...

"வாழ்க வளமுடன்"

12 ஜூலை, 2011

பித்தப்பை கற்கள் ஏன் ? எப்படி- ? ஒரு முழு விளக்கம்--



மருத்துவர். மு. சங்கர்


இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு. வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.


பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.



பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் இன்றைக்கு பெரும்பாலானோருக்கு உண்டாகும் நோய்களில் பித்தப்பை கற்களால் உண்டாகும் நோயும் ஒன்று பித்தப்பை கற்கள் ஏற்பட்டு பித்தப்பையையே அகற்றிவிட்டு இருப்பவர்களும் உண்டு.



வலது பக்க விலா எலும்புகளுக்கு கீழே வலி உண்டாகும். இந்த வலி ஏற்படுவதற்கு பெரும்பாலும் பித்தப்பையில் உண்டாகும் கற்களே காரணம். பித்தப்பை கற்கள் என்றால் என்ன? ஏன் உண்டாகிறது? அதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகும் என்பதைப் பற்றி பார்ப்போம்.



பித்தப்பையில் சிறு சிறு கற்கள் உண்டாகும். கற்கள் மிளகு அளவு உள்ளவனாக இருக்கும். ஒரு சில கற்கள் பெரியவைகளாகவும் இருக்கும். புளியங்கொட்டை அளவிற்கும் கற்கள் உறுவாவது உண்டு. ஒரு சிலருக்கு ஒரே கல் பித்தப்பை முழுவதும் நிரம்பி இருப்பதும் உண்டு.



பித்தப்பையி¢ல் உண்டாகிற கற்கள் ஒரு சில மிருதுவாகவும், ஒரு சில கற்கள் கனமாகவும், கெட்டியாகவும் இருக்கும் சிறிய கற்களாக இருந்தால் அவை ஒன்றோடு ஒன்று உராய்ந்து உருண்டையாகி விடும். இவை உண்டாவதற்கு முக்கியமான காரணம் பித்தப்பையில் ஏற்படும் அயற்சி. இந்த அயற்சி ஏற்பட்டவுடன் பித்தநீர் அதிக நேரம் பையில் தங்கி இருகிவிடுகிறது. வேறு காரணங்களாலும் பித்த நீர் தடைப்பட்டு நிற்குமானால் இந்த நோய் உண¢டாகலாம்.



இது போன்று கற்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அதிகம் உண்டாகின்றன. அதிலும் ஐம்பது முதல் அறுபது வயது உள்ளவர்களுக்கு அதிகமாக உண்டாகிறது. அதிக உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கும் இந்த கற்கள் உண்டாகலாம். இருதய நோய், கல்லீரல் நோய், பித்தநீர் வடிகுழாயில் நாக்குப் பூச்சிகளாலும் சதைக் கட்டிகளாலும் அடைப்பு உண்டாகப் பித்தம் தங்கி விடுவது போன்றவற்றாலும் இது போன்ற கற்கள் உண்டாகலாம்.



பித்தப்பையில் உண்டாகும் கற்கள் சிறியவைகளாக வெகு காலம் தங்கியிருந்தாலும் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும். ஆனால் கற்களால் வலி உண்டாவதற்கு முன்பு சில குறிகள் கவனிப்பவர்களுக்கு தெரியும். உணவு உண்டப்பின் வயிற்றில் கனமாகவும் உப்புசமாகவும் இருக்கும். இவை ஏப்பம் விடுவதாலும் வாந்தி எடுப்பதாலும் குறைந்துவிடும்.



இதுபோல் சில காலம் சென்ற பிறகு திடீரென்று குத்தல் போன்ற வலி உண்டாகும். வலி பொருக்க முடியாமல் முழங்காலை வயிற்றின் மேல் மடக்கி அமுக்கினால் வலி சற்று குறைவது உண்டு பித்தப்பையில் இருக்கும் கற்கள் சில சமயங்களில் அங்கிருந்து சிறு குடலுக்கு வரும் குழாயில் இறங்கி அதனுள் அகப்பட்டு கொண்டால் வலி உண்டாகும்.



இந்த வலி வலது விலாபுறத்தில் மார்புக் கூட்டு எலும்பின் கீழே இருக்கும். அங்கிருந்து வலது தோள்பட்டை முதுகின் வலது பக்கம் இவைகளிலும் இந்த வலி உண்டாகும். கல்லீரல் கனத்துப் பருத்து கையால் தொட்டாலும் இந்த வலியைக் கொடுக்கும். இந்த வலி வரும்போது முகம் சுளித்து கைநாடி வலுக்குறைந்து நெற்றியில் வேர்வை உண்டாகும்.



அதிகமான காய்ச்சலும் உண்டாகும். வாந்தி இருக்கும். அடைத்திருக்கும் கற்கள் நழுவி சிறுகுடலுக்குள் வந்தாலும் அல்லது பித்தப் பைக்குள் திரும்பி சேர்ந்துவிட்டாலும் வலி உடனே நின்று விடும். அடைப்பு நீ¢ங்காவிட்டால் மஞ்சள் காமாலை, வெண்ணிறமும் தூற்நாற்றமும் உள்ள மலம் பிரியும். பித்தம் மற்றும் இரத்தத்தில் கலந்திருக்கும் விஷக் குறிகள் எல்லாம் அடுத்தடுத்து காணப்படும்.




மருத்துவம்:

பித்தப்பை கற்களால் உண்டாகக்கூடிய வலிகளுக்கு இரு வேறு விதங்களில் மருத்துவம் அளிக்கலாம். ஒன்று வலி உள்ளபோது செய்வது, மற்றொன்று வலி இல்லாதக் காலத்தில் செய்வது.



வலி உள்ள போது நோயாளியை வாந்தி எடுக்கச் செய்ய வேண்டும். இதற்கு உப்பு நீர் மிகவும் உபயோகமானது. வாந்தி எடுப்பதால் பித்தநீர் குழாயின் பிடிப்பு தளர்ந்துவிடும். அரிசிமாவு, ஆளி விதைமாவு, களிமண் இவற்றை சட்டியில் போட்டு அடுப்பில் வைத்து கிண்டி வலி உள்ள இடத்தில் வைத்துக் கட்டலாம், கற்பூரத் தைலம் 5 சொட்டு சாப்பிடக் கொடுக்கலாம்.



வலி நின்ற பிறகு இனி திரும்பாமல் இருப்பதற்கும் கற்கள் உண்டாகமல் இருப்பதற்கும் மருத்துவம் செய்ய வேண்டும். நிலவேம்பு, அழுக்கிரா சூரணம் போன்றவை கொடுக்கலாம். உணவில் பழங்கள் அதிகமாக சேர்க்க வேண்டும்.



வலி இல்லாத காலத்தில் நிலவேம் சூரணம், வெருகடி அளவு சமமாக அழுக்கிரா சூரணம் சேர்த்து கொடுத்து வரலாம். பித்தக் கற்களின் பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில¢¢ மருத்துவரை அணுகி மருத்துவம் செய்துக் கொள்வது நல்லது.



***
thanks மருத்துவர். மு. சங்கர்
***




"வாழ்க வளமுடன்"

பக்கவாத நோயாளிகள் கடைபிடிக்க வேண்டியவைகள்



பக்கவாதம் வந்த பின் பழைய நிலைக்கு திரும்புவது சாதாரண விடயம் கிடையாது. பெரும்பாலும் நடுத்தர வயதினரைத் தான் பக்கவாதம் தாக்கும்.



இப்போது வயது வித்தியாசம் பார்க்காமல் யாரை வேண்டுமானாலும் பக்கவாதம் தாக்குகிறது. உடல் பருமன், அதிகக் கொழுப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற பிரச்சனை உள்ளவர்களை வாதம் எளிதில் தாக்கும்.


நடுத்தர வயதினரின் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் இந்த இரண்டும் தான் வாதம் ஏற்படக் காரணம் ஆகிறது. ரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு வாத நோய் வரலாம்.


ரத்த அழுத்தத்தின் அடுத்த கட்டமாக மூளைக்கு செல்லும் சிறிய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுகிறது. ரத்த ஓட்டம் தடைபட்ட மூளைப் பகுதியுடன் தொடர்புடைய உடல் உறுப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மூளையில் உண்டாகும் பாதிப்புக்கு ஏற்ப முகம், கை, கால் அல்லது முழு பக்கவாதம் ஏற்படலாம்.


இத்துடன் தலையில் அடிபட்டு உண்டாகும் மூளை பாதிப்பின் காரணமாக வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. நாள்பட்ட நோய்களான இதய நோய், சிறுநீரகப் பழுது, அறுவை சிகிச்சையில் ஏற்படும் சிக்கல்கள், ரத்தக் குழாய் அடைப்பு மற்றும் ரத்தக் கட்டிகள் ஆகியவற்றாலும் வாத நோய் வரலாம்.


ரத்த சம்பந்தப்பட்ட வியாதிகளாலும் பக்கவாதம் தாக்கலாம். ரத்த ஓட்டம் தடைபட்டு சிவப்பு அணுக்கள் பிளேட் ஒன்றன் மீது ஒன்றாக படிந்து பிளேட் திரம்டஸ் ஏற்பட்டு ரத்த நாளங்கள் அடைபட்டும் பக்கவாதம் வரலாம்.


பொதுவாக பக்கவாதத்துக்கு முன்பே உடலில் சில அறிகுறிகள் தென்படும். தலைவலி, வாந்தி மற்றும் சுயநினைவை இழத்தல், கை கால் மரத்துப் போதல், பேச்சு குளறுதல், நடுக்கம், தலைசுற்றல், கை கால் வலு இழத்தல் போன்ற பிரச்னைகள் வரும் போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.


இந்த அறிகுறி தென்படுபவர்கள் உடனடியாக மருத்துவரை அணுகி ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்த ஓட்டம் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதா என்பதையும் சோதனை மூலம் தெரிந்து கொண்டு தக்க சிகிச்சை செய்து கொள்ள வேண்டியது அவசியம்.


உடலில் உள்ள நோயுடன் எப்போதும் பரபரப்பாக மன அமைதியின்றி இருத்தல், சரியான நேரத்துக்கு தூங்காமல் இருத்தல், தொடர் மன அழுத்தம் ஆகியவை பக்கவாதம் வர வழியமைத்துக் கொடுக்கிறது. சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்களது வாழ்க்கை முறையை அமைதியானதாக மாற்றிக் கொள்ள வேண்டும்.


சரியான நேரத்துக்கு தூங்குவதும், குறிப்பிட்ட நேரம் தூங்கி எழுவதும் அவசியம். சரிவிகித சத்துணவை எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்பு உணவுகளை தவிர்ப்பது நல்லது.


ஏனெனில் கொழுப்பு கட்டிகள் ரத்த ஓட்டத்தை தடுப்பதாலும் வாதநோய் தாக்கும். சீரான உடற்பயிற்சியும் வாதநோய் ஏற்படுவதை தடுக்கும். இதேபோல் வாதநோய்க்கான அறிகுறிகள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பெரிய அளவிலான உடல் பாதிப்புகளை தடுக்க முடியும். வாதத்தின் அடுத்த கட்டமாக உடல் செயலிழத்தல், நினைவிழத்தல் போன்ற பிரச்னைகளை தடுக்கலாம்.




***
thanks tech.lankasri
***







"வாழ்க வளமுடன்"

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!



மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.


இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.


நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.


அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.




முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.





உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன.




மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.




இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.



நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது.



இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.





கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.



இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.





***
நன்றி: திரு.சௌந்தர்
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "