...

"வாழ்க வளமுடன்"

06 ஜூன், 2010

சீன உணவு சிறந்ததா?

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
உலகின் மிகச் சிறந்த உணவாக சீன உணவைக் குறிப்பிடுகின்றனர் பலர். இந்த உணவு முறையைப் பின்பற்றினால் நீண்ட நாள் வாழலாம் என்று கூறுகின்றனர் உணவு ஆய்வாளர்கள்.


*

நமது உடம்பில் ஆரோக்கியத்தை முடக்குவதில் அதிக பங்கு வகிப்பது கொழுப்புதான் என்பது மருத்துவர்களின் கருத்து.

தொந்தி மற்றும் பல:




கொலஸ்ட்ரால் ஏற்பட காரணம் பல உண்டு என்றாலும், நாம் சாப்பிடும் உணவால் தான் ஏற்படுகிறது. உடல் பருமனை அளவிடுவதில் ஒரு முக்கிய விஷயத்தை டாக்டர்கள் கவனத்தில் கொள்கின்றனர். தொந்தி பெருத்தாலும், கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதாகவோ, சர்க்கரை வியாதி வரும் என்றோ கூற முடியாது.ஆனால், அடிவயிறு பெருத்தால் தான் ஆபத்து. முதலில், வளையம் போல கோடு விழும். அதன்பின், வெளிப்படையாக அடிவயிறு பெருத்திருப்பது தெரியும். இதை தெரிந்து கொண்டால், உடனே டாக்டரிடம் போய் சோதனை செய்து கொள்வது மிக நல்லது.இந்தியர்களை பொறுத்தவரை, அடிவயிற்று கொழுப்பு அளவை வைத்தே, அவர்களுக்கு பாதிப்பை மதிப்பிட்டு விடலாம் என்று டாக்டர்கள் கருதுகின்றனர்.



*


ஹாங்காங்கின் சீனப் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் ஊகாம்ஸாங் என்பவர் :


*


தனது ஆய்வின் முலம் பல உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளார். அதன் முலம் தங்களது உணவான சீன உணவே சிறந்தது என்கிறார்.

சீனர்கள் ஹாங்காங், சிட்னி, சான்பிரான்ஸிஸ்கே ஆகிய நகரங்களில் பெருமளவில் வாழ்கின்றனர். பத்து ஆண்டுகள் மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றிய சீனர்களை அல்ட்ரா சவுண்டு முலம் பரிசோதித்ததில் இவர்களின் ரத்தக்குழாய்களில் 5ல் ஒரு பங்கு என்ற விதத்தில் தடிப்பாகிவிட்டது தெரிந்தது. எனவே, இவர்கள் இதயநோய் அபாயத்தில் உள்ளனர்.



*



வெளிநாடு சென்று கடந்த பத்தாண்டுகளுக்குப்பிறகு சீனா திரும்பிய 417 பேர் இதய நோய் அபாயத்தில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

டாக்டர் ஊ, சீனர்களின் மெயின்லாண்ட் பகுதி மக்கள் தாங்கள் சாப்பிடும் உணவில் பாதி இறைச்சியாகவும், மிகச்சிறிய அளவிலேயே பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் சாப்பிடுவதையும் கண்டு பிடித்துள்ளார்.



*



இது குறித்து அவர் கூறும்போது, “சீனர்கள் தங்களின் மரபு வழி உணவுத் திட்டத்தையே பின்பற்ற வேண்டும். சோயா தயிரில் உள்ள `லெசித்தின்’ என்னும் நார்ப்பெருள் உடலில் கொழுப்பு சேராமல் பார்த்துக் கொள்கிறது. இதனால் இதய நோய் அபாயம் இல்லை. உடலும் கொழுத்து பருமனாக உருவாகாது” என்கிறார்.


மேலும் கூறுகையில், “ஹாங்காங்கில் வறுத்த கோழிக்கறி என்ற மேற்கத்திய உணவால் இங்குள்ள சீனர்கள் குண்டாக உள்ளனர். செல்வச் செழிப்பான சிங்கப்பூரில் வாழும் சீன இளைஞர்கள் 25 வயதுக்குள்ளேயே ரத்தக் கொதிப்பு, நீரிழிவு, இதய நோய்கள் போன்ற அபாயத்தில் உள்ளனர்” என்கிறார் டாக்டர்


***


அப்படி என்றால் எது நல்லது:


*


1. கிரீன் டீக்கும், நீராவியில் வேகவைத்த காய்கறிகளுக்கும் நாம் முக்கியத்துவம் கொடுப்பது நல்லது. உலகின் மிகச்சிறந்த இந்த உணவால் ஆரோக்கியம் தொடர்வது உறுதி. உலக சுகாதார நிறுவனம் சிபாரிசு செய்துள்ள உணவுமுறை இது என்பது குறிப்பிடத்தக்கது. சீனர்கள் அப்படி என்னதான் சாப்பிடுகிறார்கள்? பால் சேர்க்காத கிரீன் டீயை நாலைந்து தடவை தினமும் அருந்துகின்றனர்.


*


2. நீராவியில் வேகவைத்த காய்கறிகள் மற்றும் சில நேரங்களில் காய்கறிகளை சிறிய அளவில் எண்ணெயில் வறுத்தும் சாப்பிடுகின்றனர். சோயா பீன்ஸ், தயிரையும் நிறையச் சேர்த்துக் கொள்கின்றனர். மேற்கத்திய பாணி உணவு முறையில் அவ்வப்போது கோழி வறுவல் அல்லது மீன் வறுவல் ஒன்றிரண்டு துண்டுகள் மட்டும் சாப்பிடுகின்றனர்.


*

3. காலையில் முட்டை ஆம்லேட் அல்லது கொத்துக்கறி சேர்த்துக் கொள்கின்றனர். இதில், இஞ்சி, வெள்ளைப் பூண்டு உட்பட மசாலா வகைகளை சேர்த்துவிடுகின்றனர். இதுவே காலை நேரத்திற்கும், பகல் உணவிற்கும் ஏற்ற ஒரே உணவாகும். மற்ற நேரமெல்லாம் நீராவியில் வேகவைத்த காய்கறிகளுடன் சோயா மற்றும தயிர் சேர்த்த சாதம் ஒரு முறையும், பச்சையான காய்கறிகளை ஒரு முறையும் சாப்பிடுகின்றனர். இவர்கள் அடிக்கடி விரும்பியும், போற்றியும் குடிக்கும் கிரீன் டீயில் இதயத்துக்குப் பாதுகாப்பு வழங்கும் பாலிபெனால் என்ற சத்துப் பொருள் உள்ளது.



***



நன்றி உங்களுக்கா. http://senthilvayal.wordpress.com/2010/02/21/



***


"வாழ்க வளமுடன்"


***


9 comments:

மனோ சாமிநாதன் சொன்னது…

மிக நல்ல கருத்துக்கள், பிரபா! எல்லோருக்கும் பயன்படும் வகையில் எழுதியிருக்கிறீர்கள்!!

Asiya Omar சொன்னது…

அருமையான விழிப்புணர்வான இடுகை.பாராட்டுக்கள்.

M.Mani சொன்னது…

சீனர்கள் பாம்புக்கறியும்.கரப்பான் இவைகளைச் சாப்பிடுகின்றனரே அதனால் பாதிப்பு ஏதும் வராதா?

மா.மணி

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) சொன்னது…

அருமையா பதிவு

வாழ்த்துக்கள்

prabhadamu சொன்னது…

நன்றி மனோ அம்மா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு அளித்து உங்கள் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி அம்மா. உங்கள் கருத்து எனக்கு ஊக்கதை அளிக்கிறது. மிக்க நன்றி அம்மா.

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு அளித்து உங்கள் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி அக்கா. உங்கள் கருத்து எனக்கு ஊக்கத்தையும், தொம்பையும் அளிக்கிறது. மிக்க நன்றி அக்கா.

prabhadamu சொன்னது…

புதிய நண்பர் மானிக்கத்தை இந்த ஆழ்கடல் களஞ்யம் வரவேற்க்கிறது.


உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு அளித்து உங்கள் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி மணி.


எனக்கு அந்த அளவு விவரம் தொரியாது நண்பா. ஆனால் அது நமக்கு ஒத்து வராது. அது மட்டும் நிச்சையம்.

prabhadamu சொன்னது…

நன்றி உலவு.காம். உங்கள் கருத்தை எனக்கு அளித்து என்னை ஊக்குவிப்பதுக்கு மிக்க நன்றி.

mathisundaresan சொன்னது…

nalla karuththukkal Praba nanum muyarchikiren but boiled veg sapita konjam kasdamathan irukkum illa. thanx to sharing

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "