இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
நுண்ணூட்டச் சத்துக்கள் ( வைட்டமின் ஏ ) - பாதுகாப்பளிக்கும் உணவுகள்1. நுண்ணூட்டச் சத்துக்கள் என்பவை மிக குறைந்த அளவிலேயே உடலுக்கு தேவைப்படுகிற வைட்டமின்கள் மற்றும் தாதுப்பொருட்கள் ஆகும்.
*
2. இவைகள் உடலில் ஏற்படும் உடற்சிதைமாற்ற செயல்களுக்கு உறுதுணையாய் இருந்தும், நோய்களை எதிர்க்கவும், அவற்றிலிருந்து உடலை பாதுகாக்கவும் உதவுகின்றது. இவை உடல் நலனையும் மற்றும் நீண்ட ஆயுளையும் பேணிக்காக்க அவசியமாகும்.
*
3. வைட்டமின் ஏ கொழுப்பில் கரையகூடிய தன்மைகொண்ட வைட்டமின் ஆகும். கண் பார்வை, நோய் எதிர்ப்பு தன்மை மற்றும் தோல் செயல்பாடுகளில் வைட்டமின் ஏ முக்கிய பங்கு வகிக்கின்றது.
*
4. இந்தியாவில் 3 சதம் பள்ளி செல்லும் வயதுடைய சிறுவர்கள் வைட்டமின் ஏ பற்றாக்குறையின் அறிகுறிகளான பைடாட் ஸ்பாட்ஸ் (கண்ணில் வெண்மையான பகுதியில் முக்கோண வடிவில் சாம்பல்நிற தோற்றம்) என்பவையால் அவதிப்படுகின்றன.
*
5. வைட்டமின் ஏ பற்றாக்குறையின் ஆரம்பநிலையில் ஏற்படும் அறிகுறியானது மாலைக்கண் நோய் (இரவில் பார்வை இழப்பு) ஆகும்.
***
வைட்டமின் ஏ யின் முக்கியத்துவங்கள்:
நல்ல கண் பார்வைக்கு வைட்டமின் ஏ அவசியம். வைட்டமின் ஏ குறைபாடு மாலைக்கண் நோய் மற்றும் பிற குறைபாடுகளை ஏற்படுத்தும்.
1• கர்ப்ப காலத்திலும் மற்றும் அவற்றிற்கு முன்னும் பெண்களுக்கு வைட்டமின் ஏ குறைபாடு ஏற்படுவதை தடுப்பதன் மூலம் இறப்பு மற்றும் நோயுற்று ஆரோக்கியம் குறையும் தன்மையை பெருமளவில் குறைக்கலாம்.
*
2• உணவில் வைட்டமின் ஏ அதிகளவில் எடுத்துக்கொள்வதினால் அதன் பற்றாக்குறைவால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம்
வைட்டமின் ஏ அதிக அளவில் உள்ள உணவுகள்
*
3• பச்சை நிற கோஸ், அனைத்து வகை கீரைகள், காய்கறி வகைகள், மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ண பழங்கள் காய்கறிகளில் பீட்டா கரோடின் எனும் பொருள் மிக அதிகளவில் கிடைக்கிறது.
*
4• பீட்டா கரோடீன் வைட்டமின் ஏ வாக மாற்றப்படுகிறது.
*
5• இறைச்சி ஒன்றே வைட்டமின் ஏ யின் முக்கிய உற்பத்தி ஸ்தானம்
*
6• பால் மற்றும் பாலிலிருந்து கிடைக்கும் பொருட்கள், முட்டையின் மஞ்சள் நிற கரு, சிவப்பு பாமாயில், மீன் மறறும் மீன் எண்ணெய் போன்றவற்றில் வைட்டமின் ஏ மிக அதிக அளவில் கிடைக்கிறது.
***
சில உணவுப்பொருட்களில் உள்ள மொத்த பீட்டா கரோடினின் அளவு பின்வரும:
உணவுப்பொருளின் பெயர் - சாப்பிடக்கூடிய பகுதியில் உல்ல
பீடா கரோடீனின் அளவு
(மைக்ரான்/100 கிராம்)
கொத்தமல்லித் தழை - 4800
கருவேப்பிலை - 7110
முருங்கைக்கீரை - 19690
வெந்தயக்கீரை - 9100
கேரட் - 6460
மாம்பழம் - 1990
பப்பாளி பழம் - 880
பூசணி - 1160
***
வைட்டமின் சி:
1. வைட்டமின் சி ஒரு அத்தியாவசியமான நுண்ணூட்டச்சத்து. இது நோய் தொற்றுவதை தடுக்கிறது.
*
2. வைட்டமின் சி பற்றாக்குறை ஸ்கர்வி என்னும் நோயினை ஏற்படுத்துகிறது.
*
3. இந்நோயினால் பலவீனம், பற்களின் ஈறுகளில் இரத்தக்கசிவு மற்றும் எலும்பு வளர்ச்சியில் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.
*
4. காயம் ஆறுதல், அமினோ அமிலம் மற்றும் மாவுப் பொருட்களின் வேதியல் மாற்றங்கள் மற்றும் ஹார்மோன் எனும் வேதி கூட்டுப்பொருள் உண்டாவதற்கு வைட்டமின் சி உதவி செய்கிறது.
*
5. இரும்பு சத்தை உடல் எடுத்துக் கொள்ளும் தன்மையை அதிகரிக்கின்றது.
***
இரும்புச் சத்து:
1 . இரத்த சிவப்பு அணுக்களில் உள்ள ஹீமோகுளோபின் என்னும் பொருள் உருவாவதற்கு இரும்புச் சத்து முக்கிய தேவை ஆகும்.
*
2. இந்த ஹீமோகுளோபினானது பிராணவாயுவினை நுரையீரலிலிருந்து இரத்தத்தின் மூலம் உடற் திசுக்களுக்கு எடுத்தும் செல்லும் செயலில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
*
3. நமது நாட்டில் இரத்த சோகை என்பது சிறுபிள்ளைகள், பருவ வயது பெண்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களில் ஏற்படும் ஒரு முக்கிய உடல் நலக் கேடு ஆகும்.
*
4. மக்கள் தொகையில் ஏறக்குறைய 50 சதவிகிதத்தினர், முக்கிய ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தேசாகையினால் பாதிக்கப்படுகின்றனர்.
*
5. ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் ஏற்படும் இரத்தசோகையினால், இளைஞர்களின் செயல்திறன் மற்றும் சிறுபிள்ளைகளில் கற்கும் திறன் பாதிக்கப்படுகிறது.
**
இரும்புச்சத்து அதிகமுள்ள உணவுபொருட்கள்:
1• கீரை வகைகள், உலர்ந்த பழவகைகள், பயறு வகைகள், கம்பு மற்றும் கேழ்வரகு ஆகியவைகளில் இரும்புச்சத்து அதிகமுள்ளன. 3-5 சதவீதம் வரை இரும்புச்சத்து மட்டுமே உடலானது தாவரப்பொருட்களிலிருந்து உட்கிரகிக்கிறது.
*
2• இறைச்சி, மீன் மற்றும் கோழி இறைச்சி
*
3• நெல்லி, கொய்யா மற்றும் சிட்ரஸ் வகை பழங்களான கமலா ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களிலிலிருக்கும் வைட்டமின் சி, உடலானது இரும்புச்சத்தை உட்கிரகிக்க உதவுகிறது
*
4• உணவிற்கு பின் தேநீர் (டீ) மற்றும் காபி சாப்பிடுவதை தவிர்க்கவும்
***
அயோடின் :
1. அயோடின் தைராக்ஸின் எனப்படும் தைராய்டு ஹார்மோன் உண்டாவதற்கான மிக முக்கிய மூலக்கூறு ஆகும். இந்த தைராக்ஸின் ஹார்மோன் ஒரு நபரின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு அவசியமாகும்
*
2• ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 100-150 மில்லிகிராம் அயோடின் தேவைப்படுகிறது. இந்த அளவு ஒரு நபரின் வயது மற்றும் உடல் செயல் நிலையை பொறுத்து வேறுபடும்
*
3. அயோடின் குறைபாடு ஒழுங்கின்மைகள் என்பது இந்தியாவில் ஏற்படக்கூடிய ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்து குறைபாட்டு ஒழுங்கின்மையாகும்
*
4• கர்ப்பிணி பெண்களில் அயோடின் குறைபாடு ஏற்படும்போது இது கர்ப்பத்தில் வளரும் குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சியை பாதிக்கிறது
*
5• நமக்கு நாம் உட்கொள்ளும் உணவிலிருந்து, முக்கியமாக கடல் உணவு மற்றும் தண்ணீரிலிருந்து அயோடின் கிடைக்கிறது
*
6• கோஸ், காலிபிளவர், மரவள்ளிக்கிழங்கு போன்ற காய்கறிகளில் காணப்படும் ஒரு வகை பொருளினால், உடல் அயோடின் உபேயாகப்படுத்துவதை தடுக்கிறது
*
7• அயோடின் குறைபாட்டு ஒழுங்கின்மைகள் ஏற்படாமல் தடுக்க ஒவ்வொருவரும் அயோடின் சேர்க்கப்பட்ட உப்பினை உணவில் பயன்படுத்த வேண்டும்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக