...

"வாழ்க வளமுடன்"

23 ஜூலை, 2011

பெண்களுக்கு முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் ?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


இன்றைய கணினி யுகத்தில் ஐ.டி. பணியாளர்கள் மட்டுமல்ல, ஏறக்குறைய அனைத்து துறைகளிலுமே கணினி பயன்பாடு என்பது இன்றியமையாததாகிவிட்டது.




இதில் ஐ.டி. எனப்படும் தகவல் தொழில்நுட்ப துறை போன்ற குறிப்பிட்ட சில துறைகளில் பணியாற்றுபவர்கள்,அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.



இவ்வாறு அதிக நேரம் கணினி முன்னர் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு, குறிப்பாக பெண்களுக்கு, முதுமை வேகமாக எட்டிபார்ப்பதற்கான காரணம் கணினி முன் நீண்ட நேரம் அமர்ந்து வேலை பார்ப்பதே என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.



இது தொடர்பாக பிரிட்டனை சேர்ந்த அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மைக்கேல் ப்ரகர், ஏராளமான பெண்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் இது உண்மை என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாம்.




கணினி முன்னர் ஒருவர் நீண்ட நேரம அமர்ந்திருந்தால் அவரது கீழ் தாடை தொங்கி போய்விடும் என்றும், இதற்கு காரணம் ஒரே நிலையில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பதுதான் என்றும் அவர் தெரிவிக்கிறார். இவ்வாறு வேலை செய்யும் பெண்கள் பெரும்பாலான நேரம் சிடு சிடுவென இருப்பதற்கு,நீண்ட நேரம் கணினி முன்னர் அமர்ந்து மிக அதிகமாக கவனம் செலுத்தி வேலை செய்வதுதான் காரணம் என்பதை அவர்கள் உணரவில்லை.



இத்தகைய பெண்களுக்கு நெற்றியில் விரைவிலேயே சுருக்கம் மற்றும் கண்களை சுற்றி தோல் சுருக்கம் போன்றவை ஏற்படும்.இது குறித்து இவர்கள் மிக அதிகமாகவே கவலையும், அச்சமும் கொள்வார்கள்.ஆனால் இதற்கு உண்மையான குற்றவாளி யார் என்பதை இவர்கள் அறிந்திருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.



அடுத்ததாக இதுபோன்று நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து வேலை செய்வதால் ஏற்படக்கூடிய பாதிப்பு என்னவென்றால், கழுத்து பகுதி "ஆமை கழுத்து" போன்றோ அல்லது இரண்டாவது கழுத்து உள்ளது போன்றோ தோற்றம் உருவாவதுதான். இதற்கு கணினியின் திரையை நீண்ட நேரம் குனிந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பதுதான் காரணம் ஆகும்.




இவ்வாறு பார்ப்பதினால் கழுத்து தசைகள் குட்டையாகவும், தளர்ந்தும் போய்விடும். இதனால் இத்தகைய பெண்களுக்கு அவர்களது உண்மையான வயதை விட 10 வயது கூடுதலாகவே தோற்றம் ஏற்படும்.

இவ்வாறு வயது முதிர்ந்த தோற்றம் வெகு சீக்கிரமே ஏற்படுவதை பார்த்த பின்னர்தான், கழுத்தை உயர்த்தவோ அல்லது நேராக்கவோ அழகுக்கான அறுவை சிகிச்சை நிபுணர்களை நோக்கி இவர்கள் ஓடுகிறார்கள்.



இருப்பினும் இன்றைய கணினி யுகத்தில் வாழ்ந்துகொண்டு, வேலையை மட்டும் கணினி முன்னர் அமர்ந்து செய்யமுடியாது என்று கூறவும் முடியாது. அப்படியானதொரு நிலையில், கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும்போது கீழ்க்கண்ட குறிப்புகளை பின்பற்றினால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு ஓரளவு தடுத்துக்கொள்ளலாம் என்று கூறுகிறார் மைக்கேல்.




அவர் கூறும் குறிப்புகள வருமாறு:


1) கணினியின் திரையை நீண்ட நேரம் பார்க்காதீர்கள்.



2) ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் ஒருமுறை உங்களது கழுத்து தசைகளை அங்கே இங்கே அசைக்க முயலுங்கள்.



3) நாற்காலியில் இருந்து எழுந்து சற்று நேரம் அலுவலக அறையை ஒரு சுற்று சுற்றி வரலாம்.



4) உங்களது நாற்காலியில் அமரும்போது உங்களது உடலை நகர்த்தி சரி செய்துகொள்ளுங்கள்.



5) அவ்வப்போது சீரான இடைவெளியில் உங்களது தோள்களை அசையுங்கள்.



6) கணினி திரை முன்னர் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் ஆக அமருவதை தவிருங்கள்.



7) நீண்ட நேரம் ஒரே உணர்வை நீங்கள் உணர்ந்தால், உங்களது முக தசைகளை அங்கே இங்கே அசைத்துக் கொள்ளுங்கள்.




***
thanks படித்ததில் பிடித்தது
***






"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "