இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
சீத்தாப்பழம் தனிப்பட்ட மணமும், சுவையும் கொண்டது. சீத்தாப்பழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை, அனைத்துமே அரிய மருத்துவ பண்புகளை கொண்டது. ஆங்கிலத்தில் சீத்தாப்பழத்திற்கு கஸ்டட் ஆப்பிள் என்றும், இந்தியில் சர்பா என்றும் பெயராகும். இதன் தாவரவியல் பெயர்- Annona squamosa என்று பெயர்.சீத்தாப்பழத்தில்- நீர்சத்து அதிகமாக உள்ளது. மேலும் மாவுசத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புக்கள், நார்ச் சத்து, சுண்ணாம் புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு சத்து போன்றவை அடங்கியுள்ளன. இத்தகைய சத்துக்கள் சீத்தாப்பழத்தில் அடங்கியிருப்பதனால் தான் இப்பழம் மிகுந்த மருத்துவ பயன்களை அடக்கியுள்ளது.
1. சீத்தாப்பழத்தை உண்ண செரிமானம் ஏற்படும். மலச்சிக்கல் நீங்கும்.
*
2. சீத்தாப்பழச்சதையோடு உப்பை கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும்.
*
3. இலைகளை அரைத்து புண்கள் மேல் போட்டுவரை புண்கள் ஆறும்.
*
4. விதைகளை பொடியாக்கி சம அளவு பொடியுடன் சிறுபயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்;து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்து விடும்.
*
5. சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும்.
*
6. சீத்தாப் பழ விதை பொடியோடு கடலை மாவு கலந்து எலுமிச்சை சாறில் குழைத்து தலையில் தேய்த்து ஊறிய பின்னர் குளித்து வர முடி உதிராது.
*
7. சீத்தாப்பழ விதைப்பொடியை மட்டும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிராது.
*
8.சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் கொடுத்துவர எலும்பு உறுதியாகும். பல்லும் உறுதியாகும்.
*
9.சிறிதளவு வெந்தயம், சிறுபயிறு, இரண்டையும் இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து இதோடு சீத்தாப்பழ விதைப்பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்துவர தலை குளிர்ச்சி பெறும். முடியும் உதிராது. பொடுகு காணாமல் போகும்.
*
10 சீத்தாப்பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் இதயம் பலப்படும். காசநோய் இருந்தாலும் மட்டுப்படும்.
***
நன்றி ஈகரை.
eegarai1.wordpress.com
***
6 comments:
மிகவும் பயனுள்ள மருத்துவ தகவல் . பகிர்வுக்கு நன்றி !
மீண்டும் வருவேன் சீத்தாப்பழம் வாங்க ஆமா !
எங்கள் ஊரில் டென்னிஸ் பந்தளவு உள்ள பழத்தை அண்ணமுன்னா என்றும் ஸ்ரோபரி சேப்பில் ரக்பீ பந்தளவு உள்ளதை சீத்தாப்பழம் என்றும் சொல்லுவோம். கிட்டத்தட்ட இரண்டும் ஒரே மாதிரியான ருசி உடையவை. எலும்புக்கு நல்லது என்று அம்மம்மா சாப்பிட தருவார்கள். ஆனால், சிலருக்கு உடலில் சொறி ஏற்படும். பாத்து உண்ணுங்கள்.
முடிக்கு நல்லது என்பது புது தகவல். நன்றி. செய்து பார்க்கலாம்னு இருக்கேன்.
சீதாப்பழத்தைப்பற்றி எழுதிய கருத்துரை அருமை, பிரபா!
நன்றி பனித்துளி சங்கர். உங்கள் பொன்னான நேரத்தை ஆழக்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி நண்பா. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி நண்பரே!
இங்க ( சிங்கப்பூரில் ) இந்தியாவில் இருந்து தான் நண்பா வருகிறது. நீங்கள் சிங்கை வந்தால் கட்டாயம் உங்களுக்கு சீத்தாப்பழம் கிடைக்கும். :)
நன்றி அனாமிக்கா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழக்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி.
உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி.
கூடவே உங்கள் டிப்ஸ்ஸையும் அளித்து உதவுவதுக்கு மிக்க நன்றி அனாமிக்கா.
அதனால் எனக்கு இன்னும் அதிகப்படியான தகவல் கிடைக்கிறது.
நன்றி என் அன்பு தங்கையே!
:)
நன்றி மனோ அம்மா. உங்கள் பொன்னான நேரத்தை ஆழக்கடலுக்கு அளித்ததுக்கு மிக்க நன்றி அம்மா. உங்கள் வருகைக்கும் ஊக்கத்துக்கும், பதிலுக்கும் மிக்க நன்றி அம்மா.
கருத்துரையிடுக