...

"வாழ்க வளமுடன்"

16 ஜனவரி, 2012

சாத்துக்குடி நம் உடலுக்கு புத்துணர்ச்சி :)


மனித உடலுக்கு நேரடியாக சத்துக்ளை கொடுப்பது பழங்கள் மட்டுமே. பழங்கள் எளிதில் சீரணமாவதற்கும், வாய், வயிறு, குடல் பகுதியில் உள்ள புண்களை ஆற்றுவதற்கும் ஏற்றவை.


உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதாவது புரதச்சத்து, வைட்டமின் சத்துக்கள், கால்சியம் சத்து, நார்ச்சத்து என அனைத்து சத்துக்களும் பழங்களில் அதிகம் அடங்கியிருக்கின்றது. தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷ்ண காலங்களில் அதிகம் விளையும் பழங்களைச் சாப்பிட்டால் நல்லது.

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இருக்கும் சாத்துக்குடி பழம் நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.



நோயுற்றவர்களுக்கு:

நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.

ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. மறதி என்பது ஒருகொடிய நோய்க்கு ஒப்பாகும். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.



இரத்த விருத்திக்கு:

சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.

இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.

இரத்தத்தில் சிவப்பணுக்களின்(ஹீமோகுளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.




எலும்புகள் வலுவடைய:

சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள் சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.



நன்கு பசியைத் தூண்ட:

பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.



குழந்தைகளுக்கு:

ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது இந்த கால்சியம் சத்து தான். சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.




முதியோர்களுக்கு:
 
வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். கிடைக்கும் காலங்களில் இந்தப் பழத்தை அதிகம் சாப்பிட்டு நோயின்றி வாழலாம்.
 
 
***
thanks  ஞானமுத்து
***


"வாழ்க வளமுடன்"
 

அழகு வேண்டுமா? அப்போது ஆரோக்கியம்...


யாராவது உங்கள் முகத்தைப் பார்த்து ஆஹா,.. என்ன மினுமினுப்பு உங்கள் முகத்தில்?

என்று ஆச்சரியப்பட்டால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். முதல் காரணம் உங்கள் முகம் நிஜமான ஆரோக்கிய மினுமினுப்பில் இருப்பது. இரண்டாவது காரணம் எண்ணெய் வழிவது. பிரச்சினை என்னவென்றால் நம் ஊரில் பெரும்பாலான முகத்தின் மினுமினுப்புக்கு எண்ணெய் வழிவதே காரணமாக இருக்கிறது. இது அழகுக்கும் கேடு. முகத்தின் ஆரோக்கியத்திற்கும் கேடு.



முகத்தில் எண்ணெய் வழிகிறது என்று எப்படி உறுதி செய்வது?



ரொம்பவும் எளிமையான வழி ஒன்று இருக்கிறது. காலையில் படுக்கையை விட்டு எழுந்ததும் ஒரு டிஷ்யூ பேப்பரை எடுத்து முகத்தைத் துடையுங்கள். அதில் பசை இருந்தால் உங்கள் முகம் ஆயில் ஃபேஸ்! அவ்வளவுதான்.



ஏன் என் முகத்தில் மட்டும் ஆயில் வழிகிறது?



நீங்கள் இதற்கு உங்கள் பாட்டி, முப்பாட்டி என்றுதான் குறை சொல்ல வேண்டும். ஆம் இது மரபு வழியாகத்தான் வருகிறது என்கிறார்கள். இதனை மருத்துவர்கள் `செபோரியா' என்று பெயர் வைத்து அழைக்கிறார்கள். நாம் ஆயில்முகம் என்கிறோம். இந்த நிலை பருவம் அடையும் வயதில் அதிகபட்சமாக இருக்கும். பின் 30 வயதுவரை படுத்தும்.



இதற்கு வேறு என்ன காரணம்?



இருக்கிறது. ஹார்மோன்கள். அதிகப்படியான ஆன்ட்ரோஜன் என்கிற ஹார்மோன் உற்பத்தி ஆகும்போது முகத்தில் இருக்கிற தோலின் செம்பஷியஸ் சுரப்பிகள் அதிகப்படியான ஆயிலை உற்பத்தி செய்துவிடுகின்றன. இதுதவிர, மோசமாக முகத்தைப் பராமரிப்பதும் ஒரு காரணம். இந்திய முகங்களை இது அதிகம் பாதிக்கிறது என்கிறார்கள். நம் குறைபட்ட உணவுப்பழக்கம் கூட ஒரு காரணம். கூடவே நம்மின் தப்புத்தப்பான முகப்பராமரிப்புப் பொருட்கள். தோலை அடைத்து மூச்சை முட்டும் அழகு சாதனங்கள்.



என்ன செய்வது? எப்படி ஆயில் முகத்தைத் தடுப்பது?



1. நிறைய தண்ணீர் குடியுங்கள்.



நிறைய தண்ணீர் நம் உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. காலையில் எழுந்ததும் நான்கு தக்காளி ப்ளஸ் நான்கு மிளகு ப்ளஸ் ஒரு டீஸ்பூன் தேன் அடித்து கலந்து குடியுங்கள். இது உடலின் நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இதன் மீதியை முகத்தில் தேய்த்துக் கொள்ளுங்கள். இதன் மூலம் தோலின் துவாரங்கள் இறுகி கூடவே முகம் பளபளப்பாகவும் மாறும்.



2. சரியான உணவு சாப்பிடுங்கள்



நார்ச்சத்து மிகுந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள், முட்டைக்கோஸ், காரட் போன்றவற்றை தினமும் சாப்பிடுங்கள். முகத்தில் பருக்களே வராமல் இருக்க ஒவ்வொரு மாதமும் ஒரு வாரத்திற்கு பச்சைக் காய்கறிகள், வேகவைத்த காய்கறிகளை எடுத்துக்கொள்ளுங்கள்.



3. ஆயில் அதிகரிப்பதை தடை செய்யும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துங்கள்



முகத்திற்கான அழகு சாதனப் பொருட்களை வாங்கும்பொழுது அதில் கிளைகாலிக் அமிலம், ரெட்டினாயிக் அமிலம் இருக்கிறதா என்று பார்த்து வாங்குங்கள். இவை ஆயில் அதிகமாக உருவாவதை தடுக்கக் கூடியவை.



உங்கள் கிளன்ஸர்களை வாங்கும்பொழுது அதனுள் ஹைட்ராக்ஸி அமிலம், சாலிசிலிக் அமிலம், பென்ஸைல் பெராக்ஸைட் போன்றவை இருக்கிறதா என்று கவனியுங்கள். இவை புடைத்து எழுகிற முகக் கட்டிகளை வேகமாகக் கட்டுப்படுத்தக் கூடியவை.



டோனர்கள் வாங்கும்போது அதில் ஆல்கஹால் இருப்பதைத் தவிருங்கள். இவை முகத்தில் இருக்கிற மொத்த ஆயிலையும் நீக்கி சருமத்தை வறளவிட்டு சுருக்கம் ஏற்பட வழி ஏற்படுத்தும்.



4. சிகிச்சைகள்



அ. மூன்று முறை முகம் கழுவுங்கள்



வெதுவெதுப்பான தண்ணீரால் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுங்கள். இதனால் அதிகப்படியான ஆயில் நீக்கப்படும். அதே நேரத்தில் சருமப் பாதுகாப்பிற்கான லைப்பிடுகள் வெளியேறாது. முகம் கழுவும்போது தேய்க்காதீர்கள்.



ஆ. சோப் இல்லாத சோப் வாஷ் பயன்படுத்துங்கள்



இந்த வகையில் நிறைய மென்மையான முகம் கழுவிகள் கிடைக்கின்றன. ஜான்சன் அண்ட் ஜான்சன் க்ளீன் அண்ட் க்ளியர் டீப் ஆக்ஷன் கிளன்ஸர், லோ ஓரல் போன்றவை பயன் தரும்.



இ. ஆன்டிபாக்டீரியல் க்ளன்சர்களைப் பயன்படுத்துங்கள்..


ஆயில் அதிகம் இருப்பதால் பாக்டீரிய தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. இதைத் தடுக்கவே இந்த வழி. செட்டாபில் அல்லது விச்சி கிளன்ஸர்களை பயன்படுத்திப் பாருங்கள்.



ஈ. ஃபேஸ்மாஸ்க் போடுங்கள்



களிமண் அடிப்படையில் செயல்படும் மாஸ்க்குகளைப் பயன்படுத்துங்கள். இவை தோல் துவாரங்களை இறுக்கி ஆழமாக சுத்தம் செய்யும். ஹிமாலயா பியூரிபையிங் மட் பேக் குறைந்த விலையில் கிடைக்கிறது.



உ. மாச்சுரைசரை கவனியுங்கள்



ஆயில் அதிகம் சுரப்பவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஆயில் அற்ற தோல் கிரீம்களைப் பயன்படுத்துவது நல்லது. லா ஓரல் பாரிஸ் பியூர் ஸோன் அன்டி ரிக்ரஸிங் மாச்சுரைசரைப் பயன்படுத்திப் பாருங்கள். பகல் நேரங்களில் ஜெல் போன்ற சன் ஸ்கிரீன்கள் உதவும். ஆலுவேரா கூட உதவும்.



5. சரியான மேக்-அப் போடுங்கள்



இதற்கு ஒருமுறை நீங்கள் நல்ல அழகு சிகிச்சை நிபுணரை அணுகி, உங்கள் முகத்தை பரிசோதித்து, பின் அவர் தரும் ஆலோசனைப்படி முகத்திற்கான மேக்கப் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.



6. தோல் நோய் மருத்துவ நிபுணரைச் சந்தியுங்கள்



தீர்க்கமுடியாத, அதிகப்படியான ஆயில் முகம் முழுக்க தொந்தரவுகளை ஏற்படுத்தும்போதும் உங்கள் சந்திப்பு ஒரு நல்ல தோல் நோய் மருத்துவரை நோக்கி இருக்கவேண்டும். ஓடிசி வகை மருந்துகள், க்ளைகாலிக் பீலிங் போன்ற சில சிகிச்சைகளை அவர் உங்கள் தேவைக்கு ஏற்ப பரிந்துரைக்கலாம்.




***
நன்றி: kumudam.com
***




"வாழ்க வளமுடன்"

தோல் நோய்களை குணமாக்கும் கிராம்பு




சுக்கு, கிராம்பு இவற்றை எடுத்து கஷாயம் போட்டு மூன்று வேளை பருகி வந்தால் கை, கால், மூட்டு வலி குணமாகும்.


கிராம்பு, வெற்றிலை, மிளகு இவற்றை மென்று தின்று மோர் குடித்தால் வயிற்று உப்புசம் குணமாகும்.

திராட்சைச் சாறுடன் கிராம்பு, மிளகு பொடியாக அரைத்து நீருடன் பருகிவர சிறுநீரகக் கோளாறு நீங்கும்.



துளசிச் சாற்றுடன் தேன், கிராம்புத் தூள் சேர்த்துச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்.



எலுமிச்சைச் சாற்றுடன் கிராம்பு, ஓமம் பொடியாக்கி குடித்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.



வசம்புடன் கிராம்பு வைத்து நீர் தெளித்து விழுதாக அரைத்து தேமல் மீது தடவிவர, தேமல் மறையும். கறிவேப்பிலை, கிராம்பு, பூண்டு சேர்த்துத் துவையல் செய்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குணமாகும்.


***
thanks  Mohamed Ali
***
 
 
"வாழ்க வளமுடன்"

மலச்சிக்கலுக்கு மாமருந்து


நார்ச்சத்து அடங்கிய உணவு, நமது குடலுக்கு வலிமையை சேர்க்கிறது. இந்த நார்ச்சத்து மலச்சிக்கலுக்கு மருந்தாக அமைகிறது.


அது மட்டுமல்லாமல் மலச்சிக்கலை வருமுன் காக்க இந்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இந்த செல்லுலோஸ் எனப்படும். நார்ச்சத்து உணவுடன் செல்லும் நீரை ஈர்த்து கொள்ளும் வேலையை செய்கிறது. இதனால் எப்பொழுதும் மலம் இளக்கமாகவே இருந்து, குடலில் எங்கும் தங்காமல் அவ்வப்போது வெளியேறிவிடுகிறது.


இந்த நார்ச்சத்தை உண்ண நாம் தவறிவிட்டால், மலம் கெட்டிபட்டு காலைகடனை தினமும் செய்யமுடியாமல் இரண்டு (அ) மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் மலம் கழிக்க முடியும். மலம் கெட்டிபடுவாதல் சுலபமாக மலத்தை வெளியேற்ற முடியாமல், தேவைக்கும் அதிகமான சக்தியை கொடுத்து முக்கி, முனகி மலத்தை வெளியேற்றுவதால் மலவாயில் உள்ள இரத்த குழாய்கள் அதிக இரத்த ஒட்டத்தை கொடுக்க நேரிடுகிறது.


இதனால் நாளடைவில் அந்த இரத்த குழாய்களுக்கு இரத்த தேக்கம் ஏற்பட்டு, அந்த இரத்த குழாய்கள் வீக்கம் அடைந்து நாளடைவில் வெடித்து விடுகின்றன. இதை தான் மூலநோய் என்று சொல்கிறோம்.



இதனால் சரிவர உட்கார முடியாமை, அதிக இரத்தபோக்கு, அடிக்கடி மலம் கழிக்க வேண்டும். போன்ற உணர்வு, இரத்த சோகை, உடல் மற்றும் மனச்சோர்வு, பசியின்மை, போன்றவை ஏற்படுகின்றன. இந்த மூலநோய் முற்றிவிடாத இரத்த போக்கால் குடல்களில் சோர்வு ஏற்பட்டு, குடல்கள் வறண்டு குடல்புற்று நோயாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.



ஒரு சாதாரண விஷயமான இயற்கையில் கிடைக்கும் பழங்கள், தானியங்கள் மற்றும் கீரைகளை குறிப்பாக நார்சத்து உள்ள தோல்பகுதியை நீக்காமல் உண்ண தவறுவதால் ஏற்படும் விளைவுகள் பலப்பல.


எனவே நார்சத்தின் பயன்களை அறிந்து அவற்றை உணவில் சேர்த்து பலன் பெறுவோம். குறிப்பாக தினமும் வாழைப்பழம் சாப்பிடும் பழக்கத்தை கொண்டாலும் கூட 50% மலச்சிக்கலை தவிர்க்கலாம். பொதுவாக நாம் அனைவரும் வீட்டில் செய்யும் தவறுகள் பலப்பல.



அவை முதலில் அரிசி பொதுவாக தவிடு நீக்கிய அரிசியை தான் நாம் வாங்குகிறோம். தவிடு நீக்கிய அரிசியின் மேல் உமி என்னும் நார்ச்சத்து படர்ந்து காணப்படும். இது மிக மிக முக்கியமானது. அரிசியை கழுவுவதின் மூலம் 50% உமியை நாம் இழந்து விடுகின்றோம். அரிசியை ஊற வைத்து பின்பு கழுவி சமைப்பதனின் மூலம் 80% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். சமைத்த சாதத்தை வடிப்பதின் மூலம் 100% நார்சத்தை நாம் இழந்து விடுகின்றோம். மீதம் நாம் உண்பது ஒன்றுமே இல்லாத சாதம். அதை சாப்பிடுவதின் மூலம் ஒரு பயனுமில்லை.



இதற்கும் மேலாக ஒரு படி மேலே போய், ஒரு சிலர் தவிடு நீக்கிய அரிசியை பாலீஷ் போடுவதின் மூலம் உமி என்கிற அந்த நார்சத்தை 100 முதலிலேயே இழந்து விடுகின்றனர். பிறகு சமைத்து சாப்பிடுவதால் சக்தி, நேரம் போன்றவை வீணாவதை தவிர வேறு ஒரு பலனும் நம்மை வந்தடைவதில்லை. எனவே அரிசியை பாலீஷ் போடுவதை அவசியம் தவிர்க்க வேண்டும்.



மேலும் அரிசியை ஒரு முறை கழுவிவிட்டு, இரண்டாவது முறை ஊறவைக்கும் தண்ணீரோடு அரிசியை வேக வைத்து, கஞ்சி வடிக்காமல் சாதம் செய்து சாப்பிட்டால் அரிசியிலுள்ள 80 நார்ச்சத்தை நாம் பெறலாம் என்பதில் சந்தேகமில்லை.


மேற்கூரிய தவறுகளை திருத்தி கடைபிடித்தால் வேண்டிய நார்சத்தை பெற்று நலமோடிருக்கலாம்.





***
thanks உ நலம்
***

 

"வாழ்க வளமுடன்"
 

நார்சத்து தான் நம் அனைவருக்கும் உயிர்சத்து



                             
நமது உணவு முறை தவறுகளாலேயே பல நோய்கள் தோன்றுகின்றன. ஆகவே நமது உணவுகள் பற்றியும், அதன் தன்மைகளை பற்றியும் தெரிந்து கொண்டால் தான். அதனை நாம் பயன்படுத்த முயல்வோம். இல்லையேல் தேவையானவற்றை நீக்கியும், தேவையற்றவற்றை உபயோகித்தும் நோய்களுக்கு ஆளாகி விடுவோம். உணவுகளில் மிகவும் முக்கியமானது நார்ச்சத்து. இது பல நோய்கள் வராமல் தடுத்து காப்பாற்றவல்லது. இந்த நார்ச்சத்து மிகவும் அதிகமாக பழங்கள், காய்கள், கீரைகள், தானியங்கள் முதலியவற்றில் தான் அதிகமாக உள்ளது. இதனைப்பற்றி நாம் தெரிந்துக் கொண்டு, பயன்படுத்தி நோய்கள் நீங்கி நலமுடன் வாழ்வோம்.



                     பழங்களிலும், காய்கறிகளிலும், தானியங்களிலும், கீரைகளிலும் மிக எளிதில் கிடைக்கும் உணவுப் பொருளாக இருப்பது நார்ச்சத்து ஆகும். பழங்கள், காய்களில் அதன் மேல் தோல்களிலும், தானியங்களில் உமிகளிலும் உள்ளது. தண்ணீர் உட்பட மிக எளிதில் கிடைக்கும். எந்த, பொருட்களையும் நாம் துதிப்பதுமில்லை, மதிப்பதுமில்லை உமி என்பது செல்லுலோஸ் என்னும் நார்சத்து ஆகும். தவிடு என்பது தையமின் ஆகும். தவிட்டில் ஏராளமான வைட்டமின்கள் உள்ளது என்று பல ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் செல்லுலோஸ் பற்றி நாம் கண்டு கொள்வதில்லை. தற்போது தான் செல்லுலோஸ் என்னும் நார்ச்சத்து, நமது உடலுக்கும், குடலுக்கும் ஒர் இன்றியமையாத வேர் சத்து என்று புரிந்துக் கொண்டுள்ளனர். இருப்பினும் இன்னும் இதனை யாரும் பயன்படுத்துவதில்லை.


பல சாலிக்கு பாலிசாக்ரைடுகள் கூட்டு சர்க்கரை உடலுக்கு சக்தி தரும் உணவுகளில் கார்போஹைட்ரேட்டுகள் முக்கியமானவை. சக்தி மாற்றத்திற்கு நமது உடல், கார்போஹைட்ரேட்டைத் தான் தேர்ந்தெடுக்கிறது. இது இல்லாத போதே புரதமும், கொழுப்பும் எரிக்கப்படுகின்றன. இது நமது உடலில் கீழ்க்கண்டவாறு மாற்றப்படுகின்றன.

பாலி சாக்ரைடுகள் ஸ்டார்ச்சு, டெக்ஸ்டிரின், கிளைகோஜன், செல்லுலோஸ்

டைசாக்ரைடுகள் இரட்டை சர்க்கரை சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ்

மோனோ சாக்ரைடுகள் ஒற்றை சர்க்கரை குளூக்கோஸ், பிரக்டோஸ், காலக்டோஸ் ஆகவும் மாற்றப்படுகின்றன

                            நாம் பாலிசாக்கரைட்டுகளை உண்டு, அவைகள் நமது சீரண நீர்களால் டைசாக்கரைட்டுகளாகவும், மோனோ சாக்கரைட்டுகளாகவும், மாற்றப்படுவதே சரியான வழியாகும். அவ்வாறில்லாமல், மோனோ சாக்கரைட்டுகளையே நாம் உண்போமானால் செரிமான பாதையில் தடைகள் ஏற்படும். ஆரோக்கியமும் கெடும்.
 
 


நார்சத்து என்றால் என்ன?

 செல்லுலோஸ் பாலிசாக்கரைடுகளில் சேர்ந்தே உள்ளது. இது தாவரங்களில் மட்டுமே காணப்படும். நார்ப்பொருளாகும். தாவரங்களில் உள்ள உயிரணுக்களின் சுற்றுச்சுவரில் இந்த நார்ச்சத்து இருப்பதால் தான்,


தாவரங்களில் மட்டும் இது காணப்படுகிறது. விலங்குகளின் செல்களில் சுற்றுச்சுவர் கிடையாது. அதனால் இது, சீரண நீர்களால், சீரணிக்கப்படுவதில்லை. சீரணத்திற்குப் பிறகும் மாற்றம் அடையாது அப்படியே உள்ளது.

நார்ச்சத்து உள்ள உணவுப் பொருட்கள் முழு தானியங்கள், பயிறுகள், காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் ஏராளமான செல்லுலோஸ் அடங்கி உள்ளது.


தானியங்களையும் பயிறுகளையும் முதல் நாள் ஊற வைத்து, இரண்டாம் நாள் முளை கட்டுகின்ற போது நார்ச்சத்து பெருக்கமடைகிறது.


முருங்கக் கீரைகளிலும், அகத்திக்கீரையிலும் இது நிரம்ப உண்டு. காய்கறிகளில் குறிப்பாக அவரை இனங்களில் இதற்கு குறைவில்லை. மாமிச உணவுகளிலும், தோல் நீக்கப்பட்ட தானியங்கள், பருப்புகள் மற்றும் கிழங்குகளில் இது இல்லை.

 
***
thanks   உ ந
***                    



                                                                

"வாழ்க வளமுடன்"

                                               

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "