...

"வாழ்க வளமுடன்"

16 ஏப்ரல், 2010

சிறுநீரகத் தொற்று நோய்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்நோயால் பாதிக்க‌ ப‌டாத‌வ‌ர் யாரும் இருக்க‌ முடியாது. இத‌ன் வேதனை அனைவரும் அனுப‌வித்து இருப்பிர்க‌ள். அது ஏன் ஏற்ப்ப‌டுகிற‌து? அதுவும் நீரிழிவு நோயாளிக‌ளுக்கு அதிக‌ம் ஏற்ப்ப‌டும் என்று கூறப்ப‌டுகிற‌து.



1.நீரிழிவு நோயாளிகளுக்கு அடிக்கடி சிறுநீரகத் தொற்று நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதற்கு முக்கிய காரணம், நீரிழிவு வெள்ளை அணுக்களின் செயலை முடக்கிவிடுகிறது. அடுத்தது, நீரிழிவால் நரம்பு மண்டலம் பாதிப்பு அடைகிறது. இதனால் சிறுநீர்ப்பை சரிவர இயங்காது. சிறுநீர்த்தேக்கம் சிறுநீர்ப்பையில் ஏற்பட்டு கிருமிகள் உற்பத்தியாகக் காரணமாகிறது.

*

2. தொற்றுக் கிருமிகள் பெண்களைப் பெரும்பாலும் சுலபமாகப் பாதிக்கிறது. இதற்கு முக்கிய காரணம், பாலியல் உறுப்பின் போதிய சுத்தமின்மை. அடுத்தது, மாதவிடாய் நின்றபிறகு, ஹார்மோன்கள் மாற்றத்தால், பெண்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து தொற்றுநோய் வர வாய்ப்புள்ளது.

*

3. ஆண்களைப் பொறுத்தவரையில், இளம் வயதில் சிலபேருக்குத் தவறான உடலுறவால், வி.டி. கிருமிகள், எய்ட்ஸ் போன்றவை தொற்றிக் கொண்டு, சிறுநீரக அழற்சி, சிறுநீர்ப்பாதை அடைப்பு போன்றவை ஏற்படும்.

*

4. நடுவயதினருக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் தொற்றுக்கிருமிகள் தாக்கி, சிறுநீர்ப்பாதை அடைப்பு ஏற்படலாம்.

*

5. வயதானவர்களுக்கு புரோஸ்டேட் வீக்கம், இரத்தநாளத் தடிப்பு போன்றவற்றால் சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேக்கப்பட்டு தொற்றுக்கிருமிகள் ஏற்படலாம். வயதானவர்களுக்கு நாள்பட்ட நீரிழிவால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிறுநீர்ப்பை சுருக்கிவிரியும் தன்மையை இழந்து சிறுநீர் தேக்கம் ஏற்பட்டு கிருமிகள் வளர ஏதுவாகிவிடுகிறது.

*

6. குழந்தைகளைப் பொறுத்தவரையில், ஆண் குழந்தைகளுக்கு சிறுநீர் பிரியும் இடத்தில் தோல் அடைப்பு இருந்தாலும், சில குழந்தைகளுக்கு சிறுநீர்ப் பாதைக்கு வந்த சிறுநீர் மீண்டும் ஏதோ காரணத்தால், சிறுநீர்ப்பைக்கே திரும்பிச் செல்லும் காரணத்தால், சிறுநீர்ப்பையில் சிறுநீர்த்தேக்கம் ஏற்பட்டு, கிருமிகள் வளர ஏதுவாகி விடுகிறது. இதற்கு வெஸ்டிகோ யூர்டெரிக் ரிப்லக்ஸ் (Vestico Urteric Reflux) என்று பெயர்.

*

7. பெண் குழந்தைகள் சரியான முறையில் தன் பாலியல் உறுப்புகளைச் சுத்தம் செய்து வைத்திருக்காவிட்டால், நிச்சயம் தொற்றுக்கிருமிகள் சிறுநீரகத்தைத் தாக்கும். பெண் குழந்தைகளின் தாய் இதில் கவனம் செலுத்த வேண்டும். கர்ப்பஸ்திரீகள் கவனமாக இருக்கவேண்டும்.

*

8. பொதுவாக, பாலியல் உறுப்புகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டு, சிறுநீரை தேவையில்லாமல் அடக்காமல் இருந்து, அதிகமாக நீரை அருந்திக்கொண்டு, நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, தகாத உடல்உறவு கொள்ளாமல் விழிப்புணர்வோடு இருந்தால், சிறுநீரகக் தொற்றுக்கிருமிகளிலிருந்தும் மற்றும் பல சிறுநீரகக் கோளாறுகளிலிருந்தும் தப்பிக்கலாம்.


***



சிறுநீரகத் தொற்று வியாதிகளின் அறிகுறிகள் என்னென்ன?



*

1.உடலில் தேவையில்லாமல் அரிப்பு.
*
2. சிறுநீர் சிறிது வலியுடன் (முன்பாகவோ, பிற்பாடோ) வெளியேறும்.
*
3. சிறுநீர் பிரிந்த பிறகும், சிறிது சிறிதாக சிறுநீர் வெளியேறும், (அதாவது முழுமையாக ஒரேயடியாக வெளியேறாது) அடிக்கடி சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படுதல்.
*
4. குளிர்காய்ச்சல் (கட்டுப்படுத்த முடியாத நடுக்கம், வெகு சீக்கிரம் உடல் உஷ்ணம் 104_106 டிகிரிக்கு ஏறுதல், மூச்சுத்திணறல் இவை 30லிருந்து 45 நிமிடம் வரை இருக்கும். பிறகு அடுத்தடுத்து வரலாம்).
*
5. வாந்தி . சிறுநீர் பிரியும்பொழுது எரிச்சல், குத்தல், சிலசமயம் சிறுநீருடன் இரத்தம் கலந்து செல்லுதல், துர்நாற்றம், பாலியல் உறுப்பில் ஆறாத புண், வீக்கம் ஏற்ப்படும்.
*
6. விலா, அடிவயிறு போன்ற இடங்களில் தாங்க முடியாத வலி.
*
7. இரத்த சிவப்பு அணுக்கள் (RBC) உற்பத்தியில், சிறுநீரகமும் பெரும்பங்கு வகிக்கிறது.


***

ஆகவே, தொற்றுக்கிருமியால் செயல் இழந்த சிறுநீரகம் சிவப்பு அணுக்களைச் சரியாக உற்பத்தி செய்யத் துணைபுரிவதில்லை. ஆகவே, சிவப்பு அணுக்கள் குறைவாகி சோகை (Anemia) காணும். இது மேற்கொண்டு பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும்.


*

(கவனிக்கவும்: மேலே உள்ள அறிகுறிகளில் பல, நீரிழிவுக்குப் பொருந்தும். எதுவாக இருந்தாலும் ஆரம்பத்திலேயே டாக்டரிடம் காட்டிவிட்டால் பிரச்னை இல்லை.)

***

by-vayal
நன்றி vayal

***

http://senthilvayal.wordpress.com/2008/04/14/
உங்களுக்காக.
நன்றி உங்களுக்காக.

***

"வாழ்க வளமுடன் "

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "