...

"வாழ்க வளமுடன்"

05 ஜூன், 2010

காரட் கிழங்கு ( மஞ்சள் முள்ளங்கி )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

காரட் பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. அனைவரும் அறிந்த இந்த கிழங்கின் மருத்துவ குணங்கள் ஏறாலம். அவை நமக்கு அளிக்கும் பலன் தாறாலம்.***

காரட் அல்லது மஞ்சள் முள்ளங்கி எனப்படுவது சிவப்பு அல்லது மஞ்சள்சிவப்பு (ஆரஞ்சு) நிறத்தில் நீளமான கூம்பு வடிவில் கிழங்கு போல் வேரில் திரண்டு பருத்து வளரும் ஒரு வேர்க்காய் வகை ஆகும். அது முதலில் ஆப்கானிசுத்தானின் பகுதிகளில் பயிரிடப்பட்டது. பிறகு நடுத்தரைக்கடல் பகுதிகளில் பயிரிடப்பட்டது.


கண்பார்வைக்குத் தேவையான முக்கியமான உணவுச்சத்து, வைட்டமின்-ஏ, இந்த ‘ஏ’ வைட்டமின் உற்பத்தியாவதற்குத் தேவையான முக்கியப் பொருள் ‘காரட்டீன்’. காரட் கிழங்கின் நடுவில் மஞ்சளாகக் காணப்படும் பொருள்தான் காரட்டீன்.

***

மஞ்சள் முள்ளங்கியில் பீட்டாக்காரோட்டீன் எனப்படும் சத்து உள்ளது. இது உடலில் உயிர்ச்சத்து A (vitamin A) வாக மாற்றப்படுகிறது. அதன் சாறு ஒரு உடல்நல அருந்தாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் முள்ளங்கி உட்கொள்ளுதல் கண்பார்வையை மேம்படுத்தும். புற்றுநோய் தடுப்புப் பண்புகள் உடையதாக மருத்துவ ஆய்வுக்களில் கண்டறியப்பட்டுள்ளது.***

காய்கறிகளுள்ளே மிக அதிகமாகக் காரட் கிழங்கில்தான் ‘காரட்டீன்’ அமைந்திருக்கிறது. அதனால்தான் மஞ்சள், சிவப்பு போன்ற நிறங்களில் காணப்படும் இந்தக் கிழங்கிற்குக் காரட் என்று பெயர் இட்டுள்ளனர்.***100 கிராம் காரட்டில் உள்ள வைட்டமின் ‘ஏ’யின் சர்வதேச அலகு 11,000 ஆகும். வேறு எந்தக் காய்கறிகளிலும் இந்த அளவு வைட்டமின் ‘ஏ’ அமைந்திருக்கவில்லை. இதனால் தினந்தோறும் காரட்டை மிக்ஸியில் அடித்துச் சாறாகவோ உணவுடனோ சேர்த்தோ சாப்பிட்டால் கண்பார்வை மிகவும் கூர்மையாகும். கண்ணாடி அணிவதைத் தவிர்த்துவிடலாம். கண்ணாடி அணிந்திருப்பவர்கள் லென்சின் பவர் எண் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளலாம்.***100 கிராம் காரட்டில் மாவுச்சத்து 9.7 கிராம, புரதம் 1.1 கிராம், கொழுப்பு 0.2 கிராம், வைட்டமின் ‘சி’ 8 மில்லிகிராம், நியாஸின் 0.6 மில்லிகிராம், ரிபோஃபிளவின் 50 மைக்ரோகிராம், தயாமின் 60 மைக்ரோ கிராம் என்ற அளவில் இருக்கின்றன. மேலும், கால்சியம் 80 மில்லி கிராம், பாஸ்பரஸ் 530 மில்லிகிராம், இரும்புச்சத்து 2.2 மில்லிகிராம் என்ற அளவிலும் உள்ளன. 100கிராம் காரட்டில் கிடைக்கும் கலோரி அளவு 48. தினமும் 200 கிராம் காரட்டைப் பச்சையாகக் கடித்தோ சாறாகவோ சாப்பிட்டால் போதும். காரட்டை அளவுக்கு மேல் பயன்படுத்தினால் மூலத்தொந்தரவு ஏற்படும்.

***

சுவையான காரட்டின் வரலாஸ:*
1. ‘Faulus Carota’ என்பது காரட்டின் தாவர விஞ்ஞானப் பெயராகும். மனிதன் சாப்பிடுவதற்காகவே பயிர் செய்யப்படும் தாவரம், காரட். பண்டைய காலத்தில் பெரிது பெரிதாகக் காரட்கிழங்கு வளர்த்தது. அதன் பிறகுதான் சிறதாக வளரும் காரட் கிழங்கை மனிதன் கண்டுபிடித்தான். ஆதிகால மனிதன் உணவாகச் சாப்பிட்டாலும், பண்டைய கிரோக்கர்களும் ரோமானியர்களும் காரட்கிழங்கை உணவாக உண்ணாமல் மருந்தாகத்தான் பயன்படுத்தினார்கள்!***

2. அவர்களின் கண்டுபிடிப்பு சரியானதே என்பதை நிரூபிக்கும் வகையில் இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் காரட் கிழங்கு உணவு மருந்தாகப் பயன்பட்டு வருகிறது. இந்த நூற்றாண்டில்தான் காரட்டில் காரட்டீன் என்னும் பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது!

***3. காரட், முதல்முதலாக ஆப்கானிஸ்தான் நாட்டிலும் அதைச் சுற்றியுள்ள தீவுப் பகுதிகளிலும் பயிரானது. இயேசுநாதர் பிறப்பதற்கு முன்பே கி.மு.13ஆம் நூற்றாண்டிலேயே மத்திய தரைக்கடல் பகுதிகளிலும், வடமேற்கு ஐரோப்பாவிலும் சீனாவிலும் காரட் கிழங்கு பயிர்செய்யப்பட்டுள்ளது.***

4. முதலாம் எலிசபெத் காலத்தில்தான் நெதர்லாந்து நாட்டிலிருந்து இங்கிலாந்தில் காரட் அறிமுகமானது. அதன் பிறகே மற்ற நாடுகளிலும் காரட் அறிமுகமானது. அதன் பிறகே மற்ற நாடுகளிலும் காரட் கிழங்கு பரவியது. இங்கிலாந்து நாட்டில் பெண்கள் தங்களின் தலையலங்காரத்திற்குக் காரட் கீரையைப் பயன்படுத்தினார்கள். (இந்த வகைக் காரட்டிற்கு ‘Queen Ann’s Lace’ என்னும் பெயர் இட்டிருந்தார்கள்.)

***

5. இந்தியாவில் பஞ்சாப், காஷ்மீர் ஆகிய பகுதிகளிலும், தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மலேசியா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய பகுதிகளிலும் தற்போது காரட் கிழங்கு நன்கு பயிராகிறது.***காரட்டைப் பச்சையாகச் சாப்பிடலாமா?*


1. காரட்டிலிருந்து கிடைக்கும் காரட்டீன் வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றப்பட்டு உடலுக்குப் பயன்படுகிறது. எஞ்சியவை கல்லீரலில் சேமித்து வைக்கப்படுகிறது. நம் உணவில் வைட்டமின் ‘ஏ’ குறையும் போது சேமிப்பலிருக்கும் வைட்டமின் ‘ஏ’ யை உடல் எடுத்துக்கொள்கிறது.

**

2. காரட் சாறு சாப்பிடச் சுவையாய் இருக்கும்; பசியைத் தூண்டும்; இரைப்பை எரிச்சலைத் தணிக்கும்; குடலில் உள்ள பூச்சிகளைக் கொன்று, மலச்சிக்கலையும் போக்கிக் குடலையும் சுத்தம் பண்ணிவிடும். இருமலையும், சளியையும் வேருடன் பிடுங்கி அழித்துவிடும். எனவே, காலையில் சாறாக அருந்துவதே நல்லது.**

3. உருளைக்கிழங்கில் உள்ளதைவிட ஆறுமடங்கு அதிகமாகக் கால்சியம் என்னும் சுண்ணாம்புச் சத்து இக்கிழங்கில் உள்ளது. இந்தச் சுண்ணாம்புச் சத்தும் எளிதில் செரிக்கக்கூடிய தன்மைையுயம் பெற்றுள்ளது. இதனால் எலும்பு, பல் முதலியன வளர்ச்சி பெறுகின்றன. அவை நன்கு பலப்படுத்தப்படுகின்றன. சுண்ணாம்புச்சத்துக் குறைந்தால் உடலில் நோய் தோன்றும், இரத்தம் உறைவதும் தடுக்கப்படும்.**

4. 1994ஆம் ஆண்டு பாஸ்டன் (அமெரிக்கா) ஆய்வாளர்கள் சுண்ணாம்புச்சத்து இரத்தக் குழாய்களைத் தளர்த்தி, உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவல்லது என்று கண்டுபிடித்துள்ளனர். கால்சியசத்து அதிகம் உள்ள உணவு உண்ணும் போது இரத்த அழுத்தம் உயர்வது தாமதப்படுகிறது; எலும்புகளும் நன்கு பராமரிக்கப்படுகின்றன என்றும் கண்டுபிடித்துள்ளனர். எனவே, வளரும் குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் உறுதியான ஆரோக்கியமான உடலைப் பெறக் கால்சியம் அதிகம் உள்ள காரட்கிழங்கைத் தினமும் உணவில் சேர்த்து வருதல் நல்லது.

**

5. காரட்டில் இரும்புச்சத்தும் இருப்பதால் இரத்திவிருத்தி நன்கு உண்டாகிறது.

100 கிராம் திராட்சைப் பழத்தில் உள்ளதை விட 100 கிராம் காரட் கிழங்கில் 25 மடங்குக்கு மேல் பாஸ்பரஸ் சத்து அடங்கியிருக்கிறது. இதனால் மூளை சுறுசுறுப்பாகிறது. ஞாபகச்சக்தியும், செயல்படும் ஆற்றலும் அதிகரிக்கின்றன.
**
6. நகம், முடிபோன்ற திசுக்களின் வளர்ச்சிக்குத் தேவையான கந்தகச் சத்து, சோடியம், அயோடின் போன்ற தாது உப்புகள் காரட் கிழங்கின் தோல் பகுதி அருகில் அதிக அளவில் உள்ளன. எனவே, காரட்டை நன்கு கழுவினால் மட்டும் போதும். தோல் சீவாமல் உணவில் பயன்படுத்தினால் மேற்கண்ட அனைத்து நன்மைகளையும் இந்த அதி அற்புத காரட் கிழங்குகளிலிருந்து பெறலாம்!


**


7. காரட் இரத்தத்தையும் சுத்தப்படுத்தி, சளி, புழுக்கள் போன்றவற்றையும் வெளியேற்றி, வறண்ட தோலையும் பளபளப்பாக்கிவிடுகிறது. முக அழகு ரோஜாபோல் இருக்க வேண்டும் என்றால் காரட் சாறு அருந்துங்கள். எண்ணெய் வழிவதும் பருக்கள் தோன்றுவதும் அகன்று முகம் ‘பளிச்’ என்று ஆகிவிடும். சளிச்சவ்வு எந்த இடத்தில் இருந்தாலும் வெளியேறிவிடும். புகைபிடிப்பவர்கள் இருமலில் இருந்தும், சளித்தொல்லையில் இருந்தும் விடுபடக் காரட் சாறு அருந்துவது நலம் பயக்கும்.


**
8. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்தது காரட்சாறு, இன்சுலின் போன்ற ‘Tockincin’ என்னும் ஹார்மோன் காரட்டில் இருக்கிறது. அதனால் தான் நீரிழிவு நோயாளிகள் காரட் சாறு அருந்தச் சிபாரிசு செய்யப்படுகிறார்கள்.
**
சொறிசிரங்கு உள்ளவர்கள் காரட்டை உப்புடன் சேர்த்து வறுத்துச் சாப்பிட்டால் போதும்.


***
காரட் சாற்றின் பயன்கள்:
*
காரட்சாறு இரத்தத்தில் உள்ள தேவையற்ற யூரிக் அமிலத்தை வெளியேற்றிவிடுகிறது. இதனால் கீல்வாத நோய்க்காரர்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைகின்றன.
*
சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையவும், ஈரல் நோய்கள், சயரோகம், மாதவிலக்கு குறைபாடு போன்றவை குணமாகவும், காலை உணவாக ஒரு கப் காரட்சாறு அருந்தினால் பலன் கிட்டும்.


***
மலட்டுத் தன்மை நீங்க:
*
காரட்டில் வைட்டமின் ‘ஈ’யும் இருப்பதால் மலட்டுத்தன்மை குணமாகிறது. குழந்தை பிறக்க வாயப்பு ஏற்படுகிறது. இதே வைட்டமின் ‘ஈ’ இரத்தப் புற்றுநோய் இருந்தால் அதைக் குணமாக்கிவிடுகிறது. தினமும் காரட் சாறு அருந்துபவர்களுக்குப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பில்லை.
***
*
6. பால் கொடுக்கும் தாய்மார்கள் பலவீனம் அடையாமல் தொடர்ந்து சக்தி பெற்றுக் கைக்குழந்தைக்கு நன்கு பால் கொடுக்க - பால் சுரக்க காரட்சாறு அருந்த வேண்டும். இதனால் உடல் பலமும் பெறுகிறது.


குடல்புண்கள் :
*காரட்டினால் குடலில் உள்ள கெடுதியான பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. குடல் புண்கள் முற்றிலும் குணமாகிவிடுகின்றன. மேற்கண்ட உண்மைகளை ரஷ்யாவைச் சேர்ந்த டாக்டர் மெட்சினிகோஃப் என்பவர் பரிசோதனைகளின் மூலம் 1993 ஆம் ஆண்டு நிரூபித்துக் காட்டினார்.
***
பற்களைச் சுத்தமாய் வைத்துக்கொள்ள:
*உணவு உண்டபின் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிட்டால் வாய்ப்பகுதியில் உள்ள கெடுதலான கிருமிகள் அனைத்தும் கொல்லப்பட்டுவிடும். பற்கள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டு, பல் ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்படாமலும் முன் கூட்டியே பாதுகாத்துவிடும். பற்களில் சொத்தையே ஏற்படாது.


***மலச்சிக்கலுக்கு:
*தொடர்ந்து மலச்சிக்கலால் கஷ்டப்படுபவர்கள் 250மில்லி காரட் சாற்றுடன் 50மில்லி பசலைக் கீரைச் சாற்றையும் சேர்த்து அதனோடு ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றையும் கலந்து இரண்டு மாதங்கள் தினமும் அருந்த வேண்டும். பசலைக்கீரை குடல்களை நன்கு சுத்தம் செய்துவிடும். அதன்பிறகு காரட்டை மட்டும் சாறாக அருந்தினால் போதும். வாழ்நாளில் இதற்குப் பிறகு மலச்சிக்கல் தொல்லையே ஏற்படாது.
***
பேதி குணமாக:
*காரட்டைச் சூப்பாகத் தயாரித்து அருந்தலாம். வயிற்றுமந்தமும் குணமாகிவிடும். பெக்டின் என்னும் நார்ப்பொருள் தேவையற்ற சக்கைகளை வெளியேற்றி வயிற்றுப் போக்கையும் குணமாக்கிவிடும்.
***
உணவு செரியாமையா?:
*
1. உணவு செரிமானம் ஆகாத சமயத்தில் இரண்டு காரட்டுகளைக் கடித்துச் சாப்பிடுங்கள். விருந்துகளில் பலமாகச் சாப்பிட்டுவிட்டு செரிக்காமலோ வாந்தி வருவது போலவோ இருந்தால், இந்த முறையில் காரட்டைச் சாப்பிடுவது நல்லது. தேவையான எச்சில் ஊறி அதன் மூலம் செரிமானப் பொருள்களும், தாது உப்புகளும், வைட்டமின்களும் உடனடியாகக் குடல் பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டுச் சாப்பிட்ட உணவு ஜீரணமாக ஆரம்பித்துவிடும்.
*
2. சோடா, ஐஸ்கிரீம் போன்றவற்றுக்குப் பதிலாகக் காரட்டுகளை சாப்பிட்டால் உடனே உணவு செரிமானம் ஆகிவிடும். கடும் வயிற்றுவலி, பெருங்குடல் வீக்கம், இரைப்பைப்புண், முதலியவையும் தினசரி காரட் கிழங்குகள் சாப்பிடுவதால் முன்கூட்டியே தடுக்கப்படுகிறது.
*
3. குழந்தைகளின் குடல் பூச்சிகளை அழிக்க ஒரு கப் காரட் சாற்றை மட்டும் காலை உணவாகக் கொடுத்தால்போதும். மதியம் வழக்கம்போல் வேறு உணவுவகைகள் கொடுக்கலாம். இது அருமையான உணவு மருந்து!
*
4. காரட்டைச் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிட்டால்தான் எல்லாவிதமான சத்துக்களும் அழிந்துவிடாமல் கிடைக்கும். சமைத்துச் சாப்பிட்டால் சத்துகள் குறைவாகத்தான். பெரும்பாலும் சத்தே இல்லாமல் கிடைக்கும்.
*
5. ஞாபகசக்தி அதிகரிக்கவும், இதயம் சீராக இயங்கவும், இரத்தம் கெட்டிப்பட்டுவிடாமல் இருக்குவும், மஞ்சள் காமாலை நோய்காரர்கள் விரைந்து குணமாகவும், நெஞ்சுவலி, முதுகு வலியிலிருந்து குணமாகவும் தினமும் காரட்சாறு அருந்துங்கள்.
*
7. 1994 ஆம் ஆண்டு ஹார்வார்டு பல்கலைக்கழகம் காரட் பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டது. அதன்படி 87 ஆயிரம் நர்சுகளைத் தேர்வு செய்தார்கள். அவர்களுள் பாதிப்பேர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் வழங்கப்பட்டது. மீதிப் பேர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் காரட் சாப்பிடத்தரப்பட்டது.
*
8. வாரத்தில் ஐந்து நாள்கள் காரட் சாப்பிட்டவர்களுள் 68 சதவிகித நர்சுகளுக்கு இதய நோய் மிகவும் குறைவாக இருந்தது. “காரட்டை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியமாய் இருக்கும். இதய நோய்கள் தாக்குவது மிகவும் குறைந்து விடும்” என்று இந்த ஆராய்ச்சியை நடத்திய டாக்டர் ஜோஆன் மான்ஷன் கூறியுள்ளார்.
*
9. காரட்டைப் போலவே காரட்கீரையும் மருத்துவக்குணம் நிரம்பியது. முடக்குவாதம் குணமாகவும், இரத்தம் பெருகவும் இக்கீரையைச் சமைத்து உண்ணலாம். உண்மையில் மேனி சிவப்பாகவும் பளபளப்பாகவும் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் காரட் கீரையையும் தொடர்ந்து சாப்பிடுங்க்ள.
*
10. காய்கறிகள், கிழங்குவகைகள், கீரைவகைகள் முதலியவற்றுள் மிக மிக முக்கியமானது, உயர்தரமானது காரட் கிழங்கு! அதை எந்த வயதுக்காரரும் தவிர்க்கக்கூடாது என்பதற்காகத்தான் நிரூபிக்கப்பட்ட மேற்கண்ட உண்மைகளைத் திரட்டி விரிவாகத் தரப்பட்டுள்ளது.
***
இனி தினமும் ஒரு காரட்டை உணவோடு சேர்த்துக்கொண்டு உடல் நலத்துடனும், மன நலத்துடனும் வாழ வாழ்த்துக்கள்.

***
by- கே.எஸ்.சுப்ரமணி.


நன்றி ‍- கே.எஸ்.சுப்ரமணி.
***
"வாழ்க வளமுடன்"***1 comments:

prabhadamu சொன்னது…

நன்றி சகோதரரே! உங்கள் பொன்னான நேரத்தை எனக்கு அளித்து உங்கள் கருத்தை சொன்னதுக்கு மிக்க நன்றி சகோ.....

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "