...

"வாழ்க வளமுடன்"

31 மார்ச், 2011

தோல்வி" எத்தனை சிறந்தது என்பதற்கு சில உதாரணங்கள் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தோல்வி என்பது மறைமுக ஆசீர்வாதமே ! ~ 01. தோல்வி எப்போதும் மறைந்திருக்கும் ஓர் ஆசீர்வாதமாக மாறுகிறது. ஏனெனில் செய்ய திட்டமிட்ட நோக்கங்களில் இருந்து மக்களை வேறு திசைக்கு மாற்றுகிறது, புதிய வாய்ப்புக்களின் கதவுகளை அது திறக்கிறது. ~ 02. தோல்வி அகந்தையை அழித்து வாழ்வின் உண்மைகளை பற்றிய உபயோகமான அறிவை தருகிறது. ~ 03. டாக்டர் அலக்சாண்டர் கிரஹாம் பெல் தனது மனைவியின் காதை கேட்க வைக்க ஓர் கருவியை தேடித் தோல்வியடைந்தாலும், கடைசியில் தொலைபேசியை கண்டு பிடித்தார். * 04. இனி கல்வி கற்க முடியாது என்று பாடசாலையில் இருந்து விரட்டப்பட்டதால் உண்டான தோல்வியே தாமஸ் அல்வா எடிசனை பெரும் கண்டு பிடிப்பாளராக்கியது. * 05. சிறு வயதில் இருந்தே ஏராளம் தோல்விகளை சந்தித்த ஆபிரகாம் இலிங்கன் அனைத்துத் தோல்விகளையும் மதிப்பிட்டு கடைசியில் அனைவரும் அறிந்த அமெரிக்க அதிபரானார். * 06. தோல்வி வந்தவுடன் அதற்குள் வெற்றி என்பது ஏதோ பெரிய கனி போல இருப்பதாக எண்ணி விடாதீர்கள். வெற்றி விதை போலவே இருக்கும், அதை வளர்த்து மரமாக்கி கனி பறிக்க வேண்டியதே உங்கள் பொறுப்பு. * 07. உடல் ஊனமுற்றிருந்த மைலோசி என்பவர் தனக்கு ஒரு மனம் இருப்பதை கண்டறிந்தார். அதை பயன்படுத்தி வாழ்வில் உயர்வு பெறும் புதிய கண்டு பிடிப்பை கண்டு பிடித்தார். உங்களிடம் ஒன்றுமே இல்லை ஆனால் ஒரு மனம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி உயர்வடையுங்கள். * 08. ஒருவனது பலவீனங்களை அளவிடும் அளவு கோலாக தோல்வி இருக்கிறது. ஆனால் அதுவே அவற்றை சரி செய்யும் ஒரு வாய்ப்பையும் தருகிறது. இந்தவகையில் தோல்வி ஓர் ஆசீர்வாதம்தான். * 09. நீங்கள் தோல்விகளை கையாளும் விதத்தைப் பார்த்தால் உங்களிடம் தலைவராகும் தகுதி இருக்கிறதா இல்லையா என்பது புரிந்துவிடும். * 10. யார் மீண்டெழுந்து மறுபடியும் போரிடப் போகிறார்கள் என்பதை அறியவே இயற்கை நமக்கு தோல்வியைத் தருகிறது. மீண்டெழுந்தவர்களே மனித குலத்திற்கு தலைமை தாங்குகிறார்கள். * 11. தோல்வி என்று கருதப்படுபவை தற்காலிக சரிவுகள்தான். அதை நேர் மறையான மனோபாவத்துடன் எடுத்துக் கொண்டால் விலை மதிப்பற்ற செல்வமாக மாற்றலாம். * 12. தோல்வியை ஏற்று தொடர்ந்து போராடுபவனை உலகம் மதிக்கிறது, ஆனால் பிரச்சனை தீவிரமாகும்போது கைவிடும் மனோபாவம் உடையவனை உலகம் மன்னிப்பதில்லை. * 13. ௨வது உலகப் போரில் ஜப்பானியர் அடைந்த தோல்வி அவர்களது மிகச்சிறந்த வெற்றியாகும். ஏனெனில் அந்தத் தோல்விதான் ஜப்பானியரை பெரும் மூட நம்பிக்கையில் இருந்து விடுபடச் செய்து இன்றய நிலைக்கு உயர்த்தியது. *** thanks படித்ததில் பிடித்தது ***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "