...

"வாழ்க வளமுடன்"

06 அக்டோபர், 2010

எலு‌ம்புறுக்கி நோயும் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடு!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
ஆரோ‌க்‌கியமாக உ‌ள்ள பெரு‌ம்பாலான குழ‌ந்தைக‌ளு‌ம், இளைஞ‌ர்களு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடுட‌ன் இரு‌ப்பதாகவு‌ம், ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌ரி‌க்க‌ட்‌ஸ் போ‌ன்ற எலு‌ம்பு நோ‌ய்க‌‌ள் தா‌க்காதவ‌ண்ண‌ம் ந‌ம்மை‌ப் பாதுகா‌க்‌கி‌ன்றன. எனவே ‌வி‌ட்ட‌மி‌ன்-டி தேவை இ‌ன்‌றியமையாதது எ‌ன்று‌ ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.
அமெ‌ரி‌க்கா‌வி‌ல் உ‌ள்ள ‌பிலடெ‌ல்ஃ‌பியா மாகாண‌த்தை‌ச் சே‌ர்‌ந்த குழ‌ந்தைக‌ள் மரு‌த்துவமனை மரு‌த்துவ‌ர் பா‌பி‌ட்டி ஜ‌மீ‌ல் தலைமை‌யி‌ல் மே‌ற்கொ‌ண்ட ஆ‌ய்‌வி‌ல் இது தெ‌ரியவ‌ந்து‌ள்ளது.

*


இ‌ந்த ஆ‌‌ய்‌வி‌ல் 6 முத‌ல் 21 வயது‌க்கு உ‌ட்ப‌ட்ட 382 ஆரோ‌க்‌கியமான குழ‌ந்தைக‌ளை ப‌ரிசோதனை செ‌ய்த‌தி‌ல் அவ‌ர்களு‌க்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைவாக இருப்பது தெ‌ரிய வ‌ந்ததாக ஆ‌ய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


இ‌ந்த ஆ‌ய்வ‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்ட குழ‌ந்தைக‌ள் சா‌ப்‌பிடு‌ம் உணவு உ‌ள்‌ளி‌ட்ட சா‌ப்பா‌ட்டு வகைக‌ளி‌ல் இரு‌ந்து பெற‌ப்படு‌ம் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌யி‌ன் அளவு, உட‌ல் எடை ஆ‌கியவ‌ற்றை சோதனை செ‌ய்து‌ள்ளன‌ர்.

*


இ‌தி‌ல் பா‌தி‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட குழ‌ந்தைக‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவானது குறை‌ந்து காண‌ப்ப‌ட்டதாகவு‌ம், அதாவது 55 ‌விழு‌க்காடு குழ‌ந்தைக‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு குறை‌ந்து இரு‌ந்ததாகவு‌ம், ஒ‌ட்டு மொ‌த்த‌‌த்‌தி‌ல் இ‌ந்த ஆ‌‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்ட 68 ‌விழு‌க்காடு குழ‌ந்தைக‌ள், இளைஞ‌ர்க‌ளி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி‌யி‌ன் அளவு கு‌‌ளி‌ர் கால‌ங்க‌ளி‌‌ல் ‌மிக‌க் குறைவாக இரு‌ப்பது தெ‌ரியவ‌ந்ததாக ஜ‌மீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

*


வி‌ட்ட‌மி‌ன்-டி ‌நிலையை‌த் தெ‌ரி‌‌ந்து கொ‌‌ள்வத‌ற்கு ‌சிற‌ந்த வ‌ழி ஒருவ‌ரி‌ன் இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி மூல‌க்கூ‌றி‌ல் ஒ‌ன்றான 25- ஹை‌ட்ரா‌க்‌ஸி ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு மூல‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ள்ளவதுதா‌ன் எ‌ளிது.

*


மொ‌த்த‌த்‌தி‌ல் ‌‌வி‌ட்ட‌மி‌ன்-டி குறைபாடுகளு‌க்கு மரு‌த்துவ ‌சி‌கி‌ச்சை முறைக‌ளி‌ல் அ‌வ்வளவாக மு‌க்‌கிய‌த்துவ‌ம் அ‌ளி‌க்க‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌கூ‌றியு‌ள்ளன‌ர்.

*


அ‌திலு‌ம் கு‌றி‌ப்பாக குழ‌ந்தைகளு‌க்கு இ‌ந்த குறைபாடு எ‌ந்த வகையான ‌விளைவுகளை ஏ‌ற்படு‌த்து‌ம் எ‌ன்பது கு‌றி‌த்து இ‌ன்று‌ம் முழுமையாக க‌ண்ட‌றிய‌ப்பட‌வி‌ல்லை எ‌ன்று‌ம் பா‌பி‌ட்டி ஜ‌மீ‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

*

1. எலு‌ம்பு‌க் கூட்டின் தசை நா‌ர் ஆரோ‌க்‌கிய‌த்‌தி‌‌ற்கு ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ‌யி‌ன் ப‌ங்குப‌ணி இ‌ன்‌றியமையாதது.
*
2. நமது உடலு‌க்கு‌த் தேவையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி பா‌ல் மூல‌ம் ‌கிடை‌க்‌கிறது.

*

3. ஆனா‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன்-டியை அ‌திக‌ரி‌க்க ‌மிக‌ச் ‌சிற‌ந்த வ‌ழி நமது உட‌லி‌ல் சூ‌ரிய ஒ‌ளி அ‌திக அள‌வி‌ல் படு‌ம்படி பா‌ர்‌த்து‌க் கொ‌‌ள்வது மூல‌ம்தா‌ன் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


கடுமையான ‌வி‌ட்ட‌மி‌ன்-டி ப‌ற்றா‌க்குறை தசைகளை வலு‌வில‌க்க‌ச் செ‌ய்வதுட‌ன், எலு‌ம்புக‌ளி‌ன் தாது‌க்களை பா‌தி‌ப்படைய‌ச் செ‌ய்வதுட‌ன் எலு‌ம்பு நோ‌ய்களை உருவா‌க்கு‌கினறன. இதனை‌த் த‌‌விர நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு நடைமுறைக‌ளிலு‌ம் இவை மு‌க்‌கிய ப‌ணியா‌ற்று‌கி‌ன்றன.

*


இர‌த்த‌த்‌தி‌ல் ‌வி‌ட்ட‌மி‌ன் அளவு குறை‌ந்தா‌ல் அது இர‌த்த அழு‌த்த‌ம், பு‌ற்றுநோ‌ய், ப‌ன்முக அணும உ‌ள்ள‌ரி‌க் கா‌ழ்‌ப்பு (Multiple selorisis), முத‌ல் வகை ச‌ர்‌க்கரை நோ‌ய் முத‌லிய நோ‌ய்க‌ள் வர காரணமாக அமை‌ந்து‌விடு‌‌ம்.

*

இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு‌க் குறைபாட்டிற்கும், தொ‌ப்பை‌க்கு‌ம் தொட‌ர்பு உ‌ள்ளதாகவு‌ம் ஆய்வாள‌ர்க‌ள் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

*


இது‌தொட‌ர்பாக மேலு‌ம் ஆ‌ய்வுக‌ள் தேவையெ‌ன்று‌ம், குழ‌ந்தைகளு‌க்கு இர‌த்த‌த்‌தி‌ல் உ‌ள்ள ‌வி‌ட்ட‌மி‌ன்-டி அளவு எ‌ந்த அளவு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது தொட‌ர்பாகவு‌ம், ‌வி‌ட்ட‌மி‌‌ன் உ‌ட்கொ‌ள்ளு‌ம் த‌ற்போதைய ப‌ரி‌ந்துறையை மறுப‌ரி‌சீலனை‌ச் செ‌ய்ய வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஜ‌மீ‌ல் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

***
http://www.viparam.com
***

"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "