...

"வாழ்க வளமுடன்"

26 மார்ச், 2010

சாக்கலேட் பற்றி பொது அறிவு

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
சாக்லேட்டை விரும்பி சப்பிடாதவர்கள் யாரு இருக்க முடியாது. அதை பற்றி நமக்கு என்ன தெரியும். தெரிந்துக் கொள்ள இக்கடலில் குதியிங்கள்!

சாக்கொலேட் என்பது கொக்கோ மரத்திலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களைக் குறிக்கும் மத்திய கால அமெரிக்க சொல் ஆகும். பல்வேறு இனிப்புகள், கேக்குகள், ஐஸ் கிரீம்கள் மற்றும் குக்கிகளிலும் சாக்கொலேட் ஒரு முக்கியமான இடுபொருளாகும். உலகில் மிகவும் விரும்பப்படும் சுவைமணங்களில் சாக்கொலேட்டும் ஒன்றாகும்.

*

சாக்கொலேட் என்ற சொல் மத்திய மெக்சிகோவில் தோன்றிய சிவப்பிந்தியர்களின் நவாட்ல் மொழிச்சொல்லாகும். மாயன் இன மக்கள் காலத்திய பானைகளில் காணப்படும் கொக்கோ படிமங்கள், சுமார் கி.மு 600 ஆம் ஆண்டிலேயே கொக்கோ பருகப்பட்டதாகத் தெரிவிக்கின்றன. அஸ்டெக்குகள் சாக்கொலேட்டை தமது இனவிருத்திக் கடவுளான ஸொசிக்வெட்சலுடன் தொடர்புப்படுத்தி வந்தனர்.

*

புதிய உலகத்தில், சாக்கொலேட் வனிலா, மிளகாய் மற்றும் அச்சியோட் சேர்த்து ஸொக்கொட்ல் என்ற பெயருடைய பானமாக பருகப்பட்டு வந்தது. ஸொக்கொட்ல் ஒரு களைப்பு நீக்கி உற்சாக பானமாக கருதப்பட்டது (பெரும்பாலும், அதிலுள்ள தியொப்ரொமினால்). கொலம்பியாவிற்கு முற்பட்ட மத்திய கால அமெரிக்காவில் சாக்கொலேட் ஓர் உயர் மதிப்புள்ள பொருளாகவே கருதப்பட்டு, பண்ட மாற்றுக்குக்கூட பயன்படுத்தப்பட்டது. பிற சாக்கொலேட் பானங்கள் சோளக்கூழ் மற்றும் தேனுடன் பருகப்பட்டு வந்தன.


*

அமெரிக்காவை கண்டுபிடித்த கிரிஸ்டோஃபர் கொலம்பஸ், ஸ்பெயினின் ஆளுனர்களுக்கு காண்பிக்க சிறிது கொக்கோ கொட்டைகளை எடுத்து வந்தார். ஆனால் ஹெர்னான்டோ டி சோடோ தான் இவற்றை பரவலாக ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தினார்.

*

பழம் உலகதிற்கான முதல் சாக்கொலேட் பண்டகம் 1585 ஆம் ஆண்டு வெராகுருஸிலிருந்து செவில்லுக்கு அனுப்பப்பட்டது. அப்போது அது ஒரு பானமாகவே பருகப்பட்டு வந்தது. ஐரோப்பியர்கள் அதில் சர்க்கரை சேர்த்து மிளகாய் நீக்கி பயன்படுத்தினர். 17ஆம் நூற்றாண்டின் போது சாக்கொலேட் ஓர் உயர் பாரம்பரிய பொருளாக கருதப்பட்டது.

*

18ஆம் நூற்றான்டின் இறுதியில், முதல் திட வடிவ சாக்கொலேட் துரின் நகரில் தயாரிக்கப்பட்டது. 1826 முதல் பியர் பால் கஃபரேல் என்பவரால் அதிக அளவில் விற்கப்பட்டது. 1828 ல் கான்ராட் ஜே வான் ஹூட்டென் என்ற டச்சுக்காரர் கொக்கோ கொட்டையிலிருந்து கொக்கோ தூள் மற்றும் கொக்கோ வெண்ணை தயாரிக்கும் முறையை காப்பீடு செய்தார். மேலும் அவர் டச்சு முறை என்றழைக்கப்படும் கொக்கோ தூள் தயாரிப்பு முறையையும் உருவாக்கினார். ஜோசஃப் ஃபிரை என்ற ஆங்கிலேயர் தான் 1847 இல் முதல் கனசெவ்வக சாக்கொலேட் கட்டியை வார்த்து உருவாக்கினார் என்று நம்பப்படுகிறது. சிறிது காலத்திற்குப் பின் இது காட்பரி சகோதரர்களல் தொடரப்பட்டது.

*

டேனியல் பீட்டர் என்ற சுவிஸ் மெழுகுவத்தி தயாரிப்பாளர் 1867 இல் பால் கலந்து முதல் பால் சாக்கொலேட்டை உருவாக்கினார். ஹென்றி நெஸ்லே என்ற மழலை உணவுத் தயாரிப்பாளர் இவருக்கு பாலிலிருந்து நீரை நீக்கி, தடித்த பால் உருவாக்க உதவினார். இது பூஞ்சைத் தொல்லையிலிருந்து சாக்கொலேட்டுகளைக் காக்க உதவியது. ருடால்ஃப் லின்ட் என்பவர் சாக்கொலேட் கலவையை சீராக்க, அதனை சூடாக்கி அரைக்கும் கான்ச்சிங் எனப்படும் முறையைக் கண்டு பிடித்தார்.

*

மத்திய அமெரிக்காவில் தோன்றிய கொக்கோ மரத்தின் (Theobroma cacao) கொட்டைகளை நுண்ணுயிர் பகுப்புக்குட்படுத்தி (ferment), வறுத்து, அரைக்கும் போது கிடைக்கும் பொருட்கள் சாக்கொலேட் அல்லது கொக்கோ என்றழைக்கப்படுகின்றன. இவை ஒரு வீரிய சுவைமணமும் கசப்புத் தன்மையும் கொண்டவை.

*

இக்கொட்டைப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறாக அழைக்கப்பட்டாலும் அமெரிக்க சாக்கொலேட் தொழில் நிறுவனம் கூறுவது:

*

1. கொக்கோ என்பது கொக்கோ கொட்டையின் திடநிலை பொருட்கள்.

*

2. கொக்கோ வெண்ணை என்பது கொக்கோ கொட்டையின் கொழுப்புப் பாகம்.

*

3. சாக்கொலேட் என்பது இவ்விரு பாகங்களின் தொகுப்பு.

***

சாக்கொலேட் என்று பொதுவாக அழைக்கப்படும் இனிப்புப் பண்டம், கொக்கோ கொட்டையின் திட மற்றும் கொழுப்புப் பாகங்களின் கலவையை சர்க்கரை, பால் மற்றும் பிற பல இடுபொருட்களை சேர்ப்பதன் மூலம் தயாரிக்கபடுகிறது.சாக்கொலேட்டைப் பயன்படுத்தி கொக்கோ அல்லது பருகும் சாக்கொலேட் என்று அழைக்கப்படும் பானங்களும் தயாரிக்கப்படுகின்றன. இவை மத்திய கால அமெரிக்கர்களாலும் அங்கு வந்த முதல் ஐரோப்பிய பயணிகளாலும் பருகப்பட்டன.

*

சாக்கொலேட் பெரும்பாலும் அச்சுக்களில் வார்க்கப்பட்டு கனசெவ்வக வடிவங்களில் தயாரிக்கப்படுகிறது. விழாக்காலங்களில் விலங்குகள், மனிதர்கள் என பல வடிவங்களில் வார்த்து தயாரிக்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, ஈஸ்டர் பண்டிகையின் போது முட்டை அல்லது முயல் வடிவிலும், கிறிஸ்துமஸ் பன்டிகையின் போது புனித நிக்கோலஸ் வடிவிலும், காதலர் தினத்தின் போது இதய வடிவிலும் தயாரிக்கப்படுகின்றன.


***


சாக்கொலேட் வகைகள்:

*


1. இனிப்பூட்டப்படாத சாக்கொலேட்:

*

இது தூய வெளிப்பொருள் கலக்காத சாக்கொலேட் கூழ் ஆகும். கொக்கோ கொட்டைகளை அரைத்துத் தயாரிக்கப்படும் இக்கூழ், கசப்பு அல்லது பேக்கிங் சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. ஆழமான சாக்கொலேட் சுவைமணம் கொண்ட இக்கூழ், சர்க்கரை சேர்த்து அமெரிக்க-வகை அடுக்குக் கேக்குகள், பிரௌனிக்களுக்கு அடிப்படைப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது.


**

2. கரும் சாக்கொலேட்:

*

பால் கலக்கப்படாத இவ்வகை சாக்கொலேட், கலப்பிலா சாக்கொலேட் என்றும் அழைக்கப்படுகிறது. அமெரிக்க அரசாங்கம் இவ்வகை சாக்கொலேடில் 15% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்ற கட்டுப்பாட்டுடன் இதனை இனிப்பு சாக்கொலேட் என்று அழைக்கிறது. ஐரோப்பிய விதிகள் இவ்வகை சாக்கொலேட்டில் குறைந்தது 35% சாக்கொலேட் திடப்பொருட்கள் இருக்க வேண்டுமென வேண்டுகின்றன.


**


3. கூவெர்சர்:

*

இவை அதிக கொக்கோ வெண்ணையுடைய உயர்தர சாக்கொலேட்டுகள் ஆகும். இவ்வகை சாக்கொலேட்டுகள் மிக அதிக வீதத்தில் கொக்கோ கூழ் மற்றும் கொக்கோ வெண்ணை கொண்டனவாயும், உருக்கும்போது நல்ல திரவ நிலையடைவனவாயும் இருக்கும். பொதுவாக இவை மிக உயர்தர சாக்கொலேட் சுவைமணம் கொன்டவையாகக் கருதப்படுகின்றன. இத்தரமிகு சாக்கொலேடுகளில் கசப்பு முதல் இனிப்பு வரை பல்வேறு வகைகள் இருப்பினும் மிகச்சிறு சுவைமண வேறுபாடுகளைத் தெளிவாகக் இனங்காண முடிவதால் இவை இதே பண்புகளுள்ள உயர்தர ஒயின்களுடன் ஒப்பிடப்படுகின்றன. தொழில்முறை சமையலாளர்களால் இனிப்புப் பண்டங்களில் பயன்படுத்தப்படும் மிகப் பிரபலமான தயாரிப்புகள்: வால்ரோனா, லின்ட் & ஸ்ப்ருங்க்லி, கெக்கோ பெர்ரி, எஸ்பிரிட் டெ ஆல்ப்ஸ் மற்றும் கிட்டார்ட்.

**

4. பால் சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் பெயருக்கேற்ப பால் தூள் அல்லது தடித்த பால் கலந்து தயாரிக்கப்படுகின்றன. அமெரிக்க அரசாங்கம் இவற்றில் 10% சாக்கொலேட் கூழ் இருக்கவேண்டுமென்றும், ஐரோப்பிய விதிகள் குறைந்தது 25% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டுமெனவும் விதிக்கின்றன.

**

5. மிதமாக இனிப்பூட்டப்பட்ட சாக்கொலேட்:

*

இவ்வகை சாக்கொலேட்டுகள் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படுகின்றன. இவை, பொதுவாக அதிக சர்க்கரை கொண்ட கரும் சாக்கொலேட்டுகளேயாகும். ஆனால் இவற்றில் கரும் சாக்கொலேட்டை விட குறைந்த அளவு கொக்கோவே இருக்கிறது.

**

6. கசப்பு-இனிப்பு சாக்கொலேட்:

*

இது சாக்கொலேட் கூழுடன் சர்க்கரை, கொக்கோ வெண்ணை, லெசித்தின் மற்றும் வனிலா கலந்து தயாரிக்கப்படுகிறது. இவை மித இனிப்பு வகை சாக்கொலேட்டுகளை விட குறைவான சர்க்கரையும், அதிகமான சாக்கொலேட் கூழும் உடையவை. சுவைக்கேற்ப இவ்விரு வகைகளில் ஒன்றை சமையலில் பயன்படுத்தலாம். உயரிய தரமுள்ள கசப்பினிப்பு சாக்கொலேட்டுகள் கூவெர்சர் வகையாக தயார் செய்யப்பட்டு, அவற்றின் சாக்கொலேட் கூழ் வீதம் பயனீட்டாளர்களுக்கு தெரிவிக்கப்படுகின்றது. எவ்வளவு சாக்கொலேட் கூழ் உள்ளதோ அவ்வளவு கசப்பினிப்புடன் இவற்றின் சுவை இருக்கும்.

**

7. வெள்ளை சாக்கொலேட்:

*

இவை கொக்கோ திடப்பொருட்கள் இல்லாமல் கொக்கோ வெண்ணை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் இனிப்பு பண்டங்களாகும்.

**

8. கொக்கோ தூள்:

*

இரு வகை சுவையூட்டப்படாத பேக்கிங் கொக்கோ தூள்கள் உள்ளன. இயற்கையான கொக்கோ மற்றும் டச்சு-முறை கொக்கோ. இவை இரண்டுமே மிதமாக கொழுப்பு நீக்கிய சாக்கொலேட் கூழை பொடித்து கொக்கோ வெண்ணை நீக்கப்பட்டு தயாராகின்றன. இயற்கையான கொக்கோ வெளிர் நிறமும், சற்றே அமிலத்தன்மையும், மிக அதிக சாக்கொலேட் சுவைமணம் கொண்டதாயும் இருக்கும். பேக்கிங்கின் போது இவ்வகை கொக்கோவுடன் சமையல் சோடா சேர்க்கப்பட வேண்டும். கொக்கோவின் அமிலத்தன்மையும், சோடாவின் காரத்தன்மையும் கலப்பது மாவுக்கலவையை வாயு நிறைத்து மிருதுவாக்கும். டச்சு முறை கொக்கோ தயாரிக்கப்படும் போதே காரம் சேர்க்கப்பட்டு அதன் அமிலத்தன்மை சமனாக்கப் படுகிறது. இவ்வகை கொக்கோ சற்றே குறைந்த சுவைமணமும், ஆழமான நிறமும் கொண்டிருக்கும்.

**

மேலும் புதினா, ஆரஞ்சு அல்லது ஸ்ட்ராபெர்ரி போன்ற சுவைமணங்கள் சாக்கொலேட்டுடன் கலக்கப்படுவதுண்டு. நாம் பொதுவாக சாக்கொலேட் என்று சாப்பிடும் இனிப்பு பண்டம் சாக்கொலேட்டுடன் கடலை, அரிசிப்பொரி, கொட்டைகள் போன்ற மற்ற இடுபொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. சாராய வகை பானங்கள் கலந்தும் சாக்கொலேட் தயாரிக்கப்படுகிறது.

***
சாக்கொலேட்டினால் ஏற்ப்படும் விளைவுகள்:
*
உடல்நல பலன்கள்:
*
1. அண்மைய ஆய்வுகளின்படி கொக்கோ அல்லது கரும் சாக்கொலேட்டினால் மனிதர்களுக்கு உடல்நல பலன்கள் விளையக்கூடும் என்று தெரிகிறது.
*

2. கரும் சாக்கொலேட்டில் காணப்படும் எப்பிகேட்டச்சின் மற்றும் கேலிக் அமிலம் எனும் ஃப்ளேவனாய்ட்-கள் ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு மூலம் இரத்த நாளங்களைப் பாதுகாக்கவும், இதயத்தை சீராக வைத்திருக்கவும், புற்று நோயைத்தடுக்கவும் உதவுகின்றன.
*

3. மேலும் சாக்கொலேட் உயர் இரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்துவதும் கண்டறியப்பட்டுள்ளது. சொல்லப்போனால், ஆக்ஸிஜனேற்றத்தடுப்பு நிறைந்த உணவுகளான சிகப்பு ஒயின், பசும் மற்றும் கரும் தேனீர், நீலபெர்ரி ஆகியவற்றை விட அதிக அளவில் ஃப்ளேவனாய்ட்-கள் சாக்கொலேட்டில் உள்ளன.
*

4. ஓர் அறிவியல் ஆதாரமற்ற உடல் நல உணவுமுறை கூட மாத்திரை வடிவில் சாக்கொலேட் மற்றும் கொக்கோ தூளை உண்ண பரிந்துரை செய்கிறது. இருப்பினும் பால் சாக்கொலேட்டையோ வெள்ளை சாக்கொலேட்டையோ உண்பது பெரும்பாலும் உடல் நல விளைவுகளை ஏற்படுத்தாது.
*

5. சாக்கொலேட் ஒரு உடற்சக்திப்பொருளும், கொழுப்புச்சத்து அதிகமுள்ள உணவாதலால் நாள்தோறும் சாக்கொலேட் சாப்பிடுவது உகந்ததல்ல.
***
இன்னும் இதனுடைய விளைவுகளை தெரிந்துக் கொள்ள இந்த தளத்தை கிளிக் செய்து படிக்கவும்.
***
நன்றி விக்கிபீடியா.
இந்த தகவல் உங்கலுக்கு உபயோகமாக இருந்தால் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி நண்பர்களே! நன்றி.***

படித்தது பிடித்து இருந்தால் உங்கள் ஓட்டை இந்த தமிழிஷ்ல் போடவும்.
*

11 comments:

vidivelli சொன்னது…

நண்பரே அசலான தெரிவு ...
அனைத்தும் வாசித்து அறிந்தேன்....சுப்பர்....

அண்ணாமலையான் சொன்னது…

very gud informations

Asiya Omar சொன்னது…

ப்ரபா,உங்களுக்கு ஒரு அவார்ட் த்ந்திருக்கிறேன்,என் ப்ளாக் வந்து பெற்றுக்கொள்ளவும்.

அமைதி அப்பா சொன்னது…

சாக்லேட் போல் பதிவும் இனிப்பாகா உள்ளது.

prabhadamu சொன்னது…

நன்றி அண்ணா மலை அண்ணா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அண்ணா. தொட‌ர்ந்து உங்க‌ள் ஆத‌ர‌வை எதிர் பார்க்கிறேன்.


***************


நன்றி விடிவெள்ளி நண்பா. உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி நண்பா. தொட‌ர்ந்து உங்க‌ள் ஆத‌ர‌வை எதிர் பார்க்கிறேன்.

prabhadamu சொன்னது…

நன்றி ஆசியா அக்கா. என‌க்கு அவாடா . நான் அப்ப‌டி என்ன செஞ்சுட்டேன்னு என்ன‌க்கு தெரிய‌லை. இருந்தாலும் நீங்க‌ள் அளித்த‌தை நான் ம‌கிழ்ச்சியோடு த‌லை வ‌ண‌ங்கி பொற்றுக் கொள்ளுகிறோன்.

அதை எப்ப‌டி என் த‌ள‌த்தில் மாற்றுவ‌து. என‌க்கு சொல்ல‌ முடியுமா அக்கா பிலீஸ்?உங்கள் வருகைக்கும், பதிவுக்கும், ஊக்கத்துக்கும் மிக்க நன்றி அக்கா.

Vijiskitchencreations சொன்னது…

ப்ரபா நல்ல பதிவு. ஆமாம் நிங்கள் சொல்வது சரி இங்கும் எல்லாரும் டார்க் சாக்லேட் விரும்பி சாப்பிடுவாங்க. நிறய்ய மருத்துவ குணங்கள் இருக்கு என்று சொல்கிறார்கள்.நல்ல பதிவு.

செந்தமிழ் செல்வி சொன்னது…

ப்ரபா, நல்ல நல்ல தகவல்கள்! என் ப்ளாக் வந்து அவார்ட்டை எடுத்துக் கொள்ளவும்.

prabhadamu சொன்னது…

நன்றி விஜய் கிச்சன். உங்கள் வருகைக்கும், பதிலுக்கும், என்னை ஊக்குவிப்பதற்க்கும் மிக்க நன்றி தோழி. ஆனால் சாக்கிலோட் அதிகமாகவும் சப்பிடக்கூடாது.

prabhadamu சொன்னது…

நன்றி அமைதி அப்பா. உங்கள் வருகைக்கும், பதிலுக்கும், என்னை ஊக்குவிப்பதற்க்கும் மிக்க நன்றி அப்பா.

prabhadamu சொன்னது…

நன்றி செல்வி அம்மா. உங்கள் வருகைக்கும், பதிலுக்கும், என்னை ஊக்குவிப்பதற்க்கும் மிக்க நன்றி அம்மா. ஆனால் உங்க வெப்சைட்டு எனக்கு எரர் வருதும்மா. ஏன் தெரியலை?

எனக்கு அவார்டு குடுத்ததுக்கு மிக்க நன்றிம்மா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "