...

"வாழ்க வளமுடன்"

22 மார்ச், 2010

தண்ணீ தண்ணீ என ஏங்கும் எதிர்கால‌ குழந்தைகள்

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
தண்ணீர் பஞ்சத்தின் நிலை இனி வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்த்து கவலை படும்நாம், ஏன் அதை தடுக்க, ஒரு வழியும் ( ஒரு சிலர் ) சொய்ய வில்லை.
நமக்கு இயற்கை கொடுத்திருக்கி நிறைய வளங்களை நாம் சரியான முறையில் தான் பயன் படுத்துகிறோமா! நாம் இயற்க்கையின் மடியில் விளையாடிய‌ ( குழந்தையாக ), அனுஅனுவாக மகிழ்ந்து அனுபவித்த இயற்க்கையை நாம் காத்தோமா!
*
நம் தேவைக்கு மட்டும் நாம் அனுபவித்த அந்த அனுபவம் நம் குழந்தைகலுக்கு வாய் வழியாக மட்டுமே சொல்லும் நிலையில் நாம் இருக்கும் இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது.
*
தற்ப்போது அதிகமாக அடிப்படும் செய்தி தண்ணீர் பஞ்சம். அதுவும் நம் இந்திய திரு நாட்டில் இந்த வளம் ஒரு இடத்தில் வாரி இறைத்து, ஒரு இடத்தில் பஞ்சம் என்று வைத்த இயற்க்கையை என்னவேன்று சொல்ல!
*
முக்கிய வளமான நீரை உபயோகிக்கும் நாம் தினமும் இயற்கைக்கு நன்றி சொல்கிறோமா? நன்றி சொல்ல விட்டாலும் பரவாயில்லை. ( ஏனெனில் அதற்க்கு கூட நமக்கு அவகாசம் இல்லை என்று காலம் ஓடிக் கொண்டு இருக்கிறது. அதனுடன் நாமும் நூல் பிடித்து ஓடிக் கொண்டு தான் இருக்கிறோம்.) ஆனால் அந்த வளத்தை நம் குழந்தைக்கலுக்கு விட்டு சொல்கிறோமா? நாம் உபயோகித்த அளவு தண்ணீர் கூட நம் குழந்தைகள் உபயோகிப்பார்களா என்று சிந்தித்தால் எனக்கு தொன்றுவது ஒரு பெரிய‌ கேள்வி குறிதான் எதிர்படுகிறது?
*
இந்த நிலை ஏன் ஏற்ப்பட்டது. சூற்றுச்சூழல் தான் இதற்க்கு முக்கிய காரணம். இந்த உலகத்தின் மிகப்பெரிய மலை என பெறுமை பட்ட மலை இமயமலை ( எவரஸ்ட்டு ). கம்பீரமாக இருக்கும் இம்மலை தற்ப்போது என்ன ஆகிறது? இனி என்ன ஆகும். நாம் மட்டும் எல்ல வளமும் பெற்று வாழ்ந்தால் போதும் என்று எண்ணும் எண்ணம் நமக்கு ஏன் வந்தது.
*
நாம் வசதியாக இருந்தால் போதும். நம் வீட்டில் எல்லா வசதியும் இருந்தால் போதும் என்று என்னும் எண்ணம் நமக்கு தற்ப்போது மனதில் ஆழமாக பதிந்த வேர். அது வளந்து தான் இந்த நிலையில் நாம் இருக்கிறோம்!
*
இதுப் போல் நம் முன்னோர்கள் எண்ணி இருந்தால் நம் நிலை? யோசியிங்கள் மக்களே!
*
தண்ணீர் வாழ்க்கையில் இன்றி அமையாத நிலை என்று ஆகிவிட்ட‌து. இனி அதை காக்கா நாம் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் அந்த இயற்கை வளத்தை காத்து நம் குழந்தைகள், நம் சந்ததிகள் என்று விட்டு சொல்ல நாம் சில மிக சில விஷயத்தை கையாளலாம்.
*
நாம் தண்ணீரை அதிகம் பயன் படுத்தியே பழகி விட்டதால் அதை திடீர் என்று குறைப்பது கொஞ்சம் கஷ்டம் தான். இருந்தும் அதை குறைக்க சில வழிகள்!
***
தண்ணீரை எவ்வாறெல்லாம் சேமிக்கலாம்:
*
1. எங்க போனாலும் முடிஞ்சவரை நம்ம கையில தண்ணீர் பாட்டில் இருக்குமாறு பார்த்துகலாம்.
*
2. தண்ணீரை சேமிக்க நாம் நம் குழந்தைகளுக்கு கத்துக்குடுக்கனும்.
*
3. குழந்தைகளுக்கு நம் இயற்க்கையின் அருமையை சொல்லி குடுங்கள்.
*
4. நாம் செய்யும் செயல் தான் குழந்தைகள் பின் பற்றுவார்கள். அதனால் சிறு குழந்தை தான என்று நாம் பிள்ளைகள் தண்ணீரில் விளையாட விட்டு ரசிப்பது, அவர்களையும் நாம் ஊக்குவிகுவது போல் ஆகும். அதை செய்ய விடக்கூடாது.
*
5. நாம் குழாயை சிறிதாக திற‌ந்து உபயோகிக்களாம்.
*

6. என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.
*

7. செடிக்கு சொட்டு நீர் பாசணம் முறையில் நாம் நீர் விட்டால் செடியும் வாடாது. நமக்கு நீர் மீச்சம்.
*

8. வீட்டில் த‌ண்ணீர் தொட்டி நிற‌ம்பி தண்ணீர் கீழே போனால் அதை உட‌னே த‌டுக்க‌ வ‌ழி பாருங்க‌ள். ( எது எதுக்கே யோசிப்போம் இத‌ற்க்கும் யோசித்து முடிவு எடுப்போம் )
*

9. தண்ணீர் கீழே விழும் இட‌த்தில் ஒரு சின்ன‌ தொட்டி க‌ட்டி அதை செடிக‌ளுக்கும், தொட்ட‌துக்கும் அனுப்பும் ப‌டி செய்யுங்க‌ள்.
*

10. வாஷின் மிஷினில் போட்டு துணி துவைக்கும் நாம் அந்த அழுக்கு தண்ணீரை ( இரண்டாவதாக அல்லது முதலாவதகா துணி அலசும் தண்ணீர் ) பிடித்து டாயிலோட்டில் விலாஷ் ப‌ண்ணும் தொட்டியில் ஊற்ற‌லாம்.
*

11. அதே த‌ண்ணீரை வாச‌லில் க‌ழுவ‌ ஊற்ற‌லாம். பிற‌கு ந‌ல்ல‌ த‌ண்ணீர் ஊற்றி க‌ழுவ‌லாம்.
*
12. ஏசியை குறைவாக உபயோகிப்பதால் நாம் தண்ணீர் மிச்சம் பிடிக்கலாம். ( இது பற்றி எனக்கு சரியாக தெரியலை. இருந்தும் இது சுற்றூ சூழலுக்கு நல்லது )
*

13. குடி நீரையும் நாம் பிடிக்கும் போது அடுத்த குடம் அல்லது வாலி வைக்கும் போது குழாய்யை முடி அல்லது சிறிது நீர் கீழே விட்டு பிடிக்கலாம். ( ஏனெனில் குழாய் மூடிவிட்டால் ஒரு சில இடத்தில் நீர் நின்று விடும் )
*

14. குடிநீர் தொட்டி போல் தான் கட்டாயம் இருக்கும். கீழே விழும் நிறை வீனாக்கமல் செடிக்கு ஊற்றலாம்.

*
15. குளிக்கும் போது கூட நாம் சவரை அல்லது குழாயை முடி பின்பு தேவை எனில் ஓப்பன் பன்னிக்கலாம். நம் வீட்டில் இருக்கும் குழாய்கள் ஒழுகிறதா என்று எப்போதும் பார்த்து சரி செய்யவும்.

***

இன்னும் சில துளிகள்:
*

1. வீட்டில் அனைவரும் கட்டாயம் செடி மற்றும் மரம் வளர்க்கவும்.
*

2. உங்கள் வீட்டில் ஏதேனும் சிறப்பு நிகழ்ச்சி இருந்தால் அன்று கட்டாயம் ஒரு செடி நட்டால், கட்டாயம் அதனுடைய பலனை நம் குழந்தைகள் அனுபவிப்பார்கள்.
*

3. வண்டியில் சொல்லும் போது அதில் வரும் புகையை குறைக்க அப்ப அப்ப ( அடிக்கடி ) அதனை சரி செய்து சுற்று சூழலை பாதுகாக்கவும்.
***

இன்னும் நிறைய இருக்கு... சொன்னால் நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அதனால் இதனை நாம் நம் குழந்தைகலுக்கு சொல்லி குடுத்தால் காட்டாயம் பிள்ளைகள் ஏற்ப்பார்கள்.



கட்டாயம் நம் பிள்ளைகள் மேலே உள்ள படத்தில் இருப்பது போல் குழந்தை நமக்கு சொல்லிக் குடுக்கும்.
***
இவை நானே எழுதியது.
***
இதை படித்து உங்கள் கருத்து பிலீஸ்.



***

4 comments:

venkat சொன்னது…

nalla pathivu

அமைதி அப்பா சொன்னது…

என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.//

எல்லோர் மனதிலும் பதியவேண்டிய ஓன்று..!
நன்றி.

prabhadamu சொன்னது…

நன்றி வெங்கட். உங்கள் பதிலுக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி நண்பா.


தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன் நண்பா.

prabhadamu சொன்னது…

////என்னதான் நாம் தண்ணீருக்கு காசு குடுத்தாலும் நம் தேவைக்கு மட்டும் தான் நாம் பயன்படுத்த வேண்டும்.//

எல்லோர் மனதிலும் பதியவேண்டிய ஓன்று..!
நன்றி.////


நன்றி அமைதி அப்பா. என் மனதில் பட்டதை சொன்ன கருத்துக்கள் அப்பா. அதை நீங்கள் ஏற்றது எனக்கு மிக்க மகிழ்ச்சி அப்பா.


நன்றி அமைதி அப்பா. உங்கள் பதிலுக்கும், ஊக்கத்துக்கும், வருகைக்கும் மிக்க நன்றி அப்பா.


தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர் பார்க்கிறேன் நண்பா.

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "