இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஹெல்த் பக்கங்களுக்கு... தீபிகா!’ - எடிட்டரின் ஒரு வரி எஸ்.எம்.எஸ். மலேசியாவில் இருந்து அப்போதுதான் லேண்ட் ஆன தீபிகா பல்லிக்கல் முன் லேண்ட் ஆனேன். இந்தியாவின் நம்பர் 1 ஸ்குவாஷ் நட்சத்திரம். சர்வதேச அளவில் டாப் 30 பேரில் ஒருவர். படிப்பும் பயிற்சியுமாகச் சுற்றி வரும் இடங்கள் அனைத்தையும் சுற்றுலாத் தலமாக்குவது தீபிகாவின் பழக்கம். படபடக்கும் விழிகள் பார்த்தாலே, குறிப்பெடுக்க மறுக்கிறது மனசு. * ''அழகு என் அடையாளங்களில் ஒண்ணா இருக்கலாம். ஆனா, எந்த விதத்திலும் அதுவே ஒரு ''ஆரம்பத்தில் சாப்பாட்டு விஷயத்தில் எனக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனால், பாசு சார் தான் எந்த மாதிரி சாப்பாடு எடுத்துக்கணும்னு சொல்லிக்கொடுத்தார். இரண்டரை மணி நேரத்துக்கு ஒரு தடவை எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளைக் கொஞ்சம் கொஞ்சமா சாப்பிட்டுக் கிட்டே இருப்பேன். * 'வெள்ளை நிற உணவுகளைத் தவிர்த்திடுங்க’ன்னு தன் இளமை ரகசியம் சொன்னாரே ரஜினி, அதே ஃபார்முலாதான் என் டயட்டுக்கும். நான் அரிசிச் சாப்பாடு சாப்பிட்டே பல வருஷங்கள் ஆச்சு. ரொம்பப் போராடி கஷ்டப்பட்டு இப்போ சாக்லேட் சாப்பிடுறதையும் கன்ட்ரோல் பண்ணிட்டேன். சாப்பிடும் ஒவ்வொரு பொருளிலும் கலோரி, புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு எல்லாம் எவ்வளவு இருக்கு... அதில் நம்ம பயிற்சிக்குத் தேவையான அளவு என்ன என்பதை கால்குலேட் பண்ணித்தான் சாப்பிடுவேன். உடலுக்கு எல்லாவிதச் சத்துக்களும் பேலன்ஸ்டா சேர்வது மாதிரி சாப்பிடுவதுதான் சரியான வழி. * போட்டி இல்லாத நாட்களிலும் ஒரு நாளைக்கு அஞ்சு மணி நேரத்துக்கும் மேலாக ஸ்குவாஷ் பயிற்சியில் ஈடுபடுவேன். அதனால், எப்பவும் சத்தான சாப்பாட்டை நான் மிஸ் பண்ண மாட்டேன். சாப்பாட்டு நேரத்தை அடிக்கடி மாத்திட்டே இருப்பது நம்ம உடம்பை ரொம்பவே டிஸ்டர்ப் பண்ணும். எந்த நேரத்துக்கு என்ன சாப்பாடுன்னு பட்டியல் போட்டுவெச்சு, அதை ஸ்ட்ரிக்ட்டா கடைபிடிக்கணும். 'சத்தான உணவு... சரியான நேரம்’ இதுதான் என் டயட் சீக்ரெட்!'' எனும் தீபிகா, ஸ்குவாஷ் போட்டிகளில் கலந்துகொள்வதற்கு முன் நிசப்த அமைதியைக் கடைபிடிப்பாராம். * ''சேலஞ்சிங்கான எந்த விஷயத்தையும் எதிர்கொள்வதற்கு முன்பு, மனதளவில் நம்மைத் தயார்படுத்திக்கணும். நின்னு, நிதானிச்சு அடிச்சா... எந்த எதிரியும் நம்மை எதிர்கொள்ள முடியாது!'' * by- தீபிகா சாய்ஸ் *** நன்றி விகடன் *** "வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக