...

"வாழ்க வளமுடன்"

04 டிசம்பர், 2010

இயற்க்கை + அழகு = ஆரோக்கியம் :)

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
முகம் அழகாக தோன்ற வேண்டுமானால் உடலில் உள்ளே உள்ள உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.




இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவைகளான உணவு, உடை, உறைவிடம், பொருள் இதன் பட்டியலில் அழகும் இடம்பிடித்து விட்டது.

*

எனவே உடலை நன்கு பராமரித்தால்தான் இயற்கையான உண்மையான அழகைப் பெறமுடியும்.

*

இன்றைய நவீன உலகில் உணவு மாறுபாடு காரணமாக முகமும், சருமமும் பாதித்த நிலையிலேயே பலர் காணப்படுகின்றனர். இவர்களின் இந்த நிலையைப் பயன்படுத்தி பணம் குவிக்க பல அழகு நிலையங்கள் ஆங்காங்கே புதிது புதிதாய் முளைக்க ஆரம்பித்துவிட்டன.

*

முக அழகை பராமரிக்க மேலை நாட்டினர் இரசாயனம் கலந்த அழகுசாதன பொருட்களை மேல்பூச்சாக பூசி வந்தனர்.

*

நாளடைவில் மேலை நாட்டினரும் இயற்கையை நேசித்து, அதன் அருமையை புரிந்துகொண்ட இயற்கை மூலிகைகளை பயன்படுத்தி, இயற்கையான உணவுகளை சாப்பிட்டு இயற்கையாக உடல் அழகையும் முக அழகையும் பெற ஆரம்பித்துள்ளனர்.

*

ஆனால் நம் மக்கள் பலர் மேல்நாட்டு மோகத்தால் ரசாயன அழகு சாதனப் பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்துள்ளனர்.

***

பொதுவாக சருமத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

1. சாதாரண சருமம்

2. வறட்சியான சருமம்

3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்

***

2. வறட்சியான சருமம்:

வறட்சியான சருமம் கொண்டவர்களின் முகம் மிகவும் கறுத்து களையிழந்து காணப்படும். இதற்குக் காரணம் இவர்களின் உணவு முறையே. வறட்சியான சருமம் கொண்டவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். இவர்கள் உணவில் அதிகம் புளி, தக்காளி போன்ற புளிப்புச் சுவையை விரும்பி சாப்பிடுபவர்களாக இருப்பார்கள்.

*

முகம் பளபளக்க சில வழிமுறைகள்:


1. வெண்டைக்காய் பிஞ்சு - 2

காரட் - 1

இவற்றை எடுத்து நறுக்கி தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் எங்கும் பூசி சிறிது நேரம் ஊறவைத்து குளித்து வந்தால் வறண்ட சருமம் ஒளிபெறும்.



2. · செம்பருத்தி இலை, பயித்தம் பயறு இவற்றை சம அளவாக எடுத்து நீர்விட்டு அரைத்து முகத்தில் பூசிவந்தால் முகம் பளபளக்கும்.


3· அகத்திக் கீரையை தேங்காய் பால் விட்டு அரைத்து முகம் மற்றும் உடல் முழுவதும்பூசி ஊறவைத்து பின் குளித்து வந்தால் முகமும், உடலும் வசீகரமாகும்.


4· வறட்சியான சருமம் கொண்டவர்கள் புளிப்பு சுவை கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது. மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


5· சருமத்தை வறட்சியுறச் செய்யும் குளியல் சோப்புகளைத் தவிர்ப்பது நல்லது.


6· பாதாம், முந்திரி, வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை உணவில் மிதமான அளவு சேர்த்துக்கொள்ள வேண்டும் .


7· வாரம் இருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.


8. வெண்டைகாய் - 150 கிராம்

சிறுபயறு - 30 கிராம்

துத்தியிலை - 10 கிராம்

ஆவாரம் பூ - 1 கைப்பிடி

மிளகு - 5

சீரகம் - 5 கிராம்

பூண்டு - 2 பல்

பெருங்காயம் - தேவையான அளவு

இவற்றை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து அந்த சாறினை வடிகட்டி அருந்தி வந்தால் வறட்சியான உடல் குளிர்ச்சியடைந்து பளபளப்பாகும். தொடர்ந்து ஒரு மண்டலம் இவ்வாறு செய்து வருவது நல்லது.



***


3. எண்ணெய் பிசுக்கு கொண்ட சருமம்


சிலருடைய முகம் எப்போதும் எண்ணெய் பசையுடனே காணப்படும். மேலும் அவர்கள் எவ்வளவுதான் முகத்தை கழுவினாலும் எண்ணெய் வடிவது போன்றே இருக்கும். இதற்கு காரணம் கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகமாக உண்பதே.


இவர்கள்:


1· தக்காளிச் சாற்றினை முகத்தில் தேய்த்து 15 நிமிடம் கழித்து முகம் கழுவி வந்தால் முகத்தில் எண்ணெய் பசை நீங்கும்.


2· வெள்ளரிக்காயை எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி 10 நிமிடம் காயவைத்து பின் குளிர்ந்த நீரில் முகம் கழுவி வந்தால் முகத்தில் உள்ள எண்ணெய் பசை குறையும்.


3· சின்ன வெங்காயத்தை நன்கு வேகவைத்து தயிர் கலந்து அரைத்து முகத்தில் தேய்த்தால் முகம் பளபளக்கும்.


4. ஆரஞ்சு ஜூஸ் - 100 மிலி

எலுமிச்சை ஜூஸ் - 100 மிலி

நெல்லிச்சாறு - 100 மிலி

புதினா சாறு - 100 மிலி

சாத்துகுடி சாறு - 100 மிலி

இவை அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து அதனுடன் 300 மிலி தேனை சேர்த்து பதமாகக் காய்ச்சி இறக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை மாலை இருவேளையும் 200 மிலி தண்ணீரில் 15 மிலி அளவு கலந்து அருந்தி வந்தால் முகம் மற்றும் உடல் பளபளக்கும்.



***
thanks நக்கீரன்
***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "