...

"வாழ்க வளமுடன்"

26 ஜூலை, 2011

நீண்ட நாள் வாழ்க்கைக்கு – ஆரோக்கியப் பழக்கங்கள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்


ஒவ்வொரு நாளும் காலை உணவு உண்கின்றீர்களா?

எப்பொழுதும் படிக்கட்டைப் பயன்படுத்துகிறீர்களா?



உங்களுடைய அன்றாட செயற்பாடுகள் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் தாக்கம் செலுத்தும் என்பதை மறுக்க முடியாது.


நாம் அன்றாடம் செய்கின்ற செயல்கள் எம் வாழ்வில் ஒரு சிறிய விடயமாகத் தோன்றலாம், ஆனால் நல்ல ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை தொடர்வது உங்கள் வாழ்நாளைக் கூட்டும்.




அன்றாடம் உடற்பயிற்சி செய்தல்


தொழில்நுட்பங்கள் எமது வாழ்வை எளிதாக்கிவிட்டன. ஆனால், ஆரோக்கியமானதாக்கி விடவில்லை.



அன்றாட உடற்பயிற்சி நிச்சயமாக எமக்கு ஒரு வரம் போன்றது. உண்மையில், ஆய்வுகள் உடற்பயிற்சியானது உங்கள் வாழ்நாளில் 3 ஆண்டுகளைக் கூட்டுகிறது என பரிந்துரைக்கின்றன.



எப்பொழுதெல்லாம் முடியுமோ அப்பொழுதெல்லாம் வேலைத்தளத்திற்கு நடந்து செல்லங்கள்.



நீண்ட தூரம் இல்லாவிட்டாலும் ஒரு குறுகிய தூரமாவது நடக்கலாம்.




பெரிய கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் நடப்பதற்குப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தலாம். இவை மிகவும் எளிதானவை தானே?


ஆரோக்கியமான காலை உணவை உட்கொள்ளுங்கள்


காலை உணவை அன்றாடம் உட்கொள்வது நீண்ட நாள் வாழ்வதற்கான ஆரோக்கியமான பழக்கவழக்கமாகும்.


காலை உணவைத் தவிர்ப்பவர்களுடன் ஒப்பிடுகையில் அன்றாடம் காலை உணவை நேரத்தோடு உட்கொள்பவர்களுக்கு சர்க்கரை வியாதி ஏற்படுவது குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


இதைவிட முக்கியமானது காலை உணவை உட்கொள்வது மனதிற்கும் உடலுக்கும் உற்சாகத்தை ஊட்டி இனியதொரு காலையைத் தொடங்க உகந்த வழியாகும்.


கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் சிறிய அளவு கொழுப்பு கலந்த உணவினை காலையில் உட்கொள்வது பரிந்துரைக்கப்பட்டுள்ளது



போதுமான அளவு உறங்குங்கள்


போதிய தூக்கமின்மை உங்கள் வாழ்நாளைக் குறைக்கும். கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆய்வுகளின் இறுதி முடிவு இதுதான்.



நாம் எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்பது தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலும் குறைந்தது 7 மணி நேரமாவது தூங்காமலிருப்பது பெரிய வியாதிகளான புற்றுநோய், இதய நோய், சர்க்கரை வியாதி மற்றும் உடற்பருமன் போன்றவற்றை ஏற்படுத்தும்.



தூக்கமின்மை மட்டுமல்ல ஓய்வின்மையும் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.



மன அழுத்தம், கோபம் என்பன மிகப்பெரிய கொலையாளிகள் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும், எனவே ஓய்வெடுத்துக்கொள்வதும் வாழ்நாளை சேமிக்கும்.



இசையை ரசிப்பது, மசாஜ் செய்துகொள்வது, தியானம் செய்வது இப்படி எதுவாக இருந்தாலும் ஓய்வாக இருப்பது வாழ்நாளை நிச்சயம் அதிகரிக்கும்.



இவை உங்களுக்கு நல்ல தூக்கத்தையும் கொடுக்கும்.



பற்களை தூய்மையாக வைத்திருங்கள்



பற்களைத் துலக்கி கொப்பளித்து தூய்மையாக வைத்திருப்பதும் உங்கள் வாழ்நாளில் 6.4 வருடங்களை அதிகரிக்கும்.


இந்த மதிப்பீடு எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பது தெரியவில்லை ஆனால் உண்மையில் வாய்த்தூய்மையின்மை அருவருப்பான பல் சார்ந்த நோய்களை ஏற்படுத்தும்.


அன்றாடம் பல் துலக்கி கொப்பளிப்பது வாயில் உள்ள பக்டீரியாக்களை நீக்கி பற்களை பாதுகாப்பதுடன் எமது இதயத்தையும் நோய்களிலிருந்து ஓரளவு பாதுகாக்கும்.




நண்பர்களுடன் தொடர்பில் இருங்கள்

சிகிச்சைகளை விட நண்பர்கள் மலிவாகக் கிடைப்பார்கள் என்று ஒரு பழைய வாசகம் உண்டு.


இதனை ஆய்வாளர்கள் உண்மையென நிருபிக்கின்றனர்.


இது நண்பர்களைப் பற்றியது மட்டுமல்ல சமூக மட்டத்தில் கோவில், விளையாட்டு சங்கங்கள் அல்லது சமையல் வகுப்புகள் என்று உங்களுடன் தொடர்புடைய எல்லாவற்றிற்கும் பொருந்தும்.


இவை உங்கள் உடல் மற்றும் உள நலத்துடன் தொடர்புடையவை. இவை சிறிய விடயங்களாக இருந்தாலும் உங்கள் வாழ்நாளைக் கூட்ட உதவும்.




***
thanks vm
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "