...

"வாழ்க வளமுடன்"

01 நவம்பர், 2010

மூலிகைத் துவையல்!

நம் அன்றாட உணவு வகைகளில் சேர்க்க வேண்டியவற்றைச் சேர்த்தும் விலக்க வேண்டியவற்றை விலக்கியும் உட்கொண்டால் நோயில்லா வாழ்க்கை வாழலாம் என்பதற்கு வாசகச் சகோதரி அனுப்பியுள்ள மூலிகைத் துவையல் ஓர் எடுத்துக் காட்டு.தேவையானவை:

கொத்தமல்லித் தழை : 1 கப்
புதினாத் தழை : 1 கப்
பசுமையான கருவேப்பிலை : 1 1/2 கப்
தூதுவளை இலை : 1 கப்
பிரண்டை : 1 கப்
இஞ்சி : 1 துண்டு
பூண்டு : 5 பல்
பச்சை மிளகாய் : 5
காய்ந்த மிளகாய் : 5
சிறிய வெங்காயம் : 10
தக்காளி : 1
புளி பேஸ்ட் : 3 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் : 150 மி
கடுகு, உளுந்து, பெருங்காயம் : தாளிப்புக்குத் தக்க
உப்பு : தேவைக்கேற்ப

முன்னேற்பாடுகள்

கொத்தமல்லி, புதினாத் தழைகளின் தண்டை நீக்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இலையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். தூதுவளை இலையின் பின்பிறம் லேசான முள் இருக்கும். முள்ளை நீக்கி சுத்தம் செய்யவும். பிரண்டை, குச்சிபோல் இருக்கும். நார் நீக்கி, உள் இருக்கும் சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தம் செய்யவும். இஞ்சி, மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் இட்டு மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

செய்முறை

கடாயில் எணணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் இட்டுத் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் பச்சைத் துவையலை சேர்த்துச் சுருள வதக்கி ஆறியதும் உலர்ந்த ஜாடியில் பத்திரப் படுத்தவும்.

இதை, சோற்றில் கலந்து பிசைந்து சாப்பிடலாம். சாம்பார்/ரசம்/மோர் சாதத்திற்கு சூப்பர் காம்பினேஷன். பிரிஜ்ஜில் வைத்து 15 நாட்களுக்குப் பயன் படுத்தலாம்.

***


பிரண்டை:

முன்னேற்பாடு சிறிது கடினமாக இருந்தாலும் உடலுக்கு மிகுந்த பயன் அளிக்கக் கூடியது. கொத்தமல்லி, புதினா, இஞ்சி, பூண்டு ஆகியன குளிர்ச்சி; இரத்த சுத்தரிப்பு, ஜீரண சக்தி அளிக்கக்கூடியது. கருவேப்பிலை கண்ணுக்கும் கருங்கூந்தலுக்கும் ஏற்றது. நரை பாதிப்பு இருக்காது. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்ல பயன் தரும்.

ஜலதோஷம், கபம், தொண்டைவலிக்கு தூதுவளை மிகச்சிறந்த நிவாரணி. மூட்டுவலி, ஜீரணஉறுப்புக் கோளாறு, சுளுக்கு, அடிபட்ட வீக்கம் ஆகியவற்றிற்குப் பிரண்டை சிறந்தது.

***


தூதுவளை:


பிரண்டையும் தூதுவளையும் கிராமங்களில் எளிதாகக் கிடைக்கும். இவ்விரண்டும் இல்லாமலும் துவையல் செய்யலாம். புளி, காரம் அவரவர் சுவைக்குத் தகுந்தாற்போல் கூட-குறைய சேர்த்துக் கொள்ளலாம். இத்துவையலை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் குடும்பத்தில் ஆரோக்கியம் நிலைத்து நிற்கும்.


***
by-ஆர். நூர்ஜஹான் ரஹீம்
thanks நூர்ஜஹான்
***


"வாழ்க வளமுடன்"

இஞ்சிப் பால்

Ginger Milk[இஞ்சிப்பால்]
கொடி போல இடை தளிர்போல நடைன்னு சொல்வாங்க. அப்படி சிக்குன்னு சுறுசுறுன்னு இருக்கனும்பாங்க. சுலபமா செஞ்சு முடிக்கக்கூடிய இஞ்சிப் பால் இருக்க பயமேன்? கவலையை விடுங்க.

*

ஒரு நபர் ஒரு வேளை குடிக்கக்கூடிய அளவுக்கு இஞ்சிப்பால் செய்யறது எப்படி?

ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்துத் தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும்.
*
அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பணங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும்.

*

அட. இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்?

1. நுரையீரல் சுத்தமாகும்.

2. சளியை ஒழுச்சு கட்டிடும்.

3. வாயுத் தொல்லை என்பதே வராது.

4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும்.

5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம்.

6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும்.

7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்து குடிக்கலாம்.

8. இரத்தக் குழாய்களில் அடைப்பு எதுனாலும் இருந்தா நீக்கி விடும். அதனால மாரடைப்பை தடுக்கும் சத்தி இதுக்கு இருக்கு.

9. முக்கியமா பெண்களுக்கு சினைப்பையில் வரக்கூடிய புற்றுநோய்க் கட்டிகளை நீக்கி விடும்.


10. தினமும் சாப்பிட்டால் உடம்பு சும்மா சுறு சுறுன்னு இருக்கும்மில்லே.

*

அதுசரி, இந்த பாலை எல்லாருமே சாப்பிடலாமா?

3 வயசுக்கு மேல யார் வேணுமின்னாலும் சாப்பிடலாம்.

ஆனால் வாய்ப்புண், வயிற்றுப் புண், மலவாயில் புண், எரிச்சல் இருப்பவர்கள் தவிர்க்கனும்.

மீதிப்பேர் சாப்பிடலாம்.

என்ன நாளையில இருந்து உங்க வீட்டில காப்பிக்கு பதில் இஞ்சிப்பால்தானே?


***
நன்றி இணையம்.
***"வாழ்க வளமுடன்"

வீட்டிலேயே சீயக்காய் தயாரிப்பது பற்றி

வீட்டிலேயே சீயக்காய் தயாரித்துக் கொள்ள கீழ்க்கண்ட பொருட்களை சேர்த்து அரைத்தால் நல்ல பலன் கிடைக்கும்.
சீயக்காய்- 1 கிலோ
செம்பருத்திப்பூ- 50
பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) - 100 கிராம்
எலுமிச்சை தோல் (காய வைத்தது. பொடுகை நீக்கும்)- 25
பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) - கால் கிலோ
மருக்கொழுந்து (வாசனைக்கு) - 20 குச்சிகள்
கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக) - 3 கப் அளவ

*


மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம். சாதக் கஞ்சி தேவையில்லை.

***
நன்றி இணையம்.
***


"வாழ்க வளமுடன்"

நேரத்தை மிச்சப்படுத்துவது பற்றி ! ( பெண்கள் )

எல்லோருக்கும் ஒரே மாதிரியாக 24 மணி நேரத்தைத்தான் கொடுத்திருக்கிறார் கடவுள். சிலர் அந்த நேரத்தைக் கச்சிதமாகப் பயன்படுத்தி நிறைய விஷயங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள்.
சிலரோ எல்லா வேலைகளையும் டென்ஷனோடு ஆரம்பித்து சரியாக முடிக்கவும் முடியாமல் சொதப்பி விடுவார்கள். ஒரு சிலரால் முடிந்த விஷயம் ஏன் பெரும்பாலானவர்களால் முடியவில்லை என்று பார்த்தால், அவர்களுக்கு நேரத்தைப் பயன்படுத்தும் சூட்சுமங்கள் தெரியவில்லை என்பது தான் உண்மை!

***


a. எந்தெந்த சமயங்களில் பெண்கள் டென்ஷனாகிறார்கள்?

1. காலை நேரத்துப் பரபரப்பு (குழந்தைகள், கணவரை பள்ளிக்கு, வேலைக்கு அனுப்பும் சமயத்தில் தலை கிறுகிறுத்துப் போகும்).

*

2. ஒர்க்கிங் வுமனாக இருந்தால் கணவர் குழந்தைகளை ஆஃபீசுக்கு அனுப்பிவிட்டு, தானும் ரெடியாகி அரக்கப் பரக்க பஸ் பிடிக்க ஓடும் சமயங்கள். இந்த இரண்டு பிரச்னைகளையும் அநேகமாக எல்லாப் பெண்களும் சந்தித்து வருகிறார்கள்.

*

3. சே... என்னடா வாழ்க்கை இது. என்று நாங்கள் சற்று வெறுத்துப்போய் பேசும் தருணங்களும் இதுதான் என்கிறார்கள் நம்மிடம் பேசிய சில இல்லத்தரசிகள்.

***

b. காலை நேரத்துப் பரபரப்பை எப்படி சமாளிப்பது?

1. திட்டமிடுங்கள்... அதுதான் உங்கள் டென்ஷனைக் குறைக்க முதல் வழி. யூ.கே.ஜி. படிக்கும் பையன், பிஸினஸ் செய்யும் கணவர் இருவரையும் காலை ஒன்பதரை மணிக்குள் கிளப்ப வேண்டும். டி.வி. பார்த்துக் கொண்டே மறுநாளைக்குத் தேவையான காய்கறிகளை நறுக்கி வைத்து விடுங்கள்.

*

2. சமைக்கும்போது குழப்பம் வரவே கூடாது. உருளைக்கிழங்கு பொரியல், சாம்பர் வைக்க வேண்டும் என்று முதல் நாள் முடிவு செய்து விட்டால் அதிலிருந்து மாறக் கூடாது. ஏனென்றால் காலை நேரப் பரபரப்பை குழப்பங்கள் ரொம்பவே அதிகப்படுத்திவிடும்.

*

3. அதேபோல் முதல் நாளே குக்கர் வைக்கத் தேவையான அரிசி, பருப்பைக்கூட தனித் தனியாக எடுத்து வைத்து விட்டால் சமையல் சுலபமாகிவிடும்.

*

4. வாணலியில் கடுகை வெடிக்க விட்டு விட்டு கறிவேப்பிலை எடுக்க, கொத்தமல்லி எடுக்க என்று ஒவ்வொன்றுக்காகவும் ஃப்ரிட்ஜை நோக்கி ஓடி வருவதைத் தவிர்த்து விடுங்கள். நேர விரயத்தோடு கால்வலியும் வரும். அதனால் சமைக்கத் தேவையான அத்தனை பொருட்களையும் தயாராய் எடுத்து வைத்துக் கொண்டு சமையுங்கள்.

*

5. வாட்டர் பாட்டில், ஷூ, சாக்ஸ், டிஃபன் பாக்ஸ், ஸ்நாக்ஸ் பாக்ஸ் முதலியவற்றை நீங்கள் எடுத்துக் கொடுக்காமல், தாங்களே எடுத்துக் கொள்ளும்படி உங்கள் குழந்தைகளைப் பழக்குங்கள். ஏனென்றால் இது மாதிரியான சின்னச் சின்ன வேலைகள் தான் காலை நேரத்து டென்ஷனை அதிகப்படுத்தும்.

***

c. நேரத்தை அதிகப்படுத்தும் விஷயங்கள்

1. வண்டிச் சாவி, பீரோ சாவி, பிரீமியம் கட்டச் சொல்லி வந்த கடிதம், செல்ஃபோன், நியூஸ் பேப்பர், மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன்... போன்றவைகளில் ஏதாவது ஒன்றை தினமும் ஏதாவது ஒரு குடும்பத்தில் வைத்த இடம் தெரியாமல் தேடிக் கொண்டிருப்பார்கள்.

*

2. சே... இந்த வீட்ல அவசரத்துக்கு ஒரு பொருளாவது கிடைக்குதா? என்று தேடுபவர் டென்ஷனாகிக் கத்த, மற்றவர்களும் சேர்ந்து கத்த குடும்பமே தேடு தேடென்று தேடினால் பீரோ சாவி கட்டிலுக்கு அடியில் கிடக்கும். மெடிக்கல் பிரிஸ்க்ரிப்ஷன் பூஜை அறையில் விபூதிக்கு வாழ்வு கொடுத்துக் கொண்டிருக்கும். ஒரே ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள்... அந்தந்தப் பொருளை அந்தந்த இடத்தில் வைக்காததன் விளைவுதானே இந்த நேர விரயம்?

*

3. ஒவ்வொரு பொருளும் அதற்குரிய இடத்தில் சரியாக வைக்கப்பட வேண்டும். அதுமட்டுமில்லாமல் ஒவ்வொரு முறை எடுத்துப் பயன்படுத்திய பிறகும் மீண்டும் எடுத்த இடத்தில் அந்தப் பொருளை வைக்க வேண்டும்.

*

இந்த சூட்சுமத்தை சரியாகக் கையாண்டால் இல்லத்தரசிகள் கையில் எக்கச்சக்கமான மணித் துளிகள் தவழும். (உங்கள் குடும்பத்தாருக்கும் எடுத்த இடத்தில் பொருளை வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொடுங்களேன்.)


***
நன்றி இணையம்.
***


"வாழ்க வளமுடன்"

பொருத்தமான மேக்கப் (கூந்தல் உட்பட)

பெண்ணோ ஆணோ யாராக இருந்தாலும் தோற்றத்தை மேம்படுத்திக்காட்டும் சிறப்பு, கூந்தலுக்கு உண்டு. ஆனால் அதை பராமரிப்பது சிரமமான வேலை. போதிய நேரம் ஒதுக்க முடியாத நிலை பலருக்கு. இதனால், நீண்டு அடர்ந்த கூந்தலைக் கூட குட்டையாக வெட்டிக்கொள்ளும் பெண்கள் அதிகம்.
முடி சின்னதாக இருக்கே என்று கவவைப்படாமல் நம் முக அமைப்பு எப்படியோ அதற்கேற்ப விதவிதமாக கூந்தலை அலங்காரம் செய்து கொள்ளலாம். முடி நீண்டு அடர்த்தியாக இருந்தால், எந்த மாதிரி தலையலங்காரமும் அழகாகத்தான் இருக்கும். இருந்தாலும் கழுத்தின் அமைப்பு, முக வடிவத்தை பொருத்து உங்களுக்கு பொருந்தக் கூடிய விதவிதமான கொண்டை, பின்னல்களை போட்டுக் கொள்ளுங்கள்.

***


1. குட்டை முடி

*

உருண்டை முகம்: கோணல் வகிடு எடுக்காமல் தூக்கி வாரி கட்டிக் கொள்ளலாம். நடு வகிடு எடுத்து பின்னல் போட்டுக் கொள்ளலாம்.

*

நீளமுகம்: ஒரு பக்கம் கோணல் வகிடு எடுத்து, இரு பக்கமும் வாரிவிட்டால் முகம் சற்று அகலமாக காட்டும்.

*

அகலமான முகம்: முடியை பின்புறம் எடுத்து காதை மறைக்கும்படி வாரலாம். முகம் உருண்டையாக தெரியும்.

*

அகலமான நெற்றி: முன்பக்க முடியை சற்று எடுத்து ஃப்ரிஞ்ச் எனப்படும் ஹேர் கட் பண்ணலாம். நெற்றி முழுக்க முடி முன்னால் வருமாறு கட் பண்ணலாம்.

*

குட்டைக் கழுத்து: குதிரை வால் கொண்டை பொருத்தம்.

*

தாடை நீண்ட ஓவல் வடிவ முகம்: முடியை நேராக்கி "சி" வடிவமாக வகிட்டிலிருந்து தாடை வரை வந்து விழுவது போல் அமையுங்கள் அழகாக, வித்யாசமாக இருக்கும்.

***


2. நீளமான முடி

* பின்னல், கொண்டை இரண்டும் கச்சிதமாக பொருந்தும்.

* ப்ரென்ச் ப்ளெய்ட் போடலாம். ஆனால், முடி திக்காக, முகம் ரவுண்டாக இருக்கவேண்டும்.

* முடியை தூக்கி வாரி கொண்டையின் மேல் ப்ரென்ச் நாட் போடலாம். கழுத்து குட்டையாக இருப்பவர்கள் போட்டால் அழகுதான்.

*
நீளக் கழுத்து: காது லெவலுக்கு மேல் கொண்டை போடக்கூடாது.

*
மீடியம் கழுத்து: பின் கொண்டை போட்டால் ஆபரணங்கள் எடுப்பாக இருக்கும். கழுத்தை ஒட்டி வரும்படியாக சற்று இறக்கி கொண்டை போடலாம். ரொம்ப இறக்கி விடாதீர்கள்.

*
மிக நீண்ட கழுத்து: கழுத்தை ஒட்டினார்போல் சற்று முதுகையும் மறைக்கும் அளவுக்கு ரோல்ஸ் போன்ற கொண்டைகள் போடலாம். கழுத்தை மூடும்படியாக பூ வைத்துக் கொள்ளலாம்.

*
உருண்டை முகம்: உயரமான கொண்டை மிகவும் அழகாக இருக்கும்.

*
ஓவல் முகம்: காதை மூடினமாதிரியான கொண்டை கழுத்தின் ஆரம்பம் வரை இருக்கட்டும். முன்னால் இருந்து பார்த்தால் தெரியுமாறு பூ சூடிக் கொண்டால் முகம் உருண்டையாக தெரியும்.

*
சதுரமுகம்: தளர (காதை மூடிய பின்னல்), கொண்டை போடலாம். காதோர முடியை சுருட்டி தொங்க விட்டால் மேலும் அழகாக இருக்கும்.

*
குண்டானவர்கள்: கொண்டை வேண்டாம். பின்னல் நல்லது.

*
உயரமானவர்கள்: கொண்டை வேண்டாம். ஆசையாக இருந்தால் சற்று தழைத்து போட்டுக் கொள்ளுங்கள்.

*
குள்ளமானவர்கள்: சற்று உயர தூக்கி கொண்டை போடுங்கள்.

*
எல்லோருமே கொண்டை வலையில் ஜம்கி, சலங்கை, மணிகளை (ஓவராக அல்ல) ஒட்டி வைத்துக் கொண்டால் விசேஷங்களுக்கு செல்லும்போது உங்களை ரிச்சாக காட்டும். பாராட்டு கிடைக்கும்.

***


3. பொட்டு

* உடைக்கேற்ற டிசைன் பொட்டு அதே நிறத்தில் தேர்ந்தெடுங்கள். பொதுவாக மெரூன் பொட்டு எல்லா நிற உடைகளுக்கும் பொருந்தும்.

* உருண்டை முகம்: வட்டம், உயரம் என எல்லா பொட்டும் பொருந்தும். சிறிய, நீட்டப் பொட்டு சூப்பர்.

* குறுகிய நெற்றி: சிறிய டிசைன் பொட்டுக்கள் பொருந்தும்.

* நீள முகம்: கலர் சாந்தினால் அகல டிசைன் வரைந்து கொள்ளலாம்.

* சதுர முகம், பரந்த நெற்றி: நீள டிசைன் பொட்டுக்கள் வைக்கலாம்.

* ஜீன்ஸ் அணிந்தால்கூட பாம்பு போன்ற வளைந்த, நீள டிசைன் பொட்டுக்கள் எடுப்பாக இருக்கும்.


***


இயற்கை கலரிங்:
பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங்பண்ணுகிறவர்களுக்கும் "ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பலபிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு.

*

"கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் முடி நார்மல் நிலைக்கு வரவேண்டும் அதற்கான சிகிச்சை இது.....

*

டீயை வடிகட்டி, அதன் டிகாஷனை எடுத்துக் கொள்ளுங்கள். இதை தலையில் தேய்த்து வாரம் இருமுறை தலைக்குக் குளியுங்கள். முதல் தடவை டிகாஷனை மட்டும் தேய்த்துக் குளியுங்கள். இரண்டாவது தடவை டிகாஷனுடன் 2 கடுக்காய் தோலையும் போட்டு கொதிக்க வைத்து, உபயோகியுங்கள்.

*

இதுபோல் ஒரு மாதம் தொடர்ந்து குளித்து வந்தாலே முடியின் வறட்டுத்தன்மை போய்விடும். கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக கருமையாகவும் மாறும். டிகாஷன் சிகிச்சை முடிந்த பிறகு இதைத் தொடங்குங்கள்.

*

அரிப்பையும் எரிச்சலையும் போக்குவதற்கான வைத்தியம்:


தேங்காய்க் கீற்று - 2
வெள்ளைமிளகு - 1 டீஸ்பூன்

இரண்டையும் நன்றாக அரைத்து அடுப்பில் வைத்து கொதிக்க விடுங்கள். கை பொறுக்கும் சூட்டுடன் தலைக்குத் தேய்த்து, உடனே மிதமான வெந்நீரில் அலசுங்கள். வாரம் இரு முறை இதைச் செய்து வந்தால் அரிப்பும் எரிச்சலும் நீங்குவதுடன் பொடுகுத் தொல்லையும் போகும்.

*

கூந்தல் கருகருவென்று வளருவதற்கு:-

இளம் மருதாணி இலை - 50 கிராம்
நெல்லிக்காய் - கால் கிலோ
வேப்பங்கொழுந்து - 2 கிராம்...

மூன்றையும் நல்லெண்ணெய் விட்டு அரைத்து விழுதாக்குங்கள். இந்த விழுதை அரை கிலோ தேங்காய் எண்ணெயில் கலந்து ஒரு மாதம் வெயிலில் வைத்து எடுங்கள். எண்ணெய் தெளிந்து தைலமாகிவிடும். தினமும் தலை வாரும் முன் இந்த தைலத்தைத் தடவி வந்தால் எல்லா பாதிப்பும் மறைந்து, கூந்தல் கருகருவென வளரத் தொடங்கும்.

*

இயற்கை கலரிங் முறை:-

சீயக்காயுடன் ஒரு பீட்ரூட்டின் சாறை கலந்து தலைக்குத் தேய்த்துக் குளியுங்கள்.

இந்த சிகிச்சையை வாரம் ஒரு முறை தொடர்ந்து செய்து பாருங்கள். மூன்றே மாதத்துக்குள் உங்கள் கூந்தல் மினுமினுப்பதை உணர்வீர்கள். அதன் பிறகு ஹேர்டையோ, கலரிங்கோ செய்ய வேண்டிய அவசியமே வராது.

***

பேஷன் டிப்ஸ்:
1. கால் பகுதி கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்டை முழங்காலுக்கு மேல் வெட்டி அதை ஷார்ட்ஸாக மாற்றலாம்.

*

2. கிளாஸ் அணிவது வெறும் ஃபேஷன் என்று நினைத்து, கண்டதை அணிந்துவிட வேண்டாம். கண்ணுக்கே உலை வைத்துவிடக் கூடும்.

*

3. குர்த்தா பொதுவாக முழங்காலுக்கு மேல் 4 முதல் 4 அங்குலம் உயரம் இருக்க வேண்டும். ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

*

4. ஆனால் உங்கள் இடுப்புப் பகுதியின் அளவு அதிகமாக இருந்தால் குர்த்தாவை சற்று நீட்டமானதாக்கி கொள்வது நல்லது.

*

5. கூலிங் கிளாஸ் அணிந்து கண்ணாடியில் பார்த்தால் கண்கள் தெரிய கூடாது. அப்படி தெரிந்தால், அந்த லென்ஸ் உங்கள் கண்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்காது.


*

6. உடைகள் வாங்கும் போது கவனம். இறுக்கமான உடைகள் உங்களை குண்டாக காட்சியளிக்க வைக்கும். சரியாக பொருந்தும் உடைகளே சிறந்தவை.
மெல்லிய நெடுக்குக் கோடுகள் (Vertical Stripes) போட்ட உடைகள் உங்களுக்கு மெலிந்த தோற்றத்தை தரும்.

*

7. பழைய `டாப்ஸ்‘ அல்லது `சல்வார் கமீஸை‘ புதியதாக மாற்ற எளிய வழி. புதிய பட்டன், லேஸ் அல்லது எம்பிராய்டரி சேர்த்தால் புது உடை ரெடி!ஆக்ஸிடைஸ்ட் நகைகள் எந்த விதமான உடையோடும் அழகாகத் தோன்றும். தங்க நகைகள் போல் இல்லாமல் இவற்றை மார்டன் உடைகளோடும்; அதிக அளவிலும் அணியலாம்.

*

8. கோடை காலத்தில் எப்பொழுதும் ‘பேஸ்டல்‘ நிற உடைகளை அணியுங்கள்.


***
நன்றி இணையம்.
***

"வாழ்க வளமுடன்"

எளிய அழகுக் குறிப்புகள்

1. கருமை நிறம் மாற‌

பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும்.2. முகம் மிருதுவாக‌

கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.

***

3. வியர்வை நாற்றம் போக:

1. குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும் வியர்வையும்.

*

2. வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

*

3. குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும்.

*

4. இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.

*

5. இன்னுமொரு குறிப்பு :

2 தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை
ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி மணம் வீசும்.

***

4. கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை
தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.

***

5. எடை குறைய

பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.

***

6. முடிகளை நீக்க

முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

*

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால் முட்டையுடன் முடியும் எளிதில்
வரும்.

***

7. சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாற கடலை மாவு, மஞ்சள், சந்தனம், அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி குளித்தால் சருமம் அழகாகவும், பளபளப்பாகவும் மாறும்.

***

8. தலை முடி செழித்து வளர

வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்

***

9. சருமம் நிறம் அதிகரிக்க

ஆப்பிள் விழுது இரண்டு டீஸ்பூன் பால்பவுடர் அரை டீஸ்பூன் பார்லி பவுடர் அரை டீஸ்பூன்

*

மூன்றையும் கலந்து முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழுவினால் முகம் மின்னல் போல மின்னும்.

***


10. கண்கள் பிரகாசமாக இருக்க

இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.


***

11. கருவளையம் நீங்க

ஆரஞ்சு பழத்தின் சக்கையை கண்கள் மீது அரைமணி நேரம் வைத்திருந்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால் கருவளையம் காணாமல் போய்விடும்.

***


12. மருதாணி நன்கு சிவக்க

மருதாணி போடும் முன் கையில் எலுமிச்சை பழ சாறு தடவி உலர விட்டு பிறகு போட்டால் மருதாணி நன்கு சிவக்கும்

***

13. அழகை அள்ளித்தரும் குங்குமப்பூ


சிகப்பழமைப் பெறத் துடிக்கும் பெண்மணிகள் முக அழகு கிரீம்களை தேட வேண்டியதில்லை. குங்குமப்பூ ஒன்றே போதும்.

*

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது:

1. குங்குமப்பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும்.

*

2. குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் ஊறியதும் சிறிது வெண்ணை கலந்து நன்றாக குழைக்கவும்.

*

3. இந்த கலவையை தினமும் பூசிவர உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். உதடுகளின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும். முகத்தில் உள்ள கரும்புள்ளிகளும் மறைந்து விடும்.

*

4. இந்த கலவையை நகங்கள் மீது பூசி வர நகங்களும் இயல்பான நிறம்பெறும். நகச் சுத்தி வந்து அழுகிப் போன நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப்பூ வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத்தரும்.

*

5. முகத்திற்கு வசிகரத்தை தருவது கவர்ச்சி மிகு கண்கள்தான் அந்த கண்களுக்கு பளிச் அழகைத் தருவது அடர்த்தியான இமைகள் பட்டாம்பூச்சி போல படபடக்கும் இமைகள் அமைய குங்குமப்பூ உதவுகிறது.

***


14. மேனியை சிவப்பாக மாற்ற இப்படி செஞ்சு பாருங்க:

எந்தப் பூவிலும் இல்லாத புதுமை குங்குமப்பூவில் உண்டு. உடல் நிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய அற்புதக் குணம் இதில் நிறைந்து காணப்படுகிறது.

*

குங்குமப்பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். அதில் தினமும் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டு கலந்து குழைத்துக் கொள்ளவும். இந்தக் கலவையை முகத்தில் பூசி வர முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண் கூடாகக் காணலாம்.

*

சில பெண்கள் நல்ல நிறமாக இருப்பார்கள். ஆனால் உதடுகள் மட்டும் கருமை படர்ந்து அசிங்கமாக இருக்கும். இப்படிப்பட்ட பெண்கள் குங்குமப்பூவை பயன்படுத்தினால் அழகு சிலையாக மாறுவது நிச்சயம்.***

15. முதன்முறையா மேக்கப்:


1. மேக்கப்பெல்லாம் சினிமா நடிகைகளின் சொத்து என்கிற காலமெல்லாம் மலையேறி விட்டது. இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான் இப்பதான் முதன்முறையா மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். உங்களுக்குத்தான் இந்தப் பக்கம்...

*

2. கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.

*

3. முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத் தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

*

4. அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம்... இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம் இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

*

5. வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

*

6. சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.

*

7. மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

*

8. ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால் மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

*

9. உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத் தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.

*

10. லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!

*

11. மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

*

12. மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின் மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

*

13. கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

*

14. பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள் ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

*

15. சிலருக்கு கருத்தடை ஆப்ரேஷன் அல்லது ஓவரியில் ஆபரேஷன் செய்தவுடன் சருமம் டல்லாகி விடலாம். உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைந்து விடுவதுதான் இந்தப் பிரச்னைக்குக் காரணம். இதற்கு சோயாவைத் தேவையான அளவு, உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும். உடல் முழுவதும் தரமான மாய்ஸ்சுரைசிங் க்ரீமை அப்ளை செய்து கொண்டாலும் சருமம் பளபளப்புடன் ஈரப்பதத்துடன் இருக்கும். நிறைய பழச்சாறு குடியுங்கள். முக்கியமாக வெந்நீரில் குளிக்காதீர்கள்.


***


வறண்ட கைகளுடைய பல பெண்கள் அதற்குக் காரணமாக குற்றம் சாட்டுவது வாஷிங் பவுடர்களையும், சோப்களையும்தான். இந்தப் பிரச்னைக்கு:

1 துணி துவைக்கும்போது கைகளுக்கு க்ளவுஸ் போடுங்கள். விலை கம்மிதான்.

2. காய்கறிகளை கையில் எண்ணெய் தேய்த்துக் கொண்டோ, அல்லது கிளவுஸீடனோ வெட்டுங்கள். வெறுங்கையால் வெட்டாதீர்கள்.

3. தரமான லிக்விட் சோப்பை பயன்படுத்தி துணியைத் துவையுங்கள்.

4. தினமும் மூன்று தடவை கைகளுக்கு விட்டமின் ஈ உள்ள மாய்ஸ்ரைசிங் க்ரீமை அப்ளை பண்ணுங்கள். குறிப்பாக கைகளைக் கழுவியவுடன்.


***
நன்றி இணையம்.
***"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "