...

"வாழ்க வளமுடன்"

15 ஏப்ரல், 2010

பப்பாளி இலைச் சாறுகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பப்பாளி இலைச் சாறு புற்று நோய் ( கட்டி )செல்களை அழிக்கிறது.உலர்ந்த பப்பாளி இலை தூலைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கசாயம் அல்லது வடி நீர் பத்து வெவ்வேறு வகையான புற்று கட்டிகளின் செல்களைக் கொன்று அதன் வள்ர்ச்சியைக் குறைக்கிறது என புளோரிடா பல்கலைக்கழக ஆய்வாள்ர்கள் கண்டு பிடித்துள்ளனர்.இதன் மூலம் பப்பாளி இலையிலிருந்து எல்லா வகையான புற்று நோய்களுக்கும் மருந்து தயாரிக்கும் வாய்ப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

*

ஆய்வாள்ர்கள் பப்பாளி இலையில் உள்ள வேதியல் பொருள்கள்புற்று கட்டிகள் மீது என்ன பாதிப்பை ஏற்படுத்துகின்றன என ஆய்வுகளை நடத்தி வருகிறார்கள் ஆய்வுக்காக பப்பாளி இலையை காய வைத்து இடித்து பொடியாக்கினர். அந்த பப்பாளி இலைத் தூளை கொதிக்கும் வென்னீரில் போட்டு இஅதில் இருந்து வடி நீர் தயாரித்தனர்.
*
ஏற்கனவே ஆய்வகங்களில் செயற்கையாக உருவாக்கப்பட்ட செர்வைக்ஸ் மார்புப் புற்று, ஈரல் புற்று, நுறையீரல் புற்று, கனையப் புற்று போன்ற 10 வகை புற்றுக் கட்டிகள் மீது நான்கு திறனிலைகளில் தயாரிக்கப்பட்ட இந்த வடி நீரை செலுத்தி சோதனை செய்தனர். எல்லா புற்று நோய்கட்டிகளின் வளர்ச்சி வேகமும் குறைந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
*
வடி நீர் செலுத்தப்பட்ட 24 மணி நேரத்துக்கு பிறகு புற்றுக் கட்டிகளை சோதிக்கும் புற்று நோய் கட்டிகளின் வளர்ச்சி குறிஅந்ததை அறிந்தனர். எவ்வளவு வரி நீர் அதிகமாக ஒரு புற்று கட்டிக்கு தரப்பட்டதோ அந்த அளவுக்கு புற்று கட்டிகளின் வளர்ச்சி குறைவாக இருந்தது .
*
பப்பாளி இலை வடி நீர் எப்படி புற்றுகட்டிகளின் வளர்ச்ச்சியைக் குறைக்கிறது என்பதை அறிய லிம்போமா வகை புற்றுக் கட்டிகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டன.புற்றுக் கட்டிகள் வளரக் கரணமான செல்கள் தாமாகவே அளிய தேவையான தூன்டுதலை பப்பாளி இலை வடி நீர் தருவதாகக் கண்டறிந்துள்ளனர்.

*
நன்றி தமிழ்குடும்பம்.
நன்றி தின‌க‌ர‌ன்.

***
"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "