...

"வாழ்க வளமுடன்"

18 ஆகஸ்ட், 2010

மசாஜ் செய்வதால் ஏற்படும் நன்மைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
மசாஜ் செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால். மசாஜ் கிளப்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. மசாஜ் தரும் பலன்கள் அதிகம் என்கிறார்கள் உடலியக்க நிபுணர்கள்.......

***

அதன் பலன்களை பார்க்கலாம்:1. சருமம்:( மசாஜால்):

*

சருமம் பெறும் பலன்கள் இணையற்றவை. சருமத்தின் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.

***


2. தசைகள்:


தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு, தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளில் இருந்து அந்த லக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன்மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.

3. இரத்த ஓட்டம்:

*

மசாஜ் செய்யப்பட்ட பகுதிகளில் இரத்த ஓட்டத்தின் வேகம் அதிகரிக்கிறது. அதனால் அங்கு அதிகமான சத்துகள் எடுத்துச் செல்லப்பட்டு, குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. இரத்த ஓட்ட வேகம் அதிகரிப்பது, வீக்கத்தைக் குறைக்கிறது. ஒட்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தத்தின் திறன் அதிகரித்து, அதன் பயன்
கூடுகிறது.

***


4. நரம்புகள்:


இலேசான அழுத்தத்துடன் கூடிய மெதுவான, மென் மையான மசாஜ், நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து, அவற்றுக்கு இதமளிக்கும். சற்றுக் கடுமையான மசாஜ், தளர்வான நரம்புகளைத் தூண்டி, அவற்றின் திறனை அதிகரிக்கிறது.


***


5. ஜீரண மண்டலம்:


கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வது, ஜீரண மண்டலத் தைத் தூண்டி, கழிவுகளை நன்றாக வெளியேற்ற வைக்கிறது. கல்லீரலின் திறன் அதிகரிப்பதால் உடலின் நோய்
எதிர்ப்புத் திறன் வலுப்படுத்தப்படுகிறது.


***


6.சிறுநீரக மண்டலம்:

*

சிறுநீரக மண்டலத்தை மசாஜ் தூண்டுவதால் சிறுநீர் சேர்மானம் அதிகமாகிறது. எனவே உடலிலிருந்து நச்சுக் கழிவுகள் வெளியேற்றப்படுவதற்கு அதிக வாய்ப்பு ஏற்படுகிறது.***


7. இதயம்:

*

முறையான மசாஜ், இதயத்தின் சுமையைக் குறைக்கிறது. அதன்மூலம் இதயத்தின் திறனையும் அதிகரிக்கிறது. சாதாரணமாக உலர்வான கைகளாலேயே மசாஜ் செய்யப்படுகிறது. ஆனால் சருமம் அதிக உலர்வாகவோ, மிகவும் பலவீனமாகவோ இருந்தால் ஈரமான துணி அல்லது மென்மையான எண்ணெய் மசாஜுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. நல்லெண்ணெய் மசாஜுக்கு ஏற்றதாகக் கருதப்படுகிறது. மசாஜ் செய்யும்போது உராய்வைக் குறைப்பதற்காக சிலர் முகப் பவுடரை பயன்படுத்துவார்கள். அது தவறு. சருமத்தின் துளைகளை அது அடைத்துக் கொள்ளும்.


***


மசாஜ் செய்யும் முறை:


கை, கால்களில் இருந்து மசாஜை தொடங்க வேண்டும். அடுத்து, நெஞ்சு, கீழ்வயிறு, பின் புறம், பின்புற இடுப்பு ஆகிய பகுதிகளில் மசாஜ் செய்ய வேண்டும். முகம் அல்லது தலையில் வந்து முடிக்க வேண்டும். பின்புறத்தில் மசாஜ் செய்வதற்கு
துணியைப் பயன்படுத்தலாம். முடிந்தவரை நமக்கு நாமே மசாஜ் செய்து கொள்ளலாம்.

*

அப்போது அது ஒரு நல்ல உடற் பயிற்சி யாகவும் அமையும். சுயமாக மசாஜ் செய்து கொள்ள முடியாத அளவு பலவீனமானவர்கள் மற்றவர்களின் உதவியை நாடலாம்.
மசாஜூக்குப் பின் குளிக்கலாம், அல்லது வெதுவெதுப் பான தண்ணீரில் நனைத்த துணியால் உடம்பைத் துடைக்கலாம்.

***

உயர் இரத்த அழுத்தப் பிரச்சினை:
*
உள்ளவர்களுக்கு மசாஜ் தலைகீழாக செய்யப்பட வேண்டும். அதாவது தலையில் ஆரம்பித்து காலில் முடிக்க வேண்டும்.

***


தவிர்க்க வேண்டியவை::
*
காய்ச்சலடித்தால் எந்தவகை மசாஜும் செய்யக் கூடாது.•

கர்ப்பிணிகளுக்கு கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்யக் கூடாது.•

வயிற்றுப்போக்கு, வயிற்றுப்புண், குடல்வால் பிரச்சினை, கட்டிகள் இருந்தாலும் கீழ்வயிற்றில் மசாஜ் செய்யக்கூடாது. •

சரும வியாதிகள் உள்ளவர்களுக்கு மசாஜ் ஏற்றதல்ல.


***வயிற்றுக்கும் மசாஜ் செய்யலாம்:


இருதயம், சுவாசகோசம், வயிறு ஆகிய உறுப்புகளைச் சூழ்ந்துள்ள தசைகள் தன்னிச்சையாக இயங்குபவை. மசாஜ் செய்வதால் அவற்றின் உடனடிப்பலன் எதுவும் ஏற்படாதது போலத் தோன்றலாம். உண்மையில் இதனால் நல்ல பலன்களே விளைகின்றன.

வயிற்றில் மசாஜ் செய்வது ஜீரணத்துக்கு உதவுகிறது. ஜீரண உறுப்புகளின் நரம்புகளில் தாராளமாக ரத்த ஓட்டம் ஏற்படச் செய்து, அழிந்து போன திசுக்களையும் ஜீரணமாகாத உணவுச் சக்கைகளையும் வெளியேற்ற உதவுகிறது.
உணவிலிருந்து கிரகிக்கப்பட்ட சத்துக்கள் எல்லா உறுப்புக்களையும் சென்றடைவதை விரைவு படுத்துகிறது. உணவுச் சத்துகள் உடலுறுப்புகளுக்குப் பயன்படுத்துவதற்காகவே பலவிதமான உணவுகளை உண்கிறோம். சத்துக்கள் உடலுறுப்புகளுக்கு முழுமையாக பயன்பட மசாஜ் உதவுகிறது.

உழைக்கும் போது ஏற்படும் கழிவுப் பொருள்கள் ஓரளவு மீண்டும் சர்க்கரைச் சத்தாக மாற்றப்படுவதும் உண்டு. அப்படி மாற்றப்படாதவை உடலின் நிணநீர் அமைப்பிலுள்ள வடிகட்டும் நுட்பமான முறையினால் வெளியேற்றப்பட வேண்டும். சுரக்கும் நிணநீர் பால்போல வெண்மையாக இருக்கும். கழிவுகள் இதில் வந்து போகும் போது, அதிலுள்ள தீங்கிழைக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்காக வெள்ளை அணுக்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனாலேயே இவ்வாறு வெள்ளை நிறமாகத் தோன்றுகிறது.

நிணநீர்க் குழாய்கள் உடல் முழுவதும் அமைந்துள்ளன. ஒரு நாளில் உடல் முழுவதும் இரண்டு லிட்டர் நிணநீரை இது சுற்றி வரச் செய்கிறது. இதைச் சுற்றி வரச் செய்வது சுருங்கி விரியும் தசைகள்தான். மசாஜ் செய்யும் போது இப்படி எளிதாகவும் விரைவாகவும் செய்யப்படுகிறது.

நிணநீர்க் கேந்திரங்கள் உடலில் முக்கியமாக ஐந்து இடங்களில் உள்ளன. இரண்டு கைகளிலும், இரண்டு கால்களிலும், மார்பிலும் அவை உள்ளன. முழங்கால்கள், முழங்கைகள், கழுத்தில் சிறிய கேந்திரங்கள் உள்ளன. மார்பு, வயிறு, கை, கால்களை மசாஜ் செய்யும் போது இக்கேந்திரங்களும் விரைந்து செயல்பட தூண்டப்படுகின்றன. நிணநீர் எளிதாகப் பரவி, கழிவுகள் வேகமாக வெளியேற்றப்பட இது உதவுகிறது.

உள்ளங் கையைப் பதித்து வட்டமாகச சுழற்றித் தேய்ப்பதன் மூலமும், தட்டுவதன் மூலமும் தசை அதிகமாகவுள்ள இடங்களில் மெல்லப் பிசைந்து விடுவதன் மூலமும் நிணநீர் செய்யும் வேலையை வேகப்படுத்தலாம். இயல்பாக அது தனது பணியைச் செய்து கொண்டுதான் இருக்கும் என்றாலும் மசாஜ் செய்வதால் அது மேலும் தூண்டப்பட்டு அதன் பணி விரைவு படுத்தப்படுகிறது.


***

நன்றி ஈகரை.
நன்றி http://feroos.blogspot. com


***
"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "