைத் தடுக்க நீங்கள் செய்ய வேண்டிய முயற்சியில் முக்கியமானது ஆரோக்கியமான உணவு முறையைக் கைக்கொள்வதே.

***நன்றி டொக்டர் .எம்.கே.முருகானந்தன்.
நன்றி:- தினக்குரல்
http://hainallama.blogspot.com/2009/11/blog-post.html

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "