கம்பு தோசை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த டிபன் .
தேவையான பொருட்கள்:
கம்பு - 1 கப்
அரிசி- 1 கப்
செய்முறை:
1. கம்பை 5 மணி நேரமும், அரிசியை 4 மணி நேரமும் ஊறவைத்து மைய அரைத்து எடுக்கவும்.
2. அரைத்த 1 மணி நேரம் கழித்து ஊற்றலாம்.
3. இந்த தோசை ரொம்ப வாசனையாகவும், சுவையாகவும் இருக்கும்.
குறிப்பு:
கம்பை கல் இல்லாமல் சுத்தம் செய்து போடனும்... ( அதில கல் இருக்கும் )