...

"வாழ்க வளமுடன்"

10 நவம்பர், 2010

பாலை பற்றி மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உன்மைகளும்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பால் குடிங்க ஆனால் அதை பற்றி சில விஷயம் தெரிந்து குடிங்க !



பாலில், புரதச்சத்து, கால்சியம், மாக்னீசியம் மற்றும் வைட்டமின் பி உட்பட பல்வேறு ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளன. ஆனால், இந்த பாலில், யூரியா, தரம் குறைந்த கொழுப்பு, சோப்புகள், ஸ்டார்ச், பேக்கிங் சோடா போன்ற சிலவற்றை கலப்படம் செய்வதால், இது, பாதுகாப்பற்றதாக மாறி வருகிறது.

*

அதுமட்டுமல்லாமல், கலப்படமற்ற பாலை பற்றியும் மக்கள் மத்தியில் சில கட்டுக் கதைகளும் உலவுகின்றன.

*

அவை பற்றி சில உண்மைகள் இங்கே கொடுக்கப் பட்டுள்ளன.


*

கட்டுக்கதை: காய்ச்சிய பாலை விட, காய்ச்சாத பாலில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளன.

*

உண்மை:

பாலை காய்ச்சும் போது, அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் எதுவும் குறைவதில்லை. பாலில் காணப்படும் சில நுண்ணுயிர்களை கொல்வதற்காக, 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் சூடாக்கப்படுகிறது.

எனவே, காய்ச்சிய பாலை குடிப்பதால், தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு என்பதால், அவை மிகவும் பாதுகாப்பானது.

***

கட்டுக்கதை: பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதில் காணப்படும் கொழுப்புத் தன்மை குறைக்கப்படுகிறது.


உண்மை:

பாலில் தண்ணீர் சேர்ப்பதால், அதிலுள்ள சத்துக்கள் அனைத்தும் நீர்க்கின்றன. இதனால், ஊட்டச்சத்து அடர்த்தியும் குறைகிறது.

***

கட்டுக்கதை: கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் ஊட்டச்சத்து இல்லை.


உண்மை:

கொழுப்பு நீக்கப்பட்ட பால் குறைந்த கலோரிகளுடன், சிறப்பு ஊட்டச்சத்துகள் நிறைந்த தாக உள்ளது.


***


கட்டுக்கதை: பால் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு பால் பொருட்கள் தீங்கு விளைவிக்கும்.


உண்மை:

பால் ஒவ்வாமை இருப்பவர்கள், பால் குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஆனால், வெண்ணெய், தயிர் மற்றும் மோர் ஆகியவற்றை சாப்பிடலாம்.

***

கட்டுக்கதை: பிற பொருட்களிலும், கால்சியம் சத்து நிறைந்துள்ளதால், பால் பொருட்களை கைவிடலாமா?


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இதை தவிர, புரதச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், சிங்க் மற்றும் வைட்டமின் ஏ ஆகிய முக்கிய சத்துக்களும் காணப்படுகின்றன.


தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் கீரைகளில் காணப்படும் கால்சியம் சத்தை விட பாலில் இருக்கும் கால்சியம் சத்து சிறப்பாக கிரகிக்கப்படுகிறது.



கட்டுக்கதை: பால் ஒரு முழுமையான உணவு.

உண்மை:

பாலில் இரும்புச்சத்து, வைட்டமின் சி,டி,இ மற்றும் கே ஆகிய சத்துக்கள் பற்றாக்குறை நிலவுவதால், பாலை முழுமையான உணவாக கூற முடியாது.


***

கட்டுக்கதை: குழந்தைகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்படும் பாலை விட, பசும்பால் சிறந்தது.


உண்மை:

ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு, அவர்களுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட பாலே சிறந்தது. ஏனென்றால், பசும்பாலில் காணப்படும் கொழுப்பு சத்து, சரியாக ஜீரணம் ஆகாது.


மேலும், பசும்பாலில், இரும்புச்சத்து, வைட்டமின் சி மற்றும் சில முக்கிய கொழுப்புச் சத்துகள் பற்றாக்குறை உள்ளது.

***

கட்டுக்கதை: பால் குழந்தை பருவத்தில் மட்டுமே தேவை. பெரியவர்களானதும் தேவையில்லை.


உண்மை:

வாழ்நாள் முழுவதும், கால்சியம் சத்தை பூர்த்தி செய்ய பால் உதவுகிறது. எனவே, குழந்தைகள் மட்டுமல்லாது, அனைத்து பருவத்தினரும் பால் குடிப்பது நல்லது.


பால், குடிப்பதால், வயது காரணமாக ஏற்படும் பிரச்னைகளான எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு முறிவு போன்றவை தவிர்க்கப்படுகிறது.

***

கட்டுக்கதை: பால் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் காணப்படும் சில புரதச் சத்துக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவற்றுக்கு, உடல் எடை அதிகரிப்பதை தடுக்கும் தன்மை உண்டு.


***

கட்டுக்கதை: பால் ரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.


உண்மை:

பாலில் அதிகளவு கால்சியம் சத்து காணப்படுகிறது. இது குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்.


எனவே, உயர் ரத்த அழுத்தம் உடையவர்களுக்கு, முக்கிய உணவாக பால் பரிந்துரைக்கப்படுகிறது.



***

நன்றி தினமலர்!
February 2010

***


"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "