...

"வாழ்க வளமுடன்"

09 செப்டம்பர், 2010

எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை? ( 300வது பதிவு )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இவை இந்த ஆழ்கடல் களஞ்சியத்தின் 300வது பதிவு :) என்று சொல்லிக் கொள்ளுவதில் பொரு மகிழ்ச்சி அடைகிறோம்!எந்த உணவில் எவ்வளவு சர்க்கரை?


சாப்பிடும் உணவுப் பொருளுக்கு ஏற்ப ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும் என்பதால், அன்றாடம் சாப்பிடும் உணவில் சர்க்கரை நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு உதவுவதற்காகவே கிளைசிமிக் இண்டெக்ஸ் (Glycemic Index) என்ற உணவு ஒப்பீட்டு அட்டவணை உள்ளது. அதாவது ஏற்கெனவே ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவோடு நாம் சாப்பிடும் உணவுப் பொருள்களால் கூடுதலாகும் சர்க்கரை அளவை 100 கிராம் குளுக்கோஸýடன் ஒப்பிடுவதே கிளைசிமிக் இண்டெக்ஸ் ஆகும்.

உதாரணமாக ஒருவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு 100 மி.கி. இருப்பதாகக் கொள்வோம். அவர் 100 கிராம் குளுக்கோஸ் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு மேலும் 100 மி.கி. கூடுதலாகி மொத்தம் 200 மி.கிராமாக அதிகரிக்கும்.
அவர் ஒரு குளோப் ஜாமூன் சாப்பிடுகிறார் என்று வைத்துக்கொள்வோம், சர்க்கரையின் அளவு ரத்தத்தில் 300 மி.கிராமாக உயரும். ஆனால் அவரே குளோப் ஜாமூனுக்குப் பதில் 100 கிராம் கொண்டைக் கடலை சுண்டல் சாப்பிட்டால் 40 மி.கி. தான் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரும்.

சாப்பிடும் உணவுக்கு ஏற்ப ரத்தத்தில் அதிகரிக்கும் சர்க்கரையின் அளவு கீழே தரப்பட்டுள்ளது.

பானங்கள் (200 மி.லி அளவு):

* தண்ணீர் குடித்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவில் எந்த மாற்றமும் இருக்காது.

* நீர்த்த மோர் குடித்தால் 10 மி.கி. அதிகமாகும்.ஏ சர்க்கரை இல்லாத பால் அல்லது காபி சாப்பிட்டால் 40 மி.கி. .ஏ சர்க்கரை போட்ட காபி குடித்தால் 140 மி.கி..

* உப்புப் போட்ட எலுமிச்சை பழச்சாறு அல்லது தக்காளி பழச்சாறு குடித்தால் 30 மி.கி..ஏ இளநீர் குடித்தால் 40 மி.கி..

* கஞ்சி குடித்தால் (சத்துமாவு கஞ்சி) 100 மி.கி.

* இனிப்பான குளிர்பானங்கள் குடித்தால் 150 மி.கி.

* பழச்சாறு குடித்தால் 150 மி.கி. உடன் சர்க்கரை சேர்த்தால் 250 மி.கி.

* மில்க் ஷேக் குடித்தால் 300 மி.கி.

எனவே 50 மி.கி.-க்கும் குறைவாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும் பானங்களைக் குடிக்கலாம்.


***


உணவு வகைகள்:

உணவு வகைகள் (100 கிராம் சாப்பிட்டால் அதிகரிக்கும் சர்க்கரை அளவு):
* கீரைத் தண்டு, வாழைத் தண்டு சாப்பிட்டால் 10 மி.கி.

* வாழைக்காய் தவிர பிற காய்கறிகள் 20 முதல் 30 மி.கி. அதிகமாகும்.

* பயறு மற்றும் பருப்பு சாப்பிட்டால் 30 முதல் 40 மி.கி.

* கேழ்வரகு அல்லது கோதுமை சாப்பிட்டால் 50 முதல் 55 மி.கி.

* அரிசி சாப்பிட்டால் 55 முதல் 60 மி.கி..

* கம்பு சாப்பிட்டால் 60 முதல் 70 மி.கி.

* உருளைக் கிழங்கு, வள்ளிக்கிழங்கு சாப்பிட்டால் 100 முதல் 150 மி.கி.

* இனிப்பு வகைகள் சாப்பிட்டால் 150 முதல் 300 மி.கி.

* எனவே ரத்தத்தில் சர்க்கரையின் அளவை 10 முதல் 30 மி.கி. வரை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் சாப்பிடலாம்.

* 30 முதல் 60 மி.கி. வரை சர்க்கரையை அதிகரிக்கும் உணவு வகைகளைத் திட்டமாகச் சாப்பிடலாம்.

* 60 மி.கி.க்கு மேல் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளை முடிந்த அளவு தவிர்க்கவேண்டும். 150 மி.கி. மேல் அதிகமாக்கும் உணவுகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக் கூடாது. இவ் வகை உணவுகளைச் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வராது. மேலும் சர்க்கரை நோய் நாளுக்கு நாள் மோசமடையும். எவ்வித சிகிச்சையும் பலன் தராது. இந் நோயின் பின் விளைவுகள் விரைவில் வரும்.

***


பழங்கள் (100 கிராம்):
தக்காளி, எலுமிச்சை 20 முதல் 30 மி.கி..

* வெள்ளெரி, கிர்ணி, பப்பாளி - 30 முதல் 40 மி.கி.

* கொய்யா, ஆப்பிள், சாத்துக்குடி, கமலா ஆரஞ்சு - 40 முதல் 60 மி.கி..

* மா, பலா, வாழை - 100 முதல் 150 மி.கி.

* பேரீச்சை, திராட்சை, சப்போட்டா - 150 முதல் 250 மி.கி.

* ரத்தத்தில் சர்க்கரை அளவை 60 மி.கி. வரை அதிகரிக்கும் பழங்களை மட்டும் சாப்பிடலாம். மற்றவற்றைச் சாப்பிட்டால் சர்க்கரை நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது.


***

நன்றி தமிழ்குறிச்சி.

****

"வாழ்க வளமுடன்"

8 comments:

கோவி.கண்ணன் சொன்னது…

நல்ல தகவல் தொகுப்பு.

300 ஆவது பதிவுக்கும் நல்வாழ்த்துகள்.

curesure Mohamad சொன்னது…

நண்பரே உங்களது பாராட்டுக்கு நன்றி ..
மன்னிக்கவும் ..எனது தளத்தில் உள்ள விஷயங்களை மறு பதிப்பு -காப்பி செய்திட என்னால் அனுமதி தர இயலாது .,
உங்களது தளம் அருமை ..

Unknown சொன்னது…

நண்பரே நீங்கள் என் தளத்தில் இருந்து ஒருசில பதிவுகள் எடுத்து போட்டாலும் என் தளத்தின் பெயரை இடவில்லை.அதனால் என்கக்கு கொஞ்சம் வருத்தம்.அனைவரும் பயன் பொற வேண்டும் என்று எண்ணி நான் என் தளத்தில் பதித்தேன். அவை உங்களுக்கு உதவியிருந்தால் எனக்கு மகிழ்ச்சி. ஆனால் இனி கட்டாயம் என் தளத்தின் பெயரை இடவும்.நான் அடுத்த தளத்தில் இருந்து எடுத்து போட்டாலும் அனைவரிடமும் இருந்து அனுமதி வாங்கிதான் என் தளத்தில் பதிகிறேன்.உங்கள் தளத்தில் இருந்து ஒருசில நல்ல தகவலைகளை என் தளத்தில் இட அனுமதி கோருகின்றேன். விருப்பம் இருந்தால் என் தளத்தில் வந்து பதில் சொல்லவும். ok

Unknown சொன்னது…

congrats for your 300 th post. all the best for forthcoming posts..

prabhadamu சொன்னது…

வாங்க கோவி.கண்ணன். உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


///300 ஆவது பதிவுக்கும் நல்வாழ்த்துகள். /// நன்றி நண்பாரே!


:)

prabhadamu சொன்னது…

வாங்க curesure4u. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.


உங்கள் கருத்தையும், நேர்மையையும் நான் பராட்டுகிறேன் நண்பரே.

:)

prabhadamu சொன்னது…

வாங்க தமிழர்களின் சிந்தனை களம். உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

prabhadamu சொன்னது…

வாங்க THE PEDIATRICIAN. உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

உங்கள் கருத்துக்கும், உங்கள் வாழ்த்துக்கும், உங்கள் தொடர்ச்சியான ஊக்கத்தும், உங்கள் பொன்னான நேரத்தை ஆழ்கடலுக்கு அளித்ததுக்கும் மிக்க நன்றி நண்பா.

:)

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "