...

"வாழ்க வளமுடன்"

23 மார்ச், 2011

உத்திஷ்ட பந்தாசனம் விளக்கம் பயன்களும்: பக்கம் - 8

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
*

உத்திஷ்ட பந்தாசனம்:-

செய்முறை:


மல்லாந்து படுத்துக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் சேர்த்து மடித்துப் பாதங்கள் இரண்டையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது முடிந்தவரை இரண்டு கால்களையும் மேலே உயர்த்தி மூச்சு முழுவதையும் வெளியேற்றிவிட்டு முகத்தையும், முதுகையும் உயர்த்தி இரண்டு முழங்கால் முட்டிகளிலும் முகத்தைப் பொருத்த வேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் ஆசனநிலையிலிருந்து கலைந்து இளைப்பாறிக் கொண்டு மீண்டும் இம்மாதிரியே செய்யவேண்டும். இவ்வாறு மூன்று அல்லது நான்குமுறை செய்தால் போதும்.

இவ்வாசனத்தை ஆரம்பத்தில் பழகுகின்றபோது கால்களை மேலே உயர்த்திப் பற்றிக்கொண்டு முகத்தை முழங்காலுக்குக் கொண்டுவர முடியாது. அவ்வாறு முயலுகின்றபோது பின்னால் சாய்ந்துவிட நேரும். மீண்டும் முயன்றாலும் முன்னும் பின்னுமாக கடல் அலையில் ஆடுகின்ற தோணியைப்போல ஆடவேண்டியிருக்கும்.

இதனால் இந்த ஆசனத்தைச் சரியாகச் செய்ய முடியவில்லையே என்று மனதில் தளர்வு தோன்றும். இதற்காகச் சோர்வடைய வேண்டாம். அவ்வாறு ஆடுவதும் முதுகெலும்புக்கு ஒரு நல்ல பயிற்சியாக அமைந்துவிடும். ஆனாலும் ஆசனத்தைச் சரியாகச் செய்ய வேண்டுமல்லவா, அப்போது தானே திருப்தியாக இருக்கும் என்ற எண்ணம் எல்லோருக்கும் வரத்தான் செய்யும்.

இதற்காக ஒரு சின்ன முயற்சி செய்தால்போதும். ஆசனம் சரியாகவும், மிகவும் சுலபமாகவும் வந்துவிடும். சுவரின் ஓரமாக அமர்ந்துகொண்டு பிருஷ்டத்தைச் சுவரிலிருந்து சுமார் ஒரு சாண் அளவு இடைவெளி கொடுத்து முன்னால் நகர்த்தி முதுகைச் சுவரில் சாய்த்துக்கொள்ள வேண்டும். இப்போது இரண்டு பாதங்களையும் இரண்டு கைகளாலும் பற்றிக்கொண்டு கால்களை மேலே உயர்த்தவும். படத்தில் காட்டியுள்ளதுபோல் முழங்கால்களை வசதிப்படி கொஞ்சமாக வளைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றி விட்டு முகத்தை முழங்கால்களில் பொருத்திவிடலாம். இதனால் பின்னால் சாய்ந்துவிடமாட்டோம். அப்படிச் சாய்ந்தாலும் சுவரில்தான் சாய்வோம். இப்போ ஆசனம் சரியாக வந்தவிடும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். கால்களை நீட்டிக் கொஞ்சம் இளைப்பாறிக் கொண்டு மறுபடியும் செய்யலாம். இப்படி இவ்வாசனத்தை மூன்று அல்லது நான்கு முறை செய்யலாம். பழகப்பழகச் சுவரின் ஆதரவு இல்லாமலே ஆசனம் சரியாகச் செய்ய வந்துவிடும். இப்படியும் இவ்வாசனத்தைச் செய்வது சிலருக்குக் கடினமாகவோ அசௌகரியமாகவோ இருக்கலாம். அவர்கள் இன்னொரு முயற்சியைச் செய்துபார்க்கலாம். இந்த முயற்சி உத்திஷ்ட பந்தாசனத்தை இன்னும் எளிமையாக்கும்.

செய்முறை:-

மல்லாந்து படுத்துக்கொண்டு இரண்டு முழங்கால்களையும் மடித்துப் பாதங்களை இரண்டு கைகளாலும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது வசதிப்படி கால்களை உயர்த்தி எளிமையாகச் செய்யும் அளவுக்கு முழங்கால்களை வளைத்துக்கொண்டு மூச்சை வெளியேற்றிவிட்டு முகத்தை இரண்டு முழங்கால் முட்டிகளிலும் பொருத்தவேண்டும். இந்த நிலையில் பத்துநொடிகள் இருந்தால்போதும். பின்னர் கால்களை நீட்டி இளைப்பாறிக்கொண்டு மறுபடியம் இம்மாதிரியே செய்யலாம்.




இப்படி நான்கு அல்லது ஐந்துமுறை செய்தால்போதும். இவ்வாசனம் செய்வதற்குச் சுலபமாக இருக்கும். இவ்வாசன நிலையில் கால்களை நெட்டுக்குத்தாக உயர்த்த உயர்த்தக் கடினம்இ கால்களை மடித்துத் தாழ்த்தத் தாழ்த்த எளிமை. இதுதான் இதிலுள்ள நுணுக்கம். உத்திஷ்ட ஆசனத்தைப் பயிலும் உங்களுக்கு இந்த இரண்டு செய்முறைகளும் நன்கு விளங்கும். இந்த இரண்டு முறைகளின் பயன்களும் ஒன்றுதான்.
***

உத்திஷ்ட ஆசனங்களின் பயன்கள்:-

இவ்வாசனத் தொகுப்பு பிரம்மாஸ்திரம் என்று கருதப்படுகிறது. ஆகவே இவை ஐந்து ஆசனங்களின் பயன்களும் பிரமிக்க வைக்கத்தக்கனவாகும். இவற்றால் கால்கள், பாதங்கள், கைகள் ஆகியவற்றின் எலும்புகள், முதுகெலும்பு, முதுகறை எலும்புகள், விலாஎலும்புகள் என்று சகலவிதமான எலும்புகளும் வலிமைபெறுகின்றன. எலும்பு மஜ்ஜை வளம்பெறுகிறது. ஊடம்பிலுள்ள எல்லாத்தசைகளும் இறுக்கமும் திண்மையும் பெறுகின்றன. எனவே உடம்பிலுள்ள ஊளைச்சதைகள் கரைந்து அகலுகின்றன. முக்கியமாக வயிற்றிலுள்ள உள்ளுறுப்புக்களைக் காக்கும் வேதாளம் என்று இவை யோகசாஸ்திரத்தால் போற்றப்படுகின்றன.

பருத்துப் புடைத்திருக்ககும் வயிற்றுத் தொந்தியைக் கரைக்கிறது. வயிறு சம்பந்தமான மகோதரம் என்ற நோய்க்கு இவ்வாசனம் அருமருந்து போன்றது. கல்லீரல, மண்ணீரல், கணையம், பித்தப்பை, இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகங்கள், சிறுநீர்க்குழாய்கள், சிறுநீர்ப்பை, கருப்பை, ஓவரி ஆகிய அனைத்து வயிற்று உள்ளுறுப்புக்களும் வலிமையும்இ செயலாக்கமும் சுறுசுறுப்பும் பெறுகின்றன. இவ்வாசனத் தொகுப்பால் சிறுநீரகங்கள் சம்மந்தமான எல்லா நோய்களையும் தகர்த்துவிடலாம். செயலிழந்துபோன சிறுநீரகங்களைச் செயற்படவைக்கலாம்.

கணையம் செயலிழந்து போவதாலோ, செயல் குன்றுவதாலோ நமக்கு இன்குலின் ஹார்மோன் கிடைக்காமல் சர்க்கரைநோய் வருகிறது. ஒரு மாதகாலப் பயிற்சியிலேயே இந்தச் சர்க்கரைநோயை இருந்த இடம் தெரியாமல் அடித்துவிரட்டிவிட இவற்றால்முடியும். இவ்வாசனங்கள் நேரிடையாகக் கணையத்தில் இயங்கிக் கணையத்தைத் தூண்டுகின்றன. சிறுநீரகத்தில் உருவாகியுள்ள கற்களை உடைத்து இலகுவாக வெளியேறச் செய்கின்றன. கல்லீரல் உபாதைகளைப் போக்குகின்றன. மஞ்சட்காமாலை நோய்க்கு இவ்வாசனங்கள் அற்புதமான நிவாரணியாகும். கணையம், கல்லீரல், சீறுநீரகங்கள் போன்றவற்றில் இவற்றின் இயக்கம் அபாரமானாது.

இவ்வாசனங்களை நாள்தோறும் பயின்றுவந்தால் எந்தவிதமான நோய்களும் வரமாட்டா. மலச்சிக்கலை அடியோடு குணப்படுத்துவதில் இந்த ஆசனத்தொகுப்பு தலையாய இடத்தை வகிக்கிறது. ஓய்வில்லாமல் பணிபுரிந்து கொண்டேயிருக்கும் நமது வயிற்றின் உள்ளுறுப்புக்கள், இப்பயிற்சிகளினால் களைப்பைப் போக்கிக்கொண்டு சுறுசுறுப்படைந்து ஒவ்வொரு நாளும் தம்மைத்தாமே புதுப்பித்துக் கொள்ளுகின்றன.
*

ஒரு வேண்டுகோள்:-

உத்திஷ்ட ஆசனங்களைத் தொடங்குவதற்கு முன்னால் உத்திதபாதாசனத்தை நான்குமுறை செய்கிறோமல்லவா? அதைப்போலவே உத்திஷ்ட ஆசனங்களைச் செய்துமுடித்த பின்னரும் நான்குமுறை உத்திதபாதாசனத்தைச் செய்யவேண்டும். சரியான ஆசனப்பயிற்சி இல்லாதவர்கள் எடுத்த எடுப்பிலே இவ்வாசனங்களைப் பயிலவேண்டாமென்று மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன்.

சர்க்கரைநோய் என்ற பெரும் துன்பத்திலிருந்து இனி பூரணவிடுதலை கிட்டிவிட்டது. எல்லோரையும ;போல வாயாரச் சாப்பிடலாம். சர்க்கரை, இனிப்பு, பழங்கள் இவற்றையெல்லாம் பார்த்து அஞ்சவோ ஏங்கவோ தேவையில்லை. என்றாலும் இவ்வாசனத்துக்கு உபசாந்தமாக இன்னும் இரண்டு ஆசனங்களையும் சேர்த்து விவரிப்பது நிறைவளிப்தாக இருக்கும்.

இந்த இடத்தில் வாசகர்கள் நலம் கருதி சிலவிடயங்களைச் சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. உத்தித பாதாசனத்துக்குப் பின்னால் விவரிக்கப்பட்டுள்ள உத்திஷ்ட ஆசனங்கள் பயிலுவதற்குச் சிரமமாக இருக்குமென்று நீங்கள் கருதினாலோ அல்லது இவ்வாசனங்களுக்காகத் தரப்பட்டுள்ள எச்சரிக்கைகளைப் படித்து உத்திஷ்ட ஆசனங்களைச் செய்வதற்குத் தயங்கினாலோ, நீங்கள் உத்தித பாதாசனத்தைச் செய்துவிட்டு உத்திஷ்ட ஆசனங்களை அடியோடு விட்டுவிட்டு, அப்படியே இனி அடுத்துச் சொல்ல விருக்கின்ற ஜானுசீர்சாசனம், பச்சிமோஸ்தான்ஆசனம், ஓய்வாசனம் ஆகிய மூன்று ஆசனங்களையும் உத்தித பாதாசனத்துக்குப்பின் சேர்த்துக்கொண்டு செய்யலாம்.

இடையில் உத்திஷ்ட ஆசனங்களைச் செய்யாமல் விட்டுவிட்டோமே இதனால் நோய் சீக்கிரம் குணமாகுமா ஆகாதா என்ற ஐயமோ, கவலையோ உங்களுக்கு வேண்டாம். சர்க்கரைநோயை முற்றாகக் குணப்படுத்த இந்த மூன்று ஆசனங்களே போதுமானவை. உங்கள் உடல்நலம் தேறி உங்களுக்கு சுயநம்பிக்கையும்இ உடலில் தெம்பும் வருகின்றபோது, இனி உத்திஷ்ட ஆசனங்களைச் செய்துதான் பார்ப்போமே என்ற எண்ணம் மேலிடுகின்றபோது, நீங்கள் விரும்பினால் உத்திஷ்ட ஆசனங்களை உத்தித பாதாசனத்துக்குப் பின்னால் நம்பிக்கையோடு சேர்த்துப் பயிற்சி செய்யலாம். அதனால் உங்கள் உடல்நலம் மேலும் உறுதிபெறும்.
***

ஜானுசீர்சாசனம்:-

ஜானு என்றால் முழங்கால் முட்டி என்று பொருள். சிரசு என்றால் தலை. முழங்கால் முட்டியோடு தலையைப் பொருத்தி இந்த ஆசனத்தைச் செய்வதால் இதற்க ஜானுசீர்சாசனம் என்று பெயரிட்டார்கள்.

செய்முறை:-

படிய உட்கார்ந்துகொண்டு படத்தில் காட்டியபடி இடதுகாலை நீட்டி வலது காலை மடித்து தொடையோடு சேர்த்து வைத்துக்கொள்ள வேண்டும். மூச்சை நன்கு உள்ளே இழுத்து மூச்சு முழுவதையும் வெளியேற்றிவிட வேண்டும். வயிற்றைக் கொஞ்சம் உள்ளே எக்கிக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி இடது பாதத்தைப் பற்றிக்கொண்டு, அப்படியே படியக் குனிந்து நெற்றியை முழங்கால் முட்டியோடு பொருத்தவேண்டும். இந்த நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் நிமிர்ந்து சற்று இளைப்பாறிக்கொண்டு வலதுகாலை நீட்டி இடது பாதத்தை வலது தொடையோடு சேர்த்து வைத்துக்கொண்டு முன்பு செய்ததைப்போலவே செய்யவேண்டும்.



இப்போது ஒரு சுற்று ஜானுசீர்சாசனம் செய்ததாக ஆகிவிடுகிறது. இவ்வாறு கால்களை மாற்றிமாற்றி மூன்று அல்லது நான்கு சுற்றுக்கள் செய்தால் போதும். ஒரே காலை நீட்டி மூன்று முறையும்இ பின்னர் மற்றக்காலை நீட்டி மூன்றுமுறையும் செய்யக்கூடாது. கால்களை மாற்றிமாற்றித் தான் செய்யவேண்டும். கருவுற்ற பெண்கள் இவ்வாசனத்தைச் செய்யவேண்டாம்.

பயன்கள்:-

இவ்வாசனத்தால் இடுப்பு வலிமை பெறுபிறது. கால்களிலுள்ள இடை, பிங்கலை நரம்புகள் வலிமை பெறகின்றன. கால்களில் உண்டாகும் வலிகள்இ இடுப்புவலி போன்றவை அகலுகின்றன. வயிற்றிலுள்ள தசைகள் இறுகித் திண்மை பெறுகின்றன. வயிற்றின் உள்ளுறுப்புக்கள் சுறுசுறுப்படைந்து சீரான இயக்கத்துக்கு வருகின்றன. மலச்சிக்கல் அகலுகிறது.

இடதுகாலை நீட்டிச் செய்கின்றபோது, வயிற்றின் இடது பக்கத்திலுள்ள கணையம் நல்ல பயிற்சிபெற்று இயங்குவதால் சர்க்கரைநோய் அடியோடு அகலுகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு இவ்வாசனம் அற்புதமான பயன்தரக்கூடியது. இதற்கு முன்னால் விபரிக்கப்பட்ட உத்திஷ்ட உபாங்கபாதாசனம், உத்திஷ்ட பாதாசனம் ஆகிய ஆசனங்களின் பயனை விபரித்தபோதும் கணையம் என்ற சுரப்பியின் இயக்கத்தை விபரித்திருக்கிறேன்.

வலது காலை நீட்டிச்செய்கின்றபோது கல்லீரல் பித்தப்பை ஆகியவை வளம்பெறுகின்றன. இதனால் உடம்பின் ஆரோக்கியம் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது. இவ்வாசனத்தோடு இதற்கடுத்து பச்சிமோஸ்தானாசனம் என்ற ஆசனத்தையும் சேர்த்துச் செய்யவேண்டுமாதலால் அதைப்பற்றியும் இங்கே விபரித்துவிட்டு இரண்டு ஆசனங்களுக்குமான பயன்களைப் பார்க்கலாம்.
***

பச்சிமோஸ்தான் ஆசனம்:-

இரண்டு கால்ளையம் நன்கு நீட்டி உட்காரவேண்டும். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தியபடி மூச்சை ஆழ்ந்து உள்ளே இழுக்கவேண்டும். இழுத்த காற்று முழுவதையும் வெளியேற்றிவிட்டு, வயிற்றைக் கொஞ்சமாக உள்ளே எக்கிக்கொண்டு இரண்டு கைகளையும் நீட்டி இரண்டு பாதங்களையும் பற்றிக்கொள்ள வேண்டும். இப்போது அப்படியே முன்னால் குனிந்து நெற்றியை முழங்கால் முட்டிகளில் பொருத்த வேண்டும். இந்நிலையில் பத்து நொடிகள் இருந்தால் போதும். பின்னர் நிமிர்ந்து மூச்சை உள்ளே இழுத்துக்கொள்ளலாம். சற்று இளைப்பாறிய பின்னர் மேலும் மூன்றுமுறை இவ்வாசனத்தைச் செய்யலாம்.





நான்கு அல்லது ஐந்து முறைகள் இவ்வாசனத்தைச் செய்தால்போதும். சர்க்கரை நோயாளிகள் மற்றும கல்லீரல் தொல்லைகள், மலச்சிக்கல் பிரச்சினைகள் உள்ளவர்கள் பயிற்சி நன்றாகக் கைவந்த பின்னர் மேலும் இரண்டு தடவைகள் இதைக் கூடுதலாகச் செய்தால் போதும். கருவுற்ற பெண்கள் இதைச் செய்யக்கூடாது.

சிலருக்கு இவ்வாசனத்தைச் சரியாகச் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். அவர்கள் சிரமத்தைத் தாங்கிக்கொண்டு உடம்பை வருத்தி இதைச்செய்ய வெண்டாம். அவர்களால் முடிந்தவரை முயற்சி செய்தால் போதும். கீழேதரப்பட்டுள்ள படத்தைப் பார்க்கவும்.



இந்த அளவுக்கு கைகளை நீட்டிக் கால் பாதங்களைத் தொட்டாலோ அல்லது தொட முயன்றாலோ அதுகூடப் போதுமானதாகும். புழகப்பழக உடல் இசைந்து வளைந்து ஆசனநிலை சரியாக வந்துவிடும்.

சிலருக்குக் கால்களை எட்டிப் பிடிக்கவே வராது. அப்போதெல்லாம் கை கொஞ்சம் குட்டை, அதனால் தான் கால் எட்டவில்லை என்று கூறுவார்கள். இதெல்லாம் சமாளிப்புக்காகச் சொல்லப்படும் கதைகளாகும். முதுகெலும்பு வளைந்து கொடுக்காமையும், வயிறு தொந்திவிழுந்து பருத்து இருப்பதுமே இதன் சரியான காரணங்களாகும். எப்படியிருந்தாலும் தங்களால் முடிந்தவரை இவ்வாசனங்களைச் செய்தால் அதற்கேற்ற பலன்கிட்டும். நாளடைவில் வயிறு, தொந்தி கரைந்து முதுகெலும்பும் இசைந்துகொடுக்க ஆரம்பித்து விட்டால் எல்லாம் சரியாக வந்துவிடும்.

***

"வாழ்க வளமுடன்"

2 comments:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

சர்க்கரைநோயை முற்றாகக் குணப்படுத்த இந்த மூன்று ஆசனங்களே போதுமானவை//
எளிமையாக விளக்கியமைக்கு நன்றி.

prabhadamu சொன்னது…

//// இராஜராஜேஸ்வரி கூறியது...
சர்க்கரைநோயை முற்றாகக் குணப்படுத்த இந்த மூன்று ஆசனங்களே போதுமானவை//
எளிமையாக விளக்கியமைக்கு நன்றி.
////



நன்றி இராஜராஜேஸ்வரி :)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "