...

"வாழ்க வளமுடன்"

22 ஏப்ரல், 2010

வாழை மருத்துவம் ( அனைத்து பாகமும் )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மருத்துவப் பயன்மிக்க மூலிகைகளுள் வாழையும் ஒன்று. இதில் மலைவாழை, மொந்தன், பூவன், பேயன், ரஸ்தாலி ஆகியவை முக்கியமானவை.



வாழைப்பழ ஏற்றுமதியில் தென் இந்தியா முதலிடம் வகிக்கிறது. குமரி மாவட்டத்தில் நெல் பயிராகி வந்த இடங்கள் கூட இன்று வாழை தோட்டங்களாக மாற்றப்பட்டு வருவதை நாம் பார்க்கிறோம். இம்மரம் விவசாயிகளின் 'கற்பகத் தருவாக' விளங்குகிறது. வண்டல் மண் நிறைந்த இடத்தில் செழிப்பாக வளரும் இம்மரம் மற்ற நிலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. இதன் வகைகளுக்கேற்றவாறு இதன் உயரமும், ஆயுட்காலமும் அமைந்திருக்கும்.

*

வாழை மரத்தின் தாவரவியல் பெயர் - Musa Paradisiaca. இது Musaceae என்னும் குடும்பத்தை சார்ந்தது. இதன் ஆங்கில பெயர் - Plantain tree இதனை மலையாளத்தில் வாழா என்றும் சமஸ்கிருதத்தில் கதலி என்றும் அழைக்கின்றனர்.

*

வாழை மரத்தின் ஒவ்வொரு பாகத்திற்கும் மருத்துவ குணங்களும் பிற பயன்களும் உள்ளன. இம்மரத்தில் பல வகைகள் காணப்படுகின்றன. குமரி மாவட்டத்தில் குறிப்பாக செவ்வாழை, இரசதாளி, வாழை, நேந்திர வாழை, பேயன் வாழை போன்றன பயிரிடப்படுகின்றன.

*

பிற மாவட்டங்களில் அடுக்குவாழை, கருவாழை, கொட்டை வாழை, நவரை வாழை, மலை வாழை, மொந்தன் வாழை, வெள் வாழை போன்றனவும் இன்னும் சிலவும் பயிராகின்றது. இவற்றின் கனிகளின் தன்மை மட்டும் மாறுபட்டு காணப்படும். அவற்றின் மருத்துவ குணங்களும் மாறும்.

***

வாழை கிழங்கு:

*
வாழை மரத்தின் கருவாக இருப்பது. ஒரு கிழங்கை நாம் பயிர் செய்தால் அது வாழையடி வாழையாய் நமக்கு பயன் தந்து கொண்டே இருக்கும். இதற்குள்ள மருத்துவ பயனை பற்றி பார்த்தால் நமக்கு சற்று வியப்பாக தான் இருக்கும்.இக்கிழங்கை இடித்து பிழிந்த சாற்றினை குடித்து வர சிறுநீர் எரிச்சல், சிறுநீரில் இரத்தம் கலந்து வரல், பாண்டு நோய், எலும்புருக்கி நோய் முதலியவற்றிலிருந்து நாம் நம்மை விடுவித்து கொள்ளலாம்.

***

வாழை பட்டை:
*

இது உலர்ந்தபின் இதிலிருந்து எடுக்கப்படும் நார் பைகள் செய்யவும், துணிகள் நெய்யவும், பூக்கள் தொடுக்கவும் பயன்படுகிறது. மேலும் இதிலிருந்து எடுக்கப்படும் ஒருவித உப்பு சிறுநீர் பெருக்கும் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

***

வாழை இலை:

*

வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு.

*

இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். மேலும் தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மேல் படுக்க வைக்கலாம். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும்.

*

தீக்காயம், வெந்நீர் காயம், சூடான எண்ணெய் காயம்- குருத்து வாழை இலையை பாதிக்கப்பட்ட இடத்தில் சுற்றி கட்டுப்போடலாம். வாழை இலை அல்லது பூவை கசக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ சரியாகும்.

*

காயங்கள்- தோல் புண்களுக்கு- தேங்காய் எண்ணெயை மஸ்லின் துணி யில் நனைத்து புண்கள்மேல் போட்டு இவற்றின் மீது மெல்லிய வாழையிலையை கட்டுமாதிரி போடவேண்டும்.

*

சின்ன அம்மை, படுக்கைப் புண், உடலில் தீக்காயம்- பெரிய வாழை இலை முழுவதிலும் தேன் தடவி அதில் பாதிக்கப்பட்டவரை சில மணி நேரம் படுக்கவைக்கவேண்டும். இதை தொடர்ந்து செய்தால் குணமாகும்.

*

சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்புளங்கள்- பாதிக்கப்பட்ட இடங்களில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். ( குடற்புழுக்கள், நீரிழிவு, அமிலச் சுரப்பு, தொழுநோய், ரத்த சோகை- வாழை வேரை தீயில் கொளுத்தி சாம்பலை எடுத்து கால் தேக்கரண்டி சாம்பலை தேனில் குழைத்து சாப்பிட்டுவர மேற்சொன்னவை சரியாகும். )

*

அஜீரணம், மூலநோய்- பாலுடன் ஒரு வாழைப்பழம்சாப்பிட்டுவர அஜீ ரணம் சரியாகும். தொடர்ந்து 2-3 வேளை சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.

***


வாழைப் பூ:

*

பூ-வாழை மரம் ஒருமுறை மட்டுமே பூக்கக்கூடியது. இதன் தண்டின் நடுப்பகுதியிலிருக்கும் பூக்கள் மட்டுமே காய் ஆகும். மற்றவை ஆகாது, இப்பூவினை சமைத்து சாப்பிடுவது வழக்கம். இதனை வியட்னாமில் பச்சையாகவே உண்ணுகின்றார்கள்.

*

இவ்வாறு இதனை உண்பதால் சீதக்கழிச்சல், எருவாய்க்கடுப்பு, குருதிமுனை, உடல் கொதிப்பு முதலியன தீரும். இப்பூச்சாற்றினை பனங்கற்கண்டோடு சேர்த்து உட்கொள்ள வயிற்றுப்புண் முதலிய நோய்கள் நீங்கும். மேலும் இது பத்திய உணவாகவும் கொள்ளப்படுகிறது.

***

வாழைக்காய்:

*

வாழைக்காயினை சமைத்து உண்டுவர உடல் வெப்பம், வயிற்றுளைச்சல், வாய் நீரூறல், உமிழ்நீர்ச்சுரப்பு, இருமல் ஆகியன நீங்கும். இது குருதியினை பெருகச்செய்யும். உடலுக்கு வன்மையை யும் அதிக அளவில் உணவில் விருப்பத்தையும் கொள்ளசெய்யும். இதனை நெருப்பிலிட்டு சுட்டு சாப்பிடுவதும் உண்டு. இதனை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள் பல உள்ளன.

*

மூலத்தால் கசியும் ரத்தப்போக்கு, வயிற்றுக் கோளாறு, இருமல், சிறுநீர் ஒழுக்கு, கோழைச் சுரப்பு அதிகரித்தல், வயிற்றுப்புண், குடற்புண் போன்றவற்றை வாழைக்காய் குணமாக்குகிறது. ரத்த சிவப்புச் செல்களை உருவாக்குவதில் வாழைக் காய்க்கு நிகரில்லை. அதிகமாக இதை சாப்பிட்டால் வயிற்றில் வாயுத் தொல்லை உண்டாகும்.

***

வாழைத் தண்டு:

*
சோரியாசிஸ், தோல் தொற்றுக்கள்,ரத்தத்தில் உண்டாகும் தொற்றுக்கள், ரத்தக் குறைபாடுகள் ஆகியவற்றை வாழைத் தண்டு போக்குகிறது. பல மருத்துவப் பண்புகளை இது உள்ளடக்கியிருக்கிறது.

*

வாழைச்சாறு வயிற்றுப்போக்கு, மூல ரத்த ஒழுக்கு, கை கால் எரிச்சல், இருமல், மலத்தில் ரத்தம் வெளியேறுதல், ரத்த சோகை, குடற்புழுக்கள் ஆகியவற்றை போக்குகிறது.


***

வாழைப்பழம்:

*



மலச்சிக்கல், மூலநோயால் அவதியுறுவோருக்கு பூவன் பழமும், வயிற்றுப் புண்ணால் பாதிக்கப்படுவோருக்கு பேயன் பழமும் தேவை. சுலபத்தில் ஜீரணத்தை உண்டாக்கி மலச்சிக்கலைப் போக்குவது மலைவாழை. ரஸ்தாலியில் மருத்துவ குணங்கள் குறைவு. ஆனால் சுவை அதிகம்.

*

சின்ன அம்மை, டைபாய்டு, மஞ்சட் காமாலை- தேனில் வாழைப் பழத்தைப் பிசைந்து தினம் இரு வேளை வீதம் சாப்பிடவேண்டும்.இருமல்- கருமிளகு கால் தேக் கரண்டி எடுத்து பொடி செய்து அதில் பழுத்த நேரந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.

*

சிறுநீரக நோய்கள் மற்றும் இரத்தக் குறைபாடுகள்-நெல்லிச்சாறு அரைக் கரண்டியும் பழுத்த வாழையை கலந்து 2-3 வேளை சாப்பிட்டு வர மேற் சொன்ன குறைபாடு நீங்கும்.

*

நாவிற்கும், மனதிற்கும் இன்பத்தை அள்ளிக் கொடுக்கும் வாழைப்பழத்தின் உபயோகங்கள் பல உள்ளன. ஒரு வாழை பழத்தில் இருக்கும் சத்துக்களை நாம் தெளிவாக தெரிந்து கொண்டால் நமக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கும்.

*

நாள்தோறும் ஒரு வாழைப்பழம் உண்டுவருவது நமது உடலுக்கு மிகவும் நல்லது. நாம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் நமது உடலுககு 220 கலோரி ஆற்றல் கிடைக்கிறது. வாழைப்பழத்திற்கு மலமிளக்கி செய்கை உண்டு. மேலும் இது உடலுரமாக்கி ஆகவும் செயல்படும்.

*

இப்பழத்தினை உண்பதால் வெப்ப பிணிகள், இரத்தசோகை, மலக்கட்டு, கர்ப்பிணிகளுக்கு வரும் வாந்தி, குன்மம், மன அழுத்தம், நெஞ்செரிவு, மலக்கட்டு முதலியன நீங்கும். உடலின் தோல் பளபளப்பாகும்.

*

இப்பழத்தின் தோலை கொசு கடித்த இடத்தில் வைத்து தேய்க்க, எரிச்சல் தடிப்பு ஆகியன நீங்கும்.இவ்வாறு தனது உடல் முழுவதையும் பயனுள்ளதாக்கி நமக்கு வழங்கும் இவ்வள்ளலை வளரச்செய்து பயனடைவோம்.


***

நன்றி கீற்று.
http://www.keetru.com/puthiyathendral/sep07/sudhir.php

***

"வாழ்க வளமுடன்"

8 comments:

DREAMER சொன்னது…

வாழை என்பது வாழவை என்று அர்த்தம் என்று உண்ர்த்துவது போல் அருமையான தகவல்கள்! தொடர்ந்து கலக்குங்கள... உங்க வலைப்பதிவு உண்மையிலேயே ஒரு ஆழ்கடல் களஞ்சியம்தான்.

-
DREAMER

மனோ சாமிநாதன் சொன்னது…

வாழையின் மருத்துவப் பயன்கள் அருமை, பிரபா!

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புள்ள இமா!

உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments

அன்புடன் மனோ சாமிநாதன்

மனோ சாமிநாதன் சொன்னது…

அன்புள்ள பிரபா!

உங்களுக்கு அன்புடன் நான் அளித்திருக்கும் விருதை கீழ்க்கண்ட இணைப்பில் வந்து பெற்றுக்கொள்ளவும்.

http://muthusidharal.blogspot.com/2010/04/blog-post_28.html#comments

அன்புடன் மனோ சாமிநாதன்

Asiya Omar சொன்னது…

ப்ரபா,சத்தத்தையே காணோம்.ஊருக்கு போயாச்சா?நல்ல பதிவு.

prabhadamu சொன்னது…

நன்றி டீமர் நண்பா. உங்கள் ஆதரவை எனக்கும் எப்போதும் அளித்து என்னை ஊக்குவிக்கும் நள்ள‌ங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பரே!

prabhadamu சொன்னது…

நன்றி மனோ அம்மா. உங்கள் ஆதரவை எனக்கும் எப்போதும் அளித்து என்னை ஊக்குவிக்கும் நள்ள‌ங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அம்மா! எனக்கு விருது வழங்கி என்னை மெம்மேலும் ஊக்குவிக்கும் உங்களுக்கும், மற்ற நண்பர்களுக்கும் மிக்க நன்றி அம்மா. நான் கட்டாயம் வந்து பொற்றுக் கொள்ளுகிறேன். மிக்க நன்றி அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. உங்கள் ஆதரவை எனக்கும் எப்போதும் அளித்து என்னை ஊக்குவிக்கும் நள்ள‌ங்களுக்கு மிக்க நன்றி. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அக்கா! ஆமாம் இந்தியா போயி இருந்தேன். அதனால் பதிவு இட முடியலை. இனி கட்டாயம் என்னால் பதிவு இட முடியும் என்று எண்ணுகிறோன்.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "