...

"வாழ்க வளமுடன்"

30 ஆகஸ்ட், 2011

பெண்கள் அனைவரும் கட்டாயம் உண்ண வேண்டிய உணவு....

*

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் பெண்கள் உள்பட அனைத்து பெண்களும் கட்டாயம் உண்ண வேண்டியவையாக
ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் 5 உணவு வகைளை பட்டியலிடுகின்றனர்.

*

கீரை வகைகள்:

உங்களது உணவில் கீரை வகைகள் இல்லாமல் உங்களுக்கான முழு ஊட்டச்சத்து கிடைக்காது. எனவே பசலைக் கீரை, அவரை, வெந்தயக் கீரை ஆகியவற்றை பெண்கள் கட்டாயம் தங்களது உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


இவற்றில் வைட்டமின் சி, கே மற்றும் போலிக் அமிலம் ஆகியவை உள்ளன. இவை கண் பார்வைக்கும் மிக நல்லது.அத்துடன் கால்சியம், மெக்னீசியம், இரும்பு மற்றும் பொட்டாசியம் ஆகிய நான்கு அத்தியாவசிய சத்துக்களும் இவற்றில் அடங்கியுள்ளன. எனவே இவை உடல் நலத்திற்கு மிகவும் பயனளிக்கக் கூடியவை.

*

முழு தானியங்கள்:

முழு தானியங்களில் 96 விழுக்காடு வரை நார்ச்சத்து, அத்தியாவசிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின்கள் அடங்கியுள்ளன. இவை உடல் எடையை அதிகரிக்க செய்யாது என்பதால் அச்சமின்றி உண்ணலாம்.

*

கொட்டை பருப்புகள்:

பாதாம், முந்திரி போன்ற கொட்டை பருப்புகள் உங்களது உணவு பட்டியலில் கட்டாயம் இடம்பெற வேண்டியவை ஆகும்.

புரதம், மெக்னீசியம், பி மற்றும் இ வைட்டமின் சத்துக்களை கொண்ட இந்த பருப்புகளை காலை சிற்றுண்டியிலோ அல்லது சாலட்டிலோ அல்லது தயிரில் தூவியோ உண்ணலாம்.


இருதய நோய் மற்றும் புற்று நோய்க்கு எதிராக போராடும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு. மேலும் கொழுப்பு கலோரிகளை கொண்டதும் கூட. ஆனால் இந்த கொழுப்பு இருதயத்திற்கு நன்மை செய்யக் கூடிய நல்லவகை கொழுப்பு ஆகும்.


மாலை சிற்றுண்டியாக கூட இதனை சாப்பிடலாம். ஆனால் அதிக அளவில் சாப்பிட்டு விடக்கூடாது. ஒரு வாரத்தில் 15 முதல் 20 எண்ணிக்கையிலான பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, அக்ரூட் பருப்பு ஒருவருக்கு போதுமானது.

*

தயிர்:

குறைந்த கொழுப்புடைய அல்லது கொழுப்பற்ற தயிரில் வைட்டமின்கள், புரதம் மற்றும் கால்சியம் அடங்கியுள்ளது. மேலும் உடலுக்கு நன்மை பயக்ககூடிய பாக்டீரியாவும் தயிரில் உள்ளது.


வாரம் ஒன்றுக்கு மூன்று முதல் நான்கு கோப்பை தயிர் ஒருவருக்கு போதுமானது. ஆனால் அதில் சர்க்கரை சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதற்கு பதிலாக வெறும் தயிரில் பழங்கள் அல்லது பெர்ரி போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.


*

நாவற்பழம்:

பெரும்பாலான நார்சத்து உணவு தயாரிப்புகளில் நாவற்பழம் கட்டாயம் இடம்பெற்றிருக்கும். அதற்கு காரணம் அதில் அதிக அளவு நார்சத்து இடம் பெற்றிருப்பதுதான்.


மேலும் ஆன்டாசிடென்ட்ஸும் இதில் அதிகமாக உள்ளது. இவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, ஞாபக மறதி ஏற்படுவதையும் தடுக்கிறது. ஒரு கிண்ணம் நிறைய வாரம் மூன்றுமுறை ஒருவர் இதனை உட்கொண்டால் போதுமானது.


***
thanks படித்ததில் பிடித்தது
***"வாழ்க வளமுடன்"

ஒற்றை தலைவலிக்கு பாட்டி வைத்தியம்ஒற்றை தலைவலி வரக் காரணம் அதிகமான மன அழுத்தமே ஆகும். ஒற்றை தலைவ‌லி உள்ளவர்கள் மிகுந்த கண்டிப்புடனும், வளைந்து கொடுக்காமலும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள்.


மேலும் ஒற்றை தலைவலியானது வயிறு மற்றும் பார்வை சம்பந்தப்பட்டது. எனவே வற்றை சுத்தமாக வைத்திருப்பது முக்கியம்.


காரணம்:

குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில‌ மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம் மறும் ஓய்வு இல்லாமை. அதிகப்படியான குடிப்பழக்கம், புகைப்பழக்கம் மற்றும் பாலுண‌ர்வு ஆன‌ந்தம்.


அறிகுறிகள்:

இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல்,


வயிறு பிரச்சினைகள் தீர்வுகள்:

பொதுவாக ஒற்றை தலைவலி பல காரணங்களால் வருகிறது. எனவே எது தங்களுக்கு பொருந்துகிறது என கண்டறிந்து தீர்வுகளை செயல்படுத்தவும்.


1. எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

2. நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


3.கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.


4. குளிர்ந்த நீரை துண்டில் நனைத்து தலையிலும் கழுத்திலும் கட்டவும்.பின் கைகளையும் கால்களையும் சுடு நீரில் விடவும். இந்த முறை ஒற்றை தலைவலிக்கு நல்ல பலனை தரும்.5.அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

( இது சரியாக தெரியவில்லை, அதனால் இதனை செய்யாமல் இருப்பது நல்லது :( )


6. 10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம். இதுமிகவும் விலைமதிப்பானது.


7. (அ)200மிலி பசலைக்கீரை சாறு மற்றும் 300மிலி கேரட் சாறு (ஆ)100மிலி பீட்ரூட் சாறு, 100மிலி வெள்ளரிச் சாறு மற்றும் 300 மிலி கேரட் சாறு இந்த இரண்டு கல்வைகளில் ஒன்றை தினமும் பருக வேண்டும்.


8.வாசனை எண்ணெயால் தலைக்கு ஒத்தட்ம் தரலாம். தேய்த்து விடலாம்.

***

செய்ய வேண்டியவை:

1. விட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுகோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.


2. 2‍-3 நாட்களுக்கு வெறும் பழச்சாறு மற்றும் காய்கறி சாறை (ஆரஞ்சு, கேரட், வெள்ளரிக்காய்)மட்டும் உண்ணலாம். நீர் அதிகமாக பருக வேண்டும்.


3. தூங்குவதற்கு முன் சூடான நீரால் வற்றிற்கு ஒத்தடம் தரலாம்.


4. தலையில் இறுக்கமான துண்டையோ அல்லது பட்டையையோ கட்டிக் கொள்ள வேண்டும்.


***

தவிர்க்க வேண்டியவை:

1. புகை மற்றும் மது. இவை தலைவலியை தூண்டக் கூடியவை.

2. வெயிலில் அலைவது.

3. காரமான உணவு வகைகள்.

4. வயிறு முட்ட சாப்பிடுதல்.


5. தேவையில்லாத மன அழுத்தம் மற்றும் கவலை.


***
thanks Sri lanka
***
"வாழ்க வளமுடன்"

27 ஆகஸ்ட், 2011

ஓட்ஸ் உணவுப்பொருளா? மருந்துப்பொருளா?ஆனந்த விகடன் வாங்க வேண்டும் என்றார் நண்பர்.டீ குடித்து விட்டு பக்கத்தில் உள்ள கடைக்குப் போய் பார்த்தால்,வழக்கமாக தொங்கிக் கொண்டிருக்கும் விகடன் காணோம்.கடையில் கேட்டால் உள்ளே இருந்து எடுத்துக் கொடுத்தார்.இலவச இணைப்பாக ஒரு ஓட்ஸ் பாக்கெட்.(இலவசம் இருப்பதால் சீக்கிரம் விற்றுவிடும்,வழக்கமான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படுவார்கள்)மூன்று நிமிட்த்தில் தயாரிக்கலாம் என்கிறது குறிப்பு.ஓட்ஸ் இப்போதுதான் விளம்பரத்தின் மூலம் அதிகம் தெரியவருகிறது.பெரும்பாலான மருந்துக்கடைகளில் (pharmacy) விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள்.மருத்துவர்கள் பரிந்துரை செய்வதுண்டா? தெரியவில்லை.திருவண்ணாமலையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்து பயணம்.ரஷ்யாவை சேர்ந்த ஒருவர் பக்கத்தில் அமர்ந்திருந்தார்.கையில் பெரிய ஓட்ஸ் பாக்கெட்.ஒரு வாய் ஓட்ஸும்,கொஞ்சம் தேனும் கலந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.


ஓட்ஸும்,தேனும் அப்படி சாப்பிடவேண்டும் என்று எனக்கும் ஆசை ஏற்பட்டு விட்ட்து.ஒரு நாள் சாப்பிட்டு பார்த்தேன்.ஆஹா! அருமையான சுவை.தேனின் மருத்துவ குணங்கள் நிறைய கேள்விப்பட்டிருப்பீர்கள்.

ஓட்ஸ் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதய நோயை தடுக்கும் என்று அதிகம் விரும்புகிறார்கள்.நிறைய கம்பெனிகள் வந்துவிட்டன.

மாங்கனீசு,செலினியம்,மக்னீசியம்,நார்ச்சத்துக்களும் நிரம்பியிருப்பது உண்மைதான்.


ஓட்ஸில் கிடைக்கும் நன்மை வேறு எந்த உணவிலும் கிடைக்காது என்று சொல்வதற்கில்லை.எங்கும் பயன்படுத்த எளிதானது என்பது ஒரு நல்ல அம்சம்.ஓட்ஸைப்போல குறிப்பிட்டு சொல்லக்கூடிய நமது பாரம்பரிய உணவு ஒன்று உள்ளது.அது கேழ்வரகு.இந்தியாவில் பல மாநிலங்களிலும் இதன் பயன்பாடு இருக்கிறது.கர்நாடகாவிலும்,ஒட்டிய தமிழக மாவட்டங்களிலும் முக்கிய உணவாக இருந்த்துண்டு.


குழந்தைகளுக்கு ராகிமால்ட் கொடுக்கிறார்கள்.கால்சியம்,பாஸ்பரஸ்,சில அமினோ அமிலங்களும்,நார்ச்சத்தும் கொண்ட்து.ராகிமால்ட் என்பது கேழ்வரகுக் கூழ்தான்.வளரும் குழந்தைகளுக்கு கொங்கு நாட்டின் முக்கிய உணவு.இன்னமும் சில இடங்களில் வழக்கத்தில் இருக்கிறது.ஆனால் இப்போது பயிரிடுவதும்,பயன்படுத்துவதும் குறைந்து வருகிறது.தின்று பழக்கப்பட்ட பெரிசுகள் களி என்றால் சந்தோஷமாகி விடுவார்கள்.இன்றைய தலைமுறையில் இந்த உணவை விரும்புபவர்கள் குறைவு.தயாரிப்பதில் இருக்கும் சங்கடம் ஒரு காரணம்.காய்ந்து போனால் பாத்திரத்தை சுத்தம் செய்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.கர்நாடகத்தில் அதிகம் சுவைக்கப்படும் உணவு இது.


களியும் கீரையும் அற்புதமான சேர்க்கை.புரட்டாசி விரதம் இருக்கும் வழக்கம் உங்களுக்குத் தெரியும்.ஏழைகள் கூட பலவகை விருந்து சமைத்து பகவானுக்கு படைப்பார்கள்.அப்படி ஒரு விரத்த்தில் உயர்தர உணவுகளோடு ஒரு குடும்பம் பகவானுக்காக காத்திருந்த்தாம்.இன்னொரு குடும்பம்வசதியில்லாதவர்கள்.களியும்,கீரையும் சமைத்து படைத்து காத்திருந்தார்கள்.கடவுள் தேர்ந்தெடுத்த்து களியும் கீரையும்.சில ஹோட்டல்களில் களியும்,போட்டியும்(ஆட்டுக்குடல்) சக்கைப்போடு போடும்.அப்புறம் களியும்,கறியும்(மட்டன்,சிக்கன்) வகையறாக்கள்.சென்னையிலிருந்து பெங்களூரு செல்லும் சாலையில் கிருஷ்ணகிரிக்கு ஒரு கிலோமீட்டர் முன்பு ஒரு களி ஓட்டல் இருக்கிறது.தினமும் மதியத்தில் கூட்டம் களை கட்டும்.பல ஆண்டுகளாக அமோக வரவேற்பை பெற்ற ஹோட்டல் அது.கேழ்வரகு அடையாகவும்,கூழாகவும்,ராகிமால்டாகவும் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.குழந்தைகளுக்கு மிக அவசியம் என்பதை உணருங்கள்.***
thanks cfa
***
"வாழ்க வளமுடன்"

25 ஆகஸ்ட், 2011

கல்யாணம் செய்யப்போறீங்களா? உஷார்!திருமணம்செய்வதற்காக பத்து பொருத்தங்கள் பார்க்கிறோம்.ஜாதகம் பார்க்கிறோம்.குடும்பநிலை,பையன்,பெண் படிப்பு எல்லாவற்றிலும் கவனம் செலுத்துகிறோம்.உடல் தகுதிகளைப்பற்றி போதுமான விழிப்புணர்வு நம்மிடம் இல்லை.திருமணத்திற்கு முன்பு மணமக்கள்ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டிய அவசியம் இருக்கிறது.


ரத்த வகைஅறிவதில் பலருக்கும் ஆர்வம் இருப்பதை பார்த்திருக்கிறேன்.இதில் ஆர்.எச் வகை என்றுஉண்டு.பாசிட்டிவ்,நெகடிவ் என்பது இதுதான்.பலரும் கர்ப்பத்துக்குப்பின்பரிசோதனையில் இதை கண்டு பிடிப்பார்கள்.தாயும்,தந்தையும் வேறுவேறு வகைஆர்.எச்.அம்சங்களை கொண்டிருந்தால் இரண்டாவது குழந்தை மரணமடையும் வாய்ப்புண்டு.பெற்றோருக்குஇப்போது ரத்தப்பரிசோதனை மூலம் கர்ப்பத்தின் போது கண்டுபிடிக்கப்படுவதால் சிகிச்சைமூலம் இதை சரி செய்கிறார்கள்.திருமணத்திற்கு முன்பே இப்பரிசோதனைகள் அவசியம் என்பதேசரியானது.நெகட்டிவ் அம்சம் இருப்பவர்களுக்கு செவ்வாய் தோஷம் இருக்கும் என்றகருத்தும் உண்டு.


வடசென்னையில் மஞ்சள் காமாலையால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்திகள்வெளியாகி இருக்கின்றன.இது நீரினாலும்,உணவாலும் பரவும் ஒரு வகை.(ஏ,இ).பலரும்பாரம்பர்ய மருத்துவம் மூலம் இதற்கு குணம் காண்கிறார்கள்.இன்னும் சில உண்டு.அவற்றில்முக்கியமானது.ஹெபட்டிஸ் பி,சி வகை.ஒருவருக்குரத்தம் செலுத்துவதற்கு முன்பு இவ்வகை வைரஸ் உள்ளதா எனவும் பரிசோதனையும்செய்வார்கள்.கிட்ட்த்தட்ட எய்ட்ஸ் வைரஸை போன்றே பரவும் தன்மை கொண்ட்து.பலருக்குஅறிகுறி இருக்காது.பரிசோதனை மூலம்தான் தெரியும்.மணமக்கள் யாருக்கேனும் இருந்தால்தவிர்த்து விடுவதே சரி.தவிர கொஞ்சம் அப்படி இப்படி பழக்கம் உள்ளவர்களாக இருக்கவும்வாய்ப்புண்டு.(பாலுறவு மூலம் பரவும்).


ஹெபடைடிஸ்பி வகைக்கு தடுப்பூசி இருக்கிறது.கேள்விப்பட்டிருப்பீர்கள்.ஊசி போட்டு வரும் முன்காக்கலாமே தவிர வந்த பின்னால் இந்த வகை நாட்டு மருந்தால் குணமாவதாக நான்கேள்விப்படவில்லை.ஆங்கில மருத்துவத்திலும் இல்லை.வைரஸ் நோய்களை முழுமையாக குணமாக்கமருத்துவம் இல்லை.அடுத்துஎய்ட்ஸ் பரிசோதனை.செய்யச்சொன்னால் யாரும் விரும்ப மாட்டார்கள்.பல ஆண்டுகளுக்குஅறிகுறி வெளியே தெரியாது என்பதால் அவசியம் செய்து விடுவதே நல்லது.வேறு சிலகுணமாக்க முடியாத பால்வினை நோய்களும் உண்டு.உரிய மருத்துவர் மூலம் திறன் உள்ளிட்டமுழு உடல் பரிசோதனை செய்து கொள்வது பல பிரச்சினைகளைத் தவிர்க்கும்.


திருமணத்திற்குமுன்பு உடல் பரிசோதனை இன்றைய சூழலில் பொருத்தம் பார்ப்பது போன்று அவசியம்மேற்கொள்ள வேண்டிய ஒன்று.மெத்தப்படித்த ஆண்கள்தான் இதை முன்னெடுத்துச்செல்லமுடியும்.ஆரோக்கியமான குடும்ப வாழ்க்கையையும்,குழந்தைகளையும் இதனால் நாம் பெறமுடியும்.


***
thanks counsel for any
***
"வாழ்க வளமுடன்"


லோனில் கார் வாங்குவோர் கவனத்திற்குகார் வாங்குவது பலருக்கு பெரிய முதலீடாகவே இருக்கிறது. எனவே, கார் வாங்கும்போது கடன் வாங்குவதும் தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கிறது. மேலும், திடீரென பெரிய முதலீட்டை கையிலிருந்து செய்வதையும் தவிர்த்துக்கொள்ள முடிகிறது.

பல முன்னணி வஙகிகள் மற்றும் நிதிநிறுவனங்கள் மற்றும் கார் தயாரிக்கும் நிறுவனங்களே கார் கடன்களை எளிய தவணை முறையில் வழங்குகின்றன. இருப்பினும், கார் கடன் வாங்கும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். ஏனெனில், சில நிறுவனங்கள் நேர்முக கட்டணங்களை தவிர முடிந்தவரை மறைமுக கட்டணங்களையும் தலையில் கட்டி தாளித்து விடும்.

கார் கடனை கட்டி முடிக்கும்போது காரின் விலையை காட்டிலும் இருமடங்கு தொகையை செலுத்த வேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டுவிடலாம். எனவே, கார் கடனை தேர்வு செய்யும்போது அதி்க கவனமாக இருக்கவேண்டும். கார் கடன் தேர்வு செய்யும்போது சில எளிய வழிமுறைகளை கடைபிடித்தால் ஓரளவு மறைமுக கட்டடணங்கள் மற்றும் ரேட் ஆப் இன்ட்ரஸ்ட் என்று கூறப்படும் அதிக வட்டி வீதங்களிலிருந்து தப்பிக்க முடியும்.

1.காரை தேர்வு செய்தவுடன் ஷோரூம் சூப்பர்வைசர் கையை நீட்டும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் பிரதிநிதி சடசடவென திட்டத்தை பற்றி கூறும் விபரங்களை கேட்டு தலையாட்டிவிடாதீர்கள். கார் வாங்கும் ஆசையில் கண்ணை மூடிக்கொண்டு கடன் பள்ளத்தாக்கில் போய் விழுந்துவிட வேண்டாம். ஒவ்வொரு வினாடியும் யோசித்து நிதானமாக செயல்படுங்கள்.

2. காருக்கு கடன் கொடுக்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் கார் கடன் திட்டங்களை பற்றிய விபரங்களை கேட்டுக்கொள்வதோடு, அதன் விபரங்களை வீட்டிற்கு சென்று நன்கு அலசி ஆராய்ந்து பாருங்கள். எந்த வங்கி குறைந்த வட்டி வீதத்தில் கடன் கொடுக்கிறது; கார் கடனுக்கான பிராசஸிங் கட்டணம் எத்தனை சதவீதம் உள்ளிட்ட விபரங்களை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். இதில், எது சிறந்தது என்பதை முதலில் முடிவு செய்துகொள்ளுங்கள்.

3.காருக்கு கடன் வாங்க தீர்மானித்துவிட்டால், குறைந்தது 30 சதவீதத்திற்கு மேலாவது முன்பணத்தை செலுத்த வேண்டும். இதனால், மாதத்தவணை தொகை மற்றும் தவணை காலம் வெகுவாக குறைவதோடு வட்டி வீதத்தை குறைத்துக்கொள்ளுமாறு பேரம் பேச முடியும்.

4.கார் கடன் வழங்கும் வங்கிகளின் சட்ட திட்டங்கள் மற்றும் விதிமுறைகளை நன்கு அறிந்துகொண்டு ஆவணங்களில் கையெழுத்திட வேண்டும். தவிர, மறைமுக கட்டணங்கள் ஏதாவது திணிக்கப்படுகிறதா என்பதை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்க்கவேண்டிய நேரம் இது.

5.கார் கடனுக்கு காப்பீடு திட்டங்கள் இருக்கிறது. காருக்கு ஏதாவது சேதாரம் ஏற்பட்டால் கூட காப்பீடு மூலம் தவணை மற்றும் இழப்புகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6.இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமானது. கடன் வாங்கும் வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் அலுவலக விபரங்கள் மற்றும் போன் நம்பர்களை விற்பனை பிரதிநிதியிடம் அவசியம் கேட்டு டைரியில் குறி்த்து வையுங்கள். கடன் முடிந்த பிறகு ஆர்சி புக் அல்லது ஆர்சிபுக்கில் உள்ள ஹைப்போதிகேஷனை நீக்குவதற்கு நோ அப்ஜெக்சன் சான்றிதழை(என்ஓசி) கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெறும்போது இவை உதவியாக இருக்கும்.

மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை கவனத்தில்கொண்டால், கார் கடன் நம் கழுத்தை இறுக்காது என்று உறுதியாக கூறலாம்..


***
thanks சக்தி
***
"வாழ்க வளமுடன்"


22 ஆகஸ்ட், 2011

மருத்துவர்கள் உங்களை எப்படியெல்லாம் சுரண்டுகிறார்கள்?மருத்துவர்களுக்கு நம்மிடையே எப்போதும் தனி மதிப்பு உண்டு.உயிர் காக்கும் கடவுள் அவர்கள்.பேராசையும் சுயநலமும் பெருகி விட்ட இன்றைய சூழலில் அவர்கள் மட்டும் விதிவிலக்கா என்ன? பணம் சம்பாதிக்க என்னென்ன வித்தைகளை கையாளுகிறார்கள்? பத்ம பூஷண் விருது பெற்ற பேராசிரிய புகழ்பெற்றர் பி.எம்.ஹெக்டேவின் பகிர்வை நண்பர் ஒருவர் இ-மெயிலில் அனுப்பியுள்ளார்.

மருத்துவர்கள்,மருத்துவமனைகளுடன் சாட் செய்து தான் அறிந்து கொண்ட்தை தருகிறார்.


1. பரிசோதனைகளில் 40-60 சதவீத கமிஷன்.

உடல்நிலை சரியில்லாமல் சென்றவுடன் ரத்தம்,சிறுநீர் பரிசோதனை,ஸ்கேன் செய்ய வைப்பதில் மட்டும் மேற்கண்ட தொகை.500 ரூபாய் பரிசோதனைக்கு கொடுத்தால் பாதி மருத்துவருக்கு சென்றுவிடும்.இதில் அவசியமானதும் உண்டு,சில நேரங்களில் கமிஷனுக்காக தேவையில்லாத டெஸ்டுகளும் இருக்கும்.


2. பரிந்துரை செய்வதில் 30-40 சதவீதம்.

சில நேரங்களில் சிறப்பு மருத்துவர்களுக்கு பரிந்துரை செய்வார்கள்.உதாரணமாக தைராய்டு தொடர்பான நோயென்றால் அதற்கான மருத்துவருக்கு பரிந்துரைத்தால் ஸ்பெஷலிஸ்ட்டிடம் நீங்கள் செலவு செய்யும் பணத்தில் அனுப்பி வைக்கும் மருத்துவருக்கு 30-40 சதவீதம் வந்து சேர்ந்துவிடும்.


3. மருத்துவமனை கட்டணத்தில் 30-40 சதவீதம்.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும்போது உங்களிடம் வசூல் செய்யும் கட்டணங்களில் மேற்கண்ட தொகை குறிப்பிட்ட மருத்துவருக்கு கிடைக்கும்.


4. நெஞ்சுவலி என்று போனால்,

சாதாரண வலியாக இருக்கும்.அனைத்து பரிசோதனை,சிறப்பு மருத்துவர்கள் அழைப்பது என்று பணம் பிடுங்குவது.நான்கு நாட்களுக்கு அட்மிட் செய்து கறந்து விடுவார்கள்.

மேலும் அவசர சிகிச்சை பிரிவில் அட்மிட் செய்து விடுவார்கள்.ஆனால் சுத்தமில்லாத ,விஷயம் தெரியாத பத்தாம் வகுப்பு படித்தவன் நர்சிங் வேலை செய்வார்கள்.குறைந்த சம்பள்த்திற்கு பணியாட்கள் வைத்துக்கொள்வதில் லாபம்.தேவையில்லாமல் சிசேரியன் ஆபரேஷன் செய்வது, சினிமாவில் வருவது போல பிணத்திற்கு மருத்துவம் பார்ப்பது ,விளம்பரம் கொடுத்து காஸ்மெடிக் சர்ஜரி செய்வது,பணத்திற்காக பெரிய மருத்துவமனைகளுக்கு பரிந்துரைப்பது போன்றவை மற்ற வழிகள்.


மருந்துகடை கமிஷனை விட்டுவிட்டார் போல தோன்றுகிறது. சேவை மனப்பான்மையுள்ள நல்ல மருத்துவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.இப்போது படித்து முடித்து வந்தவுடன் நிறைய கடன்வாங்கி நர்சிங்ஹோம் கட்டி விடுகிறார்கள்.கடனை அடைக்க அப்பாவிகள் கிடைத்து விடுகிறார்கள்.ஊழலில் எத்தனையோ வகை இருக்கிறது .அதில் இது ஒரு வகை.

இருபது ரூபாய்க்கு,முப்பது ரூபாய்க்கு கிராமங்களில் சென்று மருத்துவம் செய்யும் எளிய மருத்துவர்களும் இருக்கிறார்கள்.நல்ல டாக்டர்கள் கிடைத்துவிட்டால் நீங்கள் அதிர்ஷ்டசாலி!


***
thanks cfa
***
"வாழ்க வளமுடன்"

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு செ‌ய்து கொ‌ண்டவ‌ர்க‌ள் கவ‌னி‌க்ககுடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ள்வ‌தி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ல் பெ‌ண்களு‌க்கு‌த்தா‌ன் முத‌லிட‌ம். 100‌க்கு 1 எ‌ன்ற ‌வி‌கித‌த்‌தி‌ல் கூட ஆ‌ண்க‌ள் குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌‌சி‌கி‌ச்சை செ‌‌ய்து கொ‌ள்ள மு‌ன்வருவ‌‌தி‌ல்லை.


இது ஒருபுற‌மிரு‌க்க, குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை செ‌ய்து கொ‌ண்ட பெ‌ண்களு‌க்கு உட‌ல் எடை அ‌திக‌ரி‌க்க அ‌திக வா‌ய்‌ப்புக‌ள் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்து‌ள்ளது.


த‌ற்போது உ‌ட‌ல் எடை உய‌ர்வு ஒரு ‌மிக‌ப்பெ‌ரிய ‌பிர‌ச்‌சினையாக உருவெடு‌த்து‌ள்ள ‌நிலை‌யி‌ல், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இ‌‌ய‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்தது‌ம், உணவு‌‌ப் பழ‌க்கமு‌ம் காரண‌ங்களாக இரு‌ந்தாலு‌ம், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சையு‌ம் மு‌க்‌கிய‌க் காரண‌ம் எ‌ன்‌கிறது மரு‌‌த்துவ‌ம்.


குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு பெ‌‌ண்க‌ளி‌ன் உட‌லி‌ல் ப‌ல்வேறு மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்படு‌கி‌ன்றன. சினைப்பையில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பில் பிரச்சினை ஏற்படுகிறது. அடைப்பு காரணமாக இந்த ஹார்மோன் சரியாக சுரக்காது. இதுதான் உடலில் அதிக கொழுப்பு சேராமல் தடுக்கின்ற ஹார்மோன். மருத்துவர்கள் இதை `புரொடக்டிவ் ஹார்மோன்' என்று அழைக்கிறார்கள். குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ காரணமாக இந்த ஹார்மோன் சுரப்பு தடைபட்டு, அதிகப்படியான கலோரிகள் தேங்கி, கொழுப்புச்சத்து சேர்ந்து உடல் குண்டாகி விடுகிறது.


குடு‌ம்ப‌ப் பெ‌ண்க‌ள் பலரு‌ம், குழ‌ந்தையு‌ம், கணவரு‌ம் ‌மீத‌ம் வை‌த்த உணவையு‌ம், வீணாகி விடுமே என்று அதிகமான உணவுகளை உண்பது‌ம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது‌ம், ‌வீ‌ட்டு வேலைகளை செ‌ய்ய இய‌ந்‌திர‌ங்க‌ள் இரு‌ப்பது‌ம், டிவி பார்த்துக் கொண்டு நொறு‌க்கு‌த் ‌தீ‌னி சா‌ப்‌பிடுவது‌ம், ம‌திய நேர‌த்‌தி‌ல் கு‌ட்டி‌த் தூ‌க்க‌ம் எ‌ன்று சொ‌ல்‌லி 2 அ‌ல்லது 3 ம‌ணி நேர‌ங்க‌ள் தூ‌ங்குவது‌ம் உடல் பருமன் ஏற்படுவதற்கானக் காரணிகளாகப் பட்டியலிடுகின்றனர் மருத்துவர்கள்.


எனவே, குடும்பக்கட்டுப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌ செய்து கொண்ட பெண்கள் உணவு விஷயத்தில் மிகவும் கண்டிப்புடன் இருக்க வேண்டும். கலோரிகள் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். முடியாத பட்சத்தில் குறைவான அளவு எடுத்துக் கொள்ளலாம். நார்ச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருட்களை அதிகமாகச் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்கள், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தூரமாவது நடக்கலாம். முடிந்தால் நீச்சல் பயிற்சிக்குச் செல்லலாம். தொடர்ந்து யோகா, தியானம் செய்வது நல்ல பலனைத் தரும்.


சிலர் கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்காகக் கருத்தடை மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிடுவர். இந்த மாத்திரைகளால் கர்ப்பத்திற்கான ஹார்மோன் சுரப்பில் தடை ஏற்பட்டு, கரு உருவாவது தடுக்கப்படும். இந்த மாத்திரைகளை அனைவரும் எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக கால் வீக்கம், பித்தப்பையில் கல், ரத்தத்தில் அதிக கொழுப்பு உள்ளவர்கள் கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது. அப்படிப் பயன்படுத்தினால் பின் விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள்.


சில பெண்கள் பரிசோதனை செய்து கொள்ளாமலேயே காப்பர்-டி பொருத்திக் கொள்கிறார்கள். பின்னர் ரத்தப்போக்கு அதிகமாகி அவதிப்படுகின்றனர். எனவே, முழு உடல் பரிசோதனை செய்து கொண்டு, எந்தப் பிரச்சினையும் இல்லை என்றால் மட்டுமே காப்பர்-டி பொருத்திக் கொள்ள வேண்டும். குறிப்பாக ரத்தம் எளிதில் உறைதல், வெள்ளைப்படுதல், அதிக ரத்தப்போக்கு போன்ற பிரச்சினைகள் உள்ள பெண்கள் கண்டிப்பாக காப்பர்-டி பொருத்திக் கொள்ளக் கூடாது. அதேபோல் அதிகபட்சமாக 5 வருடங்கள் மட்டுமே காப்பர்-டியைப் பயன்படுத்தலாம். அதற்குமேல் பயன்படுத்தினால் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.


நா‌ம் சா‌ப்‌‌பிடு‌ம் கொழு‌ப்பை‌ உட‌லி‌ல் சேராம‌ல் தடு‌க்கு‌ம் ஈ‌ஸ்‌ட்ரோஜ‌‌ன் ஹா‌ர்‌மோ‌ன், குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு அறுவை ‌சி‌கி‌ச்சை‌க்கு‌ப் ‌பிறகு ச‌ரியாக சுர‌க்காம‌ல் போவதை‌க் கவன‌த்‌தி‌ல் கொ‌ண்டு, அத‌ற்கு மு‌ன்பு சா‌ப்‌பி‌ட்டு வ‌ந்த அ‌திக‌ப்படியான கொழு‌ப்பு உணவுகளை த‌வி‌ர்‌ப்பது உட‌ல் எடையை பராம‌ரி‌க்க உதவு‌ம்.***
நன்றி வெப்துனியா
***

"வாழ்க வளமுடன்"

குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?


குழந்தைகளுக்கு எப்பொழுது இணை உணவு ஆரம்பிக்கவேண்டும் ?(WEANING/COMPLEMENTARY FEEDING)


பிறந்த குழந்தைக்கு முதல் ஆறு மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே தரவேண்டும் .தண்ணீர் கூட தர தேவை இல்லை .
இதற்க்கு EXCLUSIVE BREAST FEEDING என்று பெயர் .கோடைகாலத்தில் கூட நீர் தர தேவை இல்லை .ஏனெனில் பாலில்80 % நீர் உள்ளது .

இணை உணவுக்கு ஆங்கிலத்தில் WEANING என்று பெயர் .

WEANING : the systematic introduction of suitable food at the right time in addition to mothers milk in order to provide needed nutrients to the baby (UNICEF)


WEANING என்றால் முற்றிலும் தாய்ப்பாலை நிறுத்திவிட்டு உணவு ஆரம்பித்தல் என்று பலர் தவறாக கருதுவதால் தற்போது COMPLEMENTARY FEEDING என்ற சொல்லே பரவலாக பயன்படுத்த படுகிறது .


நான்கு மாதங்களுக்கு பிறகே குழந்தைகள் அறைதிட (SEMISOLID ) உணவை செரிக்க கூடிய சக்தியை அடைகின்றன .

தலை நன்கு நிமிர்ந்து நிற்கும் சக்தியை அடைவதும் 4 மாதத்திற்கு பிறகே


குழந்தையின் எடை 5 மாதத்தில் பிறந்ததை போல் இரு மடங்காக அதிகரிப்பதால் அதன் உணவு தேவை அதிகரிக்கும் . மேலும் உடலில் உள்ள கால்சியம் மற்றும் இரும்பு சத்து சேமிப்புகள் குறைய தொடங்கும் .

குடலில்உள்ள செரிமான நொதிகள் (INTESTINAL ENZYMES ) நன்கு சுரக்க ஆரம்பிப்பதும் 4 -5 மாதங்களில்தான் .

எனவே 5 வது மாத முடிவிலோ அல்லது 6 மாத ஆரம்பத்திலோ இணை உணவுகளை ஆரம்பிப்பது நல்லது .
முதலில் ஏதேனும் ஒரு தானியத்தை கொடுக்கவேண்டும் (அரிசி ,கோதுமை ,ராகி ) அது பழகிய பிறகே இரண்டு அல்லது மூன்று தானிய கலவைகளை சேர்த்து அரைத்து தர வேண்டும் .

அரிசி சாதம் மிகவும் எளுதில் ஆரம்பிக்க சிறந்தது .ஆரம்பத்தில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் மட்டும் தரவேண்டும் .படிப்படியாக இந்த அளவை அதிகரிக்க வேண்டும் .

தானியங்கள் ஒத்துகொண்ட பிறகே பருப்பு வகைகள் கொடுக்க வேண்டும் .


ஒரு வயது வரை உள்ள குழந்தைகளுக்கு உடல் எடையை போல் நூறு மடங்கு கலோரி தேவை . அதாவது 6 கிலோ குழந்தைக்கு 600 கிலோ கலோரி நாள் ஒன்றுக்கு தேவை .எனவே குழந்தைகளுக்கு அடிக்கடி சிறிது சிறிதாக பாலும் இணை உணவும் தரவேண்டும் .


ஐஸ் போடாத வீட்டில் செய்த பழச்சாறு 6 மாதம் முதல் தரலாம் . ஆரஞ்சு , ஆப்பிள் சிறந்தது .


நெய் ,எண்ணெய் முதலியவற்றை 5 -6 மாதம் முதல் தரலாம்

முட்டை - 7 -9 மாதங்களில் தரலாம் . முதலில் மஞ்சள் கருவும் பின்பே வெள்ளை கரு தரவேண்டும் . ஏனெனில் வெள்ளை கரு சில குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம் .

6 -8 மாதங்களில் மசித்த உருளை கிழங்கு , மசித்த பருப்பு ஆகியவற்றை தரலாம் .


மென்று சாப்பிடக்கூடிய உணவுகளை (சப்பாத்தி ) 9 -12 மாதங்களில் தரவேண்டும் .

ஒரு வயது ஆகும்போது வீட்டில் செய்யும் எல்லா உணவுகளையும் தரலாம் .

அசைவ உணவை ஒரு வயதுக்கு பின்பே ஆரம்பிப்பது நல்லது .(முட்டை சைவம் தானே ?!!)
ஒரு வயதுடைய குழந்தை அம்மா சாப்பிடும் அளவில் பாதி அளவு உணவு சாப்பிடவேண்டும் .(மூன்று வயதில் அப்பா சாப்பிடும் அளவில் பாதி )

ஒரு வயதில் உள்ள குழந்தைக்கு தினமும் 1000 கிலோ கலோரி அளவு சக்தி தேவை .

தாய்ப்பாலை மேலே சொன்ன உணவுடன் சேர்த்தே தரவேண்டும் .இரண்டு வயது வரை தருவது கட்டாயம் .அதற்க்கு மேல் கொடுப்பது தனிப்பட்ட விருப்பம் .,( அப்துல் கலாம் ஐந்து வயது வரை தாய்ப்பால் குடித்தவர் )


http://doctorrajmohan.blogspot.com/2011/03/weaningcomplementary-feeding.html


***
thanks டாக்டர் ராஜமோகன்
***"வாழ்க வளமுடன்"

20 ஆகஸ்ட், 2011

குக்கரில் உள்ள கறைகள் நீங்க...

*

குக்கரின் உள்ளே கறை படிந்தால் ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேய்த்தால் கறைகள் விட்டுவிடும்.

பயிறு வகைகள் புழுத்து போகாமல் இருக்க...

பயிறு வகைகளை சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து கிளறி வைத்தால் பல நாட்கள் வரை புழுத்து போகாமல் இருக்கும்.

வற்றல் குழம்பு சுவையாக இருக்க...

வற்றல் குழம்பு செய்யும்போது கடைசியாக சிறிது மஞ்சள் பொடியும், மிளகுப்பொடியும் கலந்தால் சுவையுடன் இருக்கும்.

ரொட்டி காய்ந்து போனால்...

ரொட்டி காய்ந்து போனால் இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைத்தால் புதிய ரொட்டி போல் மிருதுவாக ஆகிவிடும்.

பூண்டை சுலபமாக உரிக்க...

வெங்காயம், பூண்டை தண்ணீரில் தனித்தனியே போட்டு பிறகு உரித்தால் சுலபமாக உரிக்க வரும். கண் எரிச்சல் வராது.

கோதுமையில் பூச்சி வராமல் இருக்க...

கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால் பூச்சிகள் வராது.

பக்கோடா மொறுமொறுப்பாக இருக்க...

பக்கோடா செய்யும்போது மொறுமொறுப்பாக இருக்க வேண்டுமானால் மாவைக் கலக்கும்போது சிறிதளவு நெய்யும், உப்பும், தயிரையும் சேர்த்துப் பாருங்கள். பக்கோடா மொறுமொறுப்பாக இருப்பதோடு ருசியாகவும் இருக்கும்.


***
thanks Mohamed Ali
***"வாழ்க வளமுடன்"

19 ஆகஸ்ட், 2011

இந்த சில வீடியோ கவணியுங்கள் பீலிஸ் :(*

பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளை கவனியுங்கள்

http://www.youtube.com/watch?v=aprO6h9sFDM&feature=player_embedded


பெற்றோர்கள் & வேதனை


***

computer இல் வேலை பார்பவர்களுக்கு .mp4


http://www.youtube.com/watch?v=g9M8pc-RzD4&feature=related


உடல்நலம்

***


:)


உண்மையான கூந்தல்.mp4

http://www.youtube.com/watch?v=9cCMW0ixJpA&feature=related***
thanks youtube
***
"வாழ்க வளமுடன்"


18 ஆகஸ்ட், 2011

கொலோசியம், ரோம் ( உலக அதிசயம் )


கொலொசியம் ரோம், இத்தாலி

*

பண்டைய ரோமாபுரியில் அமைக்கப்பட்ட மிகச் சிறப்பான கலை அரங்கம் கொலோசியம் (Colosseum) ஆகும். இது கி.பி. 72 - ல் துவங்கி கி.பி. 80 - ல் கட்டி முடிக்கப்பட்டது. கி.பி. 847 - ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் வட்ட வடிவம் உடைய கொலோசியத்தின் பாதிப் பகுதி இடிந்து விழுந்தது. தற்போது பாதி அழிந்த நிலையில் வரலாற்றுச் சின்னமாகவும், உலக அதிசயமாகவும் திகழ்கிறது.


கொலோசியம் அரங்கத்தின் மொத்த உயரம் 159 அடி ஆகும். இது பல நுழைவாயில்களைக் கொண்டது. இந்த அரங்கத்திற்குள் நுழைவதற்கு குறைந்தபட்சம் 80 நுழைவாயில்கள் உள்ளன. இதில் நான்கு அடுக்குகள் உள்ளன. பூமிக்கு அடியில் பொறியியல் அமைப்புகளும், கொடிய விலங்குகளுக்கான அறைகளும் உள்ளன. விலங்குகள் அரங்கத்தின் மையத்திலிருந்து வெளிவரும் வண்ணம் பாதை அமைக்கப்பட்டுள்ளது.


இங்கு அடிமைகள், அரசியல் கைதிகள் போன்றோரை கொடிய விலங்குகளுடனும், அவர்களுக்குள்ளாகவும் மோதவிட்டு ரோமானியர் பார்த்து ரசித்தனர். வேதகலாபனை காலங்களில் கிறிஸ்தவர்கள் இங்கு பலவிதமான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.


***
thanks amudmtamil
***


"வாழ்க வளமுடன்"நாவில் கசப்பா? நாரத்தை இருக்கு!

*
நாம் உண்ணும் உணவில் ருசியில்லை என்றாலும், உணவு சுவையாக இருந்து நாவில் ருசியில்லை என்றாலும் உணவின் மேல் வெறுப்பு உண்டாகிறது. உண்ணும் பொருளின் சுவையை அறியாமல் இருப்பதை அரோசகம் என்று சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. வாயில் நீர் ஊறல், ஒருவித கசப்புச்சுவையை நாவில் உணருதல், வாயில் எந்த சுவையும் தெரியாமல் இருத்தல் அல்லது சுவை மாறி காணுதல் போன்ற உபாதைகள் அரோசகத்தின் அறிகுறிகளாகும்.கடுமையான கிருமித்தொற்றினால் ஏற்பட்ட மூளை நரம்பு மண்டல பாதிப்பு, மருந்து மாத்திரைகளால் சுவை அரும்புகள் முனை மழுங்கிப்போதல், கடுமையான சளித்தொல்லை அல்லது சுரம் இருத்தல், மஞ்சள்காமாலை போன்ற கல்லீரல் சார்ந்த நோய்கள், ரத்தசோகை, உண்ணும் உணவில் நஞ்சு கலந்திருத்தல் அல்லது ஒவ்வாத பொருள் கலந்திருத்தல், செரிமான என்சைம்கள் சரியாக பணிபுரியாமல் இருத்தல், எச்சில் சுரப்பில் அமிலம் கலத்தல் போன்ற காரணங்களினாலும் மனம் சார்ந்த நோயினாலும் ருசியின்மை தோன்றும். சிலருக்கு உண்ணும் உணவானது எப்பொழுதும் துவர்ப்பாக இருத்தல், உண்டபின் கசப்பாகவோ, புளிப்பாகவோ குமட்டல் ஏற்படுதல், வாயில் மாமிசம் கழுவிய நீர் வாடை அடித்தல், எச்சில் சில நேரம் இனித்தல் போன்ற தொந்தரவுகளுடன் ஒருவித மனசோர்வு ஏற்பட்டு உணவு உண்ணாமல் அல்லது உண்ட உணவை குமட்டி வாந்தியெடுத்தல் அல்லது லேசாக உட்கொண்டுவிட்டு உணவு உண்ண மறுத்தல் போன்ற தொல்லைகள் அரோசகத்தில் உண்டாகும்.இதனால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளை, உலர்ந்த திராட்சை ஆகியவற்றை அடிக்கடி சாப்பிட வேண்டும். பிரண்டை, எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற வைட்டமின் சி நிறைந்த உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும். நாவில் ருசியின்மையால் தோன்றும் பலவித வயிற்றுக் கோளாறுகளை நீக்கி, நாவிற்கு ருசியைத் தருவதுடன், பசியைத் தூண்டி, உண்ட உணவை எளிதில் செரிக்கச் செய்யும் மருத்துவ பழம்தான் நாரத்தை. இந்த பெருஞ்செடிகளின் பழங்கள் உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகின்றன. இவற்றில் உள்ள சிட்ரஸ் பயோபிளேவனாய்டுகள், ஹெஸ்பெரிடின், ரூட்டின், டயோஸ்மின், நருஞ்சின், டான்செரிடின், டயோஸ்மெட்டின், நியோஹெஸ்பெரிடின், குர்சிட்டின் மற்றும் ஏ, பி, சி வைட்டமின்கள் நாவின் சுவை நரம்புகளை தூண்டி, நாவில் படிந்திருக்கும் மாவுப்பொருட்களை நீக்கி நாவிற்கு ருசியை தருவதுடன், செரிமான என்சைம்களை தூண்டுகின்றன. 10 நாரத்தை காய்களை அறுக்காமல் நீரில் போட்டு லேசாக வேகவைத்துக்கொள்ள வேண்டும். வெந்தபின் நீரை வடிகட்டி, நாரத்தையை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, 100 கிராம் உப்பு சேர்த்து பிசறி, 2 நாட்கள் வைத்திருந்து அத்துடன் வறுத்து, பொடித்த பெருங்காயம், வெந்தயம், மிளகாய் வற்றல் கலவையை கலந்து, லேசாக மஞ்சள்பொடி சேர்த்து, சூடான நல்லெண்ணெயை ஊற்றி, ஊறுகாய் போல் பக்குவப்படுத்தி வைத்துக்கொள்ள வேண்டும். சுரம் வந்தபின் நாக்கசப்பு உள்ளவர்கள், நாவில் ருசி தோன்றாதவர்கள் இதனை ஊறுகாய் போல் வாரம் ஒருமுறை அல்லது இரண்டு முறை சேர்த்துவரலாம். 10 நாரத்தை காய்களை முழுதாக நீரில் போட்டு லேசாக வேகவைத்து, நீரை நீக்கி, மெல்லிய நீளமான துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசறி, 2 அல்லது 3 நாட்கள் கழித்து நீர் நன்கு உலர்ந்ததும், வெயிலில் நன்கு சக்கையாக வறண்டுபோகும் வரை காயவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
சுரம், பசியின்மை, அஜீரணம், குமட்டல், வாந்தி போன்ற நிலைகளில் தோன்றும் நாக்கசப்பு மற்றும் ருசியின்மை நீங்க இதனை நாவில் போட்டு சப்பி வரலாம் அல்லது உணவுடன் சேர்த்து உட்கொள்ளலாம். அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உப்பை குறைத்து பயன் படுத்தலாம்.

-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்,


***
thanks டாக்டர்
***

"வாழ்க வளமுடன்"

தினமும் 1 முட்டை கொடுப்பதன் மூலம் கற்கும் திறனை அதிகரிக்கலாம் ?

*

நமது உடலுக்குத் தேவையான அனைத்து வகையான ஊட்டச்சத்துக்களும் முட்டையில் உள்ளது.
முட்டையில் தேவையான அளவு கொழுப்பு மற்றும் புரதச்சத்து நிறைந்துள்ளது.

முட்டையின் வெள்ளைக்கருவில் 17 கலோரியும், மஞ்சள் கருவில் 59 கலோரியும் உள்ளது. நாம் சமைக்கும் முட்டையை பொருத்து கலோரிகளின் அளவு கூடும் அல்லது குறையும்.

முட்டையில் தைராய்டு ஹார்மோன் சுரப்பதற்குத் தேவையான அயோடின் உள்ளது.

பற்கள் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பாஸ்பரஸ் உள்ளது.

காயங்களை குணமாக்கும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்குத் தேவையான துத்தநாகம் அதிகம் காணப்படுகிறது


முட்டையில் கெட்ட கொலாஸ்டிராலுடன் நல்ல கொலஸ்ட்ரால் அளவும், டிரைகிளி செர்டைஸின் அளவும் இதே அளவு சக்தி வாய்ந்த தரத்துடன் இருக்கின்றன. எனவே, கெட்ட கொலஸ்ட்ரால் இரத்தத்தில் சேராது.


இத்துடன் இதயத்திற்குப் பாதுகாப்பான ஃபோலிக் அமிலம் மற்றும் பி குரூப் வைட்டமின்களும், நச்சு முறிவு மருந்துகளும், கொழுப்புச் செறிவில்லாத கொழுப்புகளும் முட்டையில் உள்ளன

தினம் ஒரு முட்டை

தினமும் குழந்தைகளுக்கு ஒருமுட்டை கொடுப்பதன் மூலம் அவர்களின் கற்கும் திறனை அதிகரிக்கிறது. காலை உணவுடன் முட்டை வழங்குவதால் கவனிக்கும் தன்மை அதிகரிப்பதாகவும்,வாசிப்புத் திறன் கூடும் என்றும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

குழந்தைகளின் எடையை சீராக வைத்திருக்கும். எடைக்குறைவான குழந்தைகளுக்கு தினமும் ஒரு முட்டை கொடுப்பதன் மூலம் சத்துக்கள் கூடுவதோடு உடல் எடை அதிகரிக்கும்.


மூளை வளர்ச்சி அதிகரிக்கும்

வளரும் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சி மிகவும் அவசியம். தினம் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி அதிகரிக்கும்.முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டல் கண்பார்வையை தெளிவாக்கும்.


குழந்தை பருவத்தில் இருந்தே தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதன் மூலம் வயதான பின்பு ஏற்படக்கூடிய கார்ட்க்ராக்ட் பிரச்சினையில் இருந்து தப்பலாம். முட்டையில் உள்ள வைட்டமின் டி உயிர்ச் சத்து எலும்புவளர்ச்சிக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதயக்கோளாறு மற்றும் பக்கவாத நோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கிறது. தலைமுடி வளர்ச்சி மற்றும் தோல் பளபளப்பிற்கு முட்டை சிறந்த பங்காற்றுகிறது.


வாரத்திற்கு ஆறு முட்டை உட்கொள்ளும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவது 44 சதவிகிதம் குறைவதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.


இதயநோய் பாதிப்பு குறையும்

அமெரிக்காவின் முட்டை சத்துணவு மையமும், ஹார்வார்டு ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தும் கடந்த 14 ஆண்டுகளாக முட்டை உணவு பற்றி ஆராய்ந்தன. 14 ஆண்டுகள் தினமும் முட்டை சாப்பிடும் பல ஆயிரம் பேர்களைத் தொடர்ந்து கண்காணித்தார்கள்.


இவர்கள் உடலில் இதய நோய்க்கான அறிகுறியே இல்லை என்பது தெரியவந்தது. சத்துணவான முட்டையில் உள்ள பொருட்கள் இதய நோயைக் குணப்படுத்துகிறது. அதிக அளவு கொலஸ்ட்ரால் இல்லாமல் பார்த்துக் கொள்கிறது. இதனால், முட்டை சாப்பிட்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் அதிகரிக்கவில்லை. எனவே, இதயநோய் அபாயமும் இல்லை.


முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. ஆனால், அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறது ஹார்வார்டு பள்ளி. சரிவிகித உணவு சத்துணவுத் திட்டம் தயாரித்து அதன்படி சாப்பிடுகிறவர்கள் தினமும் முட்டையை ஒதுக்கவேண்டாம்.

1976ஆம் ஆண்டு முதல் பதினோரு அமெரிக்க மாநிலங்களில் தினமும் முட்டை சாப்பிட்டு வந்த நர்சுகளின் உடல்நிலை கவனிக்கப்பட்டு குறிப்புகள் சேர்க்கப்பட்டன. இது 2 வருட ஆய்வு. இது போக, 1986 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க பல் மருத்துவர்கள், கண் மருத்துவர்கள், கால்நடை மருத்துவர்கள் ஆகியோர் தினமும் முட்டை சாப்பிட்டனர்.


அவர்களிடம் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை கேள்வி கேட்கப்பட்டது. அந்த மருத்துவர்களின் கொலஸ்ட்ரால் அளவு, கடந்த 12 ஆண்டுகளில் அதிகரிக்கவில்லை. ஸ்டிரோக் அபாயமும் ஏற்படவில்லை.

80 ஆயிரம் நர்சுகளின் உடல் நலம் பற்றிய 14 ஆண்டு கால மருத்துவக் குறிப்பேடுகள், 37 ஆயிரம் ஆண்களின் உடல் நலக்கோளாறு பற்றிய எட்டு வருட மருத்துவக் குறிப்பேடுகள் தினமும் ஒரு முட்டை சாப்பிடலாம். அதுவும் பயமில்லாமல் சாப்பிடலாம் என்று உறுதியாகத் தெரிவித்தது.

சாதாரண அவித்த முட்டையில்தான் இவ்வளவு நன்மைகள். ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் அளவுதான் கொலஸ்ட்ரால் நம் உணவில் சேரலாம். ஒரு முட்டையில் 213 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவே இதயத்துக்கு நலம் பயக்கும்.


நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும். மருத்துவர்களின் ஆலோசனையின்படி வாரம் ஒரிரு முட்டை சாப்பிடலாம்


***
thanks google
***"வாழ்க வளமுடன்"

16 ஆகஸ்ட், 2011

நில நடுக்கத்தின் போது செய்யவேண்டிய தற்காப்பு நடவடிக்கை


நில நடுக்கம் தற்பொழுது தமிழ்நாட்டில் அடிக்கடி நிகழும் சம்பவம் ஆகி விட்டது. ரிக்கடர் அளவில் 6 மேல் ஏற்படும் போது அதிக இழப்பு ஏற்படுகிறது.

நில நடுக்கம் பூகம்பம் வரும் முன் ஏற்படும் ஒரு முதல் அறிகுறியாக இருப்பதால் நில நடுக்கம் குறைந்த அளவாக உணரப்பட்டாலும் அதற்கு முக்கியதுத்துவம் கொடுத்து பாதுகாப்பு இடத்திற்கு செல்வது அவசியம் ஆகிறது.

சில சமயங்களில் தொடர்ந்து ஒன்றன் பின் ஒன்றாக அடுத்தடுத்து நில நடுக்கம் ஏற்படுவதுண்டு. பூமிக்கடியில் உள்ள 7 முக்கிய அடுக்குகளில் சில அடுக்குகள் லூசாக நகர்வதுண்டு அதுவே நில நடுக்கமாக உணரப்படுகிறது.


சொல்லாமல் வரும் திடீர் விருந்தினராக வரும் நில நடுக்கம்:

இது எந்த உயிரையையும் கொல்வதில்லை எனபதுதான் உண்மை. பூகம்பத்தை தாக்கு பிடிக்கும் வகையில் கட்டபடாத கட்டிடங்களின் இடிபாடுகள் தான் பல உயிர்களின் இழப்புக்கு காரணமாக இருக்கிறது.

எனவே நில நடுக்கம் ஏற்படும் என்று அறிவிக்கப்பட்ட பகுதிகளில் பூகம்பத்தை தாக்கும் பிடிக்கும் வகையில்( BIS code) கட்டிடத்தை கட்டவேண்டும்.


நில நடுக்கம் உணர்ந்தவுடன் செய்யவேண்டியது:

1) வீட்டை விட்டு வெளியில் விரைவாக ஒரு நிமிடத்தில் செல்லமுடியும் என்றால் வந்து திறந்த வெளியில் அருகில் எந்த கட்டிடமோ, மரமோ, மின் கம்பம், தொலைபேசி கம்பங்கள் இல்லாத இடத்தில் நிற்கவேண்டும். மேலே மின் கம்பிகள் இல்லாத இடமாகவும் இருக்கவேண்டும்


2) நடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயை பூகம்பமாக மாறி கட்டிடங்கள் இடிபட ஆரம்பித்துவிடும். அந்த சமயத்தில் வெளியேரும் பலரும் இடிபாடுகளில் மாட்டி கொள்கிறார்கள். வீட்டின் உள்ளேயும் தங்கள் விலைமதிப்பான பத்திரபடுத்த ஆங்கேங்கே நடமாடும் ஆசாமிகள் மாட்டிக்கொள்கிறார்கள்.


3) அடுக்கு மாடி கட்டிடத்தில் உள்ளவர்கள் கட்டாயம் வெளியே வருவதை தவிர்க்கவேண்டும். எல்லோரும் ஒன்றாக படிகட்டில் அடைந்து நெரிசலில் பல உயிர்கள் இழப்பு ஏற்படுகிறது. எந்த காரணத்தை கொண்டும் லிஃப்ட் ஐ பயன்படுத்துவதை தவிர்க்கவேண்டும். மின் தடை ஏற்பட்டு பாதியில் நின்றுவிடும் வாய்ப்புள்ளது.


4) நில நடுக்கம் உணரப்பட்டதும் விரைவில் வெளியே செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளவர்கள் தங்கள் வீட்டில் உள்ள வழுவான கட்டில் அல்லது மேஜை அடியில் படுத்துக்கொள்ளவேண்டும். அடியில் பயத்துடன் படுத்திருக்கும் போது நில நடுக்கத்தினால் மேஜை அல்லது கட்டிலோ இடம் பெயர்ந்துவிட்டிற்கும்.

எனவே அதன் கால்களை கெட்டியாக அசையாமல் பிடித்துக் கொள்ளவேண்டும். குடும்ப உறுப்பினர்கள் முன் கூட்டியே யார்யார்க்கு எந்த கட்டில் என்றும் அப்பொழுது நடந்து கொள்ளவேண்டிய முறைகளை பற்றி ஒத்திகை நடத்திருந்தால் மிகவும் சிறப்பு.

கட்டிலின் அடியில் பொதுவாக பலபொருட்களை வைக்கும் பகுதியாக பயன்படுத்துவதை கைவிடவேண்டும்.


5) மேஜை அல்லது கட்டில் கிடைக்காதபோது வீட்டின் உள்ளே உள்ள கதவின் நிலை கால் அடியில் நின்றுகொள்ளவேண்டும். கதவின் வாசற்கால் வைத்திருக்கும் அமைப்பின் மேல் லிண்டல் அமைப்பு காங்கிரிட்டில் இருக்கும். அது இடிபாடுகளின் பகுதிகள் நம் மேல் விழும் பாதிப்பை குறைக்கும்.


6) கதவு குறைவாக இருந்து உறுப்பினர்கள் அதிகமாக இருந்தால் கட்டிடத்தின் மூலை பகுதியில் அட்டைப்போல் ஒட்டிக்கொள்ளவேண்டும். நில நடுக்கத்தின் போது கட்டத்தின் மையபகுதிதான் முதலில் விழும், மேலும் அவைகளின் மூலம் தான் பாதிப்புகள் அதிகம் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன்.


7) ஒரு தலையாணையை தலையில் ஐயப்ப பக்தர் போல் வைத்துக்கொள்ளுதல் வேண்டும்.


8) இடிபாட்டில் மாட்டிக்கொண்டால், முதலில் ஆசுவாசபடுத்திக்கொண்டு நீண்ட உள் மூச்சு இழுத்து காற்றை நன்றாக இழுத்துக்கொள்ளவேண்டும். பின்னால் இடிபாடுகள் அதிகமாகி காற்றே கிடைக்காமல் போகலாம்.

இடிப்பாட்டு தூசுகளை மற்றும் புகை மூட்டத்தை தவிர்க்க ஒரு கர்ச்சீப்பை முகத்தில் கட்டிகொள்ளவேண்டும். துகள்கள் மூச்சு திணறலை ஏற்படுத்தலாம்.


9) இடிபாடுகளை உள்ளே இருந்து நீக்கி வெளியே வர முயலக்கூடாது. வெளியா எப்படிப்பட்ட நிலை உள்ளது என தெரியாது. நம்முடைய முயற்சி சரிவை அதிகப் படுத்திவிடும்.


10) இடிபாட்டிற்குள் இருந்து சத்தம் இட்டு அல்லது கூக்குரல் செய்வதை தவிர்க்கவேண்டும். இவைகள் நம்மை எளிதில் பலம் இழக்கசெய்துவிடும்.உதவிக்கு சத்தம் இடுவது கடைசி முயற்சியாமட்டுமே இருக்கவேண்டும்.


11) அருகில் உள்ள சுவரை தட்டுவது, கையில் விசில் வைத்துகொள்ளுதல் வெளிநாட்டில் வழமையாக உள்ளது. நாமும் விசில் ஒன்று வைத்திருந்தால் அதை ஒலிக்கசெய்து காப்பாற்று பணியில் உள்ளவரை நம் பக்கம் ஈர்க்கலாம்.சிறிய டார்ச் லைட் வைத்துகொள்ளுவது கூட உதவி செய்யும்.


12) நில நடுக்கத்தின் போது வெளியில் வந்தபின் நமது இடிபட்ட வீட்டிற்குள் எதேனும் முக்கிய எடுக்கவேண்டும் உள்ளே செல்லக்கூடாது. சில இடிப்பாடுகள் தாமதமாக ஏற்படலாம். மீட்பு குழுவினர் மட்டுமே அப்பணிகளை செய்யவேண்டும்.


13) நிலநடுக்கம் முடிந்த பின் பாதுகாப்பான இடத்திலிருந்து ரேடியோ அல்லது தொலைக்காட்சி மூலம் செய்திகள் கேட்கவேண்டும்.அரசு நில நடுக்கத்தின் ரிக்டர் அளவு, மீண்டும் வரும் எச்சிரிக்கை, பாதுகாப்பு ஆலோசனைகள் கேட்டு அதை கடைப்பிடிக்கவேண்டும்.


14) நிலநடுக்கத்தின் போது கார் ஒட்டி கொண்டிருந்தால் காரை பாதுகாப்பாக மரமோ, மின் கம்பமோ. மின் கம்பிகள் பாதை இல்லாத இடமாக ஓரமாக நிறுத்தி காரின் உள்ளேயே இருக்கவேண்டும். நிலநடுக்கம் நின்று விட்டதை உறுதியாக அறிந்து பின் பாலங்கள் இல்லாத வழியாக தேர்வு செய்து வீடு திரும்பவேண்டும்.

ஏனேன்றால் பாலங்கள் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டு கார்செல்லும் போது விபத்து ஏற்படலாம்.

வெளிநாட்டில் ஒவ்வொரு குடும்ப உறுப்பினரும் இது போன்ற பேரிடர் போது கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளை நன்றாக பயின்று அவைகள் மாதம் ஒரு முறை ஒத்திகை பார்த்து தயார்நிலையில் இருப்போம்.

நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்களும் இன்றைக்கே பேரிடர் ஒத்திகை பார்த்துவிடுங்கள், இழப்புகளை குறைத்துக்கொள்ளுவோம்!


***
thanks spselvam
***
"வாழ்க வளமுடன்"

15 ஆகஸ்ட், 2011

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துகள்!


துயரின்றி நாம் வாழ
துன்பம் பல கண்டவர்களுக்கும்
ஒய்யாரமாக நாம் வாழ
உயிர் விட்ட சிங்கங்களுக்கும்
மானத்தோடு நாம் வாழ
செக்கிழுத்த செம்மல்களுக்கும்
சுதந்திரமாக நாம் வாழ
சண்டையிட்ட மறவர்களுக்கும்
சுதந்திர நாளில்
இதய அஞ்சலியை செலுத்துவோம்!!!


மகா பிரபு ( eegarai )***

வந்தேமாதரம் :)


****"வாழ்க வளமுடன்"13 ஆகஸ்ட், 2011

எந்த காயை, எவ்வளவு நாள் பிரிட்ஜில் வைக்கலாம்?


பழங்கள்:

திராட்சை, ஏப்ரிகாட், பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள்

ஆப்பிள்கள் ஒரு மாதம்

சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள்

அன்னாசி (முழுசாக) 1 வாரம்

(வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள்

*

காய்கறிகள்:

புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள்

முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி,

ஓம இலை 1-2 வாரங்கள்

வெள்ளரிக்காய் ஒரு வாரம்

தக்காளி 1-2 நாட்கள்

காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம்

காளான் 1-2 நாட்கள்


*

அசைவ உணவுகள்:

வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள்

சமைத்த மீன் 3-4 நாட்கள்

பிரஷ் மீன் 1-2 நாட்கள்


***
thanks Mohamed Ali
***
"வாழ்க வளமுடன்"

தோள்பட்டை வலி தொந்தரவு தந்தால்…! (மருத்துவ ஆலோசனை )உங்களுக்கு பிடித்தமானவரை பாராட்ட விரும்பினால், அவரது உடலின் எந்த பகுதியில் தட்டிக் கொடுப்பீர்கள்?


- அன்பானவரை அணைத்துக் கொள்ளும்போது உங்கள் உடலின் எந்தப்பகுதி அதிக முக்கியத்துவம் பெறும்?


- சச்சின் தெண்டுல்கர், செஞ்சுரியைத் தாண்டி அடித்து விளாசும் போதும், சானியா மிர்சா நாலாபுறமும் டென்னிஸ் பந்தோடுபந்தாக சுழலும் போதும், அவர்களது உடலில் அதி நுட்பமாக வேலை செய்யும் உறுப்பு எது தெரியுமா?


… இவை அனைத்திற்கும் ஒரே பதில்தான் ! அது தோள்பட்டை மூட்டு. அதனோடு இணைந்த எலும்பு, தசைகள்.


சரி, இன்னொரு கேள்வி!. மனித உடம்பில் அவ்வப்போது தொந்தரவு தரும் உறுப்புகளில் குறிப்பிட்ட ஒன்றைச் சொல்லுங்கள் என்றால் என்ன சொல்வீர்கள் ?

- இந்தக் கேள்விக்கும் மேலே சொன்ன அந்த உறுப்புதான் பதில். அதாவது தோள்பட்டை மூட்டு, எலும்பு, தசை, அவை சார்ந்த கழுத்துப் பகுதி ஆகியவை மனிதர்களுக்கு அவ்வப்போது தொந்தரவு தருகிறது.

`சரி ரொம்ப உழைக்கிற உறுப்பு அடிக்கடி, மக்கர் பண்ணுவது இயல்புதானே’ என்று யாராலும் ஆறுதல்பட்டுக் கொள்ள முடியாது. ஏனென்றால் தோள்பட்டை வலி வந்தவர்களுக்குதான் அது தரும் வேதனை புரியும். அது மட்டுமன்றி இடது பக்க தோள்பட்டை மற்றும் புஜ பகுதியில் வலி வந்தாலே.. `அய்யோ உடனே ஆஸ்பத்திரிக்கு போயிடுங்க.. இதயத்தில் பிரச்சினை வந்தால்தான், இடது புற தோள்பட்டை வலி ஏற்படும்.’ என்று சொல்லி பயப்படும் மனிதர்களும், – அந்த பயத்திற்கு பச்சை கொடி காட்டி, `ஆமாங்க,.. அது சரிதாங்க.. என்று கூறி, `ஐ.சி.யூ’ வில் சேர்ந்து, 2,3 நாட்கள் கழித்து, அதே தோள் பட்டை வலியுடன் நொந்துபோய் மருத்துவமனையைவிட்டு வெளியேறியவர்கள் பலர் உண்டு. இதனால் இத்தோள் மூட்டு வலி பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

மனித உடலில் உள்ள மூட்டுகளில், அதிக அளவில் பல திசைகளிலும் அசைந்து, முக்கியமாக, நம் கைகளை தலைக்கு மேலே உயர்த்தி “தமிழன் என்று சொல்லடா? தலை நிமிர்ந்து நில்லடா” என்று நம்மை உசுப்பி விடுவதற்கு இந்த தோள்பட்டை மூட்டு தேவை.

பல வகைகளில் இந்த மூட்டை செயல்படுத்த முடியும் என்பதால்தான், ஸ்கிப்பிங் விளையாடவும், சமையல் கட்டின் மேலே உள்ள கடுகு டப்பாவை கரெக்டாக எடுக்கவும், காபி, டீ பருகவும், தெரியாமல் தப்பு செய்து விட்டால் தலையை சொரியவும், நினைவில் இல்லாததை நினைவுபடுத்த நெற்றியை தடவவும், பெண்கள் முதுகுப்பகுதி பிரா ஹூக்கை சுயமாக மாட்டிக் கொள்ளவும், பேனா பிடித்து எழுதவும், கம்ப்யூட்டரில் எழுத்துக்களை டைப் செய்யவும் நம்மால் முடிகிறது.

தோள்பட்டை மூட்டை, `பந்துக்கிண்ண மூட்டு’ என்று நாம் படித்திருப்போம். இந்த தோள்பட்டை மூட்டு இத்தனை வேலைகளையும் சிறப்பாக செய்ய, புஜ எலும்பின் தலைப் பாகமும்(பந்து), அது பொருந்தி இருக்கும் தோள்பட்டை எலும்பின் கிண்ணமும் சீரான அமைப்பில் இருப்பது முக்கியம். இது போலவே அவசியமானது, இந்த மூட்டை பல திசைகளில் திருப்ப உதவும் தசைகளின் ஒருங்கிணைந்த சேவை.

தோள் மூட்டில் பல திசைகளில் அசைவுகள் ஏற்படும்போது, அதிலுள்ள பந்து போன்ற புஜ எலும்பின் தலைப்பாகத்தை கிண்ணம் போன்ற எலும்புப் பகுதியில் ஒழுங்காக பொருந்தி உள் பக்கமும் – வெளிப்பக்கமும் நம் கையைச் சுழலச் செய்ய, சுழல் தசைகளின் கோர்வை (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) எனும் தசை நாண்களின் சேவை மிக அவசியமாகிறது. இந்த தசைகளின் கோர்வை புஜ எலும்பின் தலைப்பாகத்தை தோள்பட்டை பந்து மூட்டை, கிண்ணத்தில் சரியாகப் பொருந்தி வைத்து, முறையாக இயங்க வைக்கும் வேலையைச் சரியாகப் பார்த்துக் கொள்கிறது.

மனித உழைப்பில், நுட்பமான செயல்பாடுகளில் மூட்டுப்பகுதிக்கு பெரும் பங்களிப்பு இருப்பதால், அதில் எப்போது வேண்டுமானாலும், பிரச்சினை ஏற்படலாம். திடீரென்று ஏற்படும் சாதாரண வலிகூட அதிக தொந்தரவும், கவலையும் தரலாம்.

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்கள், கம்ப்யூட்டர்களில் அமர்ந்து அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள், இருக்கைகளில் சரியான முறையில் அமராதவர்கள், எக்கி பொருட்களை தூக்குகிறவர்கள் கையைத் தலைக்கு கீழே மடக்கி வைத்து தூங்குகிறவர்கள், உடற்பயிற்சியில் தோள் மூட்டுக்கு அதிக வேலை கொடுப்பவர்கள்… இப்படி யாருக்கு வேண்டுமானாலும், தோள்பட்டை வலி, புஜப் பகுதி வலி, கழுத்து எலும்புப் பகுதி வலி போன்றவை ஏற்படலாம்.

இந்த வலியை பெரும்பாலானவர்கள் சீரியசாக எடுத்துக் கொள்கிறார்கள். இதற்கு காரணம், தேவையற்ற பயம். இதய நோயின் அறிகுறியாக, 100 பேரில் ஒருவருக்கு நெஞ்சுபகுதியில் வலி உருவாகி, அது கழுத்துக்குப்போய் இடது பக்க தோளுக்குப் பரவ வாய்ப்புண்டு. மீதமுள்ள 99 பேருக்கு ஏற்படுவது, தோள்பட்டை அல்லது கழுத்து பாதிப்பால் ஏற்பட்ட வலிதான். ஆனால் பலரும் மேற்கண்ட வலியை அனுபவிக்கும் போது, தனக்கு இதய நோய் பாதிப்பு வந்துவிட்டதாக மிரண்டு விடுகிறார்கள்.

தோள்பட்டை வலிக்கும், இதய நோயின் அறிகுறியான இடது புறத்தில் பரவும் வலிக்கும் உள்ள வித்தியாசத்தை சாதாரண மக்களால், துல்லியமாக கண்டுபிடிக்க இயலாது என்பது உண்மையாக இருந்தாலும், அவர்கள் வலி ஏற்பட்ட உடனே, பயந்து அது இதய நோயின் அறிகுறி என்று நினைத்து அச்சம் கொள்ள வேண்டாம் என்று கூற விரும்புகிறேன்.

மேலே கையை தூக்கி வேலை பார்ப்பவர்களுக்கு, 45 வயதுக்கு மேல் தோள்பட்டை மூட்டு தசை, இணையும் இடத்தில் தசைகளுக்கு மேல் அழுத்தம் ஏற்படுகிறது. எலும்பின் அடர்த்தி குறைந்து, ரத்த ஓட்டத்திறன் மந்தப்படவும் வாய்ப்பிருக்கிறது. அப்போது வலி தோன்றும். தோள்பட்டை பகுதியில் வலி ஏற்படும் போது, கையைத் தூக்கினாலும், கழுத்தை அசைத்தாலும், வலி அதிகரிக்கும். (இதய நோயின் அறிகுறியாக தோள்பட்டைப் பகுதியில் பரவும் வலியாக இருந்தால், கையைத் தூக்கினாலும், தலையை அசைத்தாலும் வலிக்காது.)

தோள்பட்டை மூட்டு பாதிப்பால் ஏற்படும் வலி என்றால், அது முழங்கை மூட்டுக்கும், தோள்பட்டைக்கும் நடுவில் (அசுஙுசூ) வலிக்கும். இரவில் படுக்கும் போது சிலருக்கு, இந்த வலி அதிகரிக்கும். கழுத்து எலும்புகளின் இடையே உள்ள ஜவ்வுகள் போன்றவை தேய்ந்தாலும், தோள்பட்டை வலி தெரியும். சில சமயங்களில் ஊசியால் குத்துவது போன்று `சுருக்` என வலிக்கும். கழுத்தின் கீழ்ப்பகுதியில் இருந்து, கைவிரல் நுனி வரை இழுத்துப் பிடிப்பது போன்று வலி வரும்.

தோள்மூட்டை உள்பக்கமும், வெளிப்பக்கமும் அசைக்கும் தசைநாரில் கால்சியம் உப்பு படிந்தாலும், வலி உருவாகும். இப்படி வலி ஏற்பட்டால், பயமில்லாமல், டாக்டரை அணுக வேண்டும். அது கழுத்து வலியா? தோள்பட்டை வலியா? `ரொட்டேட்டர் கப்’ தசை அழுத்தத்தால் ஏற்பட்ட வலியா? மூட்டு இணைப்பில் காச நோய் உருவானதால் ஏற்படும் வலியா? தோள் மூட்டின் மேல் உள்ள தசைகளில் கால்சியம் படிந்ததால், ஏற்படும் வலியா? என்பதை எக்ஸ்ரே மூலம் கண்டறிந்து விடலாம். மிக நுண்ணிய அளவில், தசை சிதைந்து போயிருந்தால், அதனை எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் கண்டறியலாம்.

பிசியோதெரபி, மருந்து மாத்திரைகளால் பெரும் பாலான தோள்பட்டை வலிக்கு நிவாரணம் கிடைத்து விடும்.

மூட்டு அசைவு குறைந்து, வலி ஓரளவுக்கு மேல் அதிகமாகி, அதனால் இரவில் தனது தூக்கத்தை தொலைத்தவர்களுக்கு சிறப்பு வைத்தியம் அவசியமாகிறது. குறிப்பாக, தோள்பட்டை மூட்டிலுள்ள வலி கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி, சின்ன வேலை செய்யக்கூட கையை சற்று தூக்கினாலே வலிக்கும். இது போன்றவர்களுக்கு தொடர்ந்து தேவையான மருந்து மாத்திரைகள், பிசியோதெரப்பி கொடுத்த பின்னும் வலி இருந்தால், எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் தோள்பட்டை மூட்டு எலும்பில் பிரச்சினையா?, சுழல் தசைகளின் கோர்வையில் (தச்ஞ்ஹஞ்ச்சு இஞிகிகி) உள்ள தசை நார்கள் நைந்து, பிய்ந்துள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியும். மேலும் அறுந்து போகாதபடி அறுவைச் சிகிச்சை செய்வது அவசியமாகிறது.

இதனால் தோள்பட்டை வலி நன்றாக குறைந்து, தொலைந்து போன அசைவை மீண்டும் வலியின்றி பெறலாம்.

“தோள்பட்டை எலும்பு வலுவாக, ஒரு நல்ல சாப்பாடு இருந்தா சொல்லுங்க டாக்டர்” என்று பலரும் கேட்பார்கள். நமது உடலில் எலும்பும் தசையும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுகிறது. நாம் தசைக்கு முறையான உடற்பயிற்சி கொடுத்தால், அது எலும்புக்கு கொடுக்கப்படும் டானிக் போல அமைந்து, வலியின்றி வாழ வழிவகுக்கும்.

விளக்கம் : டாக்டர் எம். பார்த்தசாரதி
M.B., D.Orth, M.S., F.R.C.S


***
thanks டாக்டர்
***

"வாழ்க வளமுடன்"

பிள்ளைகளின் சிறுநீரகம் பலவீனமாவதற்கு நீங்கள் காரணமாக வேண்டாம்ஒரு குழந்தையை மலசல-இருக்கையில் இருக்கப் பழக்குவதற்கு நேரமும் பொறுமையும் தேவைப்படுகின்றது. ஆனால் பல பெற்றோர்கள் இதனைத் தாமதமாகவே பிள்ளைகளைப் பயன்படுத்த விடுகின்றனர்.


வைத்தியர்களைப் பொறுத்தவரை குழந்தைகள் 18 மாதங்களுக்குள் இதற்குப் பழக்கப்படுத்தப்பட்டுவிட வேண்டும் என்றும் 2 அல்லது அதற்கும் மேற்பட்ட வயதுகளில் இப்பழக்கம் தொடங்கப்படுவது நிறுத்தப்பட வேண்டுமெனவும் எச்சரிக்கின்றனர்.


இவ்வாறு தாமதமாகப் பழகிய குழந்தைகள் பாடசாலைக்குச் செல்லும்போது வலிதரக்கூடிய சிறுநீரக் கிருமித்தொற்றுக்களால் பாதிக்கப்படுவர்.


2 வயதில் அல்லது அதற்குமேல் இதைப் பழகும் குழந்தைகளுக்குத் தமது சிறுநீரைக் கட்டுப்படுத்த முடியாதநிலை ஏற்படலாம் என கனேடிய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


அத்துடன் பாதுகாப்புத் துண்டுகளைப் பயன்படுத்தும் (napkins) பல பிள்ளைகளுக்கு எப்படித் தங்களது சிறுநீரைக் கழிப்பது என்றுகூடத் தெரியாமலுள்ளது. இதனால் இவர்களும் கிருமித்தொற்றுக்கு உள்ளாகின்றார்கள்.


பிரித்தானியாவில் குழந்தைகளுக்கு இப்பழக்கத்தை 2 வயதிலேயே ஆரம்பிக்கும்படி வைத்தியர்கள் புத்திமதி கூறுகின்றார்கள்.


ஆனால் அதற்கும் பின்னர் பெற்றோர்களால் பாதுகாப்புத் துண்டுகளுடன் பழக்கப்பட்டுப் பாடசாலைக்கு வரும் குழந்தைகளால் தமக்குச் சிரமமாயுள்ளதாக ஆசிரியர்களால் கூறப்படும் முறைப்பாடுகள் அண்மையில் அதிகரித்துக் காணப்படுகின்றது.


அல்பேட்டா பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்களின் முடிவின்படி பாதுகாப்புத் துண்டுகளுடன் வரும் பிள்ளைகள் சிறுநீரகத் தொற்றுக்களால் பாதிக்கப்படுவது அதிகமாயுள்ளதெனத் தெரியவருகின்றது.


பிரிஸ்ரல் பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இன்னொரு ஆய்வில் 2 வயதிற்குப் பின்னர் இருக்கையில் பழக்கப்படும், துண்டைப் பயன்படுத்தும் பிள்ளைகள் பாடசாலைகளில் சிறுநீரைக் கட்டுப்படுத்தத் தெரியாமல் கூடுதலாகக் கிருமித்தொற்றுக்கு உள்ளாகின்றார்கள் என்கின்றது.


மலசலகூடப் பயிற்சியென்பது பொதுவானதொரு இயற்கைச் செயற்பாடாகும். இருந்தும் இதுபற்றிப் பெரிதாக எவரும் அக்கறை கொள்வதில்லை.


இவ்வாறா பிரச்சினைகளெல்லாம் தாமதமாக மலசல-இருக்கையில் பழகுவதனாலேயே ஏற்படுகின்றதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


பெண்குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் இப்பயிற்சிக்கு அதிக நேரம் எடுக்கின்றனவென்றும் தெரியவருகின்றது.***
thanks vanakkamnet
***


"வாழ்க வளமுடன்"

10 ஆகஸ்ட், 2011

சிறுநீரில் சீழ் வெள்ளை ( மூலிகை மருத்துவம் )மது இனப்பெருக்க பாதையும், சிறுநீர்ப்பாதையும் ஒன்றாகவோ அல்லது ஒன்றோடு ஒன்று இணைந்தோ காணப்படுகின்றன. சிறுநீர் கழிப்பதற்கு மட்டுமின்றி, இனப்பெருக்கத்திற்கும் உதவும் இந்த பாதையில் மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிலக்கு திரவம் வெளியேறுவதும், ஆண்களுக்கு ஆணுறுப்பில் முன் தோலில் தோன்றும் ஒருவகையான கசிவு வெளியேறுவதும், அவ்வப்போது இயல்பாக நடைபெறுவது தான்.

ஆனால் இனப்பெருக்க பாதையை சுத்தமாக, சுகாதாரமாக வைக்கவில்லையெனில் இந்த பாதையில் எளிதாக கிருமித் தொற்று தோன்றிவிடும். இதனால் இனப்பெருக்க பாதையில் கசிவு அதிகம் ஏற்படுவதும், அந்த இடங்களில் ஒருவித கசகசப்பு மற்றும் துர்நாற்றமும் உண்டாகும். சிறுநீர் எந்தவிதமான கலப்புமின்றி வெளியேற வேண்டும்.

ஆனால் சிறுநீரில் கிருமித்தொற்று ஏற்பட்டாலோ, சிறுநீரில் புரதங்கள் அதிகமாக வெளியேறினாலோ இனப்பெருக்க பாதையில் வெள்ளை நிற கசிவும், நுரைத்துப் போன சிறுநீரும், தயிரைப் போன்ற கசடும் சிறுநீர் மற்றும் இனப்பெருக்க பாதையிலோ அல்லது உள்ளாடைகளிலோ ஒட்டி காணப் படும்.

இந்த கசடானது தோன்றி உடனே மறைந்துவிடும் இயல்புடையது. போதுமான அளவு நீர் அருந்தி, உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால் இது போன்ற தொல்லைகள் அதிகரிக்காது. ஆனால் சிறுநீர் பாதையில் தோன்றும் கிருமித்தொற்றை சரியாக கவனிக்காவிட்டாலோ அல்லது இனப்பெருக்க உறுப்பு மற்றும் சிறுநீர் பாதையை சுகாதாரமாக பராமரிக்காமல் விட்டாலோ கசிவானது அதிகரித்து, இனப்பெருக்க உறுப்பு, தொடை போன்ற பகுதிகளில் கடும் புண்ணையும், அரிப்பையும் உண்டாக்கி விடும். அத்துடன் சிறுநீரில் சீழும் வெளியேறி, சுரம் உண்டாகும்.


சிறுநீர்ப்பாதை மற்றும் இனப்பெருக்க பாதையில் தொற்று ஏற்பட்டு, அதனால் சிறுநீர் செல்லும் பொழுது வெள்ளை நிறமாக பால் போன்றோ, தயிர் போன்றோ, நூல் போன்றோ திரவம் வெளியேறுதலை சிறுநீரீல் சீழ் வெள்ளை என்றும், வெள்ளை என்றும் சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. ஆண் மற்றும் பெண்ணுக்கு தோன்றும் பால்வினை நோய்கள், சாதாரண கிருமித்தொற்றுகள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோய், வீரியமிக்க வலி நிவாரணிகள், கடுமையான எதிர்உயிரி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்துதலால் மென்மையான இனப்பெருக்க மற்றும் சிறுநீர் பாதை திசுக்கள் பாதிக்கப்பட்டு, வெள்ளைப் படுதல் உண்டாகிறது.ஆண், பெண் என இருபாலருக்கும் வெள்ளை படுதல் உண்டாகிறது. இயல்பான வெள்ளைப்படுதல் சில நாட்களிலேயே மறைந்து விடுவதுடன், அரிப்போ, நாற்றமோ ஏற்படுவதில்லை. ஆனால் தொற்றினால் ஏற்பட்ட வெள்ளையினால் துர்நாற்றம், நிறமாற்றம் உண்டாவதுடன் தேவையற்ற பன்கிருமித்தொற்றும் ஏற்படுகிறது. இதற்கு முறையான ரத்தப்பரிசோதனையும், திசு பரிசோதனையும் அவசியமாகும். இனப்பெருக்க உறுப்புகளை கடுக்காய்ப் பொடி அல்லது படிகாரத் தண்ணீரால் அவ்வப்போது கழுவி, சுத்தம் செய்வது நல்லது.


கிருமித் தொற்று, சுகாதார குறைவு மற்றும் அதிக உடல் சூட்டினால் தோன்றும் வெள்ளைப்படுதலை நீக்கும் அற்புத மூலிகை ஓரிலை தாமரை. நெர்விலியா அரோகோயானா என்ற தாவரவியல் பெயர் கொண்ட ஆர்கிடேசியே குடும்பத்தை சார்ந்த தரைப்படர் கொடிகளின் இலைகள் உடல் சூட்டை தணிப்பதற்கு பெரிதும் உதவுகின்றன. இதன் இலைகளிலுள்ள பச்சையங்கள் மற்றும் ஈரப்பதம் குளிர்ச்சியை உண்டாக்கி, உணவுப்பாதை மற்றும் சிறுநீர்பாதை புண்களை ஆற்றுகின்றன. பிரŒவத்திற்கு பின் பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர் பாதை மற்றும் கருப்பை வாய்ப்பகுதியில் ஏற்படும் கிருமித் தொற்றுகளை நீக்குகின்றன.

5 இலைகளை சிறு, சிறு துண்டுகளாக வெட்டி, 1 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து, 250 மிலியாக சுண்டியபின்பு வடிகட்டி, காலை மற்றும் மாலை உணவுக்கு முன்பு குடித்து வர பிரŒவத்திற்கு பின் தோன்றும் பல்வேறு வகையான கிருமித் தொற்றுகள் நீங்கி, உடல் சூடு தணியும். அதிக உடல் சூடு, கை, கால் எரிச்சல், அதனால் சிறுநீர்ப் பாதையில் தோன்றும் புண்கள், சிறுநீர் அடைப்பு, சொட்டு நீர் மற்றும் மூத்திர கிரிச்சரம் ஆகியன நீங்க ஓரிலை தாமரை, நெருஞ்சிமுள், நீர்முள்ளித் தண்டு, வெள்ளரி விதை, மாவிலங்கப்பட்டை, சோம்பு ஆகியவற்றை சம அளவு எடுத்து உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

5 கிராமளவு தினமும் 2 வேளை இளநீர் அல்லது மோருடன் கலந்து சாப்பிட உடல் உஷ்ணம் குறையும். சிறுநீர் தொல்லை நீங்கும். ஓரிலைத் தாமரை இலைச்சாறு, பாதாம்பிசின் பொடி இரண்டையும் கலந்து மூன்று மணி நேரம் ஊற வைத்து குடித்து வர உடல் உஷ்ணம் குறைந்து, பல வகைப்பட்ட சிறுநீர் எரிச்சல் நீங்கும்.அயோடின் சத்து குறைபாடு உள்ளதாக மருத்துவர் கூறுகிறார். சைவ உணவுகளில் அயோடின் உள்ளதா?

வயலட் நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய், பச்சை, மஞ்சள் நிறமுடைய இலச்சகட்டை கீரை, கருஞ்சிவப்பு நிறமுடைய பசலை கீரை, சிவப்பு பொன்னாங்கண்ணி மற்றும் லெட்டூஸ் கீரையில் அயோடின் உள்ளது.

வைட்டமின்கள் நமக்கு பலவித நன்மைகளை பயக்கின்றன. ஆனால் வைட்டமின்களைப் போன்றே சில வேதிப்பொருட்கள் நம் உடலில் இருக்கின்றன. இவை வைட்டமின்கள் என்ற பெயரில் அழைக்கப்படா விட்டாலும், தங்கள் செயல்களிலும், தேவையிலும் வைட்டமின்களைப் போன்றே செயல் படுகின்றன.


நீரில் கரையக்கூடிய கோலின் பெரும்பாலான உணவுகளில் காணப்படுகிறது. டாரின் என்னும் அமினோ அமிலம் மாமிசம் மற்றும் கடல் உணவுகளில் காணப்படுகிறது. தசை வீக்கம், இதய வீக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்தும் கார்னிட்டின் என்னும் பொருளும் மாமிசம் மற்றும் பசும்பால், தாய்ப்பாலில் அதிகம் காணப்படுகிறது.


செல் பிரிதலை ஊக்குவிக்கும் மயோஜனோசிட்டால் என்னும் பொருள் சாராய வகையை சார்ந்த பொருள் தானியங்களில் மற்றும் குளுக்கோஸ் செல்களில் அதிகம் காணப்படுகிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்யும் பயோபிளேவனாய்டுகள் புளிப்பான பழங்கள் மற்றும் தேநீரில் காணப்படுகிறது. வைட்டமின் ஈ போன்றே செயல்படும் கோஎன்சைம் கியு இனப்பெருக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது.


இவைகள் நமக்கு பெருமளவு தேவைப் படாவிட்டாலும், குறைந்தளவிலாவது உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்
படுகின்றது. இது போன்ற சத்துகள் சமைக்காத கீரை, காய்கறி மற்றும் உணவுகளில் ஏராளமான இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.-டாக்டர் ஜெ.ஜெயவெங்கடேஷ்


***
thanks டாக்டர்
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "