இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
மனஅழுத்தம் ஒரு தொற்றுநோய். வாழ்க்கையின் சூழல் பலருக்கும் மன அழுத்தத்தை தரலாம். ஆனால் அது குழந்தைகளுக்கும் பெற்றோர்கள் மூலம் பரவுகிறது என்கிறது புதிய ஆய்வு.பின்லாந்து கல்வி அமைப்பு ஒரு ஆய்வை நடத்தியது. டீன்ஏஜ் சிறுவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் 500 பேரை பரிசோதித்தது. அதில் அவர்களுக்கு இடையே உள்ள தொடர்பால் குழந்தைகளுக்கு மனஅழுத்தம் தொற்றுவது தெரியவந்துள்ளது.
*
குறிப்பாக வேலை செய்யும் பெற்றோர்களின் அனுபவமே அவர்களின் குழந்தைக்கு மன அழுத்தம் தொற்ற அடிப்படையாக உள்ளது. ஒருவர் தனது அலுவலகத்தில் மேலதிகாரி மற்றும் ஊழியர்களுடன் மனக்கசப்பான அனுபவங்களைப் பெறலாம்.
*
அதனால் ஏற்படும் மனச்சோர்வுடன் அவர் வீட்டை அடைகிறார். அந்தச் சோர்வு குறையும் முன்பே வீட்டில் குழந்தைகள் சேட்டை செய்ய ஆத்திரம் தலைக்கேறி கோபத்தைவெளிப்படுத்துகிறார்கள் பெற்றோர்கள். இதனால் குழந்தைகளின் கவனம் சிதறுகிறது.
*
அது அத்துடன் நிற்காமல் மறுநாள் பள்ளியிலும்எதிரொலிக்கிறது. வீட்டுப்பாடம் முடிக்காவிட்டால் அல்லது தவறு செய்திருந்தால் ஆசிரியர்களிடம் அவமானப்பட வேண்டி இருக்கிறது.
*
அதே மனநிலையுடன் செயல்படுவதால் நண்பர்களுடனும் சரியாக ஒத்துழைக்க முடிவதில்லை. நாளடைவில் இது மனஅழுத்த வியாதியாக பரிணமித்துவிடுகிறது.
*
பெற்றோர்கள் சண்டையிட்டுக் கொள்வதால் குழந்தைகள் பாதிக்கப்படுவார்கள் என்பது ஏற்கனவே தெரிந்ததுதான்.
*
சண்டை கூட வேண்டாம், ஏதோ வெறுப்பில் பேசினால்கூட குழந்தைகளை மனஅழுத்தம் தொற்றிக் கொள்கிறது என்பது பெற்றோர்கள் அறிய வேண்டிய செய்தி.
***
நன்றி - தினத்தந்தி.
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக