இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நமக்கு சக்தி ஏன் தேவைப்படுகிறது: 1. மனித இனம் தங்களுடைய அன்றாட உடல்ரீதியான வேலைகளை செய்யவும், உடல் வெப்பநிலையை சரியாக சீராக பராமரிக்கவும், உடலில் அன்றாட வளர்சிதை மாற்றங்கள் ஏற்படுவதற்கும், உடல் வளர்ச்சிக்கும் போதுமான அளவு சக்தி தேவைப்படுகிறது.
*
2. இந்தியாவில் 50 சதவிகிதம் ஆண்கள் மற்றும் பெண்கள், நாட்பட்ட சக்தி பற்றாக்குறையினால் பாதிக்கப்படுகின்றனர் என தேசிய கண்காணிப்பு குழுவின் ஆய்வு தெரிவிக்கிறது.
***
கண்காணிப்பு குழுவின் ஆய்வு:
1• ஒவ்வொரு தனி நபரின் அன்றாட சக்தி தேவையின் அளவு அந்த நபரின் அன்றைய சக்தி இழப்பு அல்லது செலவு செய்வதை பொறுத்து அமைகிறது. இதுமட்டுமின்றி வயது, உடல் எடை, செய்யும் வேலைகளின் தன்மை, உடல் வளர்ச்சி மற்றும் உடலமைப்பு பொறுத்து அமைகிறது. இந்தியாவில் உணவிலிருநது பெறப்படும் மொத்த சக்தியின் அளவில் 70-80 சதவித சக்தியானது உணவுத்தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கிழங்குகளிலிருந்து பெறப்படுகிறது
*
2• குழந்தைகள் மற்றும் விடலைப்பருவத்தினர் தங்களது அன்றாட தேவைக்கான சக்தியில் 55-60 சதம் வரை மாவுச்சத்துப்பொருட்களிலிருந்து பெறுகின்றனர்
*
3• விடலைப்பருவத்தினரின் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு மிக அதிக அளவிலான சக்தி தேவைப்படுகிறது. உதாரணம் 16-18 வயது பெண்களுக்கு ஒரு நாளுக்கு 2060 கிலோ கலோரி சக்தியும் ஆண்களுக்கு 2640 கிலோ கலோரி சக்தியும் தேவைப்படுகிறது
*
4• கர்ப்ப காலத்தின்போது, கர்ப்பத்தில் வளரும் குழந்தைகள் வளர்ச்சிக்கும், கர்ப்பிணி பெண்ணின் உடல் நலத்திற்கும் கூடுதலான அளவு சக்தி தேவைபடுகிறது
*
5• குறைவான அளவு சக்தியுள்ள பொருளை உட்கொள்ளும்போது சத்து பற்றாக்குறை ஏற்படுகிறது. அதே வேலையில் அதிகளவு உட்கொள்ளும்போது உடற்பருமன் ஏற்படுகிறது.
***
சக்தி அதிகம் உள்ள உணவு:
1. தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்குகள், தாவர எண்ணெய்கள், நெய், வெண்ணெய், எண்ணெய் வித்துக்கள், கொட்டைகள், சர்க்கரை மற்றும் வெல்லம் போன்றவை
*
2• நாம் அதிக அளவில் தானியவகை உணவிலிருந்து, நமக்கு தேவையான சக்தியினை பெறுவதினால் வெவ்வேறு வகையான தானியங்கள் உட்கொள்ள பழகிக்கொள்வது நல்லது
*
3• தானிய வகைகளான கம்பு, சோளம், கேழ்வரகு போன்றவை குறைந்த விலையில் கிடைக்கக் கூடியவை. அதே சமயம் அதிக சத்தானவை.
**
உணவுப் பொருட்கள் - 100 கிராம் சாப்பிடக் கூடிய
பகுதியிலிருந்து கிடைக்கும் சக்தியின்
அளவு (கிலோ கலோரிகள்)
அரிசி - 345
கோதுமைமாவு - 341
சோளம் - 349
கம்பு - 361
கேழ்வரகு - 328
மக்காச்சோளம் - 342
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக