...

"வாழ்க வளமுடன்"

25 ஜூன், 2011

ஆரோக்கியமான தாய்பால் கிடைக்கபிரவசத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பல சந்தேகங்கள் ஏற்படலாம் . அவற்றில் முக்கியமானது தாய்ப்பால் சுரப்பு எவ்வளவு இருக்கும்? என்பது. பொதுவாக குழந்தை பெற்றெடுத்த ஒரு ஆரோக்கியமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும்.


இந்த தாய்ப்பாலின் காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது. சத்தான கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த பொருட்கள், நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் தொடர்ந்து எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும்.


அதை தவிர்த்து, சத்து குறைவான உணவு வகைகள் அவளுக்கு கொடுக்கப்பட்டால் அவளது உடல் திறனும் பாதிக்கப்படும், தாய்ப்பால் சுரப்பும் குறைந்து விடும் குழந்தை பிறந்ததும் நாம் அதற்கு கொடுக்கும் முதல் உணவு தாய்ப்பால்தான் அந்த தாய்ப்பாலைக் காட்டிலும் மிகச்சிறந்த உணவு இந்த உலகில் வேறு எதுவும் இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள்.பிறந்த குழந்தை நோய் நொடியின்றி வளரத் தேவையான அனைத்து சத்துக்களும் இந்த தாய்ப்பாலில் உள்ளது. அதனால்தான், எல்லா தாய்மார்களையும் குழந்தைகளுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.


இந்த தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராது என்கிறது ஒரு ஆய்வு.தாய்ப்பால் மூலம், குழந்தைக்கு தேவையான கொழுப்புச்சத்து சரிவிகித அளவில் கிடைப்பதுதான் அதற்கு முக்கிய காரணம் என்கிறார்கள் அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.


மேலும், முறையாக தாய்ப்பால் குடித்து வளராத குழந்தைகளுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள். தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டுவிடும் என்றெல்லாம் கர்ப்பனை செய்துகொள்ளும் சில தாய்மார்கள், அந்த எண்ணத்தில் இருந்து தங்களை இனியாவது மாற்றிக்கொள்வதுதான் நல்லது


***
thanks ns
***

"வாழ்க வளமுடன்"

தாய்பால் இப்படித்தான் தயாராகிறது…!தாய்பாலின் மகத்துவத்தை பற்றிக் கூற வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் அது. மார்பகங்களின் அமைப்பு எப்படி இருக்கும்? தாய்பால் எப்படி தயாராகும் என்பதை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.ஒரு நாளைக்கு ஒன்றரை லிட்டர்

* தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.* குழந்தை பாலை உறிஞ்சும்போது பிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்தி செய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.* ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றன.* பால் சுரபிகள் சுருங்கி, பால் நாளங் களுக்குள் பாலைச் செலுத்துவதை `ஆக்சிடோசின்’ தூண்டுகிறது.* ஆரம்பத்தில் சுரக்கும் பால் அடர்த்தி குறைவானது. குழந்தையின் தாகத்தைத் தணிக்கிறது.* பல நிமிடங்கள் கழித்துச் சுரக்கும் `சீம் பால்’, அடர்த்தியானது. அதிக கொழுப்பு உள்ள அது பசியை போக்குகிறது. ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் ஆண்கள் தங்களின் மார்பகக் காம்புகளுக்கு பின்னே வேலை செய்யாத மார்பகத் திசுக் களைக் கொண்டிருக்கின்றனர். அதாவது, வளர்ச்சி அடையாத பால் நாளங்கள், கொழுப்பு மற்றும் இணைப்புத் திசு. ஆண்களில் 1000 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருக்கிறது. அபாயக் காரணிகளில், பாரம்பரியம், கதிரியக்கதுக்கு உள்ளாகும் வாய்ப்பு போன்றவை அடங்கும். முழுமையான உணவு* குழந்தைக்கு மிகவும் ஜீரணமாகக் கூடிய, கிரகித்துக்கொள்ளக் கூடிய விதத்தில் உள்ள தாய்பால், குழந்தைக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டுள்ளது. குழந்தைக்கு 6 மாதங்கள் வரை கட்டாயமாக பால் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.* மஞ்சள் புரதம் செறிந்த பால், குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு சுரக்கிறது. அது குழந்தையின் உணவுக் குழலைச் சுத்தம் செய்கிறது, எதிர்உயிரிகளைக் கொண்டிருக்கிறது. குழந்தைக்கு இந்த பாலைக் கொடுப்பது அவசியம்.* தாய்பால் கொடுப்பது, கர்ப பை மீண்டும் தனது உண்மையான அளவுக்கு சுருங்க உதவுகிறது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. சிறுவர்களும், சிறுமிகளும்… சிறுவர், சிறுமியர் இருவருக்குமே மார்புக் காம்புக்கு பின் பால் நாளங்கள் இருக்கின்றன. சிறுமிகள் வயதுக்கு வரும்போது `ஈஸ்ட்ரோஜென்’னும் மற்ற ஹார் மோன்களும் பால் நாளங்களை வளரச் செய்கின்றன. கொழுப்பையும், இணைப்புத் திசுக்களையும் அதிகரிக்கச் செய்கின்றன. சிறுவர்களிடம் `டெஸ்ட்டோஸ்டிரான்’ அந்த வளர்ச்சியைத் தடுக்கிறது. இரு மார்புகளும் ஒரே அளவல்ல…!சிகரெட்டின் நிகோட்டின், ஆல்கஹால் மற்றும் பல மருந்துகள் தாய்பால் வழியாகக் குழந்தைக்குச் செல்லக்கூடும். தீங்குகளையும் ஏற்படுத்தக்கூடும். தாய்பாலானது பசுவின் பாலை விட இனிமையானது, அடர்த்தி குறைந்தது. பெண் கடவுள் ஹேராவின் மார்பகத்தில் இருந்து உதிர்ந்த பால் துளிகளால் `பால் வீதி மண்டலம்’ உருவானதாக பண்டைய கிரேக்கர்கள் கருதி அப்பெயரைச் சூட்டினர்.பெண்களின் இடது மார்பகம், வலது மார்பகத்தை விடச் சற்று பெரிதானது. மார்பகத்தை அறுவைச் சிகிச்சையின் மூலம் நீக்குவது `மாஸ்டெக்டோமி’ எனபடுகிறது.மார்பக பிரச்சினைகள்
சிஸ்ட்கள் – மார்பகத்தில் உருவாகும் நீர் நிறைந்த கட்டிகள்.பைரோடினோமா – இழையும், உருளையுமான திசுக்களால் உருவான உறுதியான கட்டிகள்.காலக்டோரியா – அளவுக்கு அதிகமான தாய்பால் உற்பத்தி.கைனகோமேஸ்டியா – ஆண்களுக்கு மார்பகம் பெரிதாவது.மஸ்டிடிஸ் – பால் நாளங்களில் அடைப்பு ஏற்படுவது.மாஸ்டால்ஜியா – மாதவிலக்குக்கு முன் வலி அல்லதுதொளதொள தன்மை காணப்படுவது.மார்புக் காம்பு பேசட்ஸ் வியாதி – மார்புக் காம்பில் ஒருவித சுரப்புடன் தெரியும் புற்றுநோய் அறிகுறி.மார்பக புற்றுநோய் – பால் நாளங்கள், சுரபிகள் உள்ளிட்ட மார்பகத் திசுக்களில் உருவாகும் புற்றுநோய்.***
thanks news
***


"வாழ்க வளமுடன்"

ரோஜா கு‌ல்க‌ந்தின் ப‌யன்கள்சிலரு‌க்கு ‌பி‌த்த உட‌ம்பாக இரு‌க்கு‌ம். அ‌ப்படி‌ப்ப‌ட்டவ‌ர்க‌ள் அதிக பித்த அளவை குறை‌க்க கு‌ல்க‌ந்து சா‌ப்‌பிடலா‌ம். வயிற்றுக் கோளாறுகளுக்கு‌ம் நல்லது. ஜீரண சக்தியை அதிகரித்து, பித்த பிரட்டலை குறைக்கும். அதிக அமில சுரப்பை குறைக்கும். அல்சர்களுக்கு மருந்தாகும். வலியுடன் கூடிய மாதவிடாய்


கோளாறுகளை குறைக்கும். வெள்ளப்போக்கையும் குறைக்கும்.


பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்வதால், இதன் வடமொழி பெயர் தேவதாருணி (இளம்குமரி). தவிர குல்கந்து ஆண்மை ச‌க்‌தியை‌ப் பெருக்கி உடலுக்கு வலிமை ஊட்டும். ரோஜா இதழ்களில் உள்ள எண்ணை‌ய் த‌ன்மை ஆண்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. மல மிளக்கியாகவு‌ம் செயல்படு‌கிறது, குல்கந்து மலச்சிக்கலுக்கும் நல்லது. பொதுவாகவே ரோஜா இதயத்திற்கு நல்லது. எனவே குல்கந்து இதய நோயுள்ளவர்களுக்கு நல்ல இதமான மருந்து. முகப்பரு, உடல் நாற்றம் இவற்றை குறைக்கும்.


***
thanks google
***"வாழ்க வளமுடன்"

அமிலச் சத்தும் நோய்களும்மருத்துவத்தில் மனித உடல் குறித்து வெவ்வேறு அணுகுமுறைகள் உள்ளன. டாக்டர் மென்கேல் மனித உடலை அமிலம் மற்றும் காரத்தன்மை அடிப்படையில் அணுகுகின்றார். நமது உடல் 80 சதவீதம் காரத்தன்மை, 20 சதவீதம் அமிலத்தன்மையின் அடிப்படையிலானது என்பதே டாக்டர் மென்கேலின் அணுகுமுறையாகும்.

இவரின் அணுகுமுறை காலத்தால் மிகவும் பழையது என்றாலும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது மீண்டும் பிரபலமாகிவருகின்றது.

இந்தியாவிலும் இந்த அணுகுமுறை குறீத்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. பாஸ்பரஸ், கந்தகம், சிலிக்கான், ஆர்சனிக், குளோரின், புளோரின், அயோடின் ஆகியன உடலுக்கு அமிலத்தன்மையை அளிக்கும் உணவு வகைகள் ஆகும். கால்சியம், சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், மாங்கனீஸ், இரும்பு, செம்பு, அலுமினியம், லித்தியம், நிக்கல் மற்றும் துத்தநாகம் ஆகியன காரத்தன்மை அளிக்கும் உணவு வகைகள் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.உடம்பில் உண்டாகும் மொத்த அமிலக் கழிவில் மூன்றில் ஒரு பகுதியை நுரையீரல் வெளிப்படுத்திவிடுகின்றது. சிறுநீரகம், தோல், மலம் ஆகியவற்றின் மூலம் மற்ற இரு பகுதிகள் வெளியேற்றப்படுகின்றன. நமது உடலில் அமிலச் சத்து அதிகமாவதால் தான் நோய்கள் உண்டாகின்றன என டாக்டர் மென்கல் திட்டவட்டமாகக் கூறுகின்றார். காரச்சத்து அதிகமுள்ள உணவு வகைகளைச் சேர்க்கும்போது நமது உடலில் இயல்பாகவே அமில நிலையின் அளவு குறைந்துவிடுகின்றது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.பச்சைக் காய்கறிகள், ஆப்பிள், முள்ளங்கி, வெள்ளரிக்காய், வெங்காயம், வாழைப்பழம் ஆகியவற்றில் காரத்தன்மை உள்ளது. கோதுமை, சோளம், அரிசி, முட்டை, பன்றிக் கொழுப்பு, சாக்லேட்டுகள், இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றில் அமிலத்தன்மை உள்ளது. உடல் மருத்துவத்தைப் பொறுத்தவரை அமிலம், காரம் குறித்த விழிப்புணர்வும், அறிவும் அனைத்து மருத்துவர்களுக்கும் உணவியல் நிபுணர்களுக்கும், நோயாளிகளுக்கும் கட்டாயம் தேவை என மென்கல் கூறுகின்றார்.***
thanks டாக்டர்
***
"வாழ்க வளமுடன்"

மாரடைப்பு வந்த பின் பாதுகாத்து கொள்வது எப்படி?ஒருவருக்கு மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கியதும் எவ்வளவு விரைவாக மருத்துவ சிகிச்சை பெறுகிறோமோ, அந்தள விற்கு, இருதய தசையின் செய லிழப்பை தவிர்க்கவோ அல்லது பாதிக்கப்பட்ட இருதய தசையின் அளவை குறைக்கவோ முடியும்.


இதனால் பின்னாளில் வரும் இருதய பலவீனம், இருதயத்தை சுற்றியுள்ள மின்வலைகளின் செயல் பாடுகளில் ஏற்படும் திடீர் குறை பாடுகள் (அதிவேகமாக அல்லது குறைவாக இருதயம் துடிப்பது) போன்றவற்றால் நேரும் வேண் டாத, விபரீத விளைவுகளை தவிர்க் கலாம்.


குறிப்பாக மாரடைப்பின் அறிகுறிகள் தென்பட துவங்கிய பின், ஒரு மணி நேரம் மிக முக்கியமானது. ஏனெனில், அந்த ஒரு மணி நேரத்தில் தான் 80 சதவீத மரணங் கள் நிகழ்கின்றன. மாரடைப்பு என சந்தேகம் வந்தவுடன், காலம் தாழ்த் தாமல் விரைவாக பெறப் படும் முதலுதவி சிகிச்சை முறையால் பல பக்க விளைவுகளை தவிர்க்கலாம்.துரதிர்ஷ்டவசமாக நம்மில் பலர் மாரடைப்பின் பலவித அறிகுறி களை அறிந்திராததாலோ, அஜீரண கோளாறு என்று நினைத்தோ, நமக்கெல்லாம் மாரடைப்பு வராது என்று நம்பியோ, முக்கியமான முதல் ஓரிரு மணி நேரத்தை வீணாக்கி விடுகிறோம். வணிக உலகில், “நேரம் தான் பணம்’ என்பர். அதைப் போல மாரடைப்பை பொறுத்தவரையில், “நேரம் தான் உயிர்!’ எனவே, மாரடைப்பின் அறிகுறி என சந்தேகித்ததும், காலத்தை சிறிதும் வீணாக்காமல், அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமானது.மாரடைப்புக்கான சிகிச்சை முறை:மாரடைப்பு என சந்தேகித்ததும் மருத்துவரால் செய்யப்படும் முதலுதவி, நோயாளிக்கு ஆக்சிஜன் கொடுப்பது, ஆஸ்பிரின் மாத்திரை தருவது, நாக்கின் அடியில் வைக்கப்படும் மாத்திரை தருவது. நெஞ்சு வலியும், மனப்பதட்டமும் குறைய மருந்துகள். இருதய துடிப்பு அதிவேக மாகவோ அல்லது மிகவும் குறை வாகவோ இருக்கும் போது செய்யப் படும் உயிர்காக்கும் சிகிச்சை முறை. இத்தகைய முதலுதவி மூலம் மட்டுமே மாரடைப்பால் ஏற்படும் வலியை குறைக்கலாம்.


மாரடைப்பின் தாக்கத்தையும், தீவிரத்தையும் கட்டுப் படுத்தலாம். உரிய நேரத்தில் முதலுதவி பெறுவதால், மாரடைப் பால் நேரும் திடீர் மரணங்களை தவிர்க்கலாம்.மாரடைப்பு உறுதியான பின், செய்யப்படும் சிகிச்சை முறைகள்:1) மருந்துகள் மூலம் சிகிச்சை2) செயல்முறை மூலம் சிகிச்சை அளித்தல்.மருந்து மூலம் சிகிச்சை:

இதில் பலவகை மருந்துகள் சிகிச்சை முறையில் பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் முக்கியமானவை ரத்தக் கட்டியை கரைக்கும் மருந்து.* அடைபட்ட இருதய ரத்தக் குழாயில் உள்ள ரத்தக்கட்டியை கரைத்து, மீண்டும் பாதித்த பகுதிக்கு ரத்த ஓட்டத்தைக் கூடிய விரைவில் சரி செய்யும் பொருட்டு, உடலின் ரத்தநாளத்தின் வழியே இம்மருந்து செலுத்தப்படுகிறது.* இத்தகைய மருந்து, மாரடைப்பு துவங்கிய இரண்டு முதல் ஆறு மணி நேரத்திற்குள் செலுத்தப்பட்டால் மிகுந்த பலனளிக்கக் கூடியதாக இருக்கும்.* ஆனால், சூழலுக்கு ஏற்ப இருதய வலி துவங்கி 12 முதல் 24 மணி நேரம் வரை கூட சிலருக்கு இம்மருந்து செலுத்தப்படலாம். * அத்துடன் இருதயத் தசை களை, மாரடைப்பு ஏற்படுகிற அந்த சமயத்திலும், பிற்காலத்திலும் பாது காப்பதற்காக ஒரு சில முக்கியமான மாத்திரைகளும் தரப்படும்.* அவற்றுள் சிலவற்றை நீண்ட வருடங்கள்… ஏன், வாழ்நாள் வரை கூட உட்கொள்ள வேண்டி யிருக்கும். செயல்முறை (Procedure) சிகிச்சை குறித்து அடுத்த கட்டுரையில் காணலாம்.- டாக்டர் எஸ்.கே.பி.கருப்பையா,இருதய மருத்துவ நிபுணர், மதுரை


***
thanks டாக்டர்
***


"வாழ்க வளமுடன்"

திருமணம் செய்யப்போகும் பெண்களின் முக்கிய கட்டங்கள்....பெண்ணின் வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனை திருமணம். பெண்களுக்கு 18,19 வயதிலேயே திருமண ஆசை தலை தூக்கலாம். ஆனாலும் 20 முதல் 24 வயதுவரையிலான கால கட்டமே திருமணத்திற்குச் சரியான பருவம். திருமணம் செய்து கொள்ளும் ஆணுக்கும், பெண்ணுக்குமிடையே இத்தனை வயது வித்தியாசம் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது.


ஆணுக்கும், பெண்ணுக்கும் மனதளவிலும் தாம்பத்திய உறவிலும் மகிழ்ச்சி ஏற்படுத்தும் நிலைமையே சரியான திருமணம். ஆனாலும் பொதுவாக இருவருக்கும் ஐந்து முதல் எட்டு வயது வரை வித்தியாசம் இருந்தால் நல்லது.


திருமணத்திற்குக் காத்திருக்கும் பெண்கள் கீழ்க்கண்ட விஷயங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.


சொந்தத்தில் திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். உறவு விட்டுப் போகக் கூடாதே என்றோ, சொத்துக்காகவோ, வேறு காரணங்களுக்காகவோ சொந்தத்தில் திருமணம் செய்து வைப்பது நம் நாட்டில் சகஜமான விஷயம். இரத்த உறவினர்களைத் திருமணம் செய்து கொள்வது நல்லதல்ல என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஏனெனில் தாய்க்கோ, தந்தைக்கோ உள்ள வேண்டப்படாத மரபணு அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைக்கும் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும். சில சமயம் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மூளை வளர்ச்சியின்றி பிறக்கவோ, குறைப் பிரசவம் நிகழவோ கூடும். பெற்றோருக்கு இதை எடுத்துச் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது சம்பந்தப்பட்ட பெண்ணின் கடமை.


எக்காரணம் கொண்டும் திருமணத்திற்கு முன்பாக செக்ஸ் உறவுகளில் ஈடுபடக் கூடாது. செக்ஸைப் பற்றித் தெரிந்து கொள்ள இந்தக் காலத்துப் பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம். அதைத் தவிர்த்து அனுபவரீதியாக தெரிந்து கொள்ள நினைக்கவே கூடாது. அதனால் கருத்தரிக்கும் நிலை ஏற்பட்டாலோ, அதை கலைத்து விட்டாலோ அவை மூலம் ஏற்படும் மன அதிர்ச்சி, அவளது வாழ்க்கை முழுவதும் தொடரும்.

எப்படி எவ்வளவு ஜாக்கிரதையாகப் பழகினாலும், இந்த விஷயத்திற்குத் தன்னை விட்டுக் கொடுக்கும் பெண்,பிறகு அந்த வாலிபனையே மணந்து கொண்டாலும்,அவனிடம் சுய மதிப்பை இழந்து விடுவாள். காரணம் திருமணத்துக்கு முன்பே இவள் நம்மோடு படுக்கையை பகிர்ந்து கொண்டவள் தானே என்ற எண்ணம் கணவனுக்கு ஏற்பட்டிருக்கும்.


திருமண வாழ்க்கை என்பது பெண்களைப் பொறுத்த வரை முற்றிலும் மாறுபட்ட புதியதோர் உலகம். எனவே இந்த வாழ்க்கையின் மூலம், தான் இழக்கப் போகிறவற்றையும் பெறப்போகிறவற்றையும் உணர்ந்து உடலளவிலும்,உள்ளத்தளவிலும் பக்குவமடைய வேண்டும் அவள்.


***
thanks news
***
"வாழ்க வளமுடன்"

பேன் தொல்லையா? பொது இடங்களில் தலை சொறிந்து… !பெண்களில் பெரும்பாலோனோருக்கு உள்ள பிரச்னை பேன் தொல்லை. பேன்கள் தலையில் வசித்து நம்மை துன்புறுத்துவதோடு, பொது இடங்களில் தலையை சொறியும் போது நமக்கு அவமானத்தையும் தேடித்தருகிறது. இந்த பேனை பற்றிய சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாமா…?மனிதனிடம் மட்டுமே வசிக்கும் தன்மை கொண்ட பேன் ஆறு கால்கள் கொண்டது. நாய், பூனை, பறவைகள் போன்றவற்றிடம் இது இருக்காது. மனித ரத்தத்தை உணவாக கொள்ளும் இந்த பேன்களின் வாழ்நாள் 30 நாட்கள். மனித உடலில் இருந்து பிரிந்து தலையணை, போர்வைகள், உடைகள், ஹெல்மெட்டின் இடுக்குகள் போன்றவற்றில் இருக்க நேரிட்டால், இரண்டு நாட்கள் வரை உயிர் வாழும்.ஒரு ஜோடி பேன்கள் இணைந்து 100 முட்டைகள் வரை இடும். சிறிய தொடுகையின் மூலமே இனப்பெருக்கம் செய்யும் தனிச்சிறப்பு கொண்ட இனம். இந்த பேன்கள் இனம் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதற்கு ஆதாரமாக, எகிப்திய மம்மிகளில் பேன்கள் இருந்துள்ளதை தொல்லியல்துறை வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். பேன்களில் மூன்று வகை உண்டு.முதல்வகை தலையில் வசிப்பவை.இரண்டாம் வகை மனித உடலில் வசிப்பவை.மூன்றாம் வகை அந்தரங்கப் பகுதிகளில் வசிப்பவை.இரண்டாம் மற்றும் மூன்றாம் வகைப் பேன்கள் அரிதாக காணப்படும். தலையில் வசிக்கும் பேன்கள்தான் மனிதனுக்கு பெரும் தலைவலியாக உள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு. பள்ளிக்குச் செல்லும் 5 முதல் 11 வயது வரையிலான 60 சதவீத பெண் குழந்தைகளுக்கு பேன் தொற்று ஏற்படுகிறது. அவர்கள் மூலமாக பெரியவர்களுக்கும் பரவுகிறது.மனிதர்கள் நெருக்கமாக இருக்கும் போது, பேன்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு ஊர்ந்து வந்துவிடுகிறது. பேன்கள் கடிக்கும்போது, எச்சில் மூலம் சில ரசாயனங்களை வெளியிடுகிறது. இதனால்தான் அந்த இடத்தில் அரிப்பு ஏற்படுகிறது. சொறியும் போது, அந்த இடம் ரணமாகிறது. அந்த புண்கள் வழியாக, நோய்களை பரப்பும் கிருமிகளும், பாக்டீரியாக்களும் மனித உடலுக்குள் எளிதாக நுழைந்து விடுகின்றன.இதனால், பல்வேறு தோல் நோய்கள் ஏற்படுகின்றன. பேனை ஒழிப்பதற்கு, சில வகை எண்ணெய்கள், பிரத்யேக ஷாம்புகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. இவை பெரும்பாலும் தற்காலிக நிவாரணத்தை மட்டுமே வழங்குகின்றன. முழுமையாக பேனை ஒழிப்பதில்லை. சில ரசாயனங்கள் பேன்களை முற்றிலுமாக அழித்துவிடக்கூடியவை.உதாரணமாக, மண்ணெண்ணெய் பேன்களை முற்றிலும் அழித்துவிடும் தன்மை கொண்டது. மண்ணெண்ணையை தலைமுழுவதும் தேய்த்துக்கொண்டு, துணியால் மூடி கட்டிவிட வேண்டும். இரண்டு அல்லது மூன்று மணிநேரம் கழித்து துணியை எடுத்துப்பார்த்தால், தலையில் இருந்த அனைத்து பேன்களும் இறந்து கொட்டியிருக்கும்.மண்ணெண்ணெய் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய பொருள் என்பதால், இது ஆபத்தான முறையாகும். மருத்துவ முறையில், பேன்களை ஒழிப்பதற்கென்று பிரத்யேகமான ஷாம்புகள், லோஷன்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. இவற்றை தலையில் தேய்த்து, பயன்படுத்தும்போது, அதில் உள்ள ரசாயனங்கள் சில மணிநேரங்களுக்கு பேன்களை செயலிழக்கச் செய்கின்றன. குளித்து முடித்து, நாம் “பிரஷ்’ ஆகும் போது, அவையும் “பிரஷ்’ ஆகி தங்களுடைய வழக்கமான பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுகின்றன.காரணம், இந்த ஷாம்புகள் மற்றும் லோஷன்களில், மனித உடலுக்கு தீங்கிழைக்காத வகையில், 20 சதவீத அளவு ரசாயனங்களே பயன்படுத்தப்படுகின்றன. இந்த வகையான பொருட்களை கர்ப்பிணிப் பெண்களும், ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளும் பயன்படுத்துவது நல்லது அல்ல. இந்த வகையான ஷாம்புகளும், லோஷன்களும் உடலில் வசிக்கும் பேன்களுக்கும், அந்தரங்க பகுதிகளில் வசிக்கும் பேன்களை எந்த விதத்திலும் பாதிப்பதில்லை.வேம்பு மற்றும் துளசி கலந்து தயாரிக்கப்படும் சில மருந்துகளிலும் ரசாயனங்கள் கலக்கப்படுவதால், அவையும் மேற்கண்ட பலனையே தருகின்றன. எனவே, பேனை ஒழிப்பதற்கு எளிமையான, பாரம்பரிய மற்றும் பயனுள்ள முறை, “பேன் சீப்பு’ பயன்படுத்துவது தான்.***
thanks news
***

"வாழ்க வளமுடன்"

விமான நிலைய X-ray சோதனை பாதுகாப்பற்றவை! விஞ்ஞானிகள் எச்சரிப்பு (பட இணைப்பு)அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளையும் விமானச் சிப்பந்திகளையும் முழு உடலையும் சோதனையிடுவதற்காகப் பாவிக்கப்படும் Graphic-image X-ray scanners பாதுகாப்பற்றவை என்று அமரிக்க விஞ்ஞானிகள் இன்று எச்சரித்துள்ளனர்.


இந்தக் கருவிகள் மூலமான ஆபத்து குறைவானதே என்று அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும் இது மனிதர்களுக்கு சருமப் புற்று நோயை ஏற்படுத்தக்கூடியது என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவின் உயிரியல் பௌதிக மற்றும் உயிரியல் பௌதிக இரசாயனப் பிரிவைச் சேர்ந்த டொக்டர். மைக்கல் லவ் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.


இவர் தனிப்பட்ட முறையில் எக்ஸ்றே ஆய்வுக் கூடம் ஒன்றையும் நடத்தி வருகின்றார். எக்ஸ்றே என்பது எப்போதுமே ஆபத்தானது அதில் நன்மை என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் இந்த ஆபத்துக்கு முகம் கொடுத்தவர்களாகத்தான் இப்போது விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.


ஒரு மனிதனின் பிறப்பு உறுப்பு முதல் சகல இடங்களையும் காட்டக்கூடியதாகத்தான் விமான நிலைய எக்ஸ்றே கருவிகள் உள்ளன. அண்மையில் ஒரு பிராந்திய விமான சேவையின் விமானி இந்த சோதனையைக் கடக்க மறுத்துள்ளார் அது தன் மீதான தாக்குதல் என்றும் தனது அடிப்படை உரிமையை மீறுகின்ற ஒரு செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவில் இந்த முறை அமுலுக்கு வந்தது முதல் பல்வேறு சர்ச்சைகள் கிளப்பப்பட்டுள்ளன. இதற்கு முன்னரும் பல விஞ்ஞானிகள் தமது அதிருப்திகளை வெளியிட்டிருந்தனர்.


***
thanks விஞ்ஞானிகள்
***

"வாழ்க வளமுடன்"

உடம்பு மெலியணுமா? வெறும் ‘டயட்’ மட்டும் போதாது


குண்டான நீங்கள், ‘ஸ்லிம்ரன்’னாக மாற வேண்டுமா? அதற்கு, ‘டயட்’ மட்டும் போதாது; உடற்பயிற்சியும் வேண்டும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அமெரிக்காவின் ஒரேகான் நலவாழ்வு மற்றும் அறிவியல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், சமீபத்தில் ஓர் ஆய்வு மேற்கொண்டனர். உடம்பு மெலிவதற்கு, உணவுக் கட்டுப்பாடு எந்த அளவுக்கு உதவுகிறது என்பது தான், ஆய்வின் நோக்கம்.இதற்காக அவர்கள், பெண் குரங்குகளுக்கு, தொடர்ந்து சில ஆண்டுகளாக நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவாக அளித்து வந்தனர். இதனால் அவை நன்றாகக் கொழுத்து விட்டன. பின் அந்த உணவைக் குறைத்து அளவாகக் கொடுத்து வந்தனர்.கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் எடைக்கும், உணவுக் கட்டுப் பாட்டின் போது இருந்த உடல் எடைக்கும், பெரிய வித்தியாசம் இல்லை என்பதைக் கண் டறிந்தனர்.விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஜூடி கேமரூன், ‘குரங்குகளுக்கு மேலும் உணவைச் சுருக்கினோம்.அப்போதும் உடல் எடையில் பெரிய மாற்றம் இல்லை. ஆனால் அவை கொழுத்திருந்த போது இருந்த அவற்றின் உடல் ரீதியான செயல்கள், உணவைக் குறைக்க ஆரம் பித்ததும் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தன’ என்கிறார்.

இதையடுத்து, மற்றொரு குரங்குக் குழுவுக்கு இதேபோல் நல்ல கொழுப்புச் சத்துள்ள உணவைக் கொடுத்து பின், உணவுக் கட்டுப் பாட்டுக்குக் கொண்டு வந்தனர். அதோடு, உடற்பயிற்சியும் அவற்றுக்குக் கொடுத்தனர்.அப்போது அவற்றின் உடல் எடையில் குறிப் பிடத் தகுந்த மாற்றம் ஏற்பட்டது. உடல் எடை குறைந்தது.’உணவு மட்டுமே மனிதன் மற்றும் விலங்குகளின் உடல் எடையைக் குறைப்பதற்குப் போது மானதல்ல; அதோடு, உடற்பயிற்சியும் சேர்த்து செய்தால்தான், உடல் எடையில் மாற்றம் ஏற்படும் என்பதை இவ்வாய்வு நிரூபித்துள்ளது. குறிப்பாக குண்டான குழந்தைகளுக்கு இம் முறையைப் பயன்படுத்தலாம்’ என்கிறார் ஜூடி கேமரூன்.


***
thanks ஜூடி கேமரூன்
***

"வாழ்க வளமுடன்"

பல் சொத்தை - சைனஸ் தொந்தரவுகள்பல்லில் உண்டாகும் சொத்தைக்கும் சைனஸ் தொந்தரவுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இரண்டையும் இணைத்துவைப்பது அவற்றின் இருப்பிடம் அமைப்பு தான்.


பற்களின் வேருக்கு மிக அருகில்தான் மாக்ஸிலரி சைனஸ் அறைகள் இருக்கின்றன. பல்லில் உண்டாகும் சொத்தை மேலும் மேலும் வளரும்பட்சத்தில் அது பல்லின் வேர்வரை புரையோடி, அருகில் இருக்கும் மாக்ஸிலரி சைனஸ் அறையையும் தொட்டுவிட வாய்ப்பு இருக்கிறது.


அப்போது இந்த சைனஸ் அறையிலும் பாதிப்பு பரவி உள்ளே சீழ்தேங்க ஆரம்பித்துவிடும். இதன் தொடர்ச்சியாக டர்பினேட்டுகளில் வீக்கம் உண்டாகி, அது சைனஸ் அறைகளின் வாசலை அடைத்துவிடம்.


பல் சொத்தையால் சைனஸ் பிரச்சினை வருவது இப்படி தான் என்கிறார் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கே.கே.ஆர். காதுமூக்கு தொண்டை மருத்துவமனை டாக்டர் ரவிராமலிங்கம்.


அவர் மேலும் கூறியதாவது:

பல் சொத்தை மட்டுமல்ல... ஏதோ காரணத்துக்காகப் பல்லைப் பிடுங்கும்போது உஷாராக இல்லையென்றாலும் கஷ்டம்தான். பிடுங்கப்படும் பல்லின் ஆணிவேர் கையோடு வரும்போது, அது எந்த வகையிலும் சைனஸ் அறையைப் பாதித்து விடக் கூடாது.


விபத்துக்களின் போதோ அல்லது வேறு ஏதாவது சந்தர்ப்பங்களிலோ கன்னத்தைக் குறி வைக்கும் எதிர்பாராத தாக்குதல்கள் கூட இந்த மாக்ஸிலரி சைனஸ் அறைகளைச் சேதப்படுத்தி, சைனஸ் தொந்தரவைக் கொண்டு வரும் வாய்ப் பிருக்கிறது.


சைனஸ் பிரச்சினையை நாங்கள் இரண்டு வகையாக எடுத்துக் கொள்கிறோம். ஒன்று... திடீரென்று வந்த போதும், தீவிரமான வலியைத் தரும் சைனஸ். இன்னொன்று... நிரந்தரமான, ஆனால் குறைவான வலியைத் தரக்கூடிய சைனஸ்.


முதல் வகையை சொட்டு மருந்துகளாலும் நோய் எதிர்ப்பு மாத்திரைகளாலும் எளிதாகவே குணப்படுத்திவிடலாம். மிகச் சில பேருக்கு மட்டுமே அறுவைச் சிகிச்சை வரை போக வேண்டிய திருக்கும்.


ஆனால் சைனஸ் பிரச்சினையைப் பொருட் படுத்தாமல் விடுவதால் வரும் இந்த இரண்டாவது வகையை என்ன மருந்து கொடுத்தாலும் முழுமையாக குணப்படுத்திவிட முடியாது. வலியை வேண்டுமானால் `கட்டுப்படுத்த இயலும்.


பாதிக்கப்பட்ட அத்தனை திசுக் களையும் நீக்கினால்தான் முழு நிவாரணம் கிடைக்கும் என்ற நிலை. டர்பினேட் ஜவ்வுகளையும் வளரவிட வேண்டும். ஆனால், இதெல்லாம் சாதாரண காரிய மில்லை. இப்போது இதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு மருத்துவத்துறையில் நவீன சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.


பாதிக்கப்பட்ட திசுக்களை நீக்க வேண்டிய அவசியமே இல்லாமல் நவீன அறுவை சிகிச்சை முறையில் அதைக் குணப்படுத்த முடி கிறது. குணப்படுத்த முடியாத சைனஸ் என்று எதுவும் இல்லை என்பதுதான் இப்போதைய நிலை.


முன்பெல்லாம் சைனஸ் பிரச்சனை என்றால் சைனஸ் அறையை ஓட்டை போடுவதுதான் எளிய வழியாக இருந்தது. மூக்குக்கு உள்ளே சிரிஞ்ச்வாயிலாக நீரை பீச்சி அடித்தால் அதுவே சைனஸ் அறைகளில் ஓட்டையை உண்டாக்கிவிடும்.


உள்ளே தேங்கி கிடக்கும் சீழ், அந்த ஓட்டை வழியாக வெளியே வந்து விடும். காலப்போக்கில் இந்த ஓட்டை தானாகவே குணமாகி, நிரப்பப்பட்டு விடும் என்றாலும், இதில் ஒர பெரிய சிக்கல் இருந்தது.


அடுத்து எப்போது வேண்டுமானாலும் சைனஸ் வரலாம். மறுபடியும் ஓட்டை போட்டுதான் அதை வெளியே எடுக்க வேண்டும் என்பதுதான் அந்த சிக்கல். இப்போது இந்தச் சிக்கலுக்கும் தீர்வு கண்டாகிவிட்டது.


மூடப்பட்ட கதவைத் திறந்தாலே உள்ளேயிருக்கும் சீழ் வெளியேறி விடும் அல்லவா... அந்தக் கதவை சரியான அளவில் திறப்பதுதான் இப்போதைய சிகிச்சை முறை. சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் என்ற நவீன வசதிகளால், எந்த சைனஸ் அறை பாதிக்கப்பட்டிருக்கிறது.... எவ்வளவு பாதிக்கப்பட்டிருக்கிறது... அவற்றில் இருப்பதுசளிதானா அல்லது சீழா... என்பதையெல்லாம் மிகத் துல்லியமாக கண்டறிய முடிகிறது. இதனால் அறுவை சிகிச்சையும் எளிதாகிவிட்டது.


சைனஸ் அறையில் செய்யப்படும் அறுவை சிகிச்சைக்கு மூக்கின் வெளிப்புறத்தில் ஏதாவது ஓட்டை போட வேண்டியிருக்குமா.. அது தழும்புகளை உண்டாக்கும் அளவுக்கு இருக்குமா? அதற்கெல்லாம் அவசியம் இல்லை. அறுவை சிகிச்சை கருவிகளைக் கையாள மூக்குக்கு உள்ளே போதுமான அளவுக்கு இடம் இருக்கிறது.


அப்படியில்லை என்றால் வாய்வழியாகக்கூட சைனஸ் அறைகளை அடைத்து அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம். எத்மாய்டு அல்லது ப்ரன்டல் சைனஸ் அறைகளில் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு மட்டுமே, தேவைப்படும் பட்சத்தில் மூக்குக்கு வெளியே லேசாகக் கிழிக்க வேண்டியிருக்கும்.


அப்படியே கிழித்தாலும் அதன் தழும்பு தெளிவாகத் தெரியாதஅளவுக்கு மிக மிகச் சிறிதாக இருக்கும். கவலையே வேண்டாம் என்கிறார் டாக்டர் ரவிராமலிங்கம்.***
thanks டாக்டர் ரவிராமலிங்கம்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "