...

"வாழ்க வளமுடன்"

02 மே, 2011

நீங்கள் ஒல்லியா? குண்டாக விரும்பினால் இதப்படிங்க !!!!.



பரம்பரையாகச் சிலர் ஒல்லியாக இருப்பார்கள். இன்னும் சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் அப்படியே ஒல்லியாக இருப்பார்கள்! இவர்கள் தங்களுக்கு மலச்சிக்கல், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, தூக்கமின்மை, தாம்பத்தியக் கோளாறு, கல்லீரல் கோளாறு, குடல் கோளாறு முதலியவை உள்ளனவா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.



ஏனெனில் மேற்கண்ட காரணங்களாலும் சிலர் தொடர்ந்து ஒல்லியாக இருப்பார்கள்.


இவர்கள் அனைவருமே ஆரோக்கியமான உடல் நலத்தைப் பெற்று சற்றுப் பூசினாற்போல குண்டாக மாற வாய்ப்பு உள்ளது. உடலைச் கொழுக்க வைப்பதிலும் எடையை அதிகரிப்பதிலும் பால், சோயாபால், அத்திப்பழம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.



முதலில் பால் வைத்தியத்தைப் பின்பற்றலாம். காலை முதல் இரண்டு மணி நேரத்திற்கு ஒரு கப் பால் வீதம் அருந்த வேண்டும். இது இரவு எட்டு மணி வரை தொடர வேண்டும். அடுத்த நாளும் காலை எட்டு மணிக்கு இந்தப் பால் வைத்தியத்தை ஆரம்பிக்க வேண்டும். வேறு எதுவும் சாப்பிடக் கூடாது.

பாலை லேசாகக் சுட வைத்தால் போதும். சர்க்கரை வேண்டாம். மூன்றாவது நாள் முதல் மணி நேரத்திற்கு ஒரு கப் வீதம் அருந்த வேண்டும். இதை மூன்று நாட்கள் தொடர வேண்டும். சிலருக்கு இந்த முறையில் தொடர்ந்து பால் சாப்பிடுவது திகட்டும். இவர்கள் அளவைக் குறைத்துக் கொள்ளலாம். ஸ்டிரா மூலம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாலை உறிஞ்சலாம். பசும் பாலுக்குப் பதிலாக சோயா பாலையும் பயன்படுத்தாம். ஆறு நாட்களுக்குப் பிறகு பாலும் அத்திப்பழமும் கலந்து மூன்று வேளையும் சாப்பிட ஆரம்பியுங்கள். நீங்கள் சதை போடுவதை உணர முடியும்

***

மாற்று முறை :


வைட்டமின்களும், தாது உப்புக்களும் சரியாக உணவில் இடம் பெற்றால், பஞ்சாபியர்களைப் போல வாட்டசாட்டமாக வளர முடியும். கால்சியம் அதிகமுள்ள பால், தயிர், மக்னீஷியம் அதிகம் உள்ள முள்ளங்கி, பீட்ரூட் வைட்டமின் டி (D) அதிகமுள்ள பால், மீன், எண்ணெய் முதலியவற்றை நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். புரதம் அதிகம் உள்ள ‘சோயாபீன்ஸையும் உணவில் சேர்க்க வேண்டும்.

ஒல்லியானவர்கள் சாப்பிடும் உணவு வகைகளில் எண்பது சதவிகிதம் திரவமாகவும், மீதி திட உணவாகவும் இருக்க வேண்டும். இதுவே உடல் எடை சரிவிகிதத்தில் அதிகரிக்க உதவும். உணவில் உள்ள வைட்டமின்கைளுயம், தாது உப்புக்களையும் நன்கு உறிஞ்சிக் கொண்டு, கழிவுகளையும் தாமதமின்றி வெளிேற்ற பி வைட்டமின்கள் அவசியம் தேவை திட உணவான கைக்குத்தல் அரிசி, கம்பு, கேழ்வரகு, பருப்பு, கடலை முதலியவற்றில் “பி” வைட்டமின்கள் அதிகம் உள்ளன.

தாவர எண்ணெய் வகைகளில் வைட்டமின் “ஈ” உள்ளது. இவற்றில் சமைத்தால் உடல் எடை அதிகரிக்கும்.

டர்னிப், கீரை, பசலைக்கீரை, முள்ளங்கி, பீட்ரூட், காரட் முதலியவற்றை காய்கறி சாலட் போல் சாப்பிட வேண்டும். பச்சையாகச் சாப்பிட முடியாதவர்கள் லேசாக வேக வைத்துச் சாப்பிடலாம். குண்டாக மாற விரும்புகிறவர்கள் கர்பபி, தேநீர், புகைப்பழக்கம் முதலியவற்றை உடனே நிறுத்த வேண்டும்.

மூன்று வேளை உணவை ஆறு வேளையாகப் பிரித்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டால் போதும். குண்டாக விரும்புகிறவர்கள் எப்போதும் சாப்பிடுவதைவிடக் கூடுதலாக 500 கலோரி மட்டும் சாப்பிட்டால் போதும். இதனால் வாரத்துக்கு 650 கிராம் வீதம் உடல் எடை அதிகரித்து வரும்.

சோயா மாவில் பூரி, சப்பாத்தி செய்து சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்க உதவும். நோஞ்சான் குழந்தைகளுக்குக் குறைந்த விலையில் கிடைக்கும் உயர்ந்த சத்துணவு இது. சோயா மாவில் செய்யப்பட்ட முறுக்கு, பக்கோடா முதலியவை நல்ல நொறுக்குத் தீனிகள்.

ஒல்லியானவர்களும் குழந்தைகளும், பெரியவர்களும் இந்த நொறுக்குத் தீனியை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நன்கு வளர்ந்து குண்டாகிவிடுவார்கள்.



***
thanks சரவணன்
***





"வாழ்க வளமுடன்"


முருங்கைப் பூவின் மருத்துவ குணங்கள் !!!



பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.

முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.

முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.

சித்தர்கள் முருங்கையை பிரம்ம விருட்சம் என்றே அழைக்கின்றனர்.

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.

இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.

இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.

முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கை பூவின் மருத்துவ மகிமையை பல நூல்களில் சித்தர்கள் எழுதியுள்ளனர்.

விழிகுளிரும் பித்தம்போம் வீறருசி யேகும்

அழிவிந் துவும்புஷ்டி யாகும் - எழிலார்

ஒருங்கையக லாககற் புடைவா ணகையே

முருங்கையின் பூவை மொழி

- அகத்தியர் குணபாடம்

வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து கொத்தாக காணப்படும்.


***

கண்களைப் பாதுகாக்க

இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.


***


ஞாபக சக்தியைத் தூண்ட

சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.

இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.

முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.


***


பித்தம் குறைய

மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.


***

நரம்புத் தளர்ச்சி நீங்க

அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.

முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.

***

நீரிழிவு நோயாளிக்கு

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள்.

நித்திய கண்டம் பூரண ஆயுசு என்று

நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.


***


பெண்களுக்கு

சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.


***

தாது புஷ்டிக்கு

ஆண் பெண் இருபாலரும் இன்றைய அவசர உலகில் பொருளாதாரப் போராட்டத்தில் அதிகம் மூழ்கிவிடுகின்றனர். இதனால் இவர்கள் தாம்பத்ய உறவில் நாட்டமில்லாமல் உள்ளனர். மேலும் மன அழுத்தம், மன உளைச்சல், பயம் போன்றவற்றாலும் தாம்பத்ய எண்ணம் தோன்றுவதில்லை.

இவர்கள் முருங்கைப் பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும்.



***

கண்களை பாதுகாக்கும் முருங்கைப் பூ:


பொதுவாக காய்களையும், கனிகளையும் உட்கொள்ளும் நாம் காய், கனி உருவாவதற்கு காரணமான பூக்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. அப்படி நாம் ஒதுக்கிவிட்ட பூக்களுக்கு பல மருத்துவக் குணங்கள் உள்ளன.

முருங்கைப் பூவைப் பயன்படுத்தினால் கண்கள் குளிர்ச்சி பெறும். உடல் உறுப்புகள் சீரான முறையில் வளர்ச்சியடையும். அதிகமான பித்தத்தை போக்கும்.

வாழைப் பூ கை, கால் எரிச்சல், இருமல், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் போன்றவற்றை நிவர்த்தி செய்யும். மாதுளம் பூ பித்த வாந்தியை நிறுத்தும் தன்மை கொண்டது. இரத்த மூலம், உடல் வெப்பம் ஆகியவற்றைச் சீர் செய்யும்.

இது தவிர மாதுளம் பழத்தோல் சீதபேதி, வாய்ப்புண், இரத்த பேதி போன்றவற்றிற்கு மருந்தாகும். அகத்திப் பூ வெயில் காரணமாக ஏற்படும் பித்தத்தை அகற்றும். உடல் அழற்சியை விலக்கும்.

வேப்பம் பூ நீடித்த ஏப்பம், வாந்தி, குடற்பூச்சிகள் ஆகியவற்றை அகற்றும். புளியம் பூவைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் பித்தம் அகலும். நாவின் சுவையின்மை நீங்கும். வெங்காயப் பூ குன்ம நோய்களை போக்கும் மற்றும் குடல் தொடர்பான பல பிணிகளை நீக்கும்


***

மேலும் இப்பூவின் சில மருத்துவ குணங்கள் :

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது.

முருங்கை பூவை பாலில் வேகவைத்து- பிறகு அந்த பாலை நன்றாக வடிகட்டி சாப்பிட்டு வந்தால் கண்கள் குளிர்ச்சி அடையும் .

முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி பொடியாக்க காலையில் கஷாயம்-செய்து அதனுடன் பனைவெல்லத்தை கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும் , நரம்புகள் புத்துணர்ச்சி பெறும்.

முருங்கைப் பூவுடன் பசும்பாலை சேர்த்து நன்றாக காய்ச்சி காலை மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் கண்ணில் ஈரப்பசை அதிகமாகும் , கண் பார்வை குறைபாடு நீங்கும்.

கண்ணில் வெள்ளெழுத்து நோய் உள்ளவர்கள் முருங்கைப் பூ பொடியுடன் தேன்கலந்து அருந்தி வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் உருவாகும் வெண்படலமும் மாறும்.

"ஞாபக மறதி நோய்" மிக கொடிய நோயாகும் .இந்த ஞாபக மறதி நோயைப் போக்கி நினைவாற்றலை அதிகரிக்கும் சக்தி முருங்கை பூவிற்கு உண்டு.


முருங்கைப்பூவை நன்றாக அரைத்து பாலில்-கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்க்கண்டை சேர்த்து காலை மற்றும் மாலை என்று இரண்டு வேளையும் சாப்பிட்டு வந்தால் நமது நினைவாற்றல் அதிகரிக்கும்.

முருங்கை பூவை நிழலில் உலரவைத்து பொடியாக்கி தினமும் கஷாயம் செய்து காலை மாலை என்று இரண்டு வேலையும் அருந்தி வந்தால் உடலில் இருக்கும் பித்தம் குறைந்து, உடலின் அசதி நீங்கி உடல் நிலை சீரடையும் .

முருங்கை பூவை நன்றாக அரைத்து பசும் பாலில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டை கலந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். நீர்த்துப்போன விந்து கெட்டியாகும் .


***

மேலும் ஒரு வீடியோ




***
நன்றி நக்கீரன் , தமிழ் தாமரை , .....
***



"வாழ்க வளமுடன்"

வாழைப்பூ மருத்துவ குணங்கள் !!!




இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூவூம் ஒவ்வொரு விதமான அழகையும் மருத்துவக் குணங்களையும் கொண்டுள்ளது.


வாழைப்பூ மருத்துவ குணம் கொண்ட பூ. வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை கோளாறுகளுக்கும் அருமருந்து. இதில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் தெரிந்த விஷயம் தான். அதில் உடம்புக்கு தேவையான ‘பி’ வைட்டமின் கிடைக்கிறது. இதனால் பல வியாதிகளும் குணமாகும்.


நம் முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை முக்கிய இடம்பெற்றிருக்கும். வாழையின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணம் கொண்டுள்ளன.


வாழையிலையில் சாப்பிடும் போது ஆரோக்கியத்தைத் தருவதுடன் ஆயுளையும் அதிகரிக்கச் செய்கிறது.

குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். வாழைப்பூ எந்த அளவுக்கு நமக்குப் பயன்படுகிறது என்பதற்கு இதுவே மிசச் சிறந்த சான்று.

வாழைப்பூ மூலஇரத்தம் மாபிரமி வெட்டைபித்தம்
கோழைவயிற் றுக்கடுப்பு கொல்காசம் - அழியனல்
என்னஎரி கைகால் எரிவுத் தொலைத்துடலில்
மன்னவளர்க் குந்தாது வை

(அகத்தியர் குணபாடம்)

வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.

சர்க்கரை நோயாளிகளுக்கு

சர்க்கரை நோயை சித்த மருத்துவத்தில் மதுமேக நோய் என்பார்கள்.

குறிப்பாக தென்னிந்தியாவிலும், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்பவர்களில் 60 சதவீதத்திற்கு மேல் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்னர். சர்க்கரை நோய்க்கு மூலகாரணம் நம் உணவு முறையே.

தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்கள் கிடைப்பதில்லை. இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.


***

இரத்த மூலம்

மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். இதனை இரத்த மூலம் என்கிறோம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்துவந்தால் இரத்த மூலம் வெகுவிரைவில் குணமாகும்.


***

உடல் சூடு

உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.


***

வயிற்றுக் கடுப்பு நீங்க

சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.


***

பெண்களுக்கு

பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.


***

வெள்ளைப்படுதல்

வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது. இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும்.


***

கைகால் எரிச்சல் நீங்க

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.


***

இருமல் நீங்க

வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ இரசம் செய்து அருந்திவந்தால் இருமல் நீங்கும்.


***

தாது விருத்திக்கு

வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டுவந்தால் தாது விருத்தியடையும்.


***

மலட்டுத்தன்மை நீங்க

சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.


***


சில முக்கிய தகவல்கள் :

வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து சாப்பிட்டால் கை கால் எரிச்சல் குணமாகும்.


தீக்காயம் , வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.
வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.


சிறுநீரகத்தில் உள்ள கல் கரைய வாழைச்சாறு அதிகமாக குடிக்கவும்



***
thanks நக்கீரன்
***





"வாழ்க வளமுடன்"

தைரியத்தைத் தரும் உணவு முறைகள் !





உடல் நிலை தொடர்பாகவும் குடும்பச் சூழ்நிலை வேலை கடன் போன்றவை தொடர்பாகப் பிரச்சினை உள்ளவர்களும் இளமையாக வாழ உறுதி கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை செலுத்துவதுதான் ஒருவர் இளமையாக செயல்துடிப்புடன் வாழ்கிறார் என்பதற்கு அர்த்தம்.


அடிக்கடி தலைவலி வயிற்றுக் கோளாறுகள் இரத்தக் கொதிப்பு பசியின்மை முதலியவைகளில் ஏதேனும் ஒன்று இருக்கிறதா?


அப்படியானால் உணவில் மாற்றத்தைக் கொண்டுவந்தால் உங்கள் மனமும் உடலும் புதுப்பிக்கப்பட்டு பிரச்னைகளுக்கும் நோய்களுக்கும் வழி கண்டுபிடித்து விடலாம்.


1. முதலில் மனக் கவலையை அகற்ற காலையில் ஏதாவது ஒரு பழச்சாறு அல்லது பால் சேர்த்த தேநீர் அருந்துங்கள். மதியமும் இரவு சாப்பாட்டிற்கு முன்பும் பழச்சாறோ அல்லது ஒரு கப் தயிரோ சாப்பிடுங்கள். மற்ற உணவு வகைகளைக் குறைவாகச் சேர்த்துக் கொள்ளுங்கள்.



2. அன்னாசிப்பழம் , பப்பாளி , கராமணி போன்ற நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சாப்பிடுங்கள்.



3. இனிப்புப் பழங்களைக் குறையுங்கள். பேரீச்சம்பழம் தேன் உலர் திராட்சை என்ற கிசுமுசுப் பழம் போன்றவற்றை இனிப்பு தேவை எனில் சேர்த்துக் கொள்ளுங்கள். உணவில் ஜீனி அதிகம் சேரும்போது குளுகோஸை ஒவ்வொரு செல்லுக்கும் அனுப்பும் குரோமியம் உப்பு இரத்தத்தில் குறைந்து போய் விடுகிறது. அதே நேரத்தில் இரத்தத்தில் குளுகோஸ் அளவும் உயராமல் பார்த்துக் கொள்ளும் தன்மையுடையது குரோமியம். எனவே தினமும் பத்து பாதாம் பருப்புகளோ அல்லது ஒரு கப் கொண்டைக் கடலையோ தவறாமல் சாப்பிடுங்கள். உடல்நலப் பிரச்னைகளையும் மனம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளையும் இந்த இரண்டு உணவுகளும் மிக உறுதியாகக் கட்டுப்படுத்திவிடும். நீங்கள் அமைதியாக இருந்தால் போதும். பிடிவாத குணமுள்ள குழந்தைகளுக்குத் தினமும் பாதாம் பால் தயாரித்துக் கொடுப்பது மிகவும் சிறந்த மருந்தாகும்.



4. உடலில் சேரும் விஷப்பொருட்கள் உடனுக்குடன் அகன்றால் மனம் தெளிவாக இருக்கும். எனவே ஓட்ஸ்மீல் சோயா மொச்சை வேர்க்கடலை இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பட்டாணிகூட நல்லது. முட்டைக்கோஸ் சூப் கூட சாப்பிடலாம். இதன் மூலம் உடலில் பான்தோனிக் அமிலம் குறையாமல் இருக்கும். பான்தோனிக் அமிலம் அளவு உடலில் குறையாமல் இருப்பதால் மனம் அமைதியாக இருக்கும். உடலிலும் விஷப் பொருட்கள் அதிகரிக்காமல் கட்டுக்குள் இருப்பதால் உடல் நோய்கள் படிப்படியாகக் குணமாக ஆரம்பிக்கும்.



5. அட்ரீனல்களும் தைராய்டு சுரப்பிகளும் சீராக இயக்க போதுமான அளவு அஸ்கார்டிக் அமிலம் தேவை. எலுமிச்சம் பழ ஜூஸ் சாப்பிடலாம். முருங்கைக்கீரை கொய்யா சோயா மொச்சை போன்றவை தினமும் இடம்பெற்றால் உடலுக்குத் தேவையான வைட்டமின் நும தங்கு தடையின்றிக் கிடைத்து உடலும் உள்ளமும் அமைதிபெற்று நோய்கள் குணமாக ஆரம்பிக்கும்.



6. பணப்பிரச்னையாலும் உடல்நலப் பிரச்னையாலும் இரத்தம் கெட்டியாகி மாரடைப்போ பக்கவாதமோ ஏற்படலாம். எனவே சுக்குக் காப்பி அருந்தி வரவும். உணவில் இஞ்சி வெள்ளைப்பூண்டு தவறாமல் சேர்க்கவும். முலாம்பழ ஜூஸ் தினமும் அருந்தவும். இல்லையெனில் 50 கிராம் வெங்காயத்தை ஜூஸாக அருந்தி வரவும். இதனால் இரத்தம் கெட்டியாகாமல் ஓடிக்கொண்டே இருக்கும். வெள்ளை இரத்த அணுக்களும் சுறுசுறுப்பாக இருந்து நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.


7. பிடிக்கவில்லை போரடிக்கிறது என்று வெறுக்காமல் காரெட் ஜீஸ் சாத்துக்குடி ஜூஸ் போன்றவற்றை மூன்று தடவையாவது அருந்திவாருங்கள்.



8. காபி தேநீர் முதலியவற்றைக் குறையுங்கள். மது மருந்து முதலியவற்றைத் தவிருங்கள். இதனால் மனநலமும் உடல் நலமும் பாதுகாக்கப்பட்டு விரைந்து குணமாவீர்கள்.



9. வாரம் மூன்று நாள் மீன் உணவு சாப்பிடுங்கள்.



10. மேற்கண்ட உணவுமுறைகளால் உடலும் மனமும் புதுப்பிக்கப்பட்டு விடுவதால் உடல் மனம் தொடர்பான எல்லா விதமான பிரச்னைகளும் அகல எளிதாக வழி பிறக்கும். தைரியமாக நம்பிக்கையுடன் வாழ்வீர்கள்



***
thanks அதிகாலை
***




"வாழ்க வளமுடன்"

நாம் உணவை எவ்வளவு, எவ்வாறு உண்பது?



நாம் உண்ணும் உணவு கட்டுப்பாடன்றி இருந்தால் அதுவே நமக்கு ஊறாக அமையும். இன்றைய உணவு நாளைய பிணி என்ற நிலை மாறி உண்ணும் உணவையே நமக்கு நிவாரணியாக மாற்றியைமைக்க சில வழிகாட்டுதல்கள்.

***

எவ்வளவு, எவ்வாறு உண்பது?

உணவு உண்பதில் பின்வரும் நடைமுறைகளைக் கவனிப்பது நலம் பயக்கும்

•உணவு உட்கொள்ளும் நேரம்
•உண்ணும் முறை
•உண்ணும் அளவு
•சமைக்கும் முறை
•உணவின் வகைகள்


***

உணவு உட்கொள்ளும் நேரம்

உணவை அதற்குரிய சரியான வேளைகளில் உட்கொள்ள வேண்டும். நேரம் தவறிய உணவு முறைகள் உடல் மற்றும் மன நலத்துக்கு ஊறு விளைவிக்கலாம். தங்கள் அலுவல் முறைகளைக் கருத்தில் கொண்டு உண்ணும் நேரத்தில் ஒரு ஒழுங்கு முறையைக் கடைபிடிக்க
வேண்டும்


***

உண்ணும் முறை

1. உண்ணும் முறையில் தனிக் கவனம் வேண்டும். உணவு உண்பதில் அவசரம் காட்டக் கூடாது.


2. நன்கு மென்ற பின்னரே விழுங்க வேண்டும்.


3. ஒரு நாளில் எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் தண்ணீர் அருந்த வேண்டும்.

4. உணவை அவசர அவசரமாக விழுங்குவதும் அதிகமாக உண்பதும் உடல் நலத்துக்கு ஊறு விளைவிப்பதாகும்.


***

உண்ணும் அளவு

ஒவ்வொருவரும் தனது வயது, உயரம், எடை, செயல்பாடுகள், வேலை, விளையாட்டு, கடின உழைப்பு, உடற்பயிற்சி முதலியவற்றைக் கருத்தில் கொண்டு தனக்கு தேவையான அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.


வயிறு நிரம்ப உண்பதற்குப் பதில் ஒரளவுக்குப் போதும் என்பது வரை உண்பதே சிறந்தது. உணவில் தானிய வகைகளையும் காய்கறிகளையும் சோ்த்துக் கொள்வது நலம்.

***

சமையல் முறை

நாம் தோ்ந்தெடுக்கும் உணவுகள் எவ்வளவு சிறந்ததாக இருப்பினும் சமைக்கும் முறை நல்லதாக அமையாவிடில் அதுவே மோசமாகிவிடும். எனவே உணவு சமைக்கும் போது தனிக் கவனம் செலுத்தவேண்டும்.

***

சமைக்கும்போது கவனிக்க வேண்டியவை.

1.காய்கறிகளை நிறைய உபயோகிக்க வேண்டும்

2.அவித்தல், வேகவைத்தல் முதலியவை சாலச் சிறந்தது

3.வறுவல் மற்றும் பொரியல் எப்போதாவது ஒரு முறை மட்டும் செய்க.

4.ஒரு முறை பொரித்த எண்ணெய் மீண்டும் பயன்படுத்துவதைத் தவிர்க்க.

5.மிச்சம் மீதியை ஃப்ரிட்ஜில் வைத்து அதனை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது உடல் நலத்துக்கு கேடு.

6.சமையலில் எண்ணெய், தேங்காய் முதலியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும்

7.ஊறுகாய், அப்பளம் முதலியவை தினசரி உபயோகிப்பதைத் தவிர்க்கவும்.

***

உடலுக்கு உகந்த உணவுகள்

தானிய வகைகள்

அரிசி, கோதுமை முதலியவை நல்ல தானிய வகை உணவினங்களாகும். கோதுமையை அவற்றின் தவிட்டுடன் உபயோகிப்பதே நல்லது. கோதுமையின் தவிட்டை சுத்திகரித்து உருவாக்கப்பட்ட மைதா மாவு உடல் நலத்துக்கு உகந்ததல்ல.


***

பயிறு மற்றும் பருப்பு வகைகள்

கடலை, பயிறு மற்றும் பருப்பு வகைகள் நல்ல ஆரோக்கிய உணவுகளாகும். கடலையைத் தோலுடன் உண்பதே நல்லது. உடலுக்குத் தேவையான புரதச் சத்துக்கள் பயிறு மற்றும் பருப்பு வகைகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்க.


***

காய்கறிகள் கீரைகள் மற்றும் பழ வகைகள்

உடலுக்கு மிகவும் அத்தியவசியமான தாதுக்கள், மற்றும் ஃபைபர் சத்துக்கள் காய்கறிகளில் உள்ளன. தினசரி உணவில் அவற்றைச் சோ்த்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் மூன்று முறையேனும் கீரைகளை உணவில் சோ்த்துக் கொள்ள வேண்டும். பழவகைகளை தினமும் உட்கொள்க.


***

பால்

பாலில் நிறைய புரோட்டீன் உள்ளது. வளரும் குழந்தைகளுக்கு பாலும் பால் உற்பத்திப் பொருட்களும் சிறந்த உணவாகும். ஆனால் வயது முதிர்ந்தவர்கள் பாலை குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

***

சர்க்கரை, நீரிழிவு நோயாளிகள் கவனிக்க

1.இனிப்பு உண்பதைத் தவிர்க்க.

2.எண்ணெய், தேங்காய் முதலியவை உபயோகிப்பதில் கட்டுப்பாடு வருத்தவும்

3.சரியான நேரத்தில் உண்ணவும்

4.வறுவல் பொரியல் முதலியவை உண்பதை விட்டு விடவும்

5.பழ வகைகள் தினமும் ஒன்று அல்லது இரண்டுக்கு அதிகம் வேண்டாம்

6.காய்கறிகள், கீரைகள் உணவில் சோ்த்துக் கொள்க.

7.புரோட்டா, பேக்கறி ரொட்டிகள், கேக், ஸாஃப்ட் டிரிங்க்ஸ், முட்டையின் மஞ்சள் கரு முதலியவற்றை தவிர்த்து விடவும்.

8.உப்பின் அளவைக் குறைக்கவும்.

9.தவிட்டுடன் கூடிய தானியங்களை உட்கொள்ளவும்

10.பாலின் அளவைக் குறைக்கவும். தினமும் 250 மில்லி அளவில் அதிகமாக வேண்டாம்.

11.உணவின் அளவில் கட்டுப்பாடு தேவை

12.எட்டு முதல் பன்னிரண்டு கோப்பைகள் வரை நீர் அருந்தவும்.

13.டீ, காஃபி அதிகமாகக் குடிக்கக் கூடாது

சர்க்கரை, கொழுப்பு மற்றும் இனிப்பு பதார்த்தங்களை எல்லா வயதினரும் குறைப்பதே சிறந்தது.



***
நன்றி: ஆழியர் அறிவு திருக்கோவில் வெளியீடு
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "