இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
காய்கறிகளின் விதைகள் மற்றும் கொட்டைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. ஏனெனில் அவை இயற்கையான காய்கறி பொருட்களில் இருந்து கிடைப்பதாக நினைக்கிறார்கள். இந்த நம்பிக்கை ஆரோக்கியத்திற்கு அபாயமானது.
காய்கறி எண்ணெய்கள் துரித உணவுகள் போலவே ஆபத்தானது. ஏனெனில் `ஜங்புட்' உணவுகள் எப்படி தயாரிக்கப்படுகிறதோ அதுபோன்ற முறையிலேயே காய்கறி எண்ணெய்களும் தயாரிக்கப்படுகிறது. காய்கறிகளிலுள்ள சத்துக்கள் எல்லாம் எண்ணெய் தயாரிக்கும் முறையில் நீக்கப்பட்டுவிடுகிறது. இறுதியாக எண்ணெயாக மிஞ்சி இருப்பது வெறும் கொழுப்புகள் மட்டுமே.
இந்தக் கொழுப்புகள் கல்லீரலை தூண்டி உடலில் அதிகப்படியான கொலஸ்டிரால் உற்பத்தியாக காரணமாக அமைந்துவிடுகிறது. தொடர்ந்து அதிகப்படியாக காய்கறி எண்ணெய்களை பயன்படுத்தி வந்தால் சீக்கிரமாகவே கல்லீர லானது உடலின் தேவைக்கு அதிகமான கொலஸ்டிராலை உற்பத்தி செய்துவிடுகிறது. இது இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
பெரும்பாலும் காய்கறி எண்ணெய்கள் மரபு வழி முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. இது உடலுக்கு ஏற்றதல்ல. சோயா எண்ணெய், பருத்திக்கொட்டை எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், முந்திரி எண்ணெய் போன்றவை அதிகமாக மரபு வழியில் தயாராகிறது. வேறு சில எண்ணெய்கள் அதிகமாக ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டு தயாராகிறது.
இப்படி தயாராகும் எண்ணெய்கள் அதிகமாக கொலஸ்டிரால் உருவாக காரணமாக இருப்பதுடன் ரத்தக் குழாய்களை பாதிக்கும். இந்த எண்ணெய்களால் உடலில் அதிகப்படியாக உருவாகும் பலபூரிதமாகாத கொழுப்புகள் இதய வியாதிகள், நீரிழிவு மற்றும் வேறுசில அபாயமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
அதேபோல சுவை தருவதற்காக மேற்கொள்ளப்படும் ரீபைன்ட் முறையானது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் விஷத் தன்மையுள்ள ரசாயனங்கள் சுரப்பதை தூண்டுகிறது. இது ரத்த சுழற்சியை குறைக்கும். மூளை நரம்புகள் இயக்கத்தை பாதிக்கும். ஹார்மோன் சுரப்பிகளின் செயல்பாடுகளை குறைத்து ஜீரணத்தையும் தாமதப்படுத்தும். எனவே காய்கறி எண்ணெயையும் அளவுடன் பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
***
thanks தினதந்தி
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக