...

"வாழ்க வளமுடன்"

27 நவம்பர், 2010

சர்க்கரை நோயின்றி வாழ :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தினமும் எளிய உடற்பயிற்சிகளை செய்து சர்க்கரை வியாதியில் இருந்து தப்ப முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.இது தொடர்பாக இங்கிலாந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் அதிக நேரம் கடுமையான உடற்பயிற்சியை மேற்கொண்டாலும் சர்க்கரை நோயில் இருந்து தப்ப முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

*

காலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்ளுதல், வேகமாக நடத்தல் அல்லது ஓடுதல், கை-கால்களை மேலே தூக்கி எளிய உடற்பயிற்சிகளை செய்தல் போன்றவை இவற்றில் அடங்கும்.

*

தற்போதைய நிலையில் வாரத்திற்கு குறைந்தது 5 நாட்களுக்கு, அரை மணி நேர நடை பயிற்சி செய்ய வேண்டும் என்று சர்க்கரை நோயாளிகளுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது.

*

ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த நடைபயிற்சியை மேற்கொள்ளத் தவறி விடுகிறார்கள். நேரமின்மை, ஊக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நடை பயிற்சியை அவர்கள் மேற்கொள்வதில்லை.

*

ஆண்களைப் பொருத்தவரை இளம் வயதில் 2 வாரங்களுக்கு ஒரு முறை 15 நிமிட நேர உடற்பயிற்சியே போதுமானதாகும்.

*

எனவே சர்க்கரை நோயின்றி வாழ வேண்டும் என்பது உங்கள் விருப்பமானால், தினமும் குறைந்தது 15 நிமிடமாவது நடைபயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.


***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "