இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
”என் தோழிக்குத் திருமணமாகி ஆறு வருடங்களாகியும் குழந்தை இல்லை. அவள் கணவருக்கு விதைப் பையில் காசநோயைக் கண்டறிந்து, அதுதான் குழந்தைப் பேறின்மைக்கு காரணம் என்றிருக்கிறார்கள். காசநோய் என்றால், நுரையீரல் மட்டுமே இலக்கு என்றிருந்த எங்களுக்கு, இத்தகவல் மிகவும் அதிர்ச்சியாகவும், ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மேலும் விளக்கம் கிடைக்குமா ப்ளீஸ்..?”டாக்டர் வெங்கடேஸ்வரபாபு, நுரையீரல் மற்றும் காசநோய் சிறப்பு மருத்துவர், புதுச்சேரி:
*
”மைக்கோபேக்டீரியம் (Mycobacterium) என்ற பாக்டீரியாதான் டி.பி. எனப்படும் காசநோய்க்கு காரணமாகிறது. இந்தியர்கள் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்தத் தொற்றுக்கு உட்படுகிறார்கள்.
பாக்டீரியாவின் தீவிரம் மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்து அவர்களின் பாதிப்பு மட்டும் மாறுபடுகிறது. காசநோய் உள்ளவர்கள் இருமும் போது காற்றின் மூலம் பரவி அருகிலுள்ளவர்களைத் தொற்றும் இந்த பாக்டீரியா, நுரையீரலை மட்டுமே பாதிக்கும் என்றில்லை.
*
அங்கிருந்து ரத்தத்தின் மூலமாக உடலெங்கும் பரவுகிறது. குறிப்பாக, ரத்த ஓட்டம் அதிகமுள்ள உறுப்புகளைப் பாதிக்க வாய்ப்புள்ளது. இந்த வகையில் சிறுநீரகம் மற்றும் சிறுநீரகப் பாதை, எலும்புகள், வயிற்றுப்பகுதி என பல இடங்களையும் பாதிக்கிறது.
*
இவை தவிர, டி.பி. தாக்கும் மற்றொரு பிரதான அவயம்… ஆண், பெண் இருவரின் ஜனன உறுப்புகள்.
*
ஆண்:
ஆண்களின் விரையின் மேல் இருக்கும் எப்பிடிடைமிஸ் Epididymis என்ற சிறு குழல்தான், விரையிலிருந்து வெளிப்படும் உயிரணுக்களை அவற்றின் இயக்கத்துக்கான தகுதியை மேம்படுத்தும் தளமாக செயல்படுகிறது. விரை, எப்பிடிடைமிஸ் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டுமோ டி.பி-யால் பாதிக்கப்படும்போது விந்தணுவின் நீந்தும் திறன் மட்டுப்பட்டு, குழந்தையின்மைக்கு காரணமாகிறது.
*
வலியுடனோ அல்லது வலியில்லாமலோ விரையில் தோன்றும் வீக்கம் இதற்கு அறிகுறி. உங்கள் தோழியுடைய கணவரின் பிரச்னை இதுவாகத்தான் இருக்க வேண்டும்.
***
பெண்:
பெண்களுக்கும் அவர்களின் கர்ப்ப உறுப்புகளான கர்ப்பப்பை, சினைப்பை, ஃபெலோப்பியன் குழாய் போன்ற இடங்களில் காசநோய் தாக்கலாம். இதிலும் ஃபெலோப்பியன் அதிக இலக்காகிறது. எனவே, குழந்தையின்மைக்காக பரிசோதனை மேற்கொள்ளும் தம்பதிகள் டி.பி. பரிசோதனையிலும் தெளிவு பெறுவது நல்லது.
*
85% பாதிப்புக்குள்ளாகும் நுரையீரல் மட்டுமே சுலபத்தில் டி.பி-யை வெளியே
அடையாளம் காட்டும். மற்ற உறுப்புகளில் பெரும்பாலும் முற்றும் வரை டி.பி.
தன்னை அடையாளம் காட்டாது. நீண்ட நாட்களாக சளித் தொந்தரவு, இருமலில் ரத்தத் துளிகள் தென்படுவது,பசியில்லாத்தன்மை,மூச்சுவாங்குதல்… இவற்றோடு மாலையில் மட்டுமே வரும் ஜுரம் போன்றவை காசநோயின் அறிகுறிகள்.
*
பரிசோதனைக்குப் பின் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அதற்கான திட்டவட்ட கால எல்லை வரைக்கும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டியது அவசியம். இதில் அலட்சியம் காட்டுவது, மருந்து எடுத்துக் கொண்டதும் மட்டுப்பட்டதாக நினைத்து சிகிச்சையை நிறுத்திவிடுவது போன்ற காரணங்களால் டி.பி. மறுபடியும் தனது
வேலையைக் காட்டலாம். அதேபோல ஒரு முறை டி.பி வந்தவருக்கு மறுபடியும் வராது என்ற உத்தரவாதம் கிடையாது!”
***
நன்றி:- டாக்டர்
நன்றி:- அ.வி
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக