இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நாம் நம் குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கக்கூடிய நிலை ஏற்பட்டால் உணர்ச்சி மிகுதியால் சில நேரம் நம்முடைய துணையிடம் / காதலியிடம் / நிச்சயம் முடிக்கப்பட்ட பெண்ணிடம் தொலைபேசியில் / கைப்பேசியில் / இணை தொலைபேசி என்று சொல்லக்கூடிய வாய்ப் பேசிகளில் (Voip Phones) பேசும் போது எல்லை மீறி அந்தரங்க விஷயங்களை பேசி விடுகிறோம். இது யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்றோ அல்லது யாரும் இந்த பேச்சுகளை ஒட்டு கேட்க முடியாது என்றோ நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அப்படி நீங்கள் யாரேனும் நினைத்திருந்தால் தயவு செய்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்ளுங்கள். என்னுடைய ஆசிரியர் சொன்னதை இங்கு நினைவு கூற ஆசைப்படுகிறேன். அதாவது அறிவியல் வளர வளர சௌகரியங்கள் வளரும், ஆனால் இறுதியில் அந்த அறிவியல் அழிவுக்கே வழிவகுக்கும் நமக்குத் தெரியாமல் நாம் செல்போனில் பேசுவதை தனி நபர் ஒருவரால் ரெக்கார்டு செய்யமுடியுமா? என விசாரிக்க ஆரம்பித்தோம். பிரபல மொபைல் கம்பெனியில் டெக்னிக்கல் பிரிவு உயர் அதிகாரியாகப் பணிபுரியும் அவரைத் தொடர்புகொண்டோம். அந்த அதிகாரியோ ஒரு குபீர்ச் சிரிப்பை உதிர்த்துவிட்டு இந்த மாதிரியான பேச்சுக்கள் 3 விதமா பதிவாக வாய்ப்பிருக்கு. முதல் வகை நீங்களோ, நானோ மொபைல்ல ரெக்கார்டிங் வாய்ஸ் சாஃப்ட்வேர்கள இன்ஸ்டால் பண்ணிக்கிட்டோம்ன்னா நமக்கு வர்ற இன்கம்மிங், அவுட்கோயிங் கால்கள் தானா துல்லியமா பதிவாயிடும். இதில் பெரிய பிரச்சினை இல்லை. இரண்டாவது, எங்களை மாதிரியான செல்போன் நிறுவனங்கள் கஸ்டமர்களின் பிரச்சினைகள தீர்த்து வைக்க 24 மணி நேரமும் இயங்கும் கால்சென்டர்கள உருவாக்கி வச்சிருக்கு. இந்த கால்சென்டர்கள்ல பணிபுரியும் ஒருத்தர் நினைச்சா யார் பேச்சை வேணும்னாலும் ரெக்கார்ட் பண்ணமுடியும். பொதுவா நைட் ஷிப்டில் அதிக வேலையிருக்காது. அப்ப டூட்டியில் இருக்கறவங்க நீண்ட நேரமா ஒரு கால் பேசப்படுதுன்னா அவுங்க என்ன பேசறாங்கன்னு ஒட்டு கேட்க முடியும். நைட்ல கள்ளக்காதலர்கள், கணவன்-மனைவி, காதலர்கள் உணர்ச்சியோட கிளுகிளுப்பா பேசுவாங்கங்கற ரகசியம் எல்லோருக்கும் தெரிஞ்சதுதானே. இந்த மாதிரி பேச்சுக்களை கேட்டுக்கேட்டு கிக் ஆகற சிலர் இருக்கத்தான் செய்றாங்க. அப்படி ரெக்கார்ட் பண்ணியது அப்படியே பரவி நெட் வரைக்கும் வர வாய்ப்பிருக்கு. மூணாவதா சில குறிப்பிட்ட இணையதளங்கள், உங்களுக்காக எங்களது பெண்கள் காத்திருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் எதைப்பற்றி வேண்டுமானாலும் கேட்கலாம், செக்ஸ் பற்றி மற்றவர்களிடம் பேச தயங்குவதை இவர்களிடம் பேசலாம்னு குறிப்பிட்டு 12 இலக்க எண் தந்திருப்பாங்க. அதுல ஏதாவது ஒரு நம்பர காண்டக்ட் பண்ணி பேசனிங்கன்னா நீங்க பேசற கிளுகிளு பேச்சை நமக்கே தெரியாம ரெக்கார்ட் பண்ணி நெட்ல போட்டுடுவாங்க. இது காசு கொடுத்து நமக்கு நாமே சூன்யம் வச்சிக்கறதுக்கு சமம் என்றார் விரிவாக. சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் குளோனிங் செல்லை உருவாக்கித்தர்றாங்க. இது எதுக்குன்னா கணவன் மீது மனைவிக்கோ அல்லது மனைவி மீது கணவனுக்கோ சந்தேகம் இருந்தா அவங்க சிம் கார்டைக் கொடுத்து அதே நம்பருக்கான குளோனிங் சிம்கார்டை வாங்கிக்கலாம். சம்பந்தப்பட்டவங்க யார்ட்ட பேசினாலும் இந்த குளோனிங் சிம் போட்ட செல்போனிலும் கேட்கும். இப்படி ஒரு வியாபாரம் அங்க நடக்குது. அதேபோல் இன்னொரு விஷேச ஆண்டனாவையும் அங்க விக்கிறாங்க. அந்த மினி சைஸ் ஆண்டனாவை வீட்டு மொட்டை மாடியில பொருத்திட்டா போதும் அக்கம் பக்கத்தலயிருக்கற செல்போன் லைன்களுக்கு வர்ற அத்தனை கால்களையும் ஒட்டுக்கேட்டு.. ரெக்கார்டும் பண்ணமுடியும். இதன் மூலம் சின்னஞ்சிறிய ஜோடிகள், தம்பதிகள், லவ்வர்கள் இவங்க அந்தரங்க உரையாடல்கள் கொள்ளையடிக்கப்படுது. இந்த குளோனிங் செல்போனை அவங்க 20 நிமிசத்தில் ரெடிபண்ணிக் கொடுக்குறாங்க. இதுக்கு சார்ஜ் 3,500 ரூபாயாம் வெளிநாட்டிலுள்ள கணவனிடம் மனைவி தன் ஆசைகளையும், ஏக்கம் விருப்பங்களையும் வெளிப்படுத்தி சந்தோஷமாகப் பேசுவது உண்டு. இளம் பெண்கள் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளாத விஷயங்களைக் கூட தோழிகளிடம் பகிர்ந்து கொண்டு பேசுவதுண்டு. காதலர்கள் கொஞ்சிக் குலவுவது மட்டுமில்லாமல், கள்ளக் காதலியிடமோ, கள்ளக் காதலனிடமோ கிளுகிளுப்பாக ஃபோனில் பேசுவது உண்டு. இதையெல்லாம் ஒருவன் ஒட்டுக் கேட்டு அதை ரெக்கார்டும் செய்கிறான் என்றால் என்ன நடக்கும்? ஆண்களிடம் ப்ளாக்மெயில் செய்து பணமும், பெண்களிடம் கற்பையும் சில கில்லாடிகள் களவாட வாய்ப்பிருக்கிறது. இதைவிட டேஞ்சரஸ் என்னன்னா டெரரிஸ்ட்டுகள் நம்ம சிம்கார்டை குளோனிங் சிம்கார்டாக்கி விட்டால் அவ்வளவுதான். போலீஸிடம் நாம்தான் மாட்டிக்கொள்ள வேண்டிய சூழல். ஆக, ஒவ்வொரு மாதமும் பில்தொகை எவ்வளவு வருது என்பதை செக் பண்ணணும். நமக்கு அறிமுகமே இல்லாத செல் நம்பருக்கு கால் போயிருந்தாலோ, ராங்-கால் வந்து நாம் கட் பண்ணியிருப்போம் ஆனாலும் தொடர்ந்து பேசியதுபோல பில் வந்திருந்தாலோ, நாம் எந்த நம்பருக்கும் எஸ்.எம்.எஸ். அனுப் பாமலேயே டெலிவர்டு ஆனது போல ரிப்ளை வந்தாலோ அலட்சியப்படுத்த வேண்டாம். உடனடியாக காவல் துறையில் புகார் கொடுத்து கண்காணிக்க வேண்டும். சிம்கார்டை யாரிடமும் கொடுக்காமல் கேர்ஃபுல்லாக இருக்க வேண்டும். ஒருவேளை சிம்கார்டு தொலைந்து போனாலும் புகார் கொடுத்து லாக் பண்ணிவிட வேண்டும். * நன்றி:என் நண்பர் மூலம் கேட்ட தகவல் இது,அவர் ஏதோ ஒரு பதிரிகயில் படிததாக கூறினார். *** நன்றி தென்றல் *** "வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக