...

"வாழ்க வளமுடன்"

29 மார்ச், 2010

நெஞ்செரிச்சல் ஏற்ப்படமா இருக்க சில குறிப்புகள்

ஹார்ட் பர்ன்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் 'நெஞ்செரிச்சல்', ஃபாஸ்ட் ஃபுட் வாழ்க்கையில் மிக எளிதாக பலரையும் வாட்டியெடுக்கும்.


பொதுவாக அஜீரணக் கோளாறு காரணமாகவே நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. இதைத் தவிர்ப்பதற்கு, நமது உணவு முறையில் கவனம் செலுத்தினாலோ போதுமானது.
*
இந்தப் பாதிப்பு வராமலிருக்க மேற்கொள்ள கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் இதோ...
*
1. கார வகை உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
*
2. கொழுப்புச் சத்து மிகுதியாகக் காணப்படும் உணவுப் பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
3. புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பின், அதனைத் தவிர்த்தல் வேண்டும்.
*
4. முறையான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். அதாவது, சரியான நேரத்தில் உணவருந்த வேண்டும்.
*
5. உடல் பருமனாகமால் பார்த்துக்கொள்ள வேண்டும்.
*
6. எளிதில் ஜீரணமாகாத பண்டங்களை உட்கொள்ளக் கூடாது.
*
7. துரித உணவுகளைத் தவிர்த்தல் நன்மை பயக்கும்.
*
8. எண்ணெயில் வறுத்த பலகாரங்கள், சாக்லெட் மற்றும் குளிர்பானங்களை குறைவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
*
9. அதிக அளவில் குடிநீரைப் பருகுதல் சாலச் சிறந்தது.
*
10.நெஞ்செரிச்சல் வந்துவிட்டால், உடனடியாக வாழைப்பழத்தை உட்கொண்டால் ஓரளவு நிவாரணம் கிடைக்கும்.
***
by- எஸ்.சரவணன்.
***

இது போல் செய்து நெஞ்செரிச்சல் ஏற்ப்படமால் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள். நன்றி.


***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

ஃபாஸ்ட் ஃபுட் & ஜங்க் ஃபுட்‏

இந்த ஃபாஸ்டான உலகத்துல மக்கள் நாடுவது எல்லாம் குயிக் அண்டு ரெடிமேட் அயிட்டங்கள் தான்.


அது வீடோ,உடையோ இல்லை உணவோ எல்லாம் கை சொடுக்கும் நேரத்துல கிடைக்கனும்.அதுல முதல் இரண்டும் பரவாயில்லை.ஆனால் உணவு விஷயத்தில் அப்படி இருப்பது உடல் நலத்திற்கு கேடு என்பதைக் கூட உணர மறந்து ஓடி ஓடி உழைக்கின்றனர்.*


ஃபாஸ்ட் ஃபுட் என்பது துரிதமாக செய்யப்படும் உணவு வகைகள்.இட்லி, தோசை, பிரட் சாண்ட்விச் , பீஸா இதில் அடக்கம்.*ஜங்க் ஃபுட் என்பவை உடம்புக்குத் தேவையில்லாத,எந்தப் பயனும் தராத வயிற்றை மட்டுமே நிரப்பும் உணவுகள்.


*


ஸ்நேக்ஸ்,ஜெல்லி,கேண்டி,சாக்லெட்ஸ்,டெசெர்ட்ஸ்,கார்பனேட்டட் குளிர் பானங்கள்,டிண்டு ஃபுட்,பேக்டு ஃபுட் முதலியவை இதில் அடங்கும்.*


பல அவசர நேரங்களில் கொஞ்சம் ஸ்நேக்ஸும் ஐஸ்கீரிமோ அல்லது ஸ்நேக்ஸ் வித் காபி அல்லது கோக் என்று துரிதமாக பிரேக்ஃபாஸ்டை/லன்ச்சை முடித்துக் கொண்டு வேலை வேலையென்று ஓடுவோர் பெருகி விட்டனர்.*


இப்பெல்லாம் புளியோதரை,தயிர்சாதம்,புலாவ் ,குருமா அயிட்டங்கள் எல்லாம் ரெடிமேட் ஆக 'டெட்ரா பேக்கில்' வைத்து கிடைக்கிறது.அப்படியே சூடு பண்ணி சாப்பிட வேண்டியதுதான்.*


ஜங்க் என்றாலே தேவையற்ற குப்பை மாதிரிதானே.


*வெறும் கலோரிகளும்,உப்பும் சுகரும்,கொழுப்பும் நிறைந்த இந்த உணவில் எந்த வித நியூட்ரிஷனல் [சத்தான] பொருளும் இல்லை.


*


மாறாக அதிகக் கொழுப்பும்,உப்பும்,சர்க்கரையும் நோய்களுக்கு கட்டியம் கூறி வரவேற்கும்.இதில் சேர்க்கப்படும் இரசாயன பிரெசெர்வேடிவ்கள் ஃபுட் கிரேடு என்றாலும் தொடர்ந்து சேர்ப்பது உடலுக்கு நல்லதல்ல.


*


மிக முக்கியமாக 'கலரிங் ஏஜண்ட்ஸ்' கேன்ஸர் போன்றவற்றை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.இப்பெல்லாம் நூடுல்ஸ் சாப்பிடுவது ரொம்ப காமன்.


*


ஆனால் சாப்பிடத் பிறகு கொஞ்ச நேரம் எனர்ஜெட்டிக்காக தோன்றினாலும் உடலுக்குத் தேவைப்படும் எந்த சத்தும் இல்லை.அதிக கொழுப்பு 'ஒபிஸ்ட்டி' [குண்டுத்தன்மை] ஏற்படுத்தும்.


*சாப்பிடவே கூடாது என்பதல்ல.எப்போதாவது சாப்பிடலாம்.ஆனால் அதுவே சாப்பாடாக இருக்கக் கூடாது.


*சாப்பாட்டுக்கு முக்கியத்துவமா என்பதை விட என்ன சாப்பிடுகிறோம் என்பது மிக முக்கியம்.*


சில வருடங்களுக்கு முன்பு டாக்டர்.திருமதி.கமலி ஸ்ரீபால் அவர்களின் டி.வி.பேட்டி ஒன்றில் கேட்டது.
***
நம் அன்றாட சாப்பாட்டில் மூன்று நிறங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க‌ வேண்டும்:

*

பச்சை: பச்சைக் காய்கறிகள்,கீரை வகைகள்.

*

மஞ்சள்: எலுமிச்சை,ஆரஞ்சு.சாத்துக்குடி , வாழை,பப்பாயா போன்ற பழங்கள்.

*

சிகப்பு:கேரட்,பீரூட்,தக்காளி ஆப்பிள் போன்றவை.


*

தினசரி உணவில் இந்த மூன்று நிறங்களும் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே ஆரோக்யமான உடல்நலம் இருக்குமாம்.

*

நல்ல ஆரோக்யமான உணவு ஆரோக்யமான உடல் நலத்திற்கும் அதன் மூலம் ஆரோக்யமான மனநலத்திற்கும் தேவை என்பதை உணர்ந்து கடை பிடித்தே ஆக வேண்டும்.

*


அந்தக் காலம் போல கைக்குத்தல் அரிசியும்,பக்குவமான சரிவிகித சாப்பாடும் இனி எங்கே கிடைக்கப் போகிறது.

*


எல்லாவற்றிற்கும் மெஷினை நம்பி நம் வாழ்க்கை மெஷின் மாதிரி ஆகிவிட்டாலும் அதையும் கண்டிஷனாக வைத்திருக்கனும் தானே.

*


கண்டதையும் தின்று வயிறு நிறைவதை விட கொஞ்சமானாலும் சத்துள்ளதாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம்.
***

http://kouthami.blogspot.com/2007/07/blog-post.html
நன்றி கண்மணி பக்கம்.

****

ஃபாஸ்ட் ஃபுட் அண்டு ஜங்க் ஃபுட் இவைகளை எப்போதாவது எடுத்துக் கொண்டு உடல் நலமுடன் இருங்கள். நன்றி.***


படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.

*

பூசணியும் அத‌ன் ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள்


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது.கல்யாணப் பூசணி:

*

1. கல்யாணப் பூசணி (Cucurbita moschata) ஒரு மருத்துவ மூலிகைப் பயன்பாடுள்ள ஒரு செடியாகும்.

*

2. இப்பூசணிக் காய்கள் இனிப்புச் சுவையுடையவை. மஞ்சள் தோலும் செம்மஞ்சள் நிறச் சதையுமுடையவை.

*

3. பழுக்கும்போது கரும் செம்மஞ்சள் நிறமாகும். இது உடல் பருக்க, உடல் சூட்டைக் குறைக்க உதவும்.

***

பூசணிக்காய்:
*
Spaghetti Squash (இசுப்பெகடி) பூசணி


1. பூசணி, சமையலில் பயன்படும் பூசணிக்காய்களைத் தரும் தாவரமாகும். பூசணிக்காய் தாவரவியலின்படி, பழம் என்றாலும், பொதுவாக காய்கறியாகக் கருதப்படுகிறது.


*


2. தமிழக இறை வழிபாடுகளில், பூசணியைப் பயன் படுத்துவர். குறிப்பாக அமாவாசை அன்று சமைத்து உண்பர். சாம்பல் பூசணி வகையை, இறைவழிபாட்டிற்கு பின், சாலைகளில் போட்டு உடைப்பர்.


*


3. சில நாடுகளில், பூசணிக் கலைப் பொருளாகப் பயன் படுத்துகின்றனர்.(எ.கா)ஆலோவின்.


*


4. பூசணிக்காய் கறி சமைக்கவும், ரசம்(soup) தயாரிப்பிலும் பயன்படுகிறது. பூசணி விதைகளும், சுட்டு உண்ணப்படுவதுண்டு.


*


5. பூசணிக்காய்கள் பொதுவாக செம்மஞ்சள், மஞ்சள் நிறமானவை; கரும்பச்சை, வெளிர்பச்சை, வெள்ளை போன்ற நிறங்களிலும் காணப்படுவதுண்டு.


***


ம‌ருத்துவ‌ குண‌ங்க‌ள்:


*


1. காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பு சம்மந்தமான‌ நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.


*


2. உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.


*


3. புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.


*4. மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.*


5. ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.


***


பூசணியை வைத்து மருத்துவம்:


*


1. பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும்.


*2. நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.*


3. வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.*


4. பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும்.*5. பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.


*


6. பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.*


7. பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.*8. தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்தவாந்தியை நிறுத்தும்.***

வெண்பூசணி லேகியம் செய்யும் முறை:


*

1. நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும்.


*

2. வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக்கொள்ள வேண்டும்.

*

3. பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும். திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம்.

*

4. இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது.

*

5. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது. பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக்கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.


*


6. சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

*


7. சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

*

8. பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்கமுடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

*

9. இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

*

10. இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும்.

*

11. வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும்.

*

12. உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்.


***

நன்றி - குமுதம் ஹெல்த்து.


***

பூசணிக்காயில் இவ்வளவு சத்துக்களும், மருத்துவ குணங்களும் இருக்கு. அப்ப இனி அங்காடியில் பார்த்தால் வாங்கிடுவிங்க தான.***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை போடவும். மிக்க நன்றி.


*

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "