...

"வாழ்க வளமுடன்"

12 ஆகஸ்ட், 2010

பச்சரிசி சாப்பிட்டால் டயாபடீஸ் வரலாம்..

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
இது என்னுடைய 225வது பதிவு என்று சொல்லுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.பச்சரிசி உணவு குறித்து மாசசூசட்ஸ் நகரின் ஹார்வேர்ட் பல்கலைக்கழக பொது சுகாதாரத்துறை ஆய்வு நடத்தியது.அதில் கூறியதாவது:

பச்சரிசி உணவை சாப்பிடுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆரியர்கள் மட்டும் அதிகளவில் பயன்படுத்திய நிலை மாறி அமெரிக்காவிலும் பச்சரிசி உணவை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர்.பச்சரிசி தயாரிக்கும் நடைமுறையில் உமி முற்றிலும் நீக்கப்பட்டு, பாலிஷ் செய்யப்படுகிறது.
ஆனால், இயற்கை முறையில் உமி நீக்கப்படும் கைக்குத்தல் அரிசியில் மேல் இழை நீடிக்கிறது. அதில் நார்ச்சத்து, மினரல்கள், விட்டமின்கள், பைட்டோகெமிக்கல் பாதுகாக்கப்படுகிறது.இவை அரிசி உணவால் ரத்தத்தில் அதிகரிக்கக்கூடிய சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி விடுகின்றன. எனவே, டயபடீஸ் நோயாளிகள் அதைப் பயன்படுத்த முடியும்.

பாலிஷ் செய்யப்பட்ட பச்சரிசியில் சத்துக்கள் அழிவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து டயபடீஸ் ஆபத்து அதிகரிக்கும். குறிப்பாக, வாரத்துக்கு 5முறைக்கு மேல் பச்சரிசி உணவை சாப்பிடுவதைப் தவிர்ப்பது அவசியம்.


***


நன்றி "குமுதம்"


***

"வாழ்க வளமுடன்"

2 comments:

Asiya Omar சொன்னது…

225 பதிவிற்கு வாழ்த்துக்கள்.ப்ரபா நலமா?

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. நான் நலம். நீங்கல் பிள்ளைகள் நலமா?

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "