...

"வாழ்க வளமுடன்"

வயதனவர்களுக்கான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வயதனவர்களுக்கான லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 மே, 2011

பால் அப்பம்



1 சுண்டுப் பச்சை அரிசி, சிறிய வெள்ளை ரகம்

1/4 சுண்டுக்குச் சிறிது கூடிய இளநீர்

1/2 செ.மீ. தடிப்பமுள்ள கரை நீக்கப்பட்ட ஒரு துண்டு பாண்

குவித்து ஒரு தேக்கரண்டி சீனி

பெரிய பாதித் தேங்காய்

1 தே.க. உப்புத்தூள்

1/3 தே.க. அப்பச்சோடா

*

பச்சை அரிசியை நன்றாகக் கழுவி, 6-8 மணி நேரம் ஊறவிட்டு, தண்ணீரில்லாமல் வடித்து, பாண், சீனி, இளநீர் என்பவற்றுடன் பிளென்டர் (food blender) அல்லது ஆட்டுக்கல்லில் போட்டு, பட்டு ரவைபோன்ற சிறு குறுணிகள் இருக்கும்படி, சிறிது தொய்ந்த பதத்தில் அரைத்து வழித்து, ஒரு அளவான பானையில் போட்டு, ஐந்து நிமிடங்களாகுதல் நன்றாகப் பினைந்து, வெக்கை பிடிக்கக்கூடியதாக அணைந்த அடுப்பங்கரை, அல்லது மெல்லிய சூட்டில் அணைக்கப்பட்ட அவண் (oven) அல்லது இளஞ்சூடாகவுள்ள நீரினுள் வைத்து, 12 மணி நேரம் புளிக்கவிடவும். இளஞ்சூடு சற்று நேரமாகிலும் பிடிக்காவிட்டால் மா புளிக்கவேமாட்டாது.

மா புளித்தவுடன், தேங்காயைத் துருவி, சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு இரண்டு தரம் பாலைப் பிழிந்து, தடித்த பாலாக 1/3 சுண்டுவரை எடுத்து வேறாக வைத்துக் கொள்க. மறுபடியும் சிறிது சிறிதாகத் தண்ணீர் விட்டு 2-3 தரம் பிழிந்து, 3/4 சுண்டு வரையிலான பால் எடுத்து, மாவில் விட்டு, உப்பு, அப்பச்சோடா என்பவற்றையும் போட்டு, நன்றாகக் கரைத்துக்கொள்க.

பின்னர் ஒரு பழகிய அப்பத்தாச்சியை (seasoned pan) மிதமாக எரியும் அடுப்பின்மீது வைத்து, காய்ந்தவுடன், ஒரு துணிப் பொட்டணத்தை நல்லெண்ணையில் தொட்டு, தாச்சியின் உட்புறம் முழுவதிலும் இலேசாகத் தேய்த்துப் பூசி, 4 மேசைக்கரண்டியளவு மாவை ஒரு கரண்டியினால் அள்ளி வார்க்கவும். வார்த்தவுடன் தாச்சியைத் தூக்கி, சற்றுச் சரித்து, ஒருமுறை வட்டமாகச் சிலாவி விட்டு, மறுபடியும் அடுப்பில் வைத்து, வேறாக வைத்த தடித்த தேங்காய்ப்பாலில் 2 தேக்கரண்டியளவை நடுவில் பரவலாக விட்டு, ஒரு இறுக்கமான மூடியினால் மூடி வேகவிடவும். "சிலுசிலு" என்று மூடியிலிருந்து நீர் சொட்டும் சத்தம் கேட்டவுடன் திறந்து பார்த்து, வெந்த அப்பத்தை ஒரு தட்டகப்பையினால் எடுத்து. ஒரு பெரிய தாம்பாளத்தில் சுற்றிவர அடுக்கி வரவும். பால் அப்பிக்கொள்ளாதபடி, ஒன்றினது ஓரம் மரத்தின்மீது படியும்படி வைத்து, இன்னொரு தாம்பாளத்தினால்மூடி விடவும்.

குறிப்பு: ஒரு அப்பம் வேகுவதற்கு 2 ½-3 நிமிடங்கள் வரை செல்லும். செம்மையாகச் சுடப்பட்ட அப்பம் வாசனையாகவும், அழகாகவும் இருக்கும். இதன் ஓரம் மொறமொறப்பாகவும், பொன்னிறமாகவும் இருக்கும்; நடுவில் துவாரங்கள் விழுந்து, துவாரங்கள் தடித்த பாலில் தோய்ந்திருக்கும்.

கரைத்த மா அதிக தடிப்பாக இருந்தால், அப்பத்தின் ஓரம் மட்டை போலவும், நடுப்பாகம் கனமாகவும் இருக்கும். தண்ணீர் கூடிவிட்டால், ஓரம் உடைந்து மாவாகி விடுவதுடன், நடுப்பாகமும் களிபோல இருக்கும். எனவே, அப்பத்திற்கான மாவை அவதானமாகக் கரைத்தல் வேண்டும்.

அப்பச்சோடாவைக் கட்டுமட்டாகப் பாவித்தல் வேண்டும். கூடினால், அப்பம் மஞ்சள் நிரமடைவதுடன், ஒருவித வாடையும் வீசும். முதலில் இதனைக் கொஞ்சமாக போட்டுக் கரைத்து, ஒரு அப்பத்தைச் சுட்டுப் பார்த்துவிட்டு, பிறகு தேவைப்படி போட்டுக்கொள்க.

அப்பத்தை இளஞ்சூடாக, வெறுமனே, அல்லது கட்டைச்சம்பல், சீனிசம்பல், சம்பலுடன் பரிமாறலாம்.


***
thanks panippulam
***




"வாழ்க வளமுடன்"

10 மே, 2011

மாமியார் மருமகள் உறவு- பயமற்ற அன்பு நிலையான உறவு



அடர்ந்த காட்டு வழியே ஒரு மனிதன் நடந்து செல்கிறான். அப்போது இரை தேடி வந்த புலி ஒன்று அவனை பார்த்து விடுகிறது. உடனே அவனைத் துரத்துகிறது. பயந்து ஓட்டம் பிடித்த மனிதன், அங்கிருந்த ஒரு மரத்தின் மேல் தாவி ஏறிக்கொள்கிறான்.


ஆனாலும், புலி அவனை விடுவதாக தெரியவில்லை. மரத்தையே சுற்றிச்சுற்றி வருகிறது. பயம் அதிகமான மனிதன் மரத்தின் கிளையை இறுக பற்றிக்கொள்கிறான்.


அப்போதுதான் தனக்கு பக்கத்தில் ஏதோ அசைவதை உணர்ந்தவன் திரும்பி பார்க்கிறான். அங்கே ஒரு கரடி இருக்கிறது. அதை பார்த்த மாத்திரத்தில் குலை நடுங்கிபோகிறான் மனிதன்.


தன்னை பார்த்து மிரண்ட மனிதன் மீது கரடிக்கு இரக்கம் பிறக்கிறது. `மனிதா… என்னை பார்த்து பயபடாதே. நான் உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன். உயிருக்கு பயந்து மரத்தின் மீது ஏறும்போது என் காலை தொட்டுவிட்டாய். இதன் முலம் என்னிடம் அடைக்கலம் புகுந்துள்ளாய். எந்த நிலையிலும் நான் உன்னை கொல்ல மாட்டேன்` என்றது கரடி.


அப்பாடா… தலைக்கு வந்தது தலைபாகையோடு போயிற்று என்று பெரு முச்சுவிட்ட மனிதன் கீழே பார்த்தான். அங்கே புலி இடத்தைவிட்டு அகலுவதாக தெரியவில்லை. அது கரடியிடம் நைசாக பேச்சுக் கொடுத்தது.


`ஏ கரடியே! நீயும் மிருகம், நானும் மிருகம். அவனோ மனிதன். நம் இருவருக்கும் எதிரி. ஒன்று… அவனை நீ சாப்பிடு. இல்லை… கீழே தள்ளிவிடு; நான் சாப்பிடுகிறேன்` என்றது புலி.


அதற்கு கரடி, `அவன் என்னிடம் அடைக்கலம் தேடி வந்துள்ளான். அவனை நான் காப்பாற்றியே தீருவேன்` என்றது.
சிறிதுநேரம் கழிந்தது. மனம் தளராத புலி அடுத்ததாக மனிதனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்தது.


`மனிதா! எனக்கு பசி அதிகமாக இருக்கிறது. எனக்கு எப்படிம் இரை வேண்டும். கீழே இறங்கினால் நிச்சயம் உன்னை கொன்று சாப்பிட்டு விடுவேன். ஆனால், உயிர் பிழைக்க ஒரு வழி மட்டும் கூறுகிறேன்.


உன் அருகே உள்ள கரடி இப்போது தூங்கிக்கொண்டிருக்கிறது. அதை கீழே தள்ளி விட்டுவிடு. என் பசியும் தீரும். உயிர் பிழைத்துவிடலாம்` என்றது.


தான் மட்டும் உயிர் பிழைத்தால் போதும் என்று யோசித்த மனிதன், அருகே மரக்கிளையில் தூங்கிக்கொடிருந்த கரடியை பிடித்து கீழே தள்ளினான். ஆனால், கரடியோ அடுத்த கிளையை கெட்டியாக பிடித்துக்கொடு கீழே விழாமல் தப்பியது.


நடுநடுங்கிபோனான் மனிதன். அவன் கை, கால்கள் தானாக ஆட ஆரம்பித்தன. விட்டால், மரத்தில் இருந்து தானாகவே கீழே விழுந்துவிடுவான் போல் இருந்தது.


அப்போது கரடி நிதானமாகவே பேசியது. `பயப்படாதே. இப்போதுகூட உன் சுயநலத்தையும், அறியாமையையும் எண்ணி நான் பரிதாபப்படுகிறேனேத் தவிர, உன்னை பழிவாங்க நினைக்கவில்லை. இப்படிச் செய்யலாம் என்று நான் எண்ணினேன். அதனால், முன்னெச்சரிக்கையாகவே இருந்தேன்.


இபோதும்கூட நான் உன்னை கொல்ல மாட்டேன். புலியிடம் தள்ளியும் விட மாட்டேன். கவலைபடாதே…’ என்றது.
`தவறு செய்துவிட்டோமே…’என்று கண்ணீர் சிந்தினான் மனிதன்.
மிருகங்களிடம் இருக்கும் நற்பண்புகள் மனிதர்களிடம் இல்லை என்பதற்காக சொல்லபட்ட கதை இது.

***

பல மாமியார்-மருமகள் உறவிலும் இதே நிலைதான். மாமியார் என்றால் மருமகளை கொடுமைபடுத்துவாள், மருமகள் என்றால் மாமியாரை மதிக்க மாட்டாள்; மாறாக, கணவனை கைக்குள் போட்டுக்கொள்வாள் என்கிற எண்ணம்தான், இன்றைய மாமியார்கள், மருமகள்களின் முளையில் பதிவு செய்யபட்டு இருக்கிறது.


தவறாக பதிவு செய்யபட்ட அந்த கண்ணோட்டத்தில் ஒருவரையொருவர் அணுகுவதால் மாமியாரும், மருமகளும் எலியும், பூனையுமாக மாறி விடுகிறார்கள். மாமியார் மருமகளை பற்றி மகனிடமோ, மருமகள் மாமியாரை பற்றி கணவனிடமோ இல்லாததையும் பொல்லாததையும் சொல்லி, பெரும் பிரச்சினையையே ஏற்படுத்தி விடுகிறார்கள்.


இந்த விஷயத்தில் பாவம் கணவன்மார்கள்தான்! பெற்றத் தாயிடம் கோபப்படவா? தாரத்திடம் கோபப்படவா? என்று தெரியாமல், மண்டையை பிய்த்துக்கொள்கிறார்கள்.


நம்ம ராமையாவும் இந்த வகையில் பாதிக்கபட்டவர்தான். ஒருநாள் அவரது மனைவி, `நான் உங்க அம்மா பற்றி நிறைய கம்ப்ளெய்ன்ட் பண்ணிட்டு இருக்கேன். நீங்க கண்டுக்கவே மாட்டேங்குறீங்க…’ என்று கேட்டதோடு, கோபத்தில் பளார் என்று அடிக்காத குறையாக பேசி விட்டதால், மனைவியிடம் பெட்டி பாம்பாக அடங்கிவிட்டார்.


பெரும்பாலான கணவன்மார்கள் இப்படித்தான் மனைவிமார்களிடம் அடங்கிபோய் கிடக்கிறார்கள். சிலர்தான், தாயின் பேச்சைக்கேட்டு மனைவியை வாங்கு வாங்கு என்று தினமும் வாங்குகிறார்கள்.

***

இதுபோன்ற பிரச்சினைகளை தவிர்க்க என்ன செய்யலாம்?

முதலில் மாமியார்களுக்கு… மருமகளை உங்களது இன்னொரு மகளாக கருதுங்கள். வீட்டுக்கு வந்ததும் மகனை கையில் போட்டுக்கொள்வாள் என்று அக்கம் பக்கத்தில் பெருசுகள் யார் சொன்னாலும், அதை இந்த காதில் வாங்கி அந்தக் காதில் விட்டுவிடுங்கள்.


`நானும் உனக்கு அம்மாதான். நீயும் எனக்கு இன்னொரு மகள்தான்’ என்று அடிக்கடி மருமகளிடம் சொல்லி பாருங்கள். அவள் தன் அம்மாவை உங்களிடமும் காண்பாள்.


பெற்ற மகளிடம் உரிமையோடு கோபிக்கலாம். ஆனால், மருமகளிடம் அப்படிச் செய்யக்கூடாது. ஏனென்றால், மாமியார் எப்படிபட்டவர் என்பதை அவள் உங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் தெரிந்து கொள்கிறாள்.


நீங்கள் அவளிடம் ஒரு தாய்க்குரிய அன்பையும், பாசத்தையும், பரிவையும் அவளிடம் கொட்டினால், அவளும் உங்களை தன் அம்மாவாக ஏற்றுக்கொள்வாள்.


மருமகள் மனதிற்குள் ஏதாவது பிரச்சினைகளில் புழுங்கினால் அவளுக்கு அன்பாய் ஆதரவு சொல்லுங்கள்.


பிரச்சினை தீர வழிகாட்டுங்கள். மருமகள் வீட்டிற்கு வந்த பிறகு அவளிடம் எல்லா வேலையையும் ஒப்படைத்துவிட்டு ஓய்வெடுப்பதும், டி.வி.யில் சீரியல் பார்ப்பதும், பக்கத்து வீட்டு பெருசுகளிடம் ஊர் வம்புகளை பேசுவதும் நல்லதல்ல.


அவளோடு நீங்களும் வேலைகளை ஆதரவாய் பகிர்ந்து கொள்ளுங்கள். அப்படிச் செய்தால் அவளோ வீட்டு வேலைகளை தானாக செய்ய ஆரம்பித்து விடுவாள். அதற்காக அப்படியே விட்டுவிடாதீர்கள்.


நீங்களும் முடிந்தவரை உதவுங்கள். மருமகளுக்கு உடல்நலம் சரியில்லை என்றால் தாய்பாசத்தை கொட்டி கவனியுங்கள். உங்கள் அன்பில் மெய்சிலிர்த்துபோவாள் அவள்.

***

இனி, மருமகள்களுக்கு…

டி.வி. சீரியல்களில் பயமுறுத்தும் மாமியார் மாதிரிதான் நம் மாமியாரும் இருப்பாள் என்ற கற்பனைகளை தூக்கியெறிந்து விடுங்கள். அவரை உங்களது இன்னொரு தாயாக கருதுங்கள்.


எந்தவொரு தாயும் தனது மகன் கடைசிவரை தனக்கு துணை நிற்க வேண்டும் என்றுதான் நினைப்பாள். அதனால், கணவன் எப்போதும் தன்னுடன்தான் இருக்க வேண்டும், தன் பேச்சை மாத்திரம்தான் கேட்க வேண்டும் என்று எண்ணாதீர்கள்.


எல்லா மாமியார்களுமே மருமகளிடம் எதிர்பார்ப்பது நல்ல குணத்தையும், விட்டுக்கொடுக்கும் மனபான்மையும்தான். `நீங்களும் எனக்கு அம்மாதான். உங்கள் மகளிடம் பழகுவது போலவே என்னிடமும் பழகுங்கள்’ என்று சொல்லி பாருங்கள்.


`மருமகள் என்றால் என் மருமகள் போல்தான் இருக்க வேண்டும்’ என்று மற்றவர்களிடம் புகழ ஆரம்பித்துவிடுவார்.


வயதான காலத்தில் எல்லா மாமியாரும், மாமனாரும் எதிர்பார்ப்பது அமைதியான வாழ்க்கையையும், ஓய்வையும்தான்.
அதற்கு எந்த பங்கமும் ஏற்படுத்திவிடாதீர்கள்.


சாப்பாட்டை மாமியாரே போட்டு சாப்பிட வேண்டும் என்று எண்ணாதீர்கள். அவருக்கு நீங்களும் அடிக்கடி உணவு பரிமாறி, அவருக்கு பிடித்த உணவு வகைகளை செய்து கொடுத்து அசத்துங்கள்.


வயதானாலே உடல் ரீதியான தொந்தரவுகள் நிறைய வரும். அந்தநேரத்தில், மாமியாருக்கு ஒரு மகளாய் நின்று பணிவிடை செய்யுங்கள்.


அந்த வயதான உள்ளம் உங்களை பாராட்ட வார்த்தை தெரியாமல் மகிழ்ச்சியில் தவிக்கும்.


***
thanks vayal
***



"வாழ்க வளமுடன்"

06 மே, 2011

40 வயதில் ஆரோக்கியமாக இருப்பது எப்படி?


40 வயதை தொட்டுவிட்டாலே மனித வாழ்க்கையில் பல உடல் உபாதைகள் எட்டி பார்க்க தொடங்கிவிடும்.ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், உடல் பருமன், மூட்டு வலி என பல பிரச்சனைகளின் தொடக்கம் இந்த 40 வயதுதான்.

இவ்வாறு 40 வயதில் பிரச்சனைகளை சந்திப்பதோ அல்லது எவ்வித உபாதையும் இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதோ , உங்களது 20 வயதுகளில் நீங்கள் என்ன மாதிரியான உணவுகளை சாப்பிட்டீர்களோ, எந்த மாதிரியான வாழ்க்கை முறையை பின்பற்றினீர்களோ அதை பொறுத்துதான் அமையும் என்கின்றனர் மருத்துவ மற்றும் கட்டுடல் ஆலோசனை நிபுணர்கள்.


40 வயதுகளில் ஆரோக்கியமாக இருக்க 20 வயதிலிருந்தாவது நடைபயிற்சி போன்றவற்றை கட்டாயம் தொடங்கிவிட வேண்டும் என்று கூறும் இந்த நிபுணர்கள் தெரிவிக்கும் மேலும் பல யோசனைகள் இங்கே:

உடற்பயிற்சி:

ஒரு வாரத்திற்கு குறைந்தது மூன்று முதல் ஆறு மணி நேரமாவது கட்டாயம் உடற் பயிற்சி செய்ய வேண்டும்.நடை பயிற்சியோ அல்லது ஓட்ட பயிற்சியோ அல்லது இன்ன பிற விளையாட்டோ அல்லது உடற் பயிற்சி கூடத்திலோ... இவை ஏதாவது ஒன்றின் மூலமாகவாவது கட்டாயம் உடற் பயிற்சியை செய்ய வேண்டும்.

பலன்கள்:

இவ்வாறு செய்யும் உடற்பயிற்சி மூலம் உங்களை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாது, உங்களது தசை மற்றும் தாங்குதிறன் மேலும் பலப்படும்.மிக முக்கியமாக 40 வயதுகளில் ஏற்படுகிற பல பிரச்சனைகளுக்கு மூல காரணமான உங்களது மன அழுத்தம் குறையும்.இதனால் மாரடைப்பு மற்றும் இருதய நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியம் குறையும்.


***

வைட்டமின் உணவு:

நீங்கள் எடுத்துக்கொள்ளும் உணவில் கட்டாயம் பல வைட்டமின்கள் மற்றும் தாது சத்துக்கள் அடங்கியிருக்க வேண்டும்.

கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து உணவுகள் எடுத்துக் கொள்வது வழக்கமானதுதான் என்றாலும், போதுமான வைட்டமின்களை எடுத்துக்கொள்ளாமல் போனால் ஆரோக்கியத்திலிருந்து நீங்கள் வெகு தூரம் விலகிச் சென்றுவிடுவீர்கள்.

பயன்கள்:

உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்களும், தாதுக்களும் மிக முக்கியமானவை.

உதாரணத்திற்கு ஃபோலிக் அமிலம், பி6 மற்றும் பி12 ஆகிய மூன்று வகையான பி ரக வைட்டமின்கள், உடல் விரைவில் தளர்ச்சி அல்லது முதுமை அடைவதை தடுக்கிறது.

***


மூளைக்கு பயிற்சி:

இணைய தளங்களிலும், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களிலும் மூழ்கி கிடக்கும் இன்றைய இளம் தலைமுறையினர், உடற் பயிற்சியை போன்று மூளைக்கும் பயிற்சி கொடுக்கவேண்டும் என்பதை மறந்துவிடுகிறார்கள்.

புத்தகம் வாசித்தல், செஸ் விளையாடுதல், குறுக்கெழுத்துக்கான விடை காண்பது போன்ற மூளைக்கு பயிற்சி கொடுப்பதை கட்டாயம் செய்ய வேண்டும்.உங்களுக்கு ஆர்வம் இருக்குமானால் ஏதாவது ஒரு இசைக்கருவியை இசைக்க கற்றுக்கொள்வது கூட மூளைக்கு கொடுக்க கூடிய நல்ல பயிற்சிதான்.

பயன்கள்:

இத்தகைய பயிற்சிகள் உங்களது மூளையை சுறு சுறுப்பாக வைத்திருப்பதோடு, முதுமையில் ஏற்படும் ஞாபக மறதி போன்றவ்பற்றை தடுக்கிறது.


***


தூக்கம்:

நல்ல ஆழ்ந்த உறக்கத்தின் மூலம்தான் நமது உடல் தன்னை பழுது நீக்கிக்கொள்கிறது. நீங்கள் சரி வர தூங்காவிட்டால் உங்களது உடல் பழைய நிலைக்கு திரும்ப போதுமான கால அவகாசம் கிடைக்காது.எனவே தூக்கம் கட்டாயம் வேண்டும்.

***

நார்சத்து உணவு:

உங்களது அன்றாட உணவில் நார்ச்சத்து உணவு கட்டாயம் இருக்க வேண்டும்.நாளொன்றுக்கு குறைந்தது 10 கிராம் நார்ச்சத்து உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் இருதய நோய்ஏற்படுவதற்கான ஆபத்து 14 விழுக்காடு குறைவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


மேலும் இருதய நோயால் இறப்பதற்கான ஆபத்து 25 விழுக்காடு வரை குறைவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிப்பதால் நார்ச்சத்து உணவை கட்டாயம் எடுத்துக்கொள்ளுங்கள் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்.


***
thanks வேதுப்னியா
***






"வாழ்க வளமுடன்"

20 ஏப்ரல், 2011

இயற்கை கலரிங் செய்முறை !



“பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.


“கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது…..


1. டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.


2. இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

3. அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்!

தேங்காய்க் கீற்று 2
வெள்ளைமிளகு 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

4. கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:

இளம் மருதாணி இலை 50 கிராம்
நெல்லிக்காய் கால் கிலோ
வேப்பங்கொழுந்து 2 கிராம்…

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

5. இயற்கை கலரிங் முறை:

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.



***
thanks
***




"வாழ்க வளமுடன்"

16 ஏப்ரல், 2011

குழந்தைகளிடம் செல்பேசி தராதீர்கள்

குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இன்று செல்பேசியும் இடம் பெற்றுவிட்டது. அம்மாவுடைய போன், அப்பாவுடைய போன் மற்றும் மாமா, மாமிகள் வைத்திருக்கும் செல்போனை அந்தக் குழந்தைகள் வாங்கி பெரியவர்கள் பேசுவதுபோலவே காதில் வைத்து “ஹலோ” சொல்வதை பெரும் பேறாகக் கருதி உள்ளம் மகிழ்வார்கள். * “என்னமா பேசுது பாரு; அதுல என்னென்ன ஆப்ஷன் இருக்குன்னு எனக்குத் தெரியாது. அதுக்கு நல்லா தெரியும்” பெருமை பொங்க தன் பிள்ளை செல்போன் நோண்டுவதை பெற்றோர் ரசிப்பார்கள். * என்னதான் விலைதந்து செல்போன் வாங்கினாலும் அதில் அனைத்தும் விஷத்தன்மையுள்ள கதிரலைகளின் வாயிலாகத்தான் இயங்குகின்றன. பெரியவர்களின் எலும்பு ஓரளவு வளர்ச்சியடைந்து கனமாகி இருக்கும். பாதிப்புகள் இதனால் சற்று குறைவு. ஆனால் குழந்தைகள் எலும்பு மெலிதானது. இதனால் கதிரலை உடனடியாக அவர்களை ஊடுருவி தாக்கும் அபாயம் உண்டு. * நாடெங்கும் இரண்டரை இலட்சம் கதிரலை பரப்பும் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2ஜி, 3ஜி என்பது இந்தக் கோபுரங்களிலிருந்து கதிரலை பீய்ச்சி அடிக்கும் திறனைக் குறிப்பது. 2ஜி தகவல் பரிமாறலாம், சேமிக்கலாம், இணையத்தோடு தொடர்பு கொள்ளலாம். 3ஜி இவை அனைத்தையும் தாண்டி முன்னிலும் வேகமான செயல்பாடுள்ளது. நடந்தபடியே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை, வீடியோக்களை பார்க்கும் வகையில், செல்பேசியில் உள்ள அலை ஈர்ப்புத்திறன் கூட்டப்பட்டுள்ளது. அதைப்போல் அலைவீச்சும் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. * அணுகுண்டு கதிர்வீச்சு போலவே இந்தக் கதிரலைகள் வான்வெளி முழுவதும் வியாபித்து தொலைத் தொடர்பை உருவாக்குகிறது. அறிவியலின் தொலைத்தொடர்பு மகத்தான கண்டுபிடிப்பு இந்த 3ஜி. அதே நேரம் இது ஓர் அறிவியலாகவும் உள்ளது. இளம் பிள்ளைகள் 3ஜி வசதியுள்ள மொபைல்களை கையாளும் போது அதன் கதிரலை பயன்படுத்தும் மனிதனின் மண்டையோட்டை, செவித்திறனை, தோலை, மூளையை வெகுவாக பாதிக்கும் என்கிறார் மும்பை ஐ.ஐ.டி. பேராசிரியர் கிரிஷ்குமார். இதற்காக இவர் நாடெங்கும் உள்ள அலைக்கற்றை கோபுரங்கள் வெளியிடும் கதிர்வீச்சை ஆய்வு செய்து இந்த முடிவை தெரிவித்துள்ளார். * 3ஜி என்பதை மூன்றாம் தலைமுறை அலைக்கற்றை என்பார்கள். ஆனால், அடுத்த தலைமுறை புற்றுநோயாளிகளாக மாறும், மாற்றும் அபாயம் உள்ளதாகத்தான் அதன் முடிவுகள் தெரிவிக்கின்றன. * பெல்ஜியம், போலந்து, பின்லாந்து, பிரான்ஸ், இஸ்ரேல், ருசியா முதலிய நாடுகளில் உள்ளவர்கள் கதிரலை உடலில் பட்டால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்த படிப்பாளிகள் என்பதால், அங்கெல்லாம் மொபைலை குழந்தைகள் தொட ஊக்குவிப்பதில்லை. * மீறி என்னதான் நடந்துவிடும் நம் குழந்தைக்கு, பார்த்துவிடலாமே! என எண்ணும் பணமுள்ள படிப்பில்லாதவர்கள் தங்கள் குழந்தை தவறி கீழே விழுந்தால் ஏற்படும் சிராய்ப்பு, இரத்தக் கசிவை கண்களால் பார்க்க இயலும். ஆனால் கதிரலை பாதிப்பு என்பது சட்டென்று தெரியாது. காலப் போக்கில் தான் அது தெரிய வரும். * நரம்பு மண்டலம் தாக்கப்படுவதால் மனநல பாதிப்பு, இனம் புரியாத தலைவலி, நினைவாற்றல் குறைபாடு, தலை கிறுகிறுப்பு, அடிக்கடி உடல் சிலிர்ப்பு, தசைப்பிடிப்பு, மரத்துப்போதல், தசை மற்றும் மூட்டுக்களில் வலி, மனச்சிதைவு, உறக்கமின்மை இவைகளுடன் சமயங்களில், கைகால் செயலிழப்பு, வலிப்பு, மனநோய் என பலவும் கதிர்வீச்சால் உண்டாவது. குறிப்பாக விலை என்ன இருந்தாலும் சில மொபைல்களில் தொடர்பு கொண்டால் உரிய சிக்னல் கிடைக்காமல் நீண்ட நேரம் அழைப்பு சென்றபடி இருக்கும். இது போன்ற நிலை ஆபத்தானது. வலுவில் கதிரலையை தன்னால் இயன்ற அளவைவிட கூடுதலாக திறனை பயன்படுத்திடும்போது அந்த செல்பேசி பன்மடங்கு கதிரலையை நமக்குள் பரவ விடுகிறது. * ஆக நாகரீக பெருமைக்கான ஒரு சாதனமாக செல்பேசி இருந்தாலும் ஏகப்பட்ட ஆபத்தையும் உள்ளடக்கியுள்ளதால் உங்கள் குழந்தைகள் கையில்மட்டும் தயவு செய்து தராதீர்கள். அவர்கள் அழிவை அறியாத பிஞ்சுகள். அவர்கள் உடல் நலனோடு நோய் நொடியின்றி வாழ, அவர்களுக்காகத்தான் நான் சம்பாதிக்கிறேன் என்பது உண்மையானால் உங்கள் மொபைலை தயவு செய்து அவர்களிடம் விளையாட்டாகக் கூட தராதீர்கள். * ஆயிரக்கணக்கான கோடிகளை இதில் முதலீடு போட்டு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு உங்கள் மீதும் உங்கள் குழந்தைகள் மீதும் அக்கறை இருக்கும் என எதிர்பார்ப்பது தவறு. நாம்தான் கேடு வரும் முன்பு காத்துக் கொள்ள வேண்டும். *** நன்றி: சமூகநீதி *** "வாழ்க வளமுடன்"

14 ஏப்ரல், 2011

கொளுத்தும் கோடை வெய்யிலுக்கு ‘கூல்’டிப்ஸ்

கொளுத்தும் வெயிலுடன் கோடை நெருங்கி கொண்டிருக்கிறது. இப்போதே வெயிலின் உக்கிரம் தொடங்கி விட்டது. ஏப்ரல், மே மாதங்களில் இன்னும் அதிகமாகும். வியர்வை அதிகம் வெளியேறுவதால் உடலின் சக்திகள் உறிஞ்சப்பட்டு விடுவதால், உடல் எளிதில் சோர்வடையும். வெப்பத்தால் தோல் பாதிப்பு, சூட்டால் வருகிற தொல்லைகள் தலை தூக்கி பாடாய் படுத்தும். காட்டன் உடை, சீரகத் தண்ணீர், நோ டென்ஷன், அப்பப்போ ஜூஸ் போன்றவற்றை கடைபிடித்தால் போதும். கோடையிலும் எந்த தொல்லையுமின்றி ஜொலிக்கலாம் என்கிறார் டாக்டர் சசிகுமார். அவர் கூறுவது: நம் உடலின் உச்சி முதல் உள்ளங்கால் வரை 3 மில்லியன் வியர்வை சுரப்பிகள் எல்லா காலத்திலும் வேலை செய்கின்றன. வெளியே இருக்கும் தட்ப வெப்பத்துக்கு ஏற்ப நம் உடலின் வெப்பத்தை தகவமைத்துக் கொள்ளவே இந்த சிஸ்டம். சாதாரணமாக 600 மில்லி முதல் 800 மில்லி வரை வியர்வை வெளியேறுகிறது. உள்ளங்கால், உள்ளங்கை பகுதியில் சிறிய அளவில் வியர்வை சுரப்பிகள் உள்ளன. தலை முடிப்பகுதி, முகம், நெற்றி, கழுத்து, முதுகு, அக்குள் மற்றும் உறுப்பு பகுதிகளில் பெரிய அளவிலான வியர்வை சுரப்பிகள் செயல்படுகின்றன. வியர்வையில் உப்பு சத்து, சர்க்கரை, அமினோ அமிலம், சோடியம், பொட்டாசியம் போன்ற தாதுக்கள் வெளியேறுகின்றன. ஆண்களுக்கு 28 டிகிரி சென்டிகிரேடு வெப்பம் இருக்கும் பொது வியர்வை வெளிப்படும். பெண்களுக்கு 31 டிகிரி சென்டிகிரேடு வெப்பத்தில் வியர்வை வரும். உழைக்கும் போதும், உடற்பயிற்சி, பய உணர்வு, மனரீதியான பதற்றம் இருக்கும் போதும் வெளிப்படும். வழக்கமான வியர்வை நாற்றம் மெல்லியதாக இருக்கும். அப்படி இல்லாமல் முட்டை, வெங்காயம், கற்றாழை, மீன் போன்ற நாற்றம் உடல் வியர்வையில் இருந்து வெளிப்பட்டால் உடலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம். இதுபோன்ற பிரச்னை உள்ளவர்கள் உடனடியாக டாக்டரை அணுக வேண்டியது அவசியம். வெயில் காலத்தில் காட்டன் தவிர மற்ற உடைகளை அணியும் போது வியர்வை உடலில் தேங்கி வியர்க்குருவை ஏற்படுத்துகிறது. வெயில் காலத்தில் பருத்தி உடைகளை அணிவதன் மூலம் இதை தடுக்கலாம். வியர்வை வெளியேறும் இடங்களில் பவுடரை பயன்படுத்துவதன் மூலம் அரிப்பை தடுக்க முடியும். சுத்தமான குளிர்ந்த நீரில் குளிப்பதன் மூலம் இதற்கு தீர்வு காணலாம். வெயில் காலத்தில் அதிகளவு வியர்வை வெளியேறுவதால், உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். அப்போது தண்ணீர் குடிக்காமல் விட்டால் கிட்னியில் கல், சிறுநீர் வெளியேறுவதில் பிரச்னை, தோல் உலர்ந்து போதல் போன்ற பிரச்னைகள் தோன்றும். அதிகம் தண்ணீர் குடிப்பது, பழங்கள் மற்றும் பழச்சாறுகள் எடுத்து கொள்வது ஆகியவற்றின் மூலம் தோல் பளபளப்பாக இருப்பதுடன் கோடையால் உடலில் உருவாகும் பிரச்னைகளில் இருந்தும் தப்பிக்கலாம். குறைவாக தண்ணீர் குடிக்கும் குழந்தைகளுக்கு Ôசம்மர் டயரியாÕ வரவும் வாய்ப்புள்ளது. எனவே கோடை செய்யும் அவஸ்தைகளில் இருந்து தப்பிக்க ஒரே மருந்து தண்ணீர் தான். இவ்வாறு கூறுகிறார் டாக்டர் சசிக்குமார். *** பாதுகாப்பு முறைகள் வெயில் காலத்தில் தலையில் அதிக வியர்வை மற்றும் அழுக்கு படிவதன் காரணமாக பொடுகு தொல்லைகள் ஏற்படும். இதை தவிர்க்க அடிக்கடி தலைக்கு குளித்து சுத்தமாக வைத்து கொள்ளவும். முகம் மற்றும் தோல்பகுதியில் படியும் புழுதி, அழுக்கால் முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை ஏற்படலாம். சூரியனின் புற ஊதா கதிர்கள் நேரடியாக படுவதால் தோல் பிரச்னைகள் உருவாகும். இவற்றைத் தவிர்க்க சன்ஸ்கிரீன் லோஷன் உதவும். உதடுகளில் ஏற்படும் தோல் வறட்சியை தடுக்க பழத்தால் உருவாக்கப்பட்ட லிப் கிரீம்கள் பயன்படுத்தலாம். மேலும் நேரம் கிடைக்கும் போது முகத்தை குளிர்ந்த தண்ணீரால் கழுவலாம். அஜீரணம் மற்றும் வயிற்று வலி, சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்தால் தண்ணீரில் சீரகம் போட்டு குடிக்கலாம். சீரகம் மற்றும் வெந்தயம் சிறிது தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி மிதமான சூட்டில் குடிப்பதன் மூலம் இந்த மூன்று பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும். *** ரெசிபி எல்லோ ஸ்குவாஷ் மாம்பழத்தின் சதைப் பகுதியை பிரித்து எடுத்து ஆவியில் வேக வைத்து எடுக்கவும். சர்க்கரையில் தண் ணீர் சேர்த்து சுகர் சிரப் செய்து கொள்ளவும். வேக வைத்த மாம்பழத்தை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை சுகர் சிரப்புடன் சேர்த்து கலந்து பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளலாம். ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் மாம்பழ கலவை சேர்த்து ஜூசாக அருந்தலாம். * ரெட் டேஸ்ட்டி தக்காளியில் இருந்து நமக்கு அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது. தக்காளியை வேக வைத்து தோல் உரித்து பின் விதைகளை நீக்கவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அடித்துக் கொள்ளவும். இதை அப்படியே பிரஷ் ஜூசாக குடிக்கலாம். கலர் புல்லாக இருப்பதால் குழந்தைகளுக்கு பிடிக்கும். வைட்டமின் சி சத்து இதில் இருந்து நமக்குக் கிடைக்கிறது. இதில் பால் சேர்ப்பதை தவிர்க்கவும். * கிரீன் சிரப்: பெரிய நெல்லிக் காயை வேக வைத் துக் கொள்ளவும். கொட்டையை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கவும். இத்துடன் சர்க்கரை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ளவும். இக்கலவையை பாட்டிலில் சேகரித்து ஒரு டம்ளர் தண்ணீருக்கு கால் டம்ளர் கிரீன் சிரப் கலந்து குடிக்கலாம். நெல்லிக்காயை வேக வைப்பதால் அதில் உள்ள கசப்பு நீங்கி விடும். வெயில் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக அமையும் இந்த கிரீன் சிரப். **** டயட் காலையும் மாலையும் கஷ்டம் பார்க்காமல் குளித்து விட வேண்டும். காட்டன் டிரஸ் கொஞ்சம் லூசாக இருக்கும்படி அணியவும். மைல்டான பெர்ப்யூம் துணையுடன் சத்தான உணவுகளிலும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் உணவு ஆலோசகர் அகிலா. கோடையில் உடல் இழக்கும் எனர்ஜியை மீட்க அவர் தரும் டிப்ஸ்.. உணவு தயாரிக்கும் போது உப்பு காரம் குறைக்கவும். உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கு சிட்ரஸ் உள்ள சாத்துக்குடி, ஆரஞ்சு, எலுமிச்சை உள்ளிட்ட பழ வகைகள் அவசியம் சாப்பிடவும். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தண்ணீர் குடிக்க வேண்டும். எண்ணெயில் பொறித்த ஸ்னாக்ஸ் வகைகளுக்கு பதிலாக ஏதாவது ஒரு பழ வகை எடுத்துக் கொள்வது நல்லது. கோடை வெயிலின் காரணமாக அதிகளவு தண்ணீர் உடலில் இருந்து வெளியேறும். இதனால் வெள்ளரி, தர்பூசணி உள்ளிட்டவைகளையும் தினமும் சேர்த்துக் கொள்ளவும். முள்ளங்கி, புடலங்காய், பூசணி உள்ளிட்ட நீர்க்காய்களை சமையலில் சேர்ப்பதன் மூலம் சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதைத் தடுக்க முடியும். குழந்தைகளைப் பொருத்தவரை போதுமான எனர்ஜிக்கு ஜூஸ் வகைகளுடன் காய்கறி சூப் தரவேண்டியதும் அவசியம். *** பாட்டி வைத்தியம் 1. வெயில் கால வியர்வையின் காரணமாக தலையில் சேரும் அழுக்கு, பேன் பொடுகு ஆகியவை போக வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளவும். அத்துடன் வேப்ப இலைகளை சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் இந்த மூன்று பிரச்னையும் தீரும். * 2. வெயிலால் ஏற்படும் உடல் சூடு குறைய வெந்தயக் கீரையுடன் பூண்டு, உப்பு சேர்த்து அரைத்து சாப்பிட்டால் போதும். * 3. விளா மரத்தின் இலையை குளியல் மஞ்சளுடன் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்துக் குளிப்பதன் மூலம் சொரி, சிரங்கு மற்றும் வியர்க்குரு போன்றவை நீங்கும். * 4. முருங்கை கீரையை அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் சூடு தணியும், பொடுகுத் தொல்லையும் இருக்காது. * 5. மஞ்சள், ஆவாரம்பூ இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் உடலில் பூசிக் குளித்தால் கற்றாழை நாற்றம் ஏற்படாது. உடலும் அழகாகும். * 6. மகிழ மர இலையை பன்னீர் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் தேய்த்து குளித்தால் உடலில் ஏற்படும் கற்றாழை நாற்றம் விலகும். * 7. புளியங் கொழுந்தையும், மஞ்சளையும் சேர்த்து அரைத்து குளிர்ந்த நீரில் கலந்து குளித்து வந்தால் அம்மை நோயைத் தடுக்கலாம். * 8. நன்னாரி வேர், வெட்டி வேர் இரண்டையும் சம அளவில் எடுத்து கஷாயம் வைத்துக் குடித்தால் உடல் சூடு தணியும். * 9. கருந்துளசியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து அரைத்து உடல் முழுவதும் பூசிக் குளித்தால் உடல் நாற்றம் போவதுடன் தோல் நோய்களும் குறையும். * 10. திருநீற்றுப் பச்சிலையின் விதையை தண்ணீரில் ஊற வைத்துக் குடித்து வந்தால் உஷ்ண நோய்கள் விலகும். *** thanks தமிழ் முரசு *** "வாழ்க வளமுடன்"

12 ஏப்ரல், 2011

உடல் பருமனை குறைக்க ......

1. கார்போஹைட்ரேட் அதிகமுள்ள கோதுமை, சோளம், பார்லி போன்றவற்றின் அளவை உங்கள் உணவில் அதிகப்படுத்தவும். * 2. மைதா மற்றும் மைதா வகை உணவுகளான ரொட்டி, நூடுல்ஸ் போன்றவற்றை உங்கள் தினசரி உணவுகளிலிருந்து தவிர்க்கவும். * 3. கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளை தவிர்க்கவும். அசைவ உணவுகளே பெரும்பாலும் கொழுப்பின் உற்பத்திக் காரணிகளாக விளங்குகின்றன. வெண்ணெய், நெய், வனஸ்பதி, தேங்காய் போன்றவற்றில் உள்ள கொழுப்பு அமிலங்களே நம் உடம்பில் கொழுப்பாகவும் வளர்சிதை மாற்றம் அடைகின்றன. * 4. நீங்கள் உட்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் குறைக்கவும். * 5. பச்சை காய்கறிகளையும், பழங்களையும் அதிகம் எடுத்துக் கொள்ளவும். இவை உங்களுக்குத் தேவையான அளவு வைட்டமின்களையும், தாதுச் சத்தையும் நார் சத்தையும் தருகிறது. நார் சத்து ஜீரணத்திலும், இரத்தக் குழாய், உடல் பருமனைக் கட்டுப்படுத்துவதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. * 6. உப்பின் அளவையும் குறைக்கவும் * 7. ஒரே நேரத்தில் அதிக அளவிலான உணவை உடலுக்குள் திணிக்க வேண்டாம் * 8. அதே நேரத்தில் சாப்பிடாமலும் இருக்க வேண்டாம். * 9. உணவு உட்கொள்ளும் நேரத்தை சீராக கடைபிடிக்கவும். * 10. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டேயும் சமைத்துக் கொண்டேயும் சாப்பிடும் பழக்கத்தை விடவும். * 11. ஒரு நாளில் 6 முதல் 8 தம்ளர் தண்ணீர் பருகுவது நல்லது. * 12. சீரான உடற்பயிற்சியில் ஈடுபடவும். தினமும் 20-40 நிமிடம் நடை பழகவும். *** thanks google *** "வாழ்க வளமுடன்"

25 மார்ச், 2011

வயிற்றைப் பாதுகாக்க :)

*

வயிற்றைப் பாதுகாக்க நமக்கு வழவழப்பான திரை அமைப்பு வயிற்றுக்குள் இருக்கு :



வயசுல பெரியவங்களா இருப்பாங்க.... சின்னக் குழந்தைங்க மாதிரி கைல எப்பவும் பிஸ்கட் மாதிரி ஏதாவது வச்சு, சாப்பிட்டுக்கிட்டே இருப்பாங்க. கேட்டா அல்சர்னு சொல்வாங்க. அல்சர் வந்தவங்க வயிறை காலியா விடக்கூடாது. அடிக்கடி கொஞ்சமா எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கணும்.

**


அதென்ன அல்சர்?


நம்ம வயிற்றுக்குள்ள, வயிற்றைப் பாதுகாக்க வழவழப்பான திரை அமைப்பு இருக்கு. ஜீரண நீர் சுரந்து, உணவோடு சேர்ந்து செரிமானமாகும். சாப்பாட்டுல காரமோ, புளிப்போ, உப்போ அதிகமானா, அது அந்தத்திரை அமைப்பை சீண்டிப் பார்க்கும்.


லேசா கிழிஞ்சாகூட, நேரடியா வயிறு அல்லது குடலுக்குத்தான் பாதிப்பு. இதன் காரணமா அடி வயித்துல வலி, புளிச்ச ஏப்பம், நெஞ்செரிச்சல், சாப்பிட்டது செரிக்காம அப்படியே தொண்டைலயே நிக்கிற மாதிரி உணர்வு... இதெல்லாம் இருக்கும். இதுதான் அல்சர்.

**


அல்சர் ஏன் வருது?


முதல் காரணம் நேரங்கெட்ட நேரத்து சாப்பாடு, காலை உணவைத் தவிர்க்கிறது, மதிய சாப்பாட்டைத் தள்ளிப் போடறது, அடிக்கடி காபி, டீயா குடிச்சு வயிற்றை நிரப்பறது.... சாதாரண தலைவலி, காய்ச்சல்னா உடனே மாத்திரை போடற பழக்கம் பலருக்கு உண்டு.


இப்படி தானாவே எந்தப் பிரச்சினைக்கும் அடிக்கடி மாத்திரை சாப்பிடறவங்களுக்கும் கட்டாயம் அல்சர் வரும். ரொம்ப சக்தி வாய்ந்த ஆன்ட்டிபயாடிக்ஸ் சாப்பிடறதும் காரணம். ஏதோ சுகமின்மைக்காக டாக்டரைப் பார்க்கறோம்.


டாக்டர் ஆன்ட்டிபயாடிக் எழுதிக் கொடுப்பார். ஆன்ட்டிபயாடிக் கொடுக்கிறப்ப, பிகாம்ப்ளக்ஸூம், லேக்டோ பேசிலஸூம் கலந்த மாத்திரையும் அவசியம் கொடுக்கணும். இதை சில டாக்டர்ஸ் செய்யறதில்லை.


டாக்டர்ஸ் எழுதிக் கொடுத்தாலும், 'சத்து மாத்திரை வேணாம்'னு சொல்லி ஆன்ட்டிபயாடிக் மட்டும் வாங்கிச் சாப்பிடுறவங்களும் இருக்காங்க. சில வகை மருந்துகளை சாப்பிடறப்ப, வயிறு வலி, நெஞ்சு எரிச்சல் வர்றதை உங்கள்ல பல பேர் ஃபீல் பண்ணியிருப்பீங்க... காரணம் இதுதான்.


அதிக காபி, டீ, ஃபாஸ்ட்ஃபுட் அயிட்டங்கள், சிகரெட், கோலா கலந்த பானங்கள், ஊறுகாய், காரமான உணவுகள்... இதெல்லாமும் அல்சருக்கு காரணம்! மூட்டுவலி போன்ற சில பிரச்சினைகளுக்கு காலங்காலமா மருந்து எடுத்துப்பாங்க சிலர்.


மாத்திரைகள் கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருக்கலாம். அதுக்கேத்தபடி சாப்பாடு இருக்கணும். தவறினா, அல்சர்ல போய் முடியலாம். அபூர்வமா சிலருக்கு பரம்பரையாகவும் அல்சர் பாதிக்கலாம். அடிக்கடிஉணர்ச்சிவசப்படறவங்களுக்கு அல்சர் இருக்கும்.


எடை குறையறது, ரத்த சோகை, வாந்தி... இதெல்லாம்கூட அல்சரோட அறிகுறிகளா இருக்கலாம். எந்த அறிகுறியும் தினசரி தொடர்ந்தா உடனே டாக்டரை பார்க்கணும். அல்சரை முழுமையா குணப்படுத்திடலாம். வந்ததைப் போக்க சிகிச்சைகள் உண்டு.

**


வராம இருக்க...?


சரியான நேரத்துக்கு சாப்பாடு, சரிவிகித சாப்பாடு ரெண்டும் முக்கியம். கோபத்தைக் குறைச்சுக்கணும். அல்சர் வந்தவங்களுக்கான டிப்ஸ்... நார்ச்சத்து உள்ள உணவுகளைத் தவிர்க்கணும். குழைய வேக வச்ச அரிசி சாதம், அவல், பொரில கஞ்சி மாதிரி செய்து சாப்பிடலாம்.


கீரை, காய்கறிகளைக்கூட நல்லா வேக வச்சு, மசிச்சு, சாப்பிடணும். பாலுக்குப் பதில் மோர் அதிகம் சேர்த்துக்கலாம். ஸ்ட்ராங்கான காபி, டீ வேண்டாம். அதிகமான தாளிப்பு, இனிப்புகள், பொரிச்ச உணவுகள், பாதி பழுத்தும் பழுக்காத பழங்கள், பச்சை காய்கறிகள் (வெங்காயம், வெள்ளரி உள்பட), இஞ்சி, கரம் மசாலா, காரமான கிரேவி இதெல்லாம் அறவே தவிர்க்கணும்.


மூணு வேளை மூக்கைப் புடிக்க சாப்பிடாம, கொஞ்சமா, அடிக்கடி சாப்பிடலாம். எதையும் கடிச்சு, நன்கு மென்று பொறுமையா சாப்பிடணும். நீரிழிவு வந்தவங்களுக்கு சொல்ற மாதிரிதான் அல்சர் வந்தவங்களுக்கும்... விருந்தும் கூடாது... விரதமும் கூடாது!

***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"

10 மார்ச், 2011

இதயத்தைப் பாதுகாக்க 20 வழிகள்..!

*

Doctor.K.நடராஜன்




''வேகமான இன்றைய உலகமும், படபடப்பான வாழ்க்கைச் சூழலுமே இன்று பெரும்பாலான நபர்களுக்கு இருதய பிரச்னைகள் ஏற்படக் காரணமாக இருக்கிறது'' என்கிறார் சிறப்பு இருதய சிகிச்சை மருத்துவர் கே.நடராஜன். இருதயத்தை நாம் பாதுகாக்கவும் இருதயப் பிரச்னைகள் ஏதும் நம்மை நெருங்காமல் பார்த்துக் கொள்ளவும் இருபது வழிகளை அவர் சொல்கிறார். அவற்றைக் கடைப்பிடித்தால் நூறு சதவிகிதம் இருதயப் பிரச்னைகள் வராமல் தவிர்க்க முடியுமாம்.

***

இதயத்தைப் பாதுகாக்க இருபது வழிகள் :

1.) முதலில் மனிதன் தான் வாழுகிற சூழ்நிலையை சுகாதாரமுள்ளதாக வைத்துக்கொள்ளவேண்டும். அது மாடி வீடாக இருக்கட்டும்; இல்லை குடிசையாக இருக்கட்டும். அதற்குள் நாம் வசிக்கிற சூழல் சாதாரணமாக உள்ளபடி தூய்மையைக் கடைப்பிடிக்கவேண்டும்.


2.) வெளிச்சம் என்பது மன உணர்வுகளோடு சம்பந்தப்பட்டது என்பதால் நாம் வசிக்கிற வீடு உலர்ந்த, வெளிச்சமுள்ள இடமாக இருக்கவேண்டும். இருளடைந்த வீடுகளுக்குள் வசிப்பது மன இறுக்கத்தைத் தரும். மன இறுக்கம் இதயத்திற்கு பிரச்னை தரும் என்பதால் முடிந்தளவு வெளிச்சமுள்ள வீடுகளிலேயே வசிக்கவேண்டும்.


3.) காற்று மனிதனின் அத்தியாவசியத் தேவை என்பதால் நாம் வாழுகிற இடம், சூழலில் காற்றோட்டம் நன்கு இருக்கவேண்டும்.


4.) நாம் வாழுகிற சூழலுக்கும் வேலைகளிலும் வேகமான, படப்படப்பான நிம்மதியற்ற மன நிலைகளைக் கணிசமாக குறைத்துக் கொள்ளவேண்டும். அலைச்சல், பரபரப்பு என்கிற இயந்திரத்தனமான வேலை அமைப்புதான் இருதயப் பிரச்னையில் முதலிடம் வகிக்கிறது என்பதால் அமைதியான, நிம்மதியான மனநிலையைப் பெற முயற்சிக்க வேண்டும். உதாரணத்திற்கு,..

ஒருவருக்கு ஒரு வேலையில் லட்சம் ரூபாய் கிடைக்கிறது. ஆனால் அந்த வேலை அளவுக்கதிகமான டென்ஷனையும் ட்ரஸ்சையும் தருகிறது என்றால் அதைத் தவிர்த்துவிட்டு அதைவிட குறைவாகவே கிடைத்தாலும் நிம்மதி கிடைக்கிறது என்கிற சூழலுள்ள வேலையை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஏனெனில் லட்சங்களைவிட, கோடியைவிட உங்கள் உடலுக்கு மதிப்பு அதிகம்.
அப்படி உங்களால் அந்த டென்ஷன் வேலையை விட முடியாது என்றால், அந்த வேலைக்கு ஏற்ப உங்களை மாற்றிக் கொண்டு அதிலுள்ள டென்ஷனை எப்படிக் குறைத்து அமைதியான முறையில் வாழ்வது என்று முயற்சிக்க வேண்டும்.


5.) தினமும் வேலைக்குச் செல்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் ஏன் எல்லோருமே ஒரு மணி நேரமாவது மெடிடேஷன், யோகா, தியானம் எனக் கடைப்பிடிப்பது இருதயத்திற்கு நல்லது.


6.) உணவு முறைகளில் கட்டுப்பாடுள்ள உணவு முறைகளையே கடைப்பிடிக்க வேண்டும். தினமும் சரியான நேரத்திற்கு மிதமான உணவு சாப்பிடவேண்டும். வயிறு புடைக்க உண்பதைத் தவிர்ப்பது நல்லது. அதிலும் பால், பழங்கள், கீரை காய்கறிகள் என சத்துள்ள உணவுகளை உண்ணவேண்டும்.


7.) பாஸ்ட்ஃபுட் கலாசாரம் மிகுந்துவிட்ட இன்றைய சூழலில் கண்ட ஓட்டல்களில் கண்ட எண்ணெய்களில் பொரித்த வறுத்த உணவுகளை உண்பதைத் தவிர்க்க வேண்டும். முட்டையின் மஞ்சள் கரு, ஈரல், மூளை, சிறுநீரகங்கள் சாக்லெட், கொக்கோ, மாமிசக்கொழுப்பு போன்றவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.


8.) ஒரே நேரத்தில் வயிறு புடைக்க உண்பதைத் தவிர்த்து, சீரான இடைவெளி நேரங்கள் விட்டு ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறுமுறை சிறு அளவுகளில் சாப்பிடுவது வயிற்றிற்கும் இதயத்திற்கும் நல்லது.


9.) இரவில் படுக்கச் செல்லும் முன்பு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது. சாப்பிட்டவுடன் சிறிது நேர நடைப்பயிற்சி செய்வது நல்லது.


10.) அடிக்கடி சளி பிடிக்காமலும், தொண்டையில் புண் ஏற்படாமலும் டான்சிலிடிஸ் பிரச்னைகள் ஏற்படாமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் டான்சிலிடிஸ் பிரச்னைகளால் இதயத்திற்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது.


11.) ஓய்வு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமானது என்பதால் உடல் உழைப்புத் தொழிலாளர்களும், அலுவலக ஊழியர்களும், வீட்டில் வேலை செய்பவர்களும் கூட சரியான விகிதத்தில் ஓய்வு எடுத்துக்கொள்ளவேண்டும்.

இரவு நாம் தூங்கும் இடத்தை மென்மையான அமைதியான தூக்கத்தைப் பெறும் விதமாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதிக நேரம் கண் விழித்திருப்பதும் கூடாது.


12.) உடற்பயிற்சி இதயத்திற்கு மிகவும் பயனளிக்கும். நீந்துதல், வாலிபால், டென்னிஸ், சைக்கிள் ஓட்டுதல், நடைப் பயிற்சி என திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளும் பயிற்சியும் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.


13.) மலச்சிக்கல் என்பது உடலையும் மனதையும் பாதிக்கும். அதனால் கீரைகள் பழங்களை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டு மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.


14.) தண்ணீர் என்பது மனித உடலுக்கு அவசியமான ஒன்று. அதனால் ஒரு நாளைக்கு குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீராவது அருந்தவேண்டும்.


15.) குடிப்பழக்கம் இதயத்திற்கு தீங்கானது என்பதால் குடியை அறவே நிறுத்தவேண்டும். இக்கால இளைஞர்கள் பீர் என்கிற குடி போதைக்கு மிகவும் அடிமையாகியிருக்கிறார்கள். பீர் பெரிதாக போதையில்லை என்று அதை எல்லா கல்யாண விசேஷங்களிலும் பரிமாறப்படுகிற ஃபேஷன் பொருளாக்கியிருக்கிறார்கள். ஆனால் அந்த பீர் அருந்துவதாலும் இதயம் பாதிக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.


16.) இதயப் பிரச்னையில் இதய அடைப்பில் முதலிடம் வகிப்பது புகை பிடிக்கும் பழக்கும். சிகரெட், பீடி போன்ற பொருட்களின் புகையை உள்ளிழுக்கும் போது நிக்கோடின் எனும் நச்சுப்பொருள் இரத்த நாளங்களில் சென்று பெருமளவு அடைப்பை ஏற்படுத்துகிறது.

இன்று பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் பயிலும் பெரும்பாலான சிறுவர்களும், இளைஞர்களும்கூட 'ஸ்டைல்' என்கிற மனப்பான்மையில் புகைபிடிக்கும் பழக்கத்தைத் துவங்கியுள்ளனர். இதனால் முப்பது முப்பத்தைந்து வயதிலேயே இதயப் பிரச்னைகளுக்கு ஆளாகிறார்கள். இதயத்திற்குக் கேடு விளைவிக்கும் புகைபிடிக்கும் பழக்கத்தை அறவே விட்டொழிப்பது நல்லது.


17.) உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்வது இதயப் பிரச்னைகளிலிருந்து தப்பிப்பதற்கான ஒரு வழி என்பதால் உடல் எடை அதிகப்படியாக கூடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.

நம் உயரத்திற்கு ஏற்ற உடல் எடையைச் சீராக வைத்திருக்கவேண்டும். அதாவது நம் உயரம் 170 செண்டிமீட்டர் என்றால் அதில் 105_ஐ கழித்து 65 கிலோ உடல் எடையை மெயின்டென் செய்யவேண்டும்.


18.) மணிக்கணக்கில் டி.வி. முன்பு உட்காருவதைத் தவிர்க்கவேண்டும். மன இறுக்கத்தைத் தரும் டி.வி. தொடர்கள் பார்ப்பதையும் டென்ஷனை ஏற்படுத்தும் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதையும் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும் ஆபாச வீடியோக்கள் பார்ப்பதையும் தவிர்ப்பது நல்லது.


19.) உயர் இரத்த அழுத்தம், சர்க்கரையும் இதயத்தைப் பாதிப்பவை என்பதால், அவை இரண்டும் அதிகரித்துவிடாமல் கட்டுப்பாடாகப் பார்த்துக் கொள்ளவேண்டும்.


20.) எப்போதும் வேலை, படபடப்பு, டென்ஷன் என்கிற சூழலிலிருந்து விடுபட்டு வாரத்திற்கு ஒரு முறையாவது குடும்பத்தினரோடு கோவில்கள், சுற்றுலா என்று சென்றுவருவது நல்லது.

இதயத்தைப் பாதுகாக்க இந்த இருபது வழிகளைக் கடைப்பிடித்தாலே நூறு சதவிகித இதயப் பிரச்னைகளைத் தவிர்க்கலாம். முக்கியமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளியிலும் கல்லூரியிலும் எந்தக் கெட்ட பழக்கத்தையும் கற்றுக்கொள்ளாமல் பார்த்துக்கொள்வது நல்லது.

***


ஒருவருக்கு இதயத்தில் லேசாக அடைப்பிருப்பதை எப்படிக் கண்டறிவது?

இதயத்தில் அடைப்பிருப்பதற்கான அறிகுறிகள் என்று பார்த்தால் வேகமாக நடக்க முடியாது. அப்படி நடக்க முற்படும்போது மார்பில் வலி தோன்றும். அடுத்து சாப்பிட்டதும் நடக்க முடியாது. மார்பில் வலி எடுக்கும். படிகளில் ஏற முடியாது மூச்சுத்திணறும்.

இந்தப் பிரச்னையுள்ளவர்கள் மருத்துவரை அணுகினால் மருத்துவர்கள் ஈ.சி.ஜி. போன்ற டெஸ்ட்டுகளை எடுத்துப் பார்த்து எத்தகை சிகிச்சை தேவை என்ற முடிவுக்கு வருவார்.

*


ஹார்ட் அட்டாக்கிற்கான அறிகுறி என்ன? தீர்வு என்ன?

ஒருவருக்கு ஹார்ட் அட்டாக் வந்திருப்பதற்கான முதல் அறிகுறி அதிகப்படியான வியர்வையும், படபடப்பு நிலையும்தான். அடுத்து இடதுகையின் தோளிலிருந்து விரல்கள் வரை கடுமையான வலி இருக்கும். நெஞ்சின் நடுப்பகுதியில் வலி ஆரம்பித்து கழுத்து, கன்னம் என வலி பரவ ஆரம்பிக்கும். இப்படியான அறிகுறி தெரிந்தவுடனே அருகிலிருக்கும் மருத்துவரிடம் பாதிக்கப்பட்ட நபரை அழைத்துச் செல்லவேண்டும். இதில் முக்கியமான செய்தி. குடும்பத்திலுள்ளோர் அவரின் படபடப்பு அதிகரிக்கும் படியான கூச்சல், அழுகை என இல்லாமல் தன்னம்பிக்கை தரும்படியான வார்த்தைகளைக் கூறி டாக்டரிடம் அழைத்துச் செல்லவேண்டும்.

இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுவிடுவது மிகவும் நல்லது.

*


இருதய அடைப்பிற்கான சிகிச்சைகள் என்னென்ன?

1. ஆன்ஜியோ பிளாய்ட்

2. பைபாஸ் சர்ஜரி

3. ஸ்டண்ட், என்று மூன்று வகையான சிகிச்சைகள் உள்ளன.


1. இருதயத்தின் ஒரு வால்வில் அடைப்பிருந்தால் ஆன்ஜியோ பிளாஸ்ட் என்கிற இரப்பர் குழாயினை தொடையிலுள்ள இரத்தக் குழாயின் வழியே செலுத்தி, இதயத்தின் அடைப்புள்ள பகுதிக்கு அனுப்பி, அங்கே அடைப்புள்ள பகுதியில் ரப்பரை விரிய வைத்து அடைப்பு சரிசெய்யப்படும்.


2. வால்வுகளில் அடைப்பிருந்தால் அதற்கு பைபாஸ் சர்ஜரி என்கிற அடைப்புள்ள பகுதிக்கு முன்பாகவும் பின்பாகவும் தொடையிலுள்ள நரம்பை எடுத்து பொருத்தி ரத்தம் செல்வதற்குப் புதிய பைபாஸ் பாதையை உருவாக்குவார்கள்.


3. இப்போது புதிதாக வந்திருக்கிற ஸ்டண்ட் சிகிச்சை என்கிற முறையில் அடைப்புள்ள இடத்தைக் குறுகலாக்கி அதன் இரண்டு பக்கங்களிலும் ரத்தம் செல்வதற்கான வழியை ஏற்படுத்தித் தருவார்கள்.


***
thanks kumudam.com
***


"வாழ்க வளமுடன்"

16 பிப்ரவரி, 2011

மலச்சிக்கல் ஏற்படுவதின் காரணங்களும் தீர்வுகளும்!



மலச்சிக்கலில் தொடங்கி மருத்துவமனை வரை:

மனிதனின் உடல் உறுப்புகள் வெவ்வேறு விதமான கழிவுகளை உண்டாக்கினாலும், ஆபத்தான கழிவுப்பொருள் மலம் மட்டுமே.
வியாதிகளின் தொடக்கம் மலச்சிக்கல் என்பதில் சந்தேகமே இல்லை. மலம் கெட்டிப்பட்டு உள்ளேயே தங்கிவிட்டால் மலம் நஞ்சாக மாறிவிடுகிறது.


சிக்கல் இல்லாதவருடைய மலம் எவ்வாறு இருக்கும் என்பதற்கு சில குறிப்புகள் உள்ளன. அவற்றை நன்றாக உள்வாங்கிக்கொள்ள வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் சில நிமிடங்களுக்குள் மலம் கழிய வேண்டும். ஓரிரு நிமிட வேலையாக அது முடிந்துவிட வேண்டும். பெரும் முயற்சி இருத்தல் கூடாது.


மலம் உடம்பில் இருந்து ஒரே கயிற்றுத்திரிபோல் சுழன்று வந்து விழவேண்டும். வெளித்தள்ளுவதற்கு அதிக அழுத்தமோ, முயற்சியோ இருத்தல் கூடாது. மலத்தின்மீது சளிபோன்ற ஒரு படலம் இருத்தல் வேண்டும். மாட்டுச்சாணத்தில் இதுபோன்ற சளிப்படலத்தை பார்க்கலாம்.


மலத்தில் துர்நாற்றம் இருத்தல் கூடாது. மலம் நீங்கும்போது உண்ட உணவிற்கு இருந்த மணம் உணரப்படுவது சிறந்தது. மூன்று வேளைகளும் பழங்களையே உண்டு வாழ்வோருக்கு இந்த அனுபவம் கிட்டும். எத்தனை வேளை உணவு உண்கிறோமோ, அத்தனை முறைகள் மலம் கழிய வேண்டும். மலம் கழிந்தவுடன் வயிறு காலியான உணர்வும், சோம்பல் நீங்கிய சுறுசுறுப்பும், வேலை செய்ய தகுதியான உடல்நிலையும் அனுபவப்படவேண்டும்.


மலம் கழித்த சிறிது நேரங்கழித்து மீண்டும் வரும்படியாக உள்ளே தங்கி இருத்தல் கூடாது. மலத்தின் நுனி கூராக வந்து முடிந்தால் இனி மலம் இல்லையென்று பொருள். கால் கழுவ வேண்டிய அவசியம் இல்லாமலும், பசைபோல் ஒட்டும் தன்மை இல்லாமலும் இருத்தல் வேண்டும். மலம் கழிக்கும்போதோ, முன்போ, பின்போ, வயிறு வலிக்கக்கூடாது. மலத்துவாரத்தில் எரிச்சலும், அரிப்பும் ஏற்படக்கூடாது.

by -மு.குருமூர்த்தி


***
தீர்வுகள் :

1.நமது செரிமானம் வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று நான்கு நிலைகளில் செயல்படுகிறது. இதில் எந்த நிலையில் தடை ஏற்பட்டாலும் மலச்சிக்கல் ஏற்படும். ஆகவே, செரிமானம் நன்கு நடைபெறும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

*

2. போதிய அளவு நீர் குடிக்காததால் மலச்சிக்கல் ஏற்படும். காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் 2 அல்லது 3 கோப்பைகள் நீர் அருந்த வேண்டும். நீரில் எலுமிச்சை சாறு கலந்தும் குடிக்கலாம். சிலர் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று கூறுவர். இது சரியல்ல. அதிக அளவு நீர் குடித்தால் சிறுநீரகங்களின் வேலை அதிகமாகி பாதிப்பு ஏற்படலாம்.

*

3. நாம் உண்ணும் உணவில் நார்ச்சத்து குறைவாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படும். வெள்ளை ரொட்டி, கேக், பிஸ்கட், ஜாம், க்ரீம், துரித உணவுகள், டின்களில் பாதுகாக்கப்பட்ட உணவுகள் இவை மலச்சிக்கலை ஏற்படுத்தும். கீரைகள், காய்கறிகள், பழங்கள் இவற்றில் நார்ச்சத்துகள் அதிகம் உள்ளன.

*

4. வேலை தொந்தரவினால் மலம் கழிக்கும் உந்துதல் வரும்போது சிலர் அதை அடக்கி வைத்துக் கொள்வர். இதனால், மலம் உள்ளுக்குள் தள்ளப்பட்டு சிக்கலை உருவாக்குகிறது. காலையில் எழுந்ததும் நமது காலைக் கடன்களில் மலம் கழித்தலை முக்கிய கடமையாக நினைத்துச் செயல்பட வேண்டும்.

*

5. வயதானவர்களுக்கும், போதிய உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படும். வயதானவர்கள் அதிக சத்துள்ள உணவுகள், காய்கறிகள், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகள் இவற்றை சேர்த்துக்கொள்ள வேண்டும். அவரவர் வயதிற்கேற்ப காலையில் சுமார் அரைமணி நேரமாவது எளிய உடற்பயிற்சிகள் செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம்.

*

6. பெருங்குடல், சிறுகுடல் பகுதிகள் பாதிக்கப்பட்டால் அல்லது அடைப்புகள் ஏற்பட்டால் மலம் கழித்தல் சிரமமாக இருக்கும். இந்த அடைப்புகளை நீக்க மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

*

7. மலச்சிக்கல் ஏற்பட்டால் சிலர் உடனே மலமிளக்கி மருந்துகளை நாடுவர். இம்மருந்துகள் சில நாட்களுக்குத்தான் பலன் தரும். பிறகு மருந்துகளின் அளவை அதிகரிக்க வேண்டிவரும். இம்மருந்துகளால் குடல் பலவீனமடைகிறது.


உடலில் வைட்டமின் சத்துக்களை உட்கிரகிக்கும் சக்தி குறைந்துவிடும். ஆகவே, இம்மருந்துகளைத் தவிர்த்து இயற்கையான முறைகளைப் பின்பற்ற வேண்டும். மருந்திற்குப் பதில் இவர்கள் எனிமா எடுத்துக்கொள்ளலாம்.


இயற்கை வைத்தியத்தில் உபயோகிக்கும் எளிமையான எனிமா கருவி ‘காதிபவன்’ கடைகளில் கிடைக்கும். சில நாட்களுக்கு எனிமா எடுத்துக்கொண்டால் பிறகு இயற்கையாகவே மலம் கழிக்கும் பழக்கம் வந்துவிடும்.


***




***
thanlks google & குருமூர்த்தி

***


"வாழ்க வளமுடன்"


07 பிப்ரவரி, 2011

நாளைய நிம்மதிக்கு இன்றைய பிளான்கள் ( 30+ )



வேலைக்குச் சேர்ந்தவுடன் சிறிது காலத்துக்கு ஜாலியான செலவுகள்… அப்புறம் திருமணச் செலவு.. அடுத்து பிள்ளைகள் வளர்ப்பு, படிப்பு, கல்யாணச்
செலவுகள்… கூடவே இதுபோன்ற செலவுகளுக்காக வாங்கிய கடன்கள் வேறு… இப்படி அடுத்தடுத்த செலவுகளில் சிக்கியே மாதச் சம்பளக்காரர்களின் வாழ்க்கையும் தொலைந்துவிடுகிறது. ஒருநாள் ரிட்டயர்மென்ட் என்று வரும்போது சம்பளம் நின்று போகும்.. ஆனால், அன்றாடம் செய்து வந்த செலவுகள் மட்டும் இன்னும் பன்மடங்காகப் பெருகி நம்முன் வந்து நிற்கும்.

*

ஒரு சின்ன உதாரணம் பார்ப் போமா? இன்றைக்கு 100 ரூபாய் கொடுத்து வாங்கும் ஒரு இருமல் மருந்து 30 ஆண்டுகள் கழித்து 1,000 ரூபாயாக இருக்கும். அப்போதுதான் பலரும், ஆஹா… நம் கடைசிக் காலத்துக்கு என எதுவும் சேர்க்காமல் விட்டு விட்டோமே என்று கவலைப்பட ஆரம்பிப்பார்கள்.

*

தேவை திட்டமிடல்..!

இந்தக் கவலையைத் தவிர்க்க அவர்கள் செய்திருக்க வேண்டியது ஒரு சிறிய திட்டமிடல்தான். இந்தத் திட்டமிடல் அவரவர் வயதுக்கு தகுந்தமாதிரி இருக்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் சேர்ந்து கல்யாணமான நிலையில் அவரது 30-வது வயதில் ஓய்வு காலத்துக்கான முதலீட்டைத் தொடங்கி இருந்தால் அதற்கு மாதாமாதம் குறைவான தொகையே போதுமானதாக இருக்கும்.

இதுவே 50 வயதில் ரிட்டயர்மென்டுக்காக முதலீடு செய்ய ஆரம்பித்தால்? 10 ஆண்டுகள்தான் பாக்கி இருக்கும் நிலையில் பெரிய தொகையை முதலீடு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்தப் பெரும் தொகையை பார்த்தே பலரும், விதி விட்ட வழியில் வாழ்க்கை
போகட்டும் என்று இருந்துவிடுகிறார்கள். இதுவும் மிகப் பெரிய தவறு! 30
வயதில் பொதுவான தேவைகளை விட லைஃப் ஸ்டைல் தேவைகள் அதிகமாக இருக்கும். அதாவது, பொழுதுபோக்குகள், சுற்றுலாக்கள், ஓட்டல் சாப்பாடு போன்ற செலவுகள் அதிகமாக இருக்கும்.

சிலர் வாகனம் (பைக்/கார்), வீடு போன்றவற்றை வாங்குவார்கள். இதற்காக கடன் வாங்குவார்கள். நிறைய பணம் இ.எம்.ஐ. கட்டவே சரியாகப் போகும். கூடவே அதி அத்தியாவசியமான ஆயுள் மற்றும்ஆரோக்கிய காப்பீடுகளுக்கான பிரீமியச் செலவும் இருக்கிறது. இந்தச் செலவுகளுக்கே
அவர்கள் வருமானத்தின் பெரும்பகுதி போய்விடுவது உண்மைதான். என்றாலும், இளைமைப் பருவம் தொட்டே ஓய்வு காலத்துக்கான முதலீட்டையும் தொடங்குவது கட்டாயத்திலும் கட்டாயம்.

***

30 வயதானவர்களுக்கான முதலீடு!




சுகமான ஓய்வு காலத்துக்கு எந்த வயதினர் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்று பார்ப்போம். செந்திலுக்கு இப்போது வயது 30. வேலைக்குச் சேர்ந்து 5 ஆண்டுகள் முடிந்துவிட்டன. திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கும் அவருக்கு, நிறைய செலவுகள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. பி.பி.ஓ. நிறுவனம் ஒன்றில் பிடித்தம் போக மாதம் கையில் 21,500 ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.

வீட்டுச் செலவு, மருத்துவச் செலவு, மகன் விக்ரமின் படிப்பு, சொந்த வீடுகட்ட வாங்கிய ஹோம் லோனுக்கான இ.எம்.ஐ. – இவற்றை எல்லாம் தாண்டித்தான் செந்தில் தன் ஓய்வு காலத்துக்கு சேமிக்க வேண்டியிருக்கிறது. செந்திலின் இன்றைய லைஃப் ஸ்டைல் எப்படி இருக்கிறதோ அதுபோலவே பணி ஓய்வின் போதும் இருந்தால்தான் வாழ்க்கையை சந்தோஷமாக அனுபவிக்க முடியும்.


செந்தில் தன் குடும்பத்தின் அடிப்படைச் செலவுகளுக்கு மட்டும் மாதத்துக்கு
15,300 செலவு செய்கிறார். ஆண்டுக்கு சுமார் 7% பணவீக்க விகிதம் என்று
எடுத்துக் கொண்டால் 30 ஆண்டுகள் கழித்து அவர் பணி ஓய்வு பெறும் போது ஒரு மாதத்துக்கு 1,16,468 ரூபாய் இருந்தால்தான் சாமாளிக்க முடியும். இந்தத்
தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால், அவர் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.75 கோடியை தொகுப்பு நிதியாக கையில் வைத்திருக்க வேண்டும்!

இவ்வளவு பெரிய தொகையை ஈட்ட என்ன செய்வது என்று மலைக்க வேண்டியதில்லை. இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 5,000 முதலீடு செய்து வரவேண்டும்.

***


40 வயதானவர்களுக்கான முதலீடு!

இந்தப் பிரிவில் இருப்பவர்களுக்கு 40 வயதான முத்துவை ஒர் உதாரணமாக
எடுத்துக்கொள்வோம். அவருக்கு மனைவி மற்றும் இரு குழந்தைகள். பணி ஓய்வுக்கு இன்னும் 20 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 22,000 என்றால், 20 ஆண்டுகள் கழித்து (7% பணவீக்கம்) 85,133 இருந்தால்தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம்தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவர் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 1.27 கோடி தொகுப்பு நிதியை கையில் வைத்திருக்கவேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம்தோறும் தொடர்ந்து 12,909 முதலீடு செய்ய வேண்டும்.

***


50 வயதானவர்களுக்கான முதலீடு!

இந்த வயதுள்ளவர்களுக்கு 50 வயதுள்ள ராமகிருஷ்ணனை உதாரணமாக எடுத்துக்கொள் வோம். அவருக்கு மனைவி, இரு பிள்ளைகள் இருக்கிறார்கள். பணி ஓய்வுக்கு இன்னும் 10 ஆண்டுகள் இருக்கிறது. இவர்களின் இன்றைய அடிப்படைச் செலவு மாதம் 25,000 என்றால், 10 ஆண்டு கழித்து (7% பணவீக்கம்) 49,179 இருந்தால் தான் சமாளிக்க முடியும். இந்தத் தொகை மாதம் தோறும் கிடைக்க வேண்டும் என்றால் அவரிடம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் 73.77 லட்சம் தொகுப்பு நிதி கையில் இருக்க வேண்டும். இதற்கு 12% வருமானம் தரக்கூடிய திட்டங்களில் மாதம் தோறும் தொடர்ந்து 32,068 முதலீடு செய்ய வேண்டும்.

**


ஓய்வூதியத் தொகுப்பை அடைய முதலீட்டுத் திட்டங்கள்!


இங்கே காட்டப்பட்டுள்ள உதாரணங்களில் முதலீடு செய்தால் சுமார் 12% வருமானம் கிடைக்குமென எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை பரிந்துரை செய்கிறேன்.

*


30+ வயதானவர்களுக்கு..!



இந்த வயதினருக்கு ஓய்வு பெற நீண்ட காலம் இருக்கிறது என்பதால் இவர்கள் தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டுகளில் அதிகமாகச் செய்யலாம். இவர்கள் 70% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், 30% தொகையை பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் (எஃப்.எம்.பி) முதலீடு செய்யலாம்.


எஃப்.எம்.பி. என்பது குறிப்பிட்ட முதிர்வு காலத்தைக் கொண்ட மியூச்சுவல்
ஃபண்ட். இதில் ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டில் எஃப்.டி.யோடு
ஒப்பிடும்போது வரிக்கு பிந்தைய நிலையில் லாபகரமாக இருக்கும்.

*

40+ வயதானவர்களுக்கு..!








இந்த வயதினருக்கு ஓய்வு பெற 20 ஆண்டு காலம் இருக்கிறது. இவர்கள் 60-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.

*

50+ வயதானவர்களுக்கு..!




இந்த வயதினருக்கு ஓய்வு பெற 10 ஆண்டுகள்தான் இருக்கிறது. இவர்கள் அதிக ரிஸ்க் எடுக்க முடியாது. 50-65% தொகையை ஈக்விட்டி ஃபண்டுகளிலும், மீதியை பேலன்ஸ்ட் ஃபண்டுகள், பி.பி.எஃப். மற்றும் ஃபிக்ஸட் மெச்சூரிட்டி
பிளான்களிலும் முதலீடு செய்யலாம்.


இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் ஃபண்டில், தங்களின் வசதிக்கு ஏற்ப முதலீட்டைப் பிரித்து செய்து வரவும். 30+ வயதுக்காரர்கள், 40 வயதாகும் போது தங்களின் முதலீட்டை ஈக்விட்டி ஃபண்டு களில் குறைத்து கடன் சார்ந்த திட்டங்களில் அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதே போல் மற்ற வயதினரும் வயதாக வயதாக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீட்டைக் குறைத்தும், கடன் சார்ந்த ஃபண்டுகளில் முதலீட்டை அதிகரித்தும் வரவேண்டும். மேலும், ஓய்வு காலத்துக்கு 3-5 ஆண்டுகளுக்கு முன் முதலீட்டை கொஞ்சம் கொஞ்சமாக ஈக்விட்டி ஃபண்டுகளில்
இருந்து அதிக ரிஸ்க் இல்லாத எஃப்.டி. போன்ற திட்டங்களுக்கு மாற்றுவது
பாதுகாப்பானது.

***


இளம் வயதிலே ஆரம்பியுங்கள்..!


ஓய்வு காலமும் உல்லாச காலமாக இருக்க வேண்டும் என்றால் இளம் வயதில் இருந்தே முதலீட்டை ஆரம்பிப்பதுதான் நல்லது. ரிட்டயர் ஆகும் போது 1 கோடி கையில் இருக்க வேண்டும் என்றால் (மியூச்சுவல் ஃபண்டுகளில் ஆண்டுக் 12 சதவிகிதம் வருமானம் கிடைத்தால்) 30 வயதுக்காரர் மாதம் சுமார் 2,860-ம் 40 வயதுக்காரர் 10,109-ம் 50 வயதுக்காரர் 43,470-ம் சேமித்தால் போதும். ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் இடையே வித்தியாசப்படும் தொகை மலைக்கும் மடுவுக்கும் உள்ளதைப் பார்த்தாலே ‘இளமையில் சேமி’ என்பதன் அர்த்தம் புரியும்.

*



***

நன்றி:-- தொகுப்பு: சி.சரவணன்
நன்றி:- நா.வி
***


"வாழ்க வளமுடன்"

18 ஜனவரி, 2011

மூட்டு வலிக்கு உருளைக்கிழங்கு சாறு

மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.




மூட்டழற்சி:

இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

*

முடக்குவாதம்:

இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.


***

மூட்டழற்சியின் அறிகுறிகள்:


நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

*

முடக்குவாதத்தின் அறிகுறிகள்:

இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

*

காரணம்:

முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

**

கைவைத்தியம்:


1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.


2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.


3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.


4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.


5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.


6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.


7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

12 டிசம்பர், 2010

நாம் சாப்பிடும் உணவும் சர்க்கரையின் அளவும்!

சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸ�டன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.



உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.



அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.



சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

***

பானங்கள் (200 மி.லி அளவு):

* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.


* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..


* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..


* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.


* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.


* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.


* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.


எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.


***

உணவு வகைகள்:


உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):


* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.


* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.


* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.


* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.


* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..


* கரும்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.


* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.


* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.


* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.


* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.


* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

***

பழங்கள் (100 கிராம்)


* தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..


* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.


* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..


* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.


* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.


* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.



***
thanks செய்தி
***



"வாழ்க வளமுடன்"

07 டிசம்பர், 2010

இதயத்தை ஆரோக்கியமாக வைக்க 8 வழிகள் !

பிரித்தானியாவில் இறப்புக்கு அதிகம் காரணமாக இருப்பது மார்படைப்பு. தற்போது உயிர் காக்கும் மருந்துகளின் உதவியால் பலர் பிழைக்கின்றனர் என்றாலும் கூட மீண்டும் மார்படைப்பு எப்போது வரும் என்பது தெரியாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.





வரும் முன் காப்பதே சிறந்தது என்பதால் இதய ஆரோக்கியத்தை பேண சில எளிய பயனுள்ள வழிமுறைகளை உங்களுக்காக அளிக்கிறது தமிழ் சி.என்.என்.

மன அழுத்தம் என்பது இயல்பாக மனிதர்கள் அனைவருக்கும் இருக்கக்கூடிய ஒன்று. சில ஹார்மோன்கள் இவற்றை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைக்கும் வேலையை செய்து கொண்டிருக்கின்றன.

*

அதையும் தாண்டி அதிகமான மன அழுத்தம் ஏற்படும் போது இதயத்தில் கோளாறு உருவாவதாக கூறுகிறது மருத்துவத்துறை. இன்னொரு முக்கியமான காரணம் நாம் கடைப்பிடிக்கும் உணவுப் பழக்கவழக்கங்கள்.

*

இதய பலவீனத்திற்கு புகை பிடிப்பதும் புகையிலை சார்ந்த பிற பொருட்களை பயன்படுத்துவதும் மிக முக்கிய காரணம். கீழ்கண்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு மார்படைப்பிற்கான வாய்ப்புகள் அதிகம் எனபதால் ஒருமுறை மருத்துவரிடம் சென்று சோதனை செய்து கொள்வது நல்லது.

**

1. அடிக்கடி உணர்ச்சிவயப்படுதல்



2. எப்போதும் கவலையுடன் இருத்தல்



3. தினசரி செய்ய வேண்டிய வேலைகளை கூட செய்ய முடியாமல் திணறுதல்



4. வழக்கத்திற்கும் அதிகமாக உறுதியில்லாத நிலையில் இருப்பதாக உணர்தல்



5. மிக குறைவான பசி * ஒருமுகச் சிந்தனையில் சிரமம்



6. சரியான தூக்கமின்மை


**


இதயத்தை பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிமுறைகள்:



1. ஓய்வெடுக்கும் போது தசைகளை தளர்ச்சியாக வைத்துக் கொண்டு , அது தொடர்பான உடற்பயிற்சிகளை மட்டும் செய்தல்.

*

2. நாம் சாப்பிடக் கூடிய காய்கறிகள், பழங்கள் , தானியங்கள் அனைத்திலும் கார்போஹைட்ரேட் இருக்கும். அதுவே உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் தருகிறது.

இதிலும் இரண்டு வகைகள் உண்டு.

ஒன்று எளிய கார்போஹைட்ரேட் உணவு மற்றுமொன்று கடின கார்போஹைட்ரேட்.

1. கோதுமை பாஸ்தா, கோதுமை ரொட்டி, தானியங்கள், சிகப்பு அரிசி, ஓட்ஸ், கோதுமை நூடில், உருளைக்கிழங்கு போன்ற உணவுப்பொருட்களில் இருப்பவை கடின கார்போஹைட்ரேட். இவற்றில் ஸ்டார்ச் மற்றும் நார்ச்சத்து அதிகாமாக இருக்கும்.
அதே நேரத்தில் இந்த வகை உணவுகள் சக்தியை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடும் ஆற்றல் கொண்டவை என்பதால் இது போன்ற உணவுப்பொருட்களை அதிகம் பயன்படுத்துவது நல்லது.

*

3. இதய தசைகள் பலவீனமாகி உடலின் பல பகுதிகளுக்கும் ரத்த ஓட்டம் சீராக இல்லாத நிலையில் பெரும்பாலும் இதயத்தில் கோளாறுகள் உண்டாகும். அதனால் செரிமானக்குறைவு ஏற்ப்பட்டு வயிற்று வலிகளும் உண்டாகலாம். எனவே அடிக்கடி வயிற்று வலி ஏற்படும் போதே அலட்சியமாக இருக்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

*

4. மன அழுத்தம் பல்வேறு வகைகளில் ஏற்படலாம். இதய நோயால் பாதிக்கப்படுபவர்களில் நான்கில் ஒருவர் மனஅழுத்தத்தாலேயே இந்த நோய்க்கு ஆளாவதாக மருத்துவ குறிப்புக்கள் கூறுகின்றன. எனவே எப்போதும் மனதை இலேசாக வைத்துக் கொள்ளவும் மகிழ்ச்சியுடன் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் பழகுவது நல்லது.

*

5. உடல் பருமனாக இருப்பவர்கள் கூட உடற்பயிற்சி, தினமும் 2 மைல் நடை ஆகிவற்றை செய்து உடலை திடமாக வைத்திருந்தால் இதய நோய் வருவது குறையும்.

*

6. இதய நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கூட உடற்பயிற்சி செய்யலாம். அதற்கென தனியே எளிய உடற்பயிற்சிகள் உண்டு. மருத்துவரின் ஆலோசனைப்படி அந்த உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுவது நல்லதே.

*

7. இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கக் கூடிய பானங்களையும், மருந்துகளையும் மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் கடைபிடிப்பதும் சிறந்தது.

*

8. ஆல்கஹால் கலந்த பானங்களை அளவோடு மிக குறைவாக குடிப்பதால் இதயத்திற்கு கெடுதல் இல்லை என்றும் அதே நேரம் அதுவே அளவுக்கு மீறினால் மார்படைப்பு உண்டாக வழிவகுக்கும் எனவும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.


***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

27 நவம்பர், 2010

உயிருக்கு உலை வைக்கும் நொறுக்கு தீனிகள்:

வேலை வேலை என்று ஆலாய்ப் பறந்து கொண்டிருப்பவர்களுக்கு எதைச் சாப்பிடுகிறோம்ப எப்படி சாப்பிடுகிறோம்ப என்பது தெரியாமல் அவசர அடியாக அள்ளி வாயில் போட்டுக் கொண்டு ஓடுகின்றனர்.




இவர்களில் சிலர் உணவுக்குப் பதில் வெறும் நொறுக்குத் தீனியாகத் தின்றே பசியைப் போக்கிக் கொள்வார்கள். அதுவும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் சிப்ஸ், நூடுல்ஸ், பிட்ஸா, பர்கர், எண்ணையில் வறுக்கப்பட்ட தானிய வகைகள், கார்பண்டை ஆக்சைடு கலந்த கெமிக்கல் குளிர்பானங்களை குடித்தும் நாட்களை கழிக்கிறார்கள்.

*

`இவர்களெல்லாம் தங்களுக்குத் தெரியாமலேயே நோயை விலை கொடுத்து வாங்குகிறார்கள் என்பதே அதிர்ச்சிகரமான உண்மை என்கிறார் சென்னை அண்ணா நகரில் உள்ள சென்னை கொலரக்டல் மருத்துவமனை இயக்குனர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன். அவர் மேலும் கூறியதாவது:-

*

`பிட்ஸா, பர்கர், பிரெஞ்ச் பிரைஸ், உருளை, எண்ணையில் தயாரித்த ஆயில் பிரைட் சிக்கன், சிப்ஸ், ஐஸ் கிரீம் இதெல்லாம் நொறுக்குதீனி (ஜங்க்புட்) அயிட்டம் தான். இளைய தலைமுறைக்கு பாதிநேர சாப்பாடே இது தான். ஒவ்வொரு உணவும் இப்படித் தான் சாப்பிடணும்னு விதிமுறை இருக்கு. முழு கோதுமையை அரைத்து சாப்பிடுவது தான் நல்லது. மைதா நல்லதல்ல. இது நம்ம உடலுக்கு சக்தியைத் தராமல் ஜீரணம் ஆவதற்காக நம் உடம்பிலிருந்து சக்தியை எடுத்துக் கொள்ளும். சர்க்கரையும் அப்படித்தான்.

*

அமோனியா கலந்த பாக்கெட் உணவுகள்:

1. `ஜங்க் புட் அயிட்டங்கள் கெட்டுப் போகாமலும், ருசியாகவும் இருக்க கலக்குற பொருட்களில் அமோனியாவும் கலந்து இருக்கும். இது புற்று நோயை வரவழைக்கக் கூடியது. இந்த மாதிரியான உணவுப் பொருட்களை ஒரு குறிப்பிட்ட குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரை வைக்கணும். ஆனால், இதை எப்பவும் மெயின்டெயின் பண்ண முடியாது. இது போன்ற நேரங்களில் ஜங்க் புட்டில் நீர்க்குமிழிகள் உண்டாகும். இது உணவுப் பொருள் மீது படிந்து கெட்டித் தன்மையை ஏற்படுத்திவிடும்.

*

2. பட்டாணி பாக்கெட் வாங்கி ஆட்டிப் பார்த்தோம் என்றால் அது தனித்தனியாக ஆடும். ஆனால் நீர்க்குமிழி உண்டான பாக்கெட் அப்படி ஆடாமல் மொத்தமாக ஆடும். இது கெட்டுப் போன நிலையில் உள்ள பாக்கெட்.

*

3. அதே போல் புரூட் ஜெல்லியில் சேர்க்கிற கலரிங் பொடிகள் இந்த வண்ணங்களை ஏற்று செரிமானம் செய்கிற சக்தி நம் ரத்தத் திற்குக் கிடையாது. சிறு நீரகமும் இதை சுத்திகரிக்காது.

*

4. ஒரு பாக்கெட்டில் எவ்வளவு கெமிக்கல் கலந்து தயாரிக்கணுமோ அவ்வளவு குறைவான (100 கிராம்) அளவு தான் கலப்பார்கள். ஆனால், இதைச் சாப்பிடும் ஒரு குழந்தை டேஸ்ட்டுக்காக அடிக்கடியோ, அதிகமாகவோ சாப்பிட்டால் என்ன ஆகும் என்று யாரும் யோசிப்பது இல்லை. குழந்தைகள் மட்டுமில்லை பெரியவர்கள். கர்ப்பிணிப் பெண்கள், குறிப்பிட்ட நோய் உள்ளவர்கள் சோடியம் சம்பந்தப்பட்ட பொருட்களைச் சாப்பிடக் கூடாது.

*

5. ஆனால் இது பற்றி ஜங்க் புட் சாப்பிடுகிற யாருக்கும் தெரிவதே இல்லை. `வட இந்திய உணவு விற்கிற சாட் ஷாப்களில் சேர்க்கிற மசாலாப் பொடிகள், கலர் பொடிகள் எல்லாம் எப்போது தயாரித்தது. அவை சுத்தமானவையா என்பதற்கு எந்த விளக்கமும் கிடையாது.


அங்கு வேக வைத்த உருளைக்கிழங்குகளையும் நறுக்கிய வெங்காயத்தையும் அப்படியே தட்டுகளில் வைத்திருப்பார்கள். இந்த இரண்டிற்கும் காற்றில் உள்ள நுண் கிருமிகளை ஈர்க்கும் தன்மை அதிகமா இருக்கும். பக்கத்துல ஒருத்தர் தும்மினால் கூட கிருமிகளை அப்படியே இது ஈர்க்கும் எவ்வளவு ஆபத்தான விஷயம் இது.



2. வெப்பநிலையில் மாறுதல்:

சாட், பிஸ்கட், பர்கர், பிட்ஸா இவையெல்லாமே மேற்கத்திய நாகரிகத்தில் இருந்து வந்தவை தான். ஆனால் அங்கே உள்ள வெப்பநிலைக்கும் கலக்குற பொருட்களுக்கும் இங்கே உள்ள நிலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒரு பொருளின் தன்மைக்கு அதிகமாக அதைச் சூடுபத்தவே கூடாது.

ஒன்றரை நிமிடத்தில் 150 டிகிரியில் சூடுபடுத்தும் போது ஏற்படும் உயிர் வேதியியல் மாற்றம் உடலுக்கு ரொம்ப பாதிப்பை ஏற்படுத்தும். இந்த மாற்றத்தை `பாலி அக்ரலைமைட் பார்மேன்சன்' என்று சொல்லி உலக விஞ்ஞானிகளே ஏற்றுக் கொள்கிறார்கள்.

*

வயிற்று கோளாறை தடுக்க எளிய வழி:

1. காலை எழுந்தவுடன் எளிய உடற்பயிற்சி செய்யுங்கள், குறைந்த பட்சம் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சியை மேற் கொள்ளுங்கள். பிறகு காலை நல்ல சத்துள்ள உணவு அதிகமாக சாப்பிட வேண்டும். காலை உணவில் பழங்கள், மற்றும் பால் ஆகியவற்றை சேர்ப்பது நல்லது. காபி மற்றும் டீ சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

*

2. பிறகு மதிய உணவு சமசீர் உணவாக சாப்பிட வேண்டும். மதிய உணவில் பச்சை காற்கறிகள், பழங்கள், பருப்புகள் மற்றும் கீரைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும் ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் உங்கள் ஹைட்ரேட் மற்றும் உங்கள் பசி உணர்வை குறைக்கும்.

*

3. ஆகையால் தாகம் எடுத்த பின் நீர் அருந்துவதை விட சிறிது இடைவெளியில் ஒரு முறை நாம் நீர் அருந்திக் கொண்டே இருக்க வேண்டும். இரவு நேர சாப்பாட்டுக்கு கோதுமை உணவு வகைகளை எடுத்துக் கொள்வது, இரவு ஜீரணத்திற்கு எளிமையானது. சாப்பிட்டவுடன் தூங்க செல்லாமல் சிறிது நேரம் நடந்து விட்டு அல்லது வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்க செல்லலாம். அவ்வாறு செய்வது நாம் சாப்பிட்ட உணவு காலோரிகள் நம் உடலில் தங்கி விடாமல் இருக்கும். நொறுக்குத் தீனி தவிர்ப்பது நல்லது.

*

4. இரவு 8 மணிக்குள் சாப்பாட்டை முடித்துக் கொண்டால் அஜீரண கோளாறில் இருந்து தப்பிவிடலாம். நாம் எடுத்து கொள்ளும் உணவுகளின் கலோரிகளை எரி சக்தியாக மாற்றி விட்டால் வீணாக நம் உடலில் தங்கி கொழுப்பாக மாறாது. அதாவது நாம் சாப்பிடும் உணவுக்கு ஏற்ற வேலையை உடலுக்கு தந்தால் உடல் பருமன் என்பது பறந்து போய் விடும். நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப உணவு கலோரிகளை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால் உங்கள் உடல் பருமன் போய் நலினமான உடல் சொந்தமாகும்.

***


3. அசைவம்:

அசைவ பிரியர்கள் மீன், கோழி தாராளமாக சாப்பிடலாம். அதிக எண்ணையில் போட்டு வறுக்க கூடாது லேசாக எண்ணை தடவி வறுத்து சாப்பிடலாம்.

*

ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்றவை குடலை பதம் பார்க்கும். அவற்றை தவிர்ப்பது நல்லது. நொறுக்கு தீனி, பாஸ்ட் புட் தொடர்ந்து சாப்பிடுவோருக்கு செரிமான கோளாறு ஏற்படுவது சர்வ நிச்சயம். இவர்களுக்கு காலையில் எழுந்ததும் புளித்த ஏப்பம், நெஞ்சு எரிச்சல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் உடனடியாக குடல் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்களை சந்தித்து சிகிச்சை பெறுவது நல்லது. இல்லையென்றால் இதய நோய், மாரடைப்பு, புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.


***

4. இதய நோய் ஆபத்து


ஒவ்வொருவருடைய உடலமைப்பு, குடல், இரைப்பை அது சுருங்கி விரியும் தன்மை இதைப் பொறுத்து பாதிப்பின் தீவிரம் இருக்கும். பொதுவா ஜீரணம் செய்ய பித்த நீர், கணையநீர் தேவை. இது குறைந்தால் ஜீரணம் ஆகாது. இவையெல்லாம் நாம் சாப்பிடுகிற உணவைப் பொறுத்து தான் சரியாக இருக்கும்.


இல்லையென்றால் அஜீரணம், வாய்வு, வயிற்றுப் புண், நெஞ்சு எரிச்சல், அல்சர், பித்தப்பை கல், பெருங்குடல் புற்று நோய், மூலம், நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகரிப்பு, இதயநோய், மாரடைப்பு, நெஞ்சுவலி, மஞ்சள் காமாலை அதிகபட்சமாக கேன்சர் கூட வர வாய்ப்பு இருக்கிறது. அதுவும் தந்தூரி பிரியர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம். நேரடியாக தீயில் சுட்டு சாப்பிடுவதே இதற்குக் காரணம் என்கிறார் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்.


*

தொடர்பு கொள்ளுங்கள:

டாக்டர் வெங்கடேஷ் போன் நம்பர் 9677000400 .
குடல் தொடர்பான எந்த சந்தேகம் இருந்தாலும் தொடர்பு கொள்ளுங்கள்

பதில் சொல்கிறேன்


***
by-டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன்
thanks டாக்டர்
***




"வாழ்க வளமுடன்"

சர்க்கரை நோயின்றி வாழ :)

தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.



இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

*

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

*

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

*

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

*

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


***
thanks இணையம்
***




"வாழ்க வளமுடன்"

26 நவம்பர், 2010

நூறாண்டு காலம் வாழ்வது எப்படி?

நூறாண்டு காலம் வாழுவதற்குரிய மந்திரம் எது ?



நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டு திசைகளே உள்ளன.


டேனிஸ் மக்களிடையே நூறாண்டு காலம் வாழ்வது எப்படியென்ற தேடல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அரசும் ஒவ்வொரு தேர்தலிலும் மூன்றாண்டு காலம் உங்கள் உயிர் வாழும் காலத்தை எமது ஆட்சி நீட்டிப்பு செய்யும் என்று பிரச்சாரம் செய்து வருகிறது.

*

50 இலட்சம் குடித்தொகை கொண்ட டென்மார்க்கில் தற்போது 867 பேர் நூறு வயதையும் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் 733 பேர் பெண்களாகும். டென்மார்க்கின் சராசரி இறப்பு வயது பெண்கள் 81 ஆகவும், ஆண்கள் 76 ஆகவும் உள்ளது.

*

ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாழ்வதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன, ஆனால் அனைத்திலுமே முக்கியமான காரணம் பெண்கள் மாற்றங்களை இலகுவாக ஏற்று அதற்கமைவாக வாழ்வதால் அவர்கள் ஆண்களை விட அதிக காலம் வாழ்கிறார்கள் என்று இது குறித்த ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் கெனிங் கியக் தெரிவித்துள்ளார்.

*

நூறாண்டு காலத்தை எட்டித் தொடும் பிரதான மந்திரமாக இது இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். நூறாண்டு வாழ மாற்றங்களை இயல்பாக ஏற்கப் பழகுங்கள்.

*

நூறு வயதை எட்டித் தொடும் முதியவர்களுடன் பேசுவது அவசியம். அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை, உணவு முறைகள் போன்றவற்றை கேட்டறிவது மற்றவர்களும் நீண்ட காலம் வாழுவதற்கு உதவும். ( இவர்கள் கிளம்ஸ்கள் என்று வயோதிபரை ஒதுக்கும் இளையோர் விரைவான சாவிற்கு வரவேற்புப் பாடுகிறார்கள் ) புவியில் வடக்கு – கிழக்கு – தெற்கு – மேற்கு என்று நான்கு திசைகளை பிரதானமாகக் கூறுவோம். ஆனால் நீண்ட காலம் உடலை உயிருடன் வைத்திருக்க இரண்டே இரண்டு திசைகள் மட்டுமே உள்ளன.

*

நாம் செய்யும் செயல் நீண்ட கால உயிர்வாழ்தலுக்கு எதிரான திசையிலும், சரியான திசையிலும் மட்டுமே இருக்கும். குறுங்கால உயிர் வாழும் திசைக்குள் பிரவேசித்தால் உடன் அதை நிறுத்தி சரியான திசைக்குள் திரும்பிவிட வேண்டும்.

*

ஒவ்வொரு செயலிலும் இந்த இரு திசைகளையும் பிரதானமாகக் கருதி உடனுக்குடன் மாற்றங்களை செய்ய வேண்டும். இல்லையேல் நீடித்த ஆயுளை எட்டித் தொட முடியாது. இதுதான் 100 வயதைத் தொடும் காந்த முள்ளாகும்.

***

மேலும் இளமையுடன் வாழ்வை நகர்த்த சில யோசனைகளையும், தந்துள்ளார்கள்:


1. மது, புகைத்தல் போன்ற பழக்கங்கள் இருந்தால் உடன் நிறுத்தி சரியான திசைக்கு வாழ்வை திருப்புங்கள்.

*

2. தினசரி 30 நிமிடங்கள் தேகப்பயிற்சி செய்யுங்கள்.

*

3. உடன்பாடு காண முடியாதவர்களை கைவிட்டு புதியவர்களுடன் இணைந்து புதுவாழ்வு காணுங்கள். பழையதையே நினைத்து கண்ணீர் விட வேண்டாம்.

*

4. சிறு பிள்ளைகளுடன் பழகி குழந்தை மனதோடு வாழுங்கள்.

*

5. புதிய மொழிகளை கற்றுக் கொள்ளுங்கள், மூளை புதுமைகளை விரும்பும்.

*

6. புதினங்களை அறியுங்கள் ஆனால் உணர்ச்சி வசப்பட வேண்டாம்.

*

7. ஆரோக்கிய வாழ்வு தொழில் போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட வேண்டும்.

*

தற்போது 867 ஆக இருக்கும் 100 வயதைத் தொட்ட மனிதர் எண்ணிக்கையை எதிர்வரும் 2050 ல் 20.000 ஆக உயர்த்திவிட இப்போதே அரசு திட்டங்களை தீட்டியுள்ளது. இப்போது பிறக்கும் பிள்ளைகளில் இருவருக்கு ஒருவர் 100 வயதைத் தொடுவார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.

***

புலம் பெயர் தமிழருக்கான மேலதிக போனஸ் :

போர்கள் – கொடிய நோய் – வறுமை – சுகாதார சீர்கேடு – நல்ல உணவு இன்மை – தவறான அறிவு குறைந்த ஆட்சித்தலைமைகளும், அவர்களின் அடியாட்களும் அரசியலில் இருப்பது – தறவான இராணுவங்கள் – பிடிவாத குணம் கொண்ட மூர்க்க எண்ணங்கள் –


ஆயுத பாவனை – கொலை – கொள்ளை – கப்பம் – பேசித் தீர்க்க தெரியாத பாமரத்தனம் – கல்வியை இழந்த சமுதாயமாக இருப்பது – கல்வியை வாழ்விற்குள் கொண்டுவராமல் பணத்திற்காக வாழ்வது – சர்வாதிகாரத்திற்கு துணை போவது – தலைமை வழிபாடு – அறிவு குறைந்தோர் ஊடகங்களில் இருந்து வழிகாட்டுவது –


மக்களை கண்ணீர் வெள்ளத்தில் வைத்து பணம் பண்ணப் பார்ப்பது போன்ற பழக்கங்கள் மக்களின் ஆயுளைக் குறைக்கும் திசைப்பக்கமாக இருப்பதை நீண்ட காலம் வாழ விரும்புவோர் கவனத்தில் கொள்வது அவசியம்.



***
thanks அலைகள்
***



"வாழ்க வளமுடன்"

வயதானவர்களுக்கான உணவு முறை!

உலகிலேயே அதிக ஆயுள் உடையவர்கள் ஜப்பானியர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதிலும் தெற்கு ஜப்பானில் உள்ள ஓகினாவன் தீவுகளில் வாழ்பவர்கள் கூடுதல் ஆயுளுடன் வாழ்கின்றனர்.



இதற்குக் காரணம் அவர்களது உணவு முறைதான். அப்படி என்னதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள் என்று பார்த்தால் நிறைய தானிய வகைகள், சோயா. ஆனால் பால் பொருட்களை அவர்கள் மிகக் குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்கின்றனர்.

*

வயதாக வயதாக, உடலின் சக்தி குறைகிறது. அதற்கேற்ப ஊட்டச்சத்துகளின் தேவையும் அதிகரிக்கிறது. எனவே அந்த சமயத்தில் இதுபோன்ற உணவு முறையை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆயுள் அதிகரிப்பதோடு, முதுமையினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் தாமதமாக ஏற்படும்

*

குறிப்பாக முதுமையில் ஏற்படும் எலும்புத் தேய்மானம், சர்க்கரை நோய், இருதய நோய் ஆகியவற்றின் விளைவுகளை தவிர்க்க முடியும் அல்லது தள் ளிப் போட ஒவ் வொருவரின் உணவு முறையும் பெரும் காரண மாக அமைகிறது.

*

வயதான பிறகு சிலருக்கு சாப்பாட்டில் அவ்வளவு ஆர் வம் இருக்காது. இதற்கு பல் வேறு காரணங் கள் உள்ளன. ருசி மற்றும் வாச னை போன்ற புலனுணர்வுகள் சற்றே மங்கி விடுவதும், கடிப்பதில் ஏற்படும் சிரமம், சீரணக் கோளாறுகள் போன்றவையும் பசியைக் குறைத்து விடுகின்றன

*

வயதான காலத்தில் மற்றவர்களை நம்பி இருக்கும் சூழ்நிலையில், தமக்குத் தேவையான உணவை, தேவையான நேரத்தில் பெற முடியாத சூழலும் பல முதியவர்களுக்கு ஏற்படுகிறது. இதுவும் இவர்களது உடல்நலத்தை பாதிக்கும் சூழ்நிலைகளே.

***

மாறும் தேவைகள் :

1. வயதானவர்களுக்கு எலும்புத் தேய்மானம், இருதய நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால், அவர்களுக்கு தேவைப்படும் ஊட்டச்சத்துகளின் அளவும் மாறுபடுகிறது. அவர்கள் அதிகமான ஊட்டச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம்.

*

2. ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோஸியேஷன் செய்துள்ள ஆய்வு தெரிவிக்கையில், வயதானவர்கள் நன்றாக உணவு அருந்தினாலும்..... வைட்டமின் குறைபாடு ஏற்படும் என்கிறது. எனினும் மல்டி - வைட்டமின் மாத்திரை எடுத்துக்கொள்வது உணவை விட சிறந்ததாகாது. ஏனெனில் உணவில் உள்ள கூடுதல் நார்ச்சத்துகள், தாவர ரசாயனங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் மல்டி வைட் டமினில் இருக்காது.

*

3. தினமும் 6 முதல் 8 டம் ளர்கள் தண் ணீர் அருந் துவது மிகச்சிறந்த மருத் துவமாகும். ஏனெனில் வயதானவர் களுக்கு தா கம்கூட குறைந்துவிடும். இதனால் களைப்பும், தலை வலியும் ஏற்படும். ஊட்டச்சத்துகள் போன்றே தண்ணீரும் முக்கியமா னதே. உடல் உஷ்ணத்தை சீராக வைத்துக் கொள்ளவும், உடல் செல்களுக்கு ஊட்டச்சத்துகளை கொண்டு செல்லவும் உடலின் நச்சுப் பொருட்களையும் கழிவுகளையும் அகற்றுவதிலும் தண்ணீரின் பங்கு அபரிமித மானது.

*

4. இறைச்சி வகைகளைக் கைவிட்டு காய்கறிகளை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். காய்கறிகளை மென்று தின்ன முடியாத முதியவர்கள் காய்கறிகளை சூப் செய்தும் அருந்தலாம். கீரைகள், பழங்களையும் சீராக சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஏதாவது ஒரு வகைப் பழத்தை உண்ணலாம். அதுவும் நீரிழிவு நோயாளியாக இருப்பின் பழ வகைகளைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசனை செய்து சாப்பிடலாம்.

*

5. பால், தயிர், மோர், போன்றவற்றை அதிகமாக உட்கொள்ளாமல் இருப்பது நலம். அதற்காக அறவே எடுத்துக் கொள்ளாமல் இருப்பது சரியல்ல.

*

6. சர்க்கரை, காரம், உப்பு போன்றவை குறைவாக உணவில் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இவைகளை தேவையை விட பாதி பங்கு அளவிற்கு உங்கள் உணவில் நீங்களே குறைத்துக் கொள்ளுங்கள். இது பல்வேறு நோய்களில் இருந்து நம்மைக் காக்கும்.

*

7. வாரத்திற்கு இரு முறை கசப்பான உணவுகளான பாகற்காய், சுண்டைக்காய் போன்றவற்றை சேர்த்து வந்தால் நீரிழிவு நோயில் இருந்து தப்பிக்கலாம். வெந்தயம், மிளகு போன்றவற்றை தூள் செய்து வைத்துக்கொண்டு அதனை உணவுப் பொருட்களில் சிறிது கலந்து உட்கொண்டால் மருத்துவரிடம் போக வேண்டிய அவசியமே இருக்காது.

*

8. கை, கால்களை சுத்தமாகவும், அடிபடாம லும் பார்த்துக்கொள்ளவேண்டும். நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் காயங்கள் எளிதில் ஆறாமல் போவதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.

*

9. குளிர்ச்சியான பொருட்களை இரவு நேரங்களில் தவிர்த்துவிடுங்கள். உடலுக்கு ஒத்துக்கொள்ளாத எந்தப் பொருளையும் உட்கொள்ள வேண்டாம்.

*

10. எளிதில் ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை மட்டும் இரவு நேரங்களில் உட்கொள்ளுங்கள். அதுபோல் மாலை நேரத்தில் ஏதாவது ஒரு தானியம் சேர்ந்த உணவுப் பொருளை உட்கொள்வதும், சிறிது தூரம் நடை செல்வதும் சிறந்தது.


*

நமது உடலை நாம் உண்ணும் உணவின் மூலமே சரியாக வைத்துக்கொள்ள முடியும். அதை விடுத்து மாத்திரைகளையே உணவாக உட்கொள்ளும் அவசியம் நமக்கு வேண்டாமே.




***
THANKS மருத்துவம் ஜனவரி 2010
***








"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "