இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
எத்தனையோ சாதனை பெண்கள் இருந்தாலும் என்னை கவந்தவர்களில் சிலர்...***
நைட்டிங்கேல் அம்மையார் ( தாதியர் )
புளோரன்ஸ் நைட்டிங்கேல் நவீன தாதியியல் முறையை உருவாக்கிய இங்கிலாந்துத் தாதியர்.
*
போரில் காயம்பட்ட வீரர்களுக்கு ஓய்வின்றி மருந்திட்டவர். தாதிகளுக்கான பயிற்சிப் பள்ளியையும் இவரே முதலில் துவங்கினார்.
*
விளக்கேந்திய சீமாட்டி, கைவிளக்கேந்திய காரிகை (The Lady with the Lamp) என்று அழைக்கப்பட்டார்.
*
இவர் ஒரு எழுத்தாளரும், புள்ளியியலாளாரும் ஆவார்.
***
அன்னிபெசன்ட் அம்மையார் ( ஹோம்ரூல் இயக்கம் )
*
சுதந்திரத்திற்கு முன்பே அயர்லாந்து பெண்மணியான இவர் இந்தியாவால் ஈர்க்கப்பட்டு இங்கு வந்து இந்தியராகவே வாழ்ந்து சாதனை நிகழ்த்தியுள்ளார்.
தனது 46-வது வயதில் இந்தியா வந்த அவர், `ஹோம்ரூல்' இயக்கத்தை தொடங்கியதுடன், ஆங்கிலேயருக்கு எதிராக போராடியதுடன், நிர் இந்தியா என்னும் பத்திரிகையையும் நடத்தினார்.
கல்வி, சமூகம், ஆன்மிகம், தேச ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் பல்வேறு சேவைகளையும் செய்துள்ளார்.
***
சகுந்தலா தேவி (மனித கணினி)
*
1980-ம் ஆண்டில் லண்டனில் நடத்தப்பட்ட சோதனையில், எண்களின் பெருக்குத் தொகையை மனதிற்குள்ளாகவே கணக்கிட்டு விரைவாக பதில் கூறி சாதித்தவர் சகுந்தலா தேவி என்கிற இந்தியப் பெண்மணி.
இதனால் ஹியூமன் கம்ப்யூட்டர் (மனித கணினி) என்ற சிறப்பு பெயரும் இவருக்கு உண்டு.
மிகப்பெரிய எண்ணின் பெருக்கல் கணக்கீட்டுக்கு வெறும் 28 வினாடிகளில் பதில் கூறி அசத்தினார்.
***
அன்னை திரைசா
அன்பும் கருனையும் மறு வடிவமான அன்னை திரைசா எனக்கு மிகவும் பிடிக்கும். தன்னலம் இல்லதா சேவையும், அன்பை தவிர வெறு ஒன்றும் ( வெறுப்பு, அறுவறுப்பு ) தெரியாத அந்த அன்பு உள்ளம் எனக்கு பிடிக்கும்.
நோபல் பரிசு பெற்ற முதல் இந்திய பெண் இவர்.
இறந்தும் வாழும் இவர், உலகம் இருக்கும் வரை இவரை நினைக்கத மக்கள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு இவர்கள் அனைவரும் மனதில் இடம் பெற்று விட்டார்.
***
M. S. சுப்புலக்ஷ்மி ( கர்நாடக சங்கீத பாடகி )
.S. சுப்புலக்ஷ்மி அவர்களின் குரலும், அவர்களின் லயிப்பும், பாடலின் நடுநடுவே அவர்கள் தட்டும் இசையும் நம்மை உருக வைக்கும் என்பது நிச்சயம்.
இன்றும் இவர் குரலில் ஒளித்த சுப்புரபாதமும், சஷ்டிக் கவசமும் யாராலும் மறக்க முடியாது.
இந்த தலை முறைக்கூட அவர்களின் குரலை கேட்டு மகிழ்க்கிறது என்றால் அது அவர்களின் குரலும், அந்த சாந்த சொருபமான முகமும் தான் என்று சொல்லுவதில் சிறிதும் ஜயம் இல்லை.
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
***
திருமதி. திலகவதி மேம்
*
நான் கல்லுரியில் படிக்கும் போது எனக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் திலகவதி மேம். அவர்கள் மிகவும் கண்டிப்பு. ஆனால் அன்புமும், கருணையும், கொண்ட அவர்கள் என்னை மிகவும் கவர்ந்தவர்.
*
விவேகானந்தர் சொன்னதுப் போல் "ஒருவர் செய்யும் செயலை அவர்கள் முதுகில் தட்டிக்கெடுத்து முன்னேற்றுவது தான்:" என்றும் அதையே என் மேம் செய்ததால் அவர் என் கண்ணுக்கு ஒரு பெண் விவேகானந்தராக தான் தெரிந்தார்.
*
அவர்களை போல் வாழ வேண்டும் என்று ஒரு ஈர்ப்பு ஏற்ப்பட்டு முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறேன்.
*
அவர்களை இப்போது நினைத்தாலும் என்னுல் எழும் சுறுசுறுப்பும், ஆர்வமும் என்னை ஊக்குவிக்கும்.
*
நன்றி திருமதி. திலகவதி
***
உமாபலக்குமார் & ரமணிச்சந்திரன் ( எழுத்தாளர்கள் )
*
இருவரும் சிறந்த நாவல் ஆசிரியர்கள். இவர்களுடைய நாவல் கதைகள் குடும்ப நாவல்கள்.
*
நம் குடும்பத்தில் நடப்பது போல் இருக்கும் நிறைய விஷயமும், காதலும், நல் ஆண்மகன் & பெண்கள் நிலையும் எப்படி வாழ்ந்தால் வாழ்வு சிறக்கும் என்று எடுத்து கூறும் அளவுக்கு இருக்கும்.
*
படித்து அந்த புத்தகத்தை கீழே வைத்ததும் நம் மனதில் ஏற்ப்படும் அந்த உணர்ச்சி அதிக மகிழ்ச்சியை ஏற்ப்படுத்தும். நம் வீட்டில் அந்த மகிழ்ச்சி ஏற்ப்பட்டது போல் இருக்கும்.
*
நான் அவர்கள் புத்தக்த்தை படிக்க ஆரம்பித்தால் படித்து முடிக்காமல் கீழே வைக்கமாட்டேன்.
*
அதனால் இவர்களையும், இவர்கள் எழுத்து நாவல்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அதனால் இவர்களையும், இவர்கள் எழுத்து நாவல்களையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.
***
பழம்பொரும் நடிகை பானுமதி
பத்மஸ்ரீ டாக்டர் பானுமதி ராமகிருஷ்ணா .
*
எனக்கு இவருடைய நடிப்பும், அவருடைய கணீர் என்ற குரலும் மிகவும் பிடிக்கும்.
*
இப்போதும் அவர் பாடிய பாடலில் அன்னை படத்தில் " பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று பூக்காமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று " இந்த பாடலை யாராலும் மறக்க முடியாது.
*
நடிப்புக்கு இலக்கணம் வகுத்தவர் பானுமதி என்று பேரறிஞர் அண்ணாவால் பாராட்டு பெற்றவர். பத்மஸ்ரீ, கலைமாமணி உள்பட பல்வேறு பட்டங்களை பெற்று உள்ளார். 3 முறை தேசிய விருது பெற்றார்.
*
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.
*
தமிழ்நாடு இசைக் கல்லூரி முதல்வராகவும் பணியாற்றி உள்ளார். திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார்.
*
இவரது நடிப்பை பாராட்டி ஆந்திர மாநில அரசு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி இருந்தது. நடிப்பு கல்லூரி முதல்வராகவும் இருந்திருக்கிறார்.
*
இவர் தன்னுடைய 80வது வயதில் உயிர் நீத்தார்.
*
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
*
இவர் தன்னுடைய 80வது வயதில் உயிர் நீத்தார்.
*
இறந்தும் நம் உள்ளத்தில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர்.
***
உஷா உதுப் ( பாப் இசை )
எல்லா இடங்களிலும் ( உலகம் முழுவதும் ) பாடும் இந்த பெண்மணி நம் இந்திய கலச்சாரப்படி தலை நிறைய பூவும், பெரிய பொட்டும், பட்டு புடவையும், அந்த கணீர் என்ற குரலும் என்னை மிகவும் கவந்தது.
*
வித்தியாசமான குரலில் பாப் இசையைக் குழைத்துப் பாடிய உஷா உதுப் பல பாடல்களைத் தமிழ்ப் படங்களில் பாடி இருந்தாலும் அவரை முழுமையாகத் தமிழ் உலகம் பயன்படுத்த முன்வரவில்லை.
*
சுமார் 150 பாடல்களுக்கும் மேலாக உஷா பல மொழிகளிலும் பாடியுள்ளார். ஆனால் அவர் பாடிய ஆங்கிலப் பாடல்கள் தமிழ்ப் படங்களில் தனி முத்திரையைப் பதித்து விட்டது.
***
பெண் விமான ஓட்டுனரும், பணிப்பெண்களும்
அடுத்து என்னை கவர்ந்தவர்கள் பெண் விமான ஓட்டுனரும், பனிப்பெண்களும் தான். ஒரு பெண் தனித்து இவ்வளவு துனிச்சலுடன் இருப்பது பெரிய விஷயம். அவர்கள் துணிச்சல் பாறாட்ட வேண்டிய ஒன்று.
*
அவர்களின் அந்த இன்முகமும், சேவையும் என்னை மிகவும் கவந்தது.
*
நான் விமானத்தில் சொல்லும் போது அவர்கள் செய்யும் பணியை பார்த்து வியந்து இருக்கிறேன்.
***
இப்படி ஒரு நல்வாய்ப்பை தந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.
***
இந்த பதிவு உங்களை கவரும் என்று எண்ணுகிறேன். என் மனமர்ந்த நன்றிகள்.
இந்த பதிவு உங்களை கவரும் என்று எண்ணுகிறேன். என் மனமர்ந்த நன்றிகள்.
8 comments:
ok
ப்ரபா சூப்பர்,பிடித்ததின் விளக்கம் அருமை.
சூப்பர் பிரபா,
எல்லாம் அருமை. உஷா உதூப் எனக்கும் ரொம்ப பிடிக்கும்.
பானுமதிஅவங்க நடிப்பு , ரொம்ப நல்ல இருக்கும் அவ்ர்களின் பேச்சு கம்பீரமாக இருக்கும்.
நன்றி ஆசியா அக்கா. எனக்கு இந்த வாய்ப்பை தந்த உங்கலுக்கு மனமார்ந்த நன்றிக்கா. உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிக்கா.
நன்றி ஜலீலா அக்கா. எனக்கு பிடித்தவர்களை உங்கலுக்கும் பிடித்ததுக்கு என் மனமார்ந்த நன்றிக்கா. உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிக்கா.
நன்றி அண்ணா. உங்கள் கருத்துக்கும் ஊக்கத்துக்கும் மிக்க நன்றிண்ணா.
நல்ல தெரிவுகள் பிரபா.
நன்றி இமா அம்மா. உங்கள் பாராட்டுக்கும், வருகைக்கும், பதிலுக்கும், என்னை எப்போதும் ஊக்குவிப்பதுக்கும் மிக்க மிக்க நன்றி.
கருத்துரையிடுக