...

"வாழ்க வளமுடன்"

20 நவம்பர், 2010

ஹெட்போன்ஸ் உபயோகித்தால் வரும் பக்க விளைவுகள்!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
செவிப்புலனை குறுகிய காலத்தில் நிரந்தரமாக இழக்க வைக்கக்கூடிய ஹெட்போன்ஸ்


தினமும் எல்லோரும் பெரும்பாலும் Headphones பாவிக்கின்றோம். iPod தொடக்கம் கணணி வரை பல்வேறு கருவிகளில இந்த Headphonesஐ நாங்கள் பயன்படுத்தவேண்டி இருக்கின்றது.

*

முக்கியமாக மற்றவர்களை இரைச்சல் மூலம் தொந்தரவு கொடுக்காமல் இருப்பதற்கும், இசையை நாங்கள் மட்டும் கேட்டு மகிழ்வதற்கும் இதை பாவிக்கின்றோம். பல்வேறு வடிவங்களில், வகைகளில், விலைகளில் Headphones இருக்கின்றன.

*

கலைஞர்கள் பாடல்களை கலைக்கூடங்களில் ஒலிப்பதிவு செய்யும்போது.. அது தமிழ் சினிமா பாடலாக இருக்கட்டும்.. அல்லது Hollywoodல் உருவாக்கப்படும் ஓர் இசைAlbumமாக இருக்கட்டும்.. குறிப்பிட்ட பாடலை - இசையை கேட்பதற்கு சில அடிப்படை தரம் உள்ள கேட்கும் கருவிகளை ரசிகர்கள் பயன்படுத்தவேண்டும் என்று அவற்றை உருவாக்கும் கலைஞர்கள் எதிர்பார்ப்பார்கள்.

*

அவர்களின் இசையை முழுமையாக அனுபவிப்பதற்கு - இசையில் வருகின்ற ஒவ்வொரு சிறு ஒலியையும்.. இசையில் வருகின்ற பல்வேறு விதமான effectsஐயும் உணர்வதற்கு தரமான Headphones ஐ நாங்கள் பயன்படுத்துவது முக்கியம். தரமற்ற Speakers, Headphonesஐ நாங்கள் பயன்படுத்தினால் நல்ல ஓர் இசை அனுபவத்தை பெறமுடியாது.

*

ஆனால்.. Headphones மூலம் ஒலியை கேட்கும்போது.. Volumeஐ அளவுடன் வைத்து இருக்கவேண்டும். நீண்டநேரம் அதிகVolumeஇல் Headphonesஐ பாவிக்கும்போது நாங்கள் எங்கள் செவிப்புலனை விரைவிலேயே நிரந்தரமாக இழக்கவேண்டிவரலாம். குறிப்பாக நாங்கள் வாகனத்தில் போகும்போது, பயணம் செய்யும்போது.. வெளி இரைச்சல்களையும் மேவி எங்களுக்கு காதினுள் இசை கேட்கும்படி Headphonesஇன் Volumeஐ அதிகரிக்கின்றோம். இது எமது செவிகளிற்கு பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.நீங்கள் நல்ல தரமான Headphonesஐ பயன்படுத்தி நல்லதொரு இசை அனுபவத்தை பெறுகின்ற அதேநேரம் அதன் Volumeஐ அளவுடன் பயன்படுத்தி உங்கள் இனிய செவிப்புலனை உங்கள் ஆயுட்காலம் முழுவதும் நல்லநிலையில் பேணிக்காத்து கொள்ளுங்கள்.


***
thanks இணையம்
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "