...

"வாழ்க வளமுடன்"

28 மார்ச், 2012

யோகாவும் அதீத உடல் பருமனும்

யோகா

உணவும் கலோரிகளும்:
 
நாம் சாப்பிடும் உணவை கலோரிகள் அளவை உபயோகித்து, கட்டுப்படுத்தலாம். அதிக கலோரிகள் உடல் எடையை கூட்டும். எடை அதிகமானால் இதய பாதிப்பிலிருந்து எல்லா நோய்களும் வந்து தாக்கும்.
 
 
இதை இன்றும் பல ‘குண்டான’ மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. முதலில் ஙிஷீபீஹ் விணீss மிஸீபீமீஜ் (ஙிவிமி), என்ற முறையின் மூலம் நீங்கள் பருமனா இல்லை ‘ஒவர்’ பருமனா என்று தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
ஙிவிமி = எடை (கிலோகிராம்)
உங்கள் உயரம் ஜ் உயரம் (மீட்டரில்)
 
 
உதாரணம்:
உயரம்: 1.70 செ.மீ. உங்கள் எடை: 80 கிலோ
உங்கள் BMI = 80
—— = 27
1.70×1.70
 
 
BMI அட்டவணை:-
 
 
17 – 27 நார்மல் எடை,
 
27 – 32 – அதிக பருமன்
 
32- க்கு மேல் -மிக அதிக பருமன்
 
 
ஙிவிமி மட்டும் போதாது. இடுப்பு சுற்றளவு பெண்களுக்கு 80 செ.மீ. ( 32″)
 
 
ஆண்களுக்கு 94 செ.மீ. ( 37″) மேல் இருக்கக் கூடாது.
 
 
உங்கள் உயரத்திற்கு ஏற்ற எடையை கண்டுபிடிப்பது?
 
இதற்கு ஃபார்மூலா – (உயரம் சென்டி மீட்டர் – 100) ஜ் 0.9. வரும் விடை தான் நீங்கள் இருக்க வேண்டிய எடை. உங்கள் எடை இதை விட அதிகமாக இருந்தால், அதிலிருந்து நீங்கள் இருக்க வேண்டிய எடையை கழித்தால், உங்களின் கூடுதல் எடை தெரியும். சர்க்கரை வியாதிற்கும், உங்கள் எடைக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால், நீங்கள் இருக்க வேண்டிய எடையை துல்லியமாக தெரிந்து கொள்ளுங்கள்
 
 
ஆரோக்கிய எடை
 
 
ஆண்கள் எடை பெண்கள் எடை
 
 
உயரம் (செ.மீ) கி.கிராம் உயரம் (செ.மீ) கி.கிராம்
157 56-60 152 51-54
160 57-61 155 52-55
162 59-63 157 53-57
165 61-65 160 54-58
168 62-67 162 56-60
170 64-68 165 58-61
173 66-71 168 59-63
175 68-73 170 61-65
178 69-74 173 62-67
180 71-76 175 64-68
183 73-78 178 66-70
185 75-81 180 67-72
188 78-83 183 68-74
 
 
செய்ய வேண்டிய ஆசனங்கள்
 
 
சூரிய நமஸ்காரம் ,
சிரசாசனம்,
ஹலாசனம்,
பத்தகோனாசனம்,
கூர்மாசனம்,
மத்ஸ்யேந்திராசனம்,
பச்சிமோத்தாசனம்,
சர்வாங்காசனம்,
புஜங்காசனம்,
தனுராசனம்,
மயூராசனம்,
சக்கராசனம்,
சவாசனம்.
 
 
பிராணாயாமா – அனுலோமா – விலோமா, உஜ்ஜையி, நாடிசுத்தம்
 
 
சில டிப்ஸ்
 
• தினமும் காலையில் வெறும் வயிற்றில் தேன் கலந்த எலுமிச்சை பழம் சாறு குடிப்பது எடை குறைய உதவுகிறது.
 
 
• இதே போல நெல்லிக்காய் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
 
 
• வெங்காய சாறு குடிப்பதும் கொலஸ்ட்ராலை குறைப்பது நல்லது.



***
thanks  Ayurveda
***







"வாழ்க வளமுடன்"

பெண்களின் இளமை உணவுகள்



பார்லி, அரிசி, முளைவிட்ட கோதுமை, கோதுமை பிரட், கைக்குத்தல் அரிசி, டர்னிப் கீரை, வெள்ளைப்பூண்டு, ஆரஞ்சு சாறு, இந்த ஏழு உணவுகளும் பெண்களின் மிகச்சிறந்த சூப்பர் இளமை காக்கும் உணவுகளாகும்.


ஆண்களின் அதிக உன்னத உணவுகளாகவும் இவை உள்ளன. ஆனால் இரு பாலர்களும் இவற்றில் இரண்டைக் கூட தினமும் உணவில் சேர்ப்பதில்லை என்பதே உண்மை.


மேற்கண்ட ஏழு உணவுகளிலும் செலினியம் என்ற அரிய தாது உப்பு போதுமான அளவு இருக்கிறது. வைட்டமின் ‘இ’ யுடன் சேர்ந்து ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டாக (கிஸீtவீஷீஜ்வீபீணீஸீt) செலினியம் உப்பும் செயல்படுகிறது. இந்த வைட்டமின்னும் தாது உப்பும் சேர்ந்து உயிரணுக்களில் (சிமீறீறீs) உள்ள மெல்லிய தோல்களையும், திசுக்களையும் நோய் எதுவும் தாக்காமல் பாதுகாக்கின்றன.


அத்துடன் முதுமைப்படுதலை, உடலில் முதுமைப் பண்பு வளர்ச்சியை தாமதம்படுத்துகிறது. திசுக்களும் கடினமாகி கெட்டியாகிவிடாமலும் பாதுகாக்கின்றன. இத்துடன் இதே செலினியம் உப்பு திசுக்கள் இளமையாகவும் வலுவுடையதாகவும் நெகிழும் தன்மையுடன் இருக்குமாறு பராமரிக்கவும் செய்கிறது.


இந்த செலினியம் உப்பு உடலில் குறைவாக இருந்தால் உடலில் அடிக்கடி வீக்கம், புற்றுநோய், இதயநோய் அபாயம் உச்ச அளவில் இருக்கும் மேலும் ஃப்ரீரேடிக்கல் திரவம் அதிகம் வெளியாகி உயிரணுக்களை சேதப்படுத்திவிடும். இதனால் வயதுக்கு மீறிய முதுமைத் தோற்றமும் கண்ணில் காட்ராக்ட் அபாயமும் ஏற்பட்டு விடும்.


பெண்களுக்கு வரும் எல்லா விதமான புற்று நோய்களையும் செலினியம் குணப்படுத்தி தடுத்தும் விடுகிறது. புற்றுநோய் வளரத் தூண்டுதல் செய்யும் பொருட்களையும் மட்டுப்படுத்தி விடுகிறது. இதயத்தின் தசை நார்களை இனச்சிதைவு ஏற்படாமல் பாதுகாக்கிறது. மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளை எரிச்சல் படாமல் சரி செய்து விடும் அரிய உப்பு, செலினியம், பொடுகு வராமல் தடுக்கிறது. அப்படி பொடுகு இருந்தால் மேற்கண்ட ஏழு உணவுகளும் குணப்படுத்தி விடுகின்றன. உடலில் உள்ள உலோக நச்சுக் கழிவுகள் வெளியேறவும் இந்த செலினியம் உப்பே உதவுகிறது.
இரத்தத்தில் செலினியம் உப்பு குறைவாக இருந்தால் புற்றுநோயும் இதய நோயும் எளிதாக எட்டிப்பிடிக்கும்.


எனவே, பெண்கள் தங்களின் சிறந்த நண்பர்களாக வைட்டமின் ‘இ’ யும், செலினியம் உப்பும் உள்ள உணவு வகைகளைத் தேர்வு செய்து சேர்த்து வந்தால் மருத்துவச் செலவின்றி ஆரோக்கியமாக இளமைத் துடிப்புடன் வாழலாம்.


பண்டைய காலத்தில் வண்ண உணவுகள் மூலம் எளிதில் நோய்களை குணப்படுத்திக் கொண்டார்கள். காலையில் சிவப்பு நிறமுள்ள பழங்கள், காய்கறிகளை சாப்பிட்டார்கள். காரணம் வளர்சிதை மாற்றத்தில் சிவப்பு நிற உணவுகள் அதிகம் உதவுகின்றன. வளர்சிதை மாற்றம் வேகமாக நடக்க உதவுகிறது. சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு நிறமுள்ள பழங்கள்!


அமெரிக்காவில் 1992 ஆம் ஆண்டு முதல் சத்துணவு நிபுணர் டாக்டர் கேப்ரியல் கஸின்ஸ் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வானவில் உணவு திட்டத்தில் எல்லாவிதமான நிறங்களிலும் உள்ள பழங்களும் காய்கறிகளும் உண்டு. இட்லி, பால், தயிர், வெள்ளை நிறம் என்பதால் இவற்றை இரவில் சேர்த்துக் கொள்ளலாம்.


உடல் எடையைக் குறைக்கவும், ஆரோக்கியமாகவும், இளமையாகவும் சக்தியுடன் வாழவும் இந்த உணவுத் திட்டம் உதவும்.

இதன் மூலம் 1000 முதல் 1200 கலோரி உணவையே நாம் சாப்பிடுவதால் இளமைத் துடிப்புடன் வாழலாம்.


காலையில் சாப்பிடப்படும் ஆரஞ்சு, மஞ்சள் நிறமுள்ள பழங்கள், முன் தினம் இரவில் உண்ட உணவு செரிமானம் ஆகாமல் இருந்தால் இந்தக் காலைப் பலகாரம் அதை நீக்கும். மலச்சிக்கல் இருந்தால் தக்காளிச் சாறு (இது சிகப்பு நிறம்) அருந்தவும். குடலை அபாரமாகச் சுத்தப்படுத்திவிடும் சிவப்பான பழங்கள், காய்கறிகள், இதற்கு சிவப்பு உணவு என்று பெயர்.

*

காலை உணவு சிவப்பு

காலையில் ஒரு கப் ஆரஞ்சு அல்லது தக்காளிச்சாறு. இத்துடன் மூன்று ரொட்டித் துண்டுகள் ஒரு கப் தயிர். (அல்லது) வாழைப்பழம், ஆரஞ்சு, ஆப்பிள், பீச், பிளம்ஸ், அன்னாசித் துண்டுகள் இவற்றில் ஏதேனும் ஒன்று, ஒன்றிரண்டு பழங்கள் சாப்பிடலாம். அன்னாசிப் பழம் என்றால் ஒரு கிளாஸ் சாறு, இத்துடன் வறுத்த ரொட்டித் துண்டு ஒன்று.


*


மதிய உணவு பச்சை


மதியம பச்சை உணவு! பச்சை நிறமுள்ள கீரைகள், காய்கறிகள், பச்சை நிறத் திராட்சை முதலியவைகளில் பொட்டாசியம், கால்சியம், மக்னீசியம் போன்ற மினரல்கள் உள்ளன. இதயத்தையும் எலும்புகளையும் இந்த தாது உப்புக்கள் பலப்படுத்துகின்றன. இதயம் சிறப்பாக இயங்கவும் தூண்டிக் கொண்டே இருக்கின்றன.


எனவே மதிய உணவில் ஒரு சப்பாத்தியுடன் லெட்டூஸ், வெங்காயம், மிளகாய், சீஸ், வெள்ளரிக்காய், முதலியவற்றை காய்கறி சாலட்டாக ஒரு கிண்ணம் சாப்பிடவும். இத்துடன் ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயில் சாப்பிடவும். 50 கிராம் ஏதாவது ஒரு கீரையை அவியலாகச் சாப்பிடவும் அல்லது காய்கறி சூப்புடன் ஒரு ஸ்லைஸ் ரொட்டித் துண்டு + பச்சை நிற திராட்சை.


காய்கறி சூப்பில் லெட்டூஸ், முட்டைக்கோஸ், பசலைக்கீரை, பச்சை ஆப்பிள் முதலியன சேர்ந்திருக்க வேண்டும். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் தனியாக சாப்பிடவும்.


*


இரவு நீல உணவு


நீலம் (மிஸீபீவீரீஷீ) கருஞ்சிவப்பு (றிuக்ஷீஜீறீமீ) ஆகிய நிறங்களில் உள்ள பழங்கள் காய்கறிகளில் உள்ள தாவரச் சத்துக்கள் உணர்ச்சிகளை மெல்ல அமைதிப்படுத்தி தூங்க வைக்கும். அன்றைய தினம் எப்படியிருந்தாலும் பின்பற்றத் தக்க குறிக்கோளிலிருந்து விலகி விடாமல் தடுத்து தன்னம்பிக்கையுடன் தூங்க வைக்கும்.


எனவே, இரவு உணவில் நீலம், ஊதா, தங்க நிறம், வெள்ளை ஆகியவற்றில் உள்ள பழங்கள், காய்கறிகளைச் சேருங்கள்.


ஒரு கிண்ணம் சாதம், ஒரு கிண்ணம் தயிர், பீட்ரூட், கத்தரிக்காய் லேசாக அவிய வைத்து ஒரு கிண்ணம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி என்று சாப்பிடலாம். (அல்லது) பீட்ரூட் சாறு ஒரு கிளாஸ், ஒரு கிண்ணம் தயிர் சாதம், ஒரு ஸ்லைஸ் ரொட்டி, கத்தரிக்காய் அவியல் அரை கிண்ணம் என்று சாப்பிடலாம்.
மாதத்திற்கு ஐந்து நாட்கள் மட்டும் இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றினால் 5 பவுண்டு வீதம் குறைந்து அழகாக மாறிவிடுவீர்கள்.


முதல் ஒரு மாதத்திலேயே இளமையான தோற்றம் கிடைக்கும். அதிகம் உண்ண விரும்புவது, மருந்து மாத்திரைகள் குறிப்பிட்ட நோய்களுக்காக சாப்பிடுவதும் குறைந்தும் போய் விடும். இதனால் சுறுசுறுப்பையும் சக்தியுள்ளதையும் உணர்ந்து உற்சாகமாக வாழ்வீர்கள்.


எனவே, குண்டான ஆண், பெண்கள் இந்த உணவு முறையை இன்றே தொடங்குங்கள், ஒரே மாதத்தில் கண்டிப்பாக பத்து கிலோ எடை குறைவது உறுதி. இதனால் ஆரோக்கியமும் உறுதிப்படுத்தப்படுகிறது.


***
thanks Ayurveda
***


"வாழ்க வளமுடன்"

விஷக்கடிக்கு மருந்தாகும் துளசி



வீட்டின் முன்புறம் அல்லது தூய்மையான எந்த இடத்திலும் துளசிச் செடியை வளர்ப்பது புண்ணியச் செயல். துளசி இலையின் நுனியில் பிரம்மாவும், அடிப்பாகத்தில் சிவனும், மத்தியில் விஷ்ணுவும், இருக்கின்றனர்.

12 ஆதித்யர்கள், 11 ருத்ரர்கள், 8 லசுக்கள், அசுவினித் தேவர் இருவர் ஆகியோர் துளசி இலையில் வாசம் செய்வதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. துளசி இலை, மருத்துவ குணங்கள் பொருந்தியதாகும். விஷக்கடிக்கு துளசி அருமருந்து.

துளசி செடி இருக்கும் இடத்தில் விஷ ஜந்துக்கள் அண்டாது. துளசி தீர்த்தம் கங்கை நீருக்குச் சமம். இவ்வளவு புண்ணியம் வாய்ந்த துளசிச் செடி ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டியது அவசியம்.



***
thanks tbs
****



"வாழ்க வளமுடன்"
      

27 மார்ச், 2012

கூந்தல் உதிர்வதை தடுக்க…..



சராசரியாக ஒவ்வொருவரின் தலையிலும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான முடிகள் காணப்படும். முடி உதிர்வது என்பது பெண்கள், ஆண்கள் என இருபாலருக்கும் உள்ள பொதுவான பிரச்னை.


இந்த முடி உதிரும் பிரச்னை ஏற்படும் போது, நாம் அனைவருமே மருந்து, மாத்திரைகள் எடுத்துக் கொள்வதில் தான் அதிக அக்கறை காட்டுகிறோம். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டும் கூந்தல் உதிர்வதைத் தடுக்க முடியும்.


இதோ சில டிப்ஸ்



வெந்தயம்:

கூந்தல் உதிரும் பிரச்னை உடைய பெண்கள், சிறிதளவு வெந்தயத்தை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம். வாரத்திற்கு இரு முறை இவ்வாறு செய்ய, கூந்தல் உதிர்வது மட்டுப்படும்.



எள்ளுச்செடி:


எள்ளுச் செடியின் இலைகள் சிலவற்றை தண்ணீரில் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வைத்து, பின் ஆறவைக்கவும். இந்த தண்ணீரை தலையில் மசாஜ் செய்வதற்கும், தலையில் தேய்த்து குளிப்பதற்கும்

பெரும்பாலான பெண்களுக்கு முடி உதிருதல் என்பது ஒரு பெரும் பிரச்னையாக உள்ளது.


 ஊட்டச்சத்து குறைவு, பலவித ஷாம்புக்கள் பயன்படுத்துதல், கூந்தலைப் பின்னாமல் ப்ரீ ஹேர் விடுவதால் உண்டாகும் சிக்கல், அதிக உஷ்ணம் போன்ற பல்வேறு காரணங் களால் கூந்தல் அதிகமாக உதிரும் வாய்ப்பு உள்ளது.


என்னன்னே தெரியவில்லை அதிகமாக முடி கொட்டுகிறது என அங்கலாய்த்துக் கொள்ளும் பெண்களா நீங்கள்.....


 இதோ சில டிப்ஸ்…



* தலையில் உண்டாகும் அதிக சூடு காரணமாகவும் சிலருக்கு கூந்தல் உதிரும். அவ்வாறானவர்கள் வாரத்தில் ஒரு நாள் மருதாணி இலையை அரைத்து தலையில் தேய்த்து குளிக்கலாம் அல்லது மருதாணிக்கு பதிலாக, வெந்தயக்கீரை அல்லது வெந்தயத்தை ஊற வைத்து அரைத்தும் தலையில் தேய்த்து குளிக்கலாம். வெந்தயத்துடன் கடலைப்பருப்பை சேர்த்து அரைத்து குளிப்பதும் நல்ல பலன் தரும்.



* வாரத்திற்கு இரண்டு முறை எண்ணெய் தேய்த்து குளிப்பதால், உடல் உஷ்ணம் மற்றும் தலையில் அழுக்கு சேர்வது ஆகியவை கட்டுப்படும். இதனால், கூந்தல் உதிருவது குறையும்.



* தலைக்கு குளித்த பின் ஈரம் காயும் முன்பே சீப்பால் சீவுவதாலும் அதிகளவில் கூந்தல் உதிரும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தவிர்க்க வேண்டும்.


* செம்பருத்தி பூ இதழ்களை வெயிலில் நன்கு காயவைத்து, அவற்றை பொடி செய்து தேங்காய் எண்ணெயில் சேர்த்து, முடியில் தடவினால் முடி கொட்டுவது குறையும்.


* ப்ரீ ஹேர் விட்டு சென்றால், சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, வாகனங்களில் செல்லும் போதோ அல்லது நெடுந்தூரம் பயணம் செய்யும் போதோ, ப்ரீ ஹேர் விடாமல் தலையை பின்னி செல்லலாம்.


* தலையில் அதிகமாக சிக்கல் சேர்ந்து விட்டால், பெரிய பற்கள் உள்ள சீப்பை பயன்படுத்தி சிக்கல் எடுக்க வேண்டும். சிறிய பற்களை பயன்படுத்தினால், முடி அதிகளவில் உதிரும்.


* கறிவேப்பிலையை நைசாக அரைத்து, அதை வெயி லில் காயவைத்து, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.


* ஊட்டச்சத்து குறைவு காரணமாகவும் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படலாம். எனவே பழங்கள், காய்கறிகள், கீரைகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை அதிகளவில் உணவில் சேர்க்க வேண்டும்.


* கசகசாவைப் பாலில் ஊறவைத்து அரைத்து பாசிப்பருப்பு மாவைக் கலந்து தலைக்கு தேய்த்து குளித்தால், முடி உதிருதல் நிற்கும்.


* முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து தலையில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து சீயக்காய் போட்டு குளித்தால், கூந்தல் உதிர்வது குறையும்.



***
thanks Mohamed
***




"வாழ்க வளமுடன்"
      

பட்டுச் சேலை பராமரிப்பு!



1. விலை அதிகம் கொடுத்து வாங்கும் பட்டுச் சேலையை தரமாகப் பராமரிக்க வேண்டும். விசேங்களுக்கு சென்று வந்தவுடன் பட்டு சேலையை களைந்து உடனே மடித்து வைக்ககூடாது.


2. நிழலில் காற்றாட 2, 3 மணி நேரம் உலர விட வேண்டும். அல்லது கையினால் அழுத்தித் தேய்த்து மடித்து வைக்கவும்.


3. எக்காரணம் கொண்டும் பட்டுச்சேலையை சூரிய ஒளியில் வைக்கக்கூடாது, சோப்போ அல்லது சோப் பவுடரோ உபயோகித்து துவைக்கக் கூடாது. வெறும் தண்ணீர் விட்டு அலசினாலே போதுமானது.


4. ஏதாவது கறை பட்டுவிட்டால் உடனே தண்ணீர் விட்டு அலச வேண்டும். எண்ணெய் கறையாக இருந்தால் அந்த இடத்தில் மட்டும் விபூதியை தடவி 5,10 நிமிடங்கள் வைத்திருந்து பின்பு தண்ணீர் விட்டு அலச வேண்டு.


5. பட்டுப்புடவைகளை வருடக்கணக்கில் தண்ணீரில் நனைக்காமல் வைக்கக்கூடாது. 3 மாதத்திற்கு ஒரு முறையாவது தண்ணீரில் அலசி நிழலில் உலர விட்டு அயர்ன் செய்து வைக்க வேண்டும்.



6. அயர்ன் செய்யும் போது ஜரிகையைத் திருப்பி அதன் மேல் மெல்லிய துணி விரித்து அயர்ன் செய்ய வேண்டும். நேரடியாக அயர்ன் செய்ய கூடாது.



7. பட்டுச் சேலையை கடையிலிருந்து வாங்கி வந்தபடி அட்டை பையில் வைக்காமல் துணி பையில் வைக்கலாம்.



***
thanks Mohamed
***



"வாழ்க வளமுடன்"
      

எக்ஸாம் டிப்ஸ் !


வருடம் முழுதும் நன்றாகப் படித்தால் மட்டும் போதாது. கடைசி நேரத்தில் பதறிவிட்டால் மொத்த உழைப்பும் வீண். வில்லிலிருந்து கிளம்பும் அம்பாக மனமும் உடலும் இருப்பது தேர்வுக்கு அவசியம்.




அதற்க நிபுணர்கள் சொல்லும் ஆலேசானைகள் என்ன?


“மாணவர்களுக்கு அவங்களோட பெற்றோர்தான் பதற்றத்தை ஏற்படுத்தறாங்க. சில பசங்க எவ்வளவு திட்டினாலும் அலட்டிக்க மாட்டாங்க.

சில பசங்க லேசா கோபப்பட்டாலே இடிஞ்சு போய் உட்கார்ந்திடுவாங்க. பசங்களோட மனநிலையைப் புரிஞ்சுக்கிட்டு பெற்றோர் செயல்படணும்.

முதலில் தங்கள் குழந்தைகள் படிப்பில் கெட்டியா, சுமாரா, வெகு சுமாராங்கிறது பெற்றோருக்குத் தெரிஞ்சிருக்கணும். அதற்கேற்பத்தான் தேர்வில் ரிசல்ட்டை எதிர்பார்க்க முடியும். அதிக மார்க்க எடுக்கலைனா அம்மா அப்பா திட்டுவாங்கங்கிற பயம் நல்லா படிக்குற பசங்களைக் கூட திணற வச்சுடும்.


 பெற்றோர் இவ்வளவு நாள் பசங்களை பயமுறுத்தியிருந்தாலும் தேர்வு நேரத்திலாவது அவங்ககிட்ட இணக்கமா பேசணும். உன்னால் முடிஞ்ச அளவுக்கு முயற்சி பண்ணு. தேர்வில் சுலபமான வினாக்கள்தான் வரும்.


நீ நல்லா எழுதுவேங்கிற பெற்றோரின் உற்சாக வார்த்தைகளே பசங்களுக்கு தெம்பைக் கொடுக்கும். கடமையைச் செய், பலனை எதிர்பாராதேங்கிற கீதை உபதேசம் தேர்வுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும். படிப்பில் தாங்கள் எங்கே நிற்கிறோம்ங்கிறதை மாணவர்கள் தெளிவா புரிஞ்சுக்கணும். ஒரு வருஷமா படிக்க முடியாததை ஒரு வாரத்தில் படிச்சுட முடியாது.


ஏற்கெனவே படிச்சதை ரிவைஸ் செஞ்சுட்டு, மீதி நேரத்துலதான் புதுப் பகுதிகளைப் படிக்கணும். தேர்வையொட்டி பசங்ககிட்ட எதிர்பார்க்குற வாழ்க்கை முறையைப் பெற்றோரும் பின்பற்றத் தயாரா இருந்தா ரொம்ப நல்லது. அதுவே பசங்களுக்குத் தொந்தரவா ஆகிடக்கூடாது’ என்கிறார் மனநல ஆலோசகர் டாக்டர் அகஸ்டின்.



படித்த மாணவர்கள் கூட தேர்வு நேரத்தில் முடங்கிவிட இன்னொரு காரணம், உணவுப் பழக்கவழக்கங்களில் நேரும் குளறுபடி. இதைப்பற்றி சென்னையைச் சேர்ந்த டாக்டர் நளினியிடம் கேட்டோம். “புள்ள ராப்பகலா படிச்சு கஷ்டப்படுது.



 நாக்குக்கு ருசியா சமைச்சுக்கொடுப்போம்’னு அம்மாக்கள் களத்துல குதிச்சு டிராக்கை மாத்திடக்கூடாது.


எண்ணெய், காரம், மசாலா அதிகமான உணவுகள் தேர்வு நேரத்துல பசங்களைக் கஷ்டப்படுத்திடும்.


முட்டை, சிக்கன், மட்டன் உணவுகள் அதிகமாக சாப்பிடக்கூடாது.


மீன் உணவுகள் இதயத்துக்கு ஆற்றலைக் கொடுக்கும்.


சுண்டல், முளைகட்டிய தானியங்கள் உள்ளிட்ட உணவுகள் சாப்பிடலாம். பழவகைகளைத் தேர்ந்தெடுத்து சாப்பிடணும்.


மாதுளம்பழம், திராட்சை போன்ற பழங்கள் மூளைக்கு நல்லது.

வயிற்றுப்பிரச்னை உள்ள பசங்க கமலா, ஆரஞ்சு போன்ற பழங்களைத் தவிர்க்கணும்.


புத்திக்கூர்மைக்கு வைட்டிமின் ஏவும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸும் அவசியம்.


கீரைகள், பப்பாளி, முள்ளங்கி, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் இந்த விட்டமின்கள் இருக்கு என்கிறார் நளினி.


களம் காத்திருக்கிறது கலக்குங்க கண்மணிகளா!

***
thanks vayal
***




"வாழ்க வளமுடன்"

மலரும் மருத்துவமும் குங்குமப்பூ…

பூக்கள் வாசனைக்காகவும், பூஜைக்காகவும் மட்டுமே உகந்தது என்று பலர் நினைக்கின்றனர். அது தவறான எண்ணம். இந்தப் பூக்களில் மருத்துவமும் நிறைந்துள்ளது.


இத்தகைய மருத்துவத் தன்மை கொண்ட பூக்களை நுகரும்போது உடலுக்கு நன்மையளிக்கிறது. இதனால்தான் நம் முன்னோர்கள் நறுமணம் மிக்க மலர்களை பூஜைக்கு பயன்படுத்தினர்.


மலர்களைப் பயன்படுத்தி நோய்களை நீக்கும் முறைதான் மலர் மருத்துவம். இந்த மலர் மருத்துவம் தற்போது பிரசித்திப் பெற்றாலும், ஆதி காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த மலர்களில் குங்குமப் பூவும் ஒன்று.


குங்குமப்பூவைப் பற்றி அறியாத பெண்கள் இருக்க மாட்டார்கள். கருவுற்ற தாய்க்கு குங்குமப் பூ கொடுத்து வந்தால் குழந்தை சிவப்பாகப் பிறக்கும் என்று குங்குமப்பூவை பாலில் கலந்து கொடுப்பார்கள். குழந்தை சிகப்பாகப் பிறக்கிறதோ இல்லையோ, ஆனால் ஆரோக்கியமான சுகப்பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்க முடியும் என்பது விஞ்ஞான பூர்வமான உண்மை.


குங்குமப் பூ இணூணிதண் இனத்தைச் சேர்ந்தது. இதன் பூக்களில் உள்ள இதழ்களும் மகரந்தமுமே மருத்துவத் தன்மை கொண்டவை. இதனை நீரிலிட்டால் சிறிது நேரத்தில் நீர் முழுவதும் செம்மஞ்சள் நிறமாக மாறும். இது மேற்காசிய நாடுகளிலும் இந்தியாவில் காஷ்மீர் மாநிலத்திலும் பயிராகிறது.
இதற்கு ஞாழல் பூ, காஸ்மீரகம் என்ற பெயர்களும் உண்டு.
Tamil – Kungumapoo
English – Saffron
Sanskrit – Kumkuma
Malayalam – Kugamapoo
Telugu – Kumkumapoova
Hindi – Kesar


குங்குமப்பூ வைக்கண்டால் கூறுகொண்டை பீனசநோய்
தங்குசெவித் தோடஞ் சலதோடம்-பொங்கு
மதுரதோ டந்தொலையும் மாதர் கருப்ப
உதிரதோ டங்களறும் ஒது
- அகத்தியர் குணவாகடம்


பொருள் – நீர் வேட்கை, மேகநீர், தலைவலி, கண்ணில் விழுகின்ற பூ, கண்ணோய், வாந்தி, மூக்கில் நீர் வடிதல், நீரேற்றம், கருப்பை அழுக்கு போன்றவற்றைப் போக்கும்.




மருத்துவப் பயன்கள்


காய்ந்த குங்குமப்பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து கருவுற்ற மூன்றாம் மாதத்திலிருந்து கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக வளரும். தாய்க்கும் சிசுவிற்கும் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கும். சுகப்பிரசவம் ஆக அதிக வாய்ப்புண்டு.


கர்ப்பிணிகளுக்கு இரத்தத்தில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி அதிகளவு இரும்புச்சத்தை உட்கிரகிக்கச் செய்து உடலுக்கு பலம் கொடுக்கும். சிசுவிற்கு சருமம் சம்பந்தப்பட்ட நோய்கள் அணுகாதவாறு காக்கும்.


ஆண், பெண் இருபாலரும் குங்குமப்பூவை பாலில் கலந்து அருந்தலாம்.


ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். பெண்களுக்கு கருப்பையில் உள்ள தேவையற்ற அழுக்குகளைப் போக்கி கருப்பையை வலுவாக்கும். மாதவிலக்கு சுழற்சியை சீராக்கும்.


கண் பார்வையை தெளிவாக்கும். 40 வயதைத் தாண்டியவர்களுக்கு உண்டாகும் வெள்ளெழுத்தைப் போக்கும். கண்களில் பூ, புரை போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.


தலையில் நீரேற்றம், தலைவலி, மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றைப் போக்கும். நுரையீரல் சளியை நீக்கும்.


அஜீரணத்தைப் போக்கி நன்கு பசி உண்டாக்கும்.

***
நன்றி- ஹெல்த் சாய்ஸ்
***
 
 
"வாழ்க வளமுடன்"

நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது



உங்கள் வீட்டில் குழந்தை இருக்கிறதா? அப்படியானால் கவனமாகப் பேசுங்கள். நீங்கள் கூறும் வார்த்தைகளின் அர்த்தங்களை குழந்தை புரிந்துகொள்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் பெல்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அந்த ஆய்வாளர்கள், ஆறு மாதம் ஆகும் குழந்தைகள் கூட உணவுகள், உடல் பாகங்களுக்கான வார்த்தைகளைப் புரிந்துகொள்கின்றன என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட விஷயங்களுக்கான வார்த்தைகளைப் பேசத் தொடங்குவதற்கு முன்பே குழந்தைகளுக்கு இந்தப் புரிதல் வந்துவிடுகிறது.


குழந்தைக்கு இந்த வார்த்தை புரியுமா என்று யோசிக்காமல் அவர்கள் முன் இயல்பாகப் பேசிவந்தால், பின்னாளில் அவர்களின் மொழித்திறன் சிறப்பாக அமையும் என்பது ஆய்வாளர்கள் கூறும் தகவல்.


பொதுவாக, குழந்தைகள் ஒரு வயதாகும்போதுதான் வார்த்தைகளைக் கிரகித்துக்கொள்ள ஆரம்பிக்கின்றன என்று கருதப்பட்டு வருகிறது. அப்போதும்கூட, குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஒலி மூலங்களைத்தான் புரிந்துகொள்கின்றனவே தவிர, அர்த்தங்களை அல்ல என்றும் எண்ணப்பட்டு வருகிறது.

ஆனால் புதிய ஆய்வுக்குத் தலைமை வகித்த மனோவியல் நிபுணர்கள் எலிகா பெர்கெல்சன் மற்றும் டேனியல் ஸ்விங்லி கூறுகையில், `குழந்தையைக் கவனித்துக்கொள் பவர், `ஆப்பிள் எங்கே இருக்கிறது?’ என்ற கேள்வியைத் திரும்பத் திரும்பக் கேட்கும்போது அதை நோக்கிக் குழந்தையின் பார்வை திரும்புகிறது’ என்கிறார்கள்.


இதுதொடர்பான ஆய்வுக்கு, 6 முதல் 9 மாத வயதுள்ள 33 குழந்தைகள் எடுத்துக்கொள்ளப்பட்டன. அவர்களுக்கு முன்பு கணினித் திரையில் பல்வேறு பொருட்கள் காண்பிக்கப்பட்டன. ஆனால் ஒரு குறிப்பிட்ட பொருளைக் கூறியதும் அதை நோக்கிக் குழந்தைகள் பார்வையைத் திருப்பின.


ஆறு முதல் ஒன்பது மாத வயதுக் குழந்தைகள், மற்ற படங்களை விட, சத்தமாகக் கூறப்பட்ட பொருட்களின் படங்களின் மீதே தங்கள் பார்வையை நிலைத்திருந்தன. இது, குறிப்பிட்ட வார்த்தைகள், குறிப்பிட்ட பொருட்களுடன் தொடர்புடையவை என்று குழந்தைகள் புரிந்துகொண்டிருக்கின்றன என்பதைக் காட்டுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.


“இந்த வயதுக் குழந்தைகளும் இதைப் போல வார்த்தைகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று நிரூபிக்கப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை. `மம்மி’, `டாடி’ போன்ற வார்த்தைகளைக் குழந்தைகள் சீக்கிரமாகவே புரிந்துகொள்கின்றன என்று ஏற்கனவே சில ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் பல்வேறு வகையான வார்த்தைகளையும் குழந்தைகள் புரிந்துகொள்கின்றன என்று எங்கள் ஆய்வின் மூலம்தான் முதன்முதலாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது” என்கிறார் ஆய்வாளர் ஸ்விங்லி.


***
thanks vayal
***


"வாழ்க வளமுடன்"

13 மார்ச், 2012

முதுமையை விரட்டும் ஓட்ஸ்!



உடம்பில் நோய்கள் இருந்தாலும் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்க முடியும் என்கின்றனர் உணவியல் வல்லுநர்கள். ஓட்ஸ் உணவு உட்கொள்வதன் மூலம் நோய்களை கட்டுப்படுத்தி சந்தோசமாக வாழமுடியும் என்று பல்வேறு ஆய்வுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஓட்ஸ் உணவில் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் குணப்படுத்தும் அம்சங்கள் நிறைய உள்ளன என்று கடந்த 200 ஆண்டுகளாக ஜெர்மானியர்களும், கடந்த 100 ஆண்டுகளாக சீனர்களும் கடந்த 32 ஆண்டுகளாக அமெரிக்கர்களும் நி பித்துள்ளனர்.

சர்வ ரோக நிவாரணி

ஓட்ஸ் உணவில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் இ , துத்தநாகம், செலினியம், காப்பர், இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீஸ் போன்றவை காணப்படுகின்றன. இதில் அதிக அளவு புரதமும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளும், கொழுப்பு சத்து, உடல்பருமன் கொண்டவர்களும், உயர் ரத்த அழுத்தம் உடையவர்களும் தினசரி ஒரு கப் ஓட்ஸ் உட்கொள்வதன் மூலம் இந்த நோய்களை கட்டுப்படுத்தலாம் என்று உணவியல் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

தினமும் ஒரு கப் ஓட்ஸ்

தினசரி காலை ஒரு கப் ஓட்ஸ் கஞ்சி பருகுவதன் மூலம் அதில் உள்ள நார்ச்சத்து புற்றுநோய் செல்களை அகற்றுகிறதாம். இதில் உள்ள ரசாயனம் புற்றுநோய் செல்களை எதிர்த்து அவற்றை அழிக்கின்றனவாம். கெட்ட கொழுப்புகளை நீக்குகிறதாம். நீரிழிவு நோயாளிகள் ஓட்ஸ் பருகுவதன் மூலம் அவர்களுக்கு ஜீரணம் மெதுவாக நடைபெற்று ரத்தத்தில் சர்க்கரை உடனே கலப்பது தடுக்கப்பட்டது.

இதயநோய்

இதய நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினசரி ஓட்ஸ் உணவு கொடுத்து வந்ததன் மூலம் இதயத்தில் ரத்த நாளங்களில் படிந்திருந்த கெட்ட கொழுப்புகள் அகன்றன. தமனி இறுக்கம் நீங்கி மூச்சு விடுவதில் இருந்த சிரமம் குறைந்தது. உயர் ரத்த அழுத்தம் தவிர்க்கப்பட்டது. உடலில் உடல் பலவீனம் மறைந்தது. இறந்து போன செல்களுக்கு பதிலாக புதிய செல்கள் உருவானது.

இளமையை தக்கவைக்கும் ஒட்ஸ் சத்துக்கள்

பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும். கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மகிழ்ச்சியான வாழ்க்கை

11, 12 ஆம் நூற்றாண்டுகளில் இங்கிலாந்து மக்கள் ஓட்ஸ் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு கடந்த ஆறு ஆண்டுகளாகத்தான் இவர்கள் சீனர்களைப் பார்த்து ஓட்ஸ் சாப்பிட ஆரம்பித்தார்கள். இன்றும் உலகில் ஓட்ஸ் அதிகம் சாப்பிடுகிறவர்கள் சுவிஸ் மக்கள்தான். இவர்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நல்ல வருமானத்துடன், சேமிப்புடன் வாழ்கின்றனர். அதற்கு ஓட்ஸ் உணவு கொடுக்கும் உற்சாகம்தான் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதிலிருந்து கண்டுபிடித்துள்ளனர். எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது என்று அறிவுத்துகின்றனர் உணவியல் வல்லுநர்கள்.

***
thanks tbs
***




"வாழ்க வளமுடன்"

அழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்!



இயற்கை அழகு கொட்டிக்கிடக்கையில் மேலும் அழகு படுத்துகிறேன் என்று கூறிக்கொண்டு பெண்கள் போட்டுக்கொள்ளும் அழகு சாதனப் பொருட்கள் உடல்நலத்திற்கே வேட்டு வைக்கின்றனவாம். கூந்தலுக்கு உபயோகிக்கும் ஷாம்பு தொடங்கி பாதநகங்களுக்கு போடும் நெயில் பாலீஸ் வரை பெண்கள் உபயோகிக்கும் அழகு சாதனப் பொருட்களின் மூலம் தினசரி 500க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் நம் உடம்பிற்குள் புகுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

ஷாம்பு, ஸ்ப்ரே

இன்றைக்கு ஷாம்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஷாம்பில் நுரை அதிகம் வரவேண்டும் என்பதற்காக 15 ரசாயனங்கள் வரை கலக்கப்படுகின்றனவாம். அதில் சோடியம் சல்பேட் டெட்ராசோடியம் பாரோபிளின் கிளை சால் போன்றவை ஆபத்தானவை என்கினறனர் மருத்துவர்கள். இதனால் கண் எரிச்சல், மற்றும் பார்வை பாதிக்கவும் வாய்ப்புள்ளது என்பது மருத்துவர்களின் எச்சரிக்கை.

தலைக்குப் போடும் ஸ்பிரேயில் 11 ரசாயணங்கள் கலந்து வருகின்றன. இதில் ஆக்டிநோசேட், இசோப்தாலேட் ஆகிய ரசாயணங்கள் மிகவும் ஆபத்தானவை. அலர்ஜி, கண் எரிச்சல், மூக்கு, தொண்டையில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படக்கூடுமாம். மேலும் இந்த ரசாயனங்களின் நமது உடல் செல்களின் வடிவமைப்பு கூட மாறக்கூடிய ஆபத்து இருக்கிறதாம்.

கண் அழகு சாதனங்கள்

கண்களுக்கு எந்த வித அழகு சாதனப் பொருட்களும் உபயோகப்படுத்தாமல் இருப்பதே நன்மை தரும் என்பது மருத்துவர்களின் அறிவுரை. ஏனெனில் ஐஷேடோவில் 26 விதமான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றனவாம். அதில் கலக்கப்படும் பாலிதீன் டெரிப்தாலேட் என்ற ரசாயனம் மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடியதாம். இது புற்று நோய், குழந்தையின்மை, ஹார்மோன் கோளாறுகள், உடலின் உள்பாகங்களில் கடுமையான பாதிப்பு போன்றவைகளை ஏற்படுத்துகின்றனவாம்.

கன்னக் கதுப்பு

கன்னத்தில் அழகை அதிகரிக்க உபயோகிக்கும் ரூஜ் 16 வகை ரசாயனங்களை உள்ளடக்கியுள்ளது. இதில் எதில் பாரபின், மெதில் பாரபின், உள்ளிட்ட ரசாயனங்கள் அதிக ஆபத்தை ஏற்படுத்துமாம். கன்னம் சிவந்து போதல், கன்னத்தில் எரிச்சல், ஹார்மோன் கோளாறுகள் போன்றவை ஏற்படும்.

முக அழகுப் பொருட்கள்

முக அழகிற்குப் போடப்படும் லோஷன்களில் 24 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இதிலுள்ள பாலிமெதில்மெதாக்ரைலேட் மிகவும் ஆபத்தானது. இதனால் அலர்ஜி, நோய் எதிர்ப்பு சக்தியில் மாற்றங்கள், புற்றுநோய்க்கான காரணிகள் ஏற்படக்கூடும்.

லிப்ஸ்டிக்கில் பாலிமென்தால், மெத்தா க்ரைலேட் உள்ளிட்ட 33 ரசாயனங்கள் உள்ளன. இவற்றில் புற்றுநோயை உருவாக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம்.

வாசனை திரவியங்கள்

கோடை காலம் வந்தாலே வாசனை திரவியங்களின் விற்பனை அதிகரிக்கத் தொடங்கிவிடும். இதில் 15 விதமான ரசாயணங்கள் கலக்கப்படுகின்றன. இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. தோல், கண்கள் மற்றும் நுரையீரலில் எரிச்சல் ஏற்படுத்தக்கூடியது தலைவலி, மயக்கம், இயங்கும் தன்மையில் மாற்றங்களை ஏற்படும்.

உடலுக்கு போடும் பாடி லோசன்களில் 32 வகையாக ரசாயனங்கள் உள்ளன. இதன் மூலம் தோல் தடிப்பு, தோல் நிறமாற்றம், எரிச்சல், ஹார்மோன் கோளறு போன்றவை ஏற்படும்.

நகப்பூச்சுகள்

நக அழகுக்காக பயன்படுத்தும் நெயில் பாலிஷ்களில் 31 ரசாயனங்கள் காணப்படுகின்றன. இவை குழந்தையின்மை, குழந்தையை உருவாக்குவதில் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இவற்றை படித்த பின்னரும் அழகு சாதனங்கள் உபயோகிக்கவேண்டும் என்று விருப்பப்படுபவர்கள் ரசாயன கலப்பில்லாத மூலிகை அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்கலாம் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
***
thanks tbs
***


"வாழ்க வளமுடன்"                     

வேகமாக கருத்தரிக்க டிப்ஸ் !

புதிதாய் திருமணமானவர்கள் வேகமாக கருத்தரிக்க புத்தம் புது டிப்ஸ் !

*


திருமணமான தம்பதியர் என்னதான் ஜாலியாக சில வருடங்கள் இருக்கலாம் என்று நினைத்தாலும் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் விடமாட்டார்கள். குழந்தை குட்டியை பெற்றுக்கொடுத்துவிட்டு நீங்கள் ஜாலியாக ஊர் சுற்றுங்கள் என்று அவசரப்படுத்துவார்கள். புதிதாக திருமணமான பெண்கள் எளிதில் கர்ப்பம் தரிக்க சில ஆலேசனைகளை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தான உணவு

புதிதாக திருமணமானவர்கள் சத்தான உணவுகளை உண்ணவேண்டும். ஏனெனில் நிலம் வளமாக இருந்தால்தான் விளைச்சல் நன்றாக இருக்கும். எனவே புதுமண தம்பதியர் அதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். நாளொன்றுக்கு 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். பெண்கள் ஆரஞ்சு, காரட் உள்ளிட்டவைகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும் ஏனெனில் இது செக்ஸ் ஹார்மோனை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும். ஆண்கள் மீன் உணவுகள், வெள்ளைப்பூண்டு ஆகியவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும். இது விந்து வளர்ச்சிக்கு உதவும். புதுமணத் தம்பதியர் தினமும் தாம்பத்ய உறவு கொள்ளவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதன் மூலம் ஆணின் விந்தணு உற்சாகமடையும். இது டி.என்.ஏவை சிதைவடையாமல் பாதுகாக்கிறது.

முறையான மாதவிடாய் காலம்

முறையற்ற மாதவிலக்கு கர்ப்பம் தரித்தலை தாமதப்படுத்தும் எனவே இக்குறைபாடு உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையை பெறவேண்டும். கட்டுப்பான எடையை கடைபிடிக்க வேண்டும். 28 முதல் 32 நாட்களுக்குள் சுழற்சியாக பெண்களுக்கு மாதவிடாய் வருவது ஒழுங்கான மாதவிடாய் பருவமாகும். மாதவிடாய் ஆரம்பிக்கும் முதல் நாளில் இருந்து 14-வது நாள் பெண்ணின் முட்டை வெளியேறும். இந்த முட்டை வெளியேறி 24 மணி நேரத்திற்குள் ஆணின் விந்தணுவை சந்தித்தால் கரு உருவாகும் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மாதவிடாய் ஏற்பட்டு பதினோராவது நாளில் இருந்து உடலுறவில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஈடுபடும் போது கருக்கட்டல் நடைபெறுவதற்கான சந்தர்ப்பம்அதிகமாகும்.

மது, புகை கூடாது

மதுபழக்கத்தை தவிர்க்க வேண்டும். புகைப்பிடித்தலை அறவே ஒதுக்கவேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். பெண்கள் காபி குடிப்பதை தவிர்ப்பது கர்ப்பம் தரித்தலை 50 சதவிகித வாய்ப்பை அதிகரிக்கிறது. தினமும் 40 நிமிட உடற்பயிற்சி அவசியம். இது தம்பதியரின் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைத்து மன அழுத்ததை நீக்குகிறது. உடலில் நோய் தாக்காமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாயாக சிறந்த பருவம்

உலக அளவில் புள்ளி விவரக் கணக்கின்படி ஒரு பெண் தன்னுடைய இருபது வயதிலிருந்து முப்பது வயதிற்குள் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதே சிறந்த காலகட்டமாகக் கருதப்படுகிறது. 20க்கு குறைந்தோ அல்லது முப்பதுக்கு மேற்பட்டோ குழந்தைகளைப் பெற்றுக் கொள்வது தாயின் உடல் ரீதியாகவும், குழந்தையின் வளர்ச்சி ரீதியாகவும், பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். முப்பது முப்பத்தைந்து வயதுக்கு மேல் கர்ப்பம் தரிக்கும் பெண்கள், இளம் வயது கர்ப்பிணிகளை விட பல இன்னல்களுக்கு ஆளாவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.

பெண்களுக்கு வயதாவது என்பது நோயல்ல என்றாலும் வயது ஆக ஆக இடுப்பு எலும்பு நெகிழ்ந்து குழந்தை வெளிவருவதற்கு சுலபமாக வழி ஏற்படுத்தி கொடுக்க இயலாமல் போய்விடும். முதிர்ந்த பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பாதிப்புகளும், மூளை பாதிப்புகளும் இருக்க வாய்ப்பிருப்பதாக மருத்துவக் குறிப்புகள் சொல்கின்றன

டவுன் சிண்ட்ரோம் எனப்படும் மூளை வளர்ச்சி குன்றிய அல்லது உடல் குறைகளுடன் கூடிய குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது. ஆனால் இதற்கான பரிசோதனைகள் முன் கர்ப்ப காலத்திலேயே செய்யப்பட்டு கண்டறிந்து சொல்வதற்கான மருத்துவ முன்னேற்றங்களும் இப்போது அதிகரித்துள்ளன.

நோயற்று இருங்கள்

கர்ப்பம் தரித்தபின்னர் இயற்கையான எந்த உணவுகளையும் விருப்பப்படி சாப்பிடலாம். செயற்கையான இரசாயனங்கள் சேர்க்கப்பட்ட உணவுகளைத் தவிர்த்தல் நல்லது. பழுத்த அன்னாசி சாப்பிடுவதால் கர்ப்பத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை. போலிக் அசிட் எனப்படும் மாத்திரையை நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் விழுங்குவது நல்லது

இறுதியாக மாதவிடாய் ஏற்பட்ட நாளை மறக்காமல் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். வேறு எந்த மாத்திரை எடுக்கும் முன்னும் வைத்திய ஆலோசனை பெற வேண்டும். எந்தவொரு மருத்துவப் பரிசோதனைக்கு முன்னும் ஆலோசனை பெறவேண்டும். நீரழிவு, வலிப்பு ,ஆஸ்த்மா, ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் இருப்பின் கர்ப்பம் தரிப்பதற்கு முன் அவை சிறந்த கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.


***
thanks tbs
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "