...

"வாழ்க வளமுடன்"

24 நவம்பர், 2010

வைட்டமின் E உபயோகத்தால் உண்டாகும் நன்மைகள் !

மனித உடலுக்கு சக்தியைக் கொடுப்பது வைட்டமின்கள்தான். உணவின் மூலமே இந்தவைட்டமின்கள் அதிகளவு உடலுக்குக் கிடைக்கிறது. வைட்டமின்கள் மொத்தம்பதின்மூன்று உள்ளன. இவற்றில் கொழுப்பில் கரையும் வைட்டமின்கள், நீரில்கரையும் வைட்டமின்கள் என இரு வகைகள் உள்ளன.
கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் உடலின் தேவைக்கு ஏற்பஉபயோகப்படுத்தப்பட்டு, மீதமுள்ளவை கொழுப்பு பொருட்களாக கல்லீரலில்சேமித்து வைக்கப்படுகிறது. ஆனால் நீரில் கரையும் வைட்டமின்கள் உடலின்தேவைக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளப்பட்டு மீதி கழிவுகள் மூலம் வெளியேற்றப் படுகிறது.


***


கொழுப்பில் கரையும் வைட்டமின்கள்


1. வைட்டமின் ஏ


2. வைட்டமின் டி


3. வைட்டமின் இ


4. வைட்டமின் கே


***


வைட்டமின் E உடலில் கலக்கும் முறை


வைட்டமின் E உள்ள உணவுப் பொருட்களை உண்ணும் போது, அவை சிறுகுடலில் உள்ளஉறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்பட்டு அடிபோஸ் திசுக்களில் சேகரிக்கப்படுகிறது.பின் அவை தேவைக்கேற்ப உபயோகிக்கப்படுகிறது.

**


வைட்டமின் E அதிகமுள்ள உணவுப் பொருட்கள்


1· பருத்தி விதை எண்ணெய்


2· சோள எண்ணெய்


3· சூரியகாந்தி எண்ணெய்


4· சோயாபீன்ஸ்


5· முட்டைகோஸ்


6· சிறுகீரை


7· ஆப்பிள் விதைகள்


8· பட்டாணி கடலை


9· ஈஸ்ட்

*

10. பால் : ஜீரணமானவுடன் புரோட்டீன் எளிதில் கிடைத்துவிடும்.11. சோயா : உடல் வளர்ச்சிக்கும் தசைச் செல்கள் பெருகவும் முழுமையான அளவு புரோட்டீன் இதில்தான் உள்ளது.12. தானியங்கள் : எளிதில் கிடைக்கக் கூடிய உயர் ரக புரோட்டீன் இவற்றில் உள்ளன.13. காளான் : அமினோ அமிலம் அதிகம் உள்ளது. உடலுக்கு மிக நல்ல புரோட்டீனைத் தரக் கூடியது. (அலர்ஜி உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.)14. நிலக்கடலை : நல்ல புரோட்டீன், உள்ளது. ஆனால் கொழுப்பு அதிகம் உள்ளது. அளவாகப் பயன்படுத்தல் வேண்டும்.15. மீன், பருப்பு வகைகளைப் பொரித்து உண்பதை விட வேகவைத்து உண்பதே மிகச்சிறந்தது. வைட்டமின் 'ஈ' (E) சத்து இவற்றில் அதிகம் உள்ளது. சமைத்தவுடன் சாப்பிடுவது சாலச்சிறந்தது.

*

7. உடலில் அதிக தசைகளை பலமாக்க, மலட்டுத் தன்மையை நீக்க, அமினோ அமிலம் பெற கீரை உதவும்.


***


வைட்டமின் E-ன் உபயோகத்தால் விளையும் நன்மைகள்


1· இரவில் கண்டதசையில் எற்படும் தசைப்பிடிப்பு (Nocturnal Muscle cramps) - இது வைட்டமின் E சத்துள்ள உணவுகளை உட்கொள்வதால் குறையும்.


*

2· ரத்த நாளத்தில் கொழுப்பினால் ஏற்படும் அடைப்புகளை கரைக்கும் தன்மை (Atherosclerosis) வைட்டமின் E க்கு உண்டு.

*

3· மார்பகத்தில் ஏற்படும் நார்த்திசுக் கட்டிகளை (Fibrocystic breast disease) கரைக்கும் தன்மை வைட்டமின் E க்கு உண்டு.***

வைட்டமின் E குறைவினால் உண்டாகும் நோய்கள்:


தசைவாதம் (Muscular dystrophy)


இன்றைய உலகில் பெரும்பாலான குழந்தைகள் தசைவாதம் என்னும் நோயால் அதிகம்பாதிக்கப்பட்டுள்ளனர். வைட்டமின் E சத்து குறைவதால் தசைகளில் உள்ளகொழுப்புச் சத்து குறைந்து போகிறது. இதனால் தசைவாதம் உண்டாகிறது. இந்நோய் தீருவது மிகவும் அரிதாகும்.


**


இரத்தச் சோகை (Haemolytic anaemia)


வைட்டமின் E சத்து குறைவதால் இரத்த சிவப்பணுக்கள் அழிந்துபோகின்றன. இதனால் இரத்தச் சோகை உருவாகிறது. இரத்தச் சோகையைப் போக்க வைட்டமின் E சத்து அதிகமுள்ள பொருட்களை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


**

கல்லீரல் தாபிதம் (Dietary Hepatic necrosis)


கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிவதால் இந்நோய் வரக்கூடும். எனவே இவ்வகைநோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ள வைட்டமின் E கலந்த உணவை உட்கொள்ளவேண்டும்.


வைட்டமின் E சத்தானது மலட்டுத்தன்மையை குறைத்து மகப்பேறு ஏற்படச் செய்யும். இந்த சத்து குறையுமானால் மலட்டுத்தன்மை உண்டாகும்.


அண்மையில் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் மூளையில் உண்டாகும் திடீர் அதிர்வை தடுக்கவும் நரம்பு மண்டலத்தைப் பாதுகாக்கவும் வைட்டமின் E மிகவும் தேவையென கண்டறிந்துள்ளனர்.***
thanks இணையம்
***


"வாழ்க வளமுடன்"

மூளைக்குத் தேவை கொலஸ்ட்ரால் !

கொலஸ்ட்ரால் என்றாலே எல்லாரும் பயப்படுகிறார்கள். அது இதயத்திற்கு ஆபத்தானது என்பது என்னவோ உண்மைதான்.அதே சமயம் அது மூளைக்கு மிகவும் அவசியம் என்பதை மறந்து விடுகிறோம் என்று ஸ்வீடிஷ் மருத்துவ பல்கலைக்கழக அறிஞர் எர்னெஸ்ட் அரீனாஸ் கூறுகிறார்.

*

அவர் நரம்பு வேர்செல்களை சோதனைத் தட்டுகளில் வளர்த்து வந்தபோது அதில் டோப்பமைன் என்ற கெமிக்கலை உருவாக்கும் நரம்பு செல்கள் கொலஸ்ட்ரான் வழிப்பொருளாகிய ஆக்ஸி கொலஸ்ட்ராலை வழங்கியபோது படு வேகமாக வளருவதைப் பார்த்தார்.

*

டோப்பமைன் என்ற கெமிக்கலை உற்பத்தி செய்யும் நரம்பு செல்கள் மூளையில் பற்றாமல் போகும்போது பார்க்கின்சன் என்ற நரம்புத் தளர்ச்சி நோய் பீடிக்கிறது. டோப்பமைன் செல்கள் சராசரி உற்சாகமான வாழ்க்கைக்கும் மிக அவசியம்.

*

அதன் பற்றாக்குறையால்தான் வன்முறை உணர்வுகள் தோன்றுகின்றன. திருப்தியற்ற மனக் கசப்புக்குக் காரணம் டோப்பமைன் பற்றாக்குறைதான் என்று பல மெடிக்கல் தகவல்கள் சொல்கின்றன.

*

கொலஸ்ட்ரானிலிருந்து ஆக்சி கொலஸ்ட்ரால் உருவாகிறது. கொலஸ்ட்ராலுக்கு பதிலாக ஆக்சி கொலஸ்ட்ராலை எடுத்துக்கொள்ளும் மருத்துவம் நல்ல பயனளிக்கும் என்பது எர்னெஸ்ட் அவர்களின் கணிப்பு.***
by-முனைவர் க.மணி
thanks ஜயா
***"வாழ்க வளமுடன்"

ஆரஞ்சு பழத்தின் மருத்துவ குணங்கள் !

பழங்கள் இயற்கையின் அருட்கொடையாகும். பழங்கள்தான் மனிதர்களுக்கு சமைக்காத உணவு. நன்கு கனிந்த பழங்களில் மனிதனுக்குத் தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்துள்ளன. நோயின் பிடியில் பாதிக்கப்பட்டவர்களும், நீண்ட ஆரோக்கியத்தை பெற விரும்புகிறவர்களும் கண்டிப்பாக தினமும் பழங்களை சாப்பிட வேண்டும்.

சிலர் பழங்களை சாப்பிடாமல் ஜூஸ் செய்து சாப்பிடுகின்றனர். இதில் பழங்களின் முழுமையான சத்துக்கள் உடலுக்கு கிடைக்காமல் போய் விடுகின்றன. முடிந்தவரை பழங்களை நேரடியாக உண்பதே நல்லது.

*

பழங்கள் ஒவ்வொன்றும் பல மருத்துவப் பயன்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த இதழில் நமக்கு மிகவும் பரிச்சயமான பழமும், எல்லோரும் விரும்பி சாப்பிடும் பழமுமான ஆரஞ்சு பழத்தின் பயன்களைப் பற்றி அறிந்துகொள்வோம்.

*

ஆரஞ்சு பழத்திற்கு கமலா பழம் என்ற வேறு பெயரும் உண்டு. மஞ்சளும் சிவப்பும் கலந்து பந்து போல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் பழமாகும். அதன் மேல் தோல் நன்கு கனமாக காணப்படும். ஆனால் எளிதில் இதன் தோலை உரித்துவிடலாம்.

*

ஆரஞ்சு பழத்தின் நறுமணம் அனைவரையும் கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டது.

*

ஆரஞ்சு பழத்தில் உடலுக்குத் தேவையான அனைத்து உயிர்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

100 கிராம் எடை கொண்ட பழத்தில்

நீர்ச்சத்து - 88.0 கிராம்

புரதம் - 0.6 கிராம்

கொழுப்பு - 0.2 கிராம்

தாதுப் பொருள் - 0.3 கிராம்

பாஸ்பரஸ் - 18.0 மி.கிராம்

சுண்ணாம்புச் சத்து - 24.0 மி.கிராம்

கரோட்டின் - 1100 மி.கிராம்

சக்தி - 53.0 கலோரி

இரும்புச் சத்து - 0.2 மி.கிராம்

வைட்டமின் ஏ - 99.0 மி.கிராம்

வைட்டமின் பி - 40.0 மி.கிராம்

வைட்டமின் பி2 - 18.0 மி.கிராம்

வைட்டமின் சி - 80 மி.கிராம்

ஆரஞ்சு பழத்திலுள்ள மிக முக்கிய வைட்டமின் - வைட்டமின் சி. இது மனித உடலில் இணிடூடூச்ஞ்ஞுண என்ற வளர்ச்சி உண்டாக்கக்கூடிய சத்து கிடைக்கச் செய்கிறது. இந்த இணிடூடூச்ஞ்ஞுண வளரக்கூடிய எலும்புகள் தசை நார்கள், ரத்தக் குழாயின் உட்புறச் சுவர் இவற்றின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.


*

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி தவிர மிக முக்கியமாக கருதப்படுவது ஆன்டி ஆக்சிடென்ட் எனப்படும் சத்தாகும். இது புற்றுநோயைத் தடுக்கக்கூடிய மிக முக்கிய காரணியாகும். ஆரஞ்சில் மொத்தம் 170 கடதூtணிணதtணூடிஞுணtண் மற்றும் 60 ஊடூச்திணிணணிடிஞீஞுண் உள்ளதாக அறிவியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் ஃடிட்ணிணணிடிஞீண் என்ற ரத்தத்தில் கொலஸ்ட்ராலைக் குறைக்கக்கூடிய மிக முக்கிய பொருள் ஆரஞ்சில் உள்ளது என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.

*

ஆரஞ்சு பழத்திற்கு உரிய நிறத்தைக் கொடுக்கக்கூடிய பொருள் ஆஞுtச்-ஞிணூதூணீtணிதுச்ணtடடிண இது நுரையீரல் புற்றுநோயைத் தடுக்க வல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


***

மருத்துவ குணங்கள் :குழந்தை வளர்ச்சிக்கு

குழந்தைகளின் வளர்ச்சி சீராகவும் ஆரோக்கியமாகவும் இருக்க ஆரஞ்சு மிகவும் உதவுகிறது. இப்பழத்தை குழந்தைகளுக்கு நேரடியாகவோ அல்லது சாறு எடுத்தோ கொடுத்து வந்தால் குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் குழந்தைகள் எப்போதும் சுறுசுறுப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.

**

தூக்கத்தை வரவழைக்கும் மாமருந்து

சிலருக்கு படுக்கைக்கு சென்றவுடன் தான் நேற்றைய, நாளைய பிரச்சனைகள் மனதில் தலைதூக்கும். இதனால் குளிர் சாதன அறையில் நல்ல படுக்கையில் படுத்தாலும் கூட தூக்கம் வராமல் தவிப்பார்கள். அதிகளவு தூக்கம் தரக்குடிய மருந்துகளை சாப்பிட்டாலும் தூக்கமின்றி காணப்படுவார்கள். இவர்கள் இரவு படுக்கைக்கு செல்லும் முன் ஆரஞ்சு பழச்சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் சுகமான நித்திரை காணலாம்.

**

மெலிந்த உடல் பலமடைய

பலர் மாதக்கணக்கில் நோயின் தாக்குதலுக்கு ஆட்பட்டு உடல் மெலிந்து காணப்படுவார்கள். இவர்களுக்கு இரத்தச் சோகை உண்டாகியிருக்கும். இதனால் எப்போதும் சோர்ந்தே காணப்படுவார்கள். உடலுக்கு ஊட்டம் தரும் மருந்துகள் டானிக்குகள் என எதைச் சாப்பிட்டாலும் உடல் தேறாமலேயே இருப்பார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு மிகவும் ஏற்ற எளிய டானிக் தான் ஆரஞ்சு பழச்சாறு.


இப்பழத்தின் சாறு எடுத்து அதில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இருவேளையும் பருகி வந்தால் உடல் தேறும். தேகம் சுறுசுறுப்படையும். புத்துணர்வு பெறும். புது இரத்தம் விருத்தியாகி நல்ல உடல் நிலைக்கு கொண்டுவரும்.


இந்த ஆரஞ்சு பழச்சாற்றினை ஒரு மண்டலம் தேன் கலந்து அருந்தி வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் பலமடையும். நரம்புகள் பலம் பெறும்.


**

மேனிக்கு அழகூட்ட

தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள தேவையற்ற அசுத்த நீர் வியர்வையிலும் சிறுநீரிலும் வெளியேறும். இதனால் சருமம் பளபளப்புடனும், நோயின் தாக்குதலின்றியும் இருக்கும். தோல் சுருக்கங்கள் நீங்கும். தலைமுடி உதிர்வதைத் தடுக்கும்.

**

பெண்களுக்கு

மாதவிலக்குக் காலங்களில் அதிக உதிரப் போக்கால் சிலர் சோர்ந்து காணப்படுவார்கள். இதனால் அதிக மன உளைச்சல், எரிச்சல் கொள்வார்கள். இவர்கள் ஆரஞ்சு பழச் சாற்றில் காய்ச்சிய பால் அல்லது தேன் கலந்து அருந்தி வந்தால் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறலாம். ஆரஞ்சு தினமும் உண்பதால் முகத்தில் அழகு கூடும், அதிக தாகத்தைத் தணிக்கும் வாய் நாற்றத்தைப் போக்கும், உடல் வறட்சியை நீக்கும், உடல் சூட்டைத் தணிக்கும், தலைச் சுற்றல் நீங்கும்

**

பல் உறுதிபட

ஆரஞ்சு பழத்தின் தோலை உலர்த்தி, ஓமம், இந்துப்பு, சுக்கு சேர்த்து இடித்து பல்பொடியாக்கி தினமும் அதில் பல் தேய்த்து வந்தால் பற்கள் பளிச்சிடும்.


***

ஆரஞ்சுச் சாறு:
1. தலைவலி _ காய்ச்சலில் ஆரம்பித்து இதயநோய் வரை அத்தனை பிரச்னைகளுக்கும் ஆறுதல் தரும் தோழன்... ஆரஞ்சு.

*

2. பொதுவாக நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உள்ள ஸ்டார்ச் செரிமானமாகி, சர்க்கரைச் சத்தாக நம் உடம்பில் சேர்கிறது. ஆரஞ்சுப் பழம் ஒட்டுமொத்தமாக சர்க்கரை (Sugar) யின் உறைவிடமாகவே இருக்கிறது. இதனால்தான் க்ளுகோஸ் மாதிரி இன்ஸ்டன்ட் எனர்ஜி அளிக்க முடிகிறது ஆரஞ்சு ஜூஸால்.

*

3. டைபாய்டு காய்ச்சல், டி.பி., அம்மை நோய்களால் படுக்கையில் இருப்பவர்களுக்கு திரவ ஆகாரம்தான் சிறந்தது. திரவ ஆகாரங்களில் சிறந்தது... ஆரஞ்சு ஜூஸ்.

*

4. தொண்டையில் புண், தொண்டை வறட்சி போன்ற சின்னப் பிரச்னைகளுக்கும் நல்ல பலனைத் தரும் ஆரஞ்சுச் சாறு. உப்புத்தன்மை அதிகமாகி உடல் நச்சுத் தன்மையாகும்போது சமநிலைப்படுத்தும் (Balance) சக்தியும் ஆரஞ்சுப் பழத்துக்கு இருக்கிறது.

*

5. டிஸ்பெப்ஸியா (Dyspepsia) எனப்படும் பசியின்மை நோய்க்கு அசத்தலான மருந்து ஆரஞ்சு. செரிமானச் சுரப்பிகளை செல்லமாகத் தட்டிக் கொடுத்து துரிதப்படுத்தி, சாப்பிடத் தூண்டும் சக்தி ஆரஞ்சுக்கு உண்டு. வைட்டமின் சி மற்றும் கால்சியம் குறைபாட்டினால் சிதிலமடைந்து போன பல் அமைப்பை சீரமைப்பதிலும் அனுபவம் வாய்ந்த கொத்தனார் ஆரஞ்சு.

*

6. பழத்தின் தோலை நீர் சேர்த்து மைய அரைத்து களிம்பு போல தயாரித்து வைத்துக் கொள்ளலாம். முகப்பருக்களை விரட்டியடிக்கும் வில்லனாகச் செயல்படும் இந்தக் களிம்பு.

*

7. இதயத்துக்கு ரத்தத்தைக் கொண்டு செல்கிற பாதைகளில் வறட்சி, வெடிப்பு ஏற்படுவதை கரோனரி இங்கேமியா என்பார்கள். இதயத்தின் வலுவைக் குறைக்கும் இந்த நோய்க்கும் அருமையான மருந்து ஆரஞ்சுச் சாறு.

*

8. ஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக உடலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்துவிடுகிறது.

*

9. நோயாளிகளுக்கும், தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கும் ஆரஞ்சுப் பழச்சாறை கொடுக்கலாம். கைக்குழந்தைகளுக்கு 50 முதல் 125 மிலி வரை கொடுக்கலாம்.


*

10. ஆரஞ்சு பழம் பல்சொத்தையை தடுக்கும். பால் அருந்த விரும்பாதவர்கள் ஆரஞ்சுப் பழச்சாறை சாப்பிடலாம். இதனால் பாலில் கிடைக்கும் கால்சியச் சத்துபோல் ஆரஞ்சிலும் கிடைக்கும்.

*

11. ஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.


*

12. மேலும் சளி, ஆஸ்துமா, காசநோய், தொண்டைப்புண் முதலியவை குணமாக 125 மிலி ஆரஞ்சு சாறுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அருந்தி வந்தால் நுரையீரலில் உள்ள கோளாறுகள் நீங்கும்.


***
thanks cnn
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"

மூல நோயாளிகளுக்கு இயற்கை வைத்தியமும் !

1. இரத்தமூலத்திற்கு பசும்பால் கறந்தவுடன் மேலிருக்கும் நுரையை எடுத்து எலுமிச்சை சாறு கலந்து காலை, மாலை இருவேளை பருகினால் 3லிருந்து 7 நாட்களுக்குள் இரத்தப் போக்கு நிற்கும்.
2. நீண்ட நாள் இரத்த மூலத்திற்கு தயிரில் வெங்காயத்தை ஊறவைத்து தினம் இருவேளை சாப்பிட்டால் நல்லது.

*

3. எல்லா வகையான மூலத்திற்கும் தொட்டால் சிணுங்கி, செடி, இலை, தண்டு, வேர் இவைகளை கசாயமாக செய்து அருந்தலாம். வலி, வீக்கம் குறையும்.

*

4. எல்லா வகையான மூலத்திற்கும் கிரந்தநாயகம் இலையை பருப்புடன் சேர்த்து கூட்டுசெய்து சாப்பிட்டால் வலி, வீக்கம் இரத்தப்போக்கு தணியும்.

*

5. வெங்காய சாறுடன் நெய் அல்லது நாட்டுசர்க்கரை கலந்து பருகினால் விரைவில் குணம் பெறலாம்.

*

6. கொதிக்கும் நீரில் மாதுளம்பழ விதை சிலவற்றை போட்டு சிறிது நேரத்தில் இறக்கி தேநீர் போல் அருந்திவர விரைவில் குணம் பெறலாம்.

*

7. மூலம் வலி நீங்க சிறிதளவு பாலில் வாழைப்பழம் சேர்த்து கடைந்து ஜாம் போல் செய்து சாப்பிட்டு வர வலி நீங்கும்.

*

8. பாகற்காய் இலையை சாறெடுத்து மோருடன் கலந்து காலை, மாலை, பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

*

9. வலியுள்ள இடத்தில் முருங்கை இலையை அரைத்து பூசலாம்.

*

10. மாங்கொட்டையிலிருக்கும் விதையை பவுடராக்கி இரண்டு ஸ்பூன் வீதம் தினம் இருவேளைதேன் கலந்து சாப்பிடலாம்


***
by - Dr. க. வெள்ளைச்சாமி, RHMP, RSMP
நன்றி - கீற்று.
***
"வாழ்க வளமுடன்"

அலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி .....

அலர்ஜி நோய்களை குணப்படுத்தும் ஊசி மருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
பலவிதமான அலர்ஜி (ஒவ்வாமை) நோயினால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


ஒவ்வொரு அலர்ஜி நோயைகுணப்படுத்த தனித்தனி மருந்துகளை டாக்டர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒரே மருந்து மூலம் அனைத்து விதமான அலர்ஜி நோய்களையும் குணப்படுத்தும் ஊசி மருந்தை விஞ்ஞானி டாக்டர்உல்ப்கேங்க் ரென்னர் தலைமையிலான குழுவினர் கண்டு பிடித்துள்ளனர்.

*

இந்த மருந்தை தூசி, பூனை முடி, உள்ளிட்ட பல அலர்ஜி நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தி பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு சிகிச்சை பெற்றவர்களில் 42 சகிதம் பேர் நோயில் இருந்து குணமாகினர்.

*

இதே மருந்தை ஆஸ்துமா மற்றும் காய்ச்சலினால் அவதிப்பட்டவர்களின் உடலிலும் செலுத்தி சோதிக்கப்பட்டது. அவர்களுக்கும் அந்த நோய் குணமாகி விட்டது. இதை தொடர்ந்து இம்மருந்தை மார்க்கெட்டில் விற்பனைக்கு விடமுடிவு செய்யப்பட்டுள்ளது. இன் னும் 4 வருடத்தில் அம்மருந்து விற்பனைக்கு வரும் என விஞ்ஞானி டாக்டர்
ரென்னர் தெரிவித்துள்ளார்.

*

இதன் மூலம் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் அதில் இருந்து விரைவில் மீள முடியும்.


***

நன்றி - மாலைமலர்.
jun 2010

***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "