இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இலந்தை பழம், இலை, பட்டையின் மருத்துவ குணங்கள்:*
இலந்தை பழம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பழங்களில் ஒன்று. ஆனால் அம்மரத்தின் ஓவ்வெரு பாகமும் மருத்துவ குணம் கொண்டவை என்று உங்களுக்கு தெரியுமா?
இலந்தை மரப் பட்டையின் குணம்:
*
1. இலந்தை மரத்தின் உள்பட்டைகளை உலர்த்திப் பொடி செய்து வைத்துக் கொண்டு தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வர, ஆறாத புண்ணும் ஆறும்.
*
2. இலந்தை இலையையும், பட்டையையும் ஒன்றிரண்டாக இடித்து குளிக்கின்ற நீரில் கலந்து காய்ச்சி குளித்து வர தலைக்குத்தல், குடைச்சல் நீங்கும்.
*
3. இலந்தையைப் பட்டையை இடித்து நீர்விட்டு கஷாயமாக காய்ச்சி குடித்து வர சுரம் தணியும்.
*
4. இலந்தை மரத்தின் வேரை அரைத்து பூச மூட்டு வலி குணமாகும்.
*
5. இதன் வேர்ப்பட்டையை இடித்து பிழிந்தச் சாற்றை 15 மில்லி அளவு குடிக்க மலச்சிக்கல் குணமாகும்.
***
இலந்தை இலையின் மகத்துவம்:
*
1. இலந்தை பழத்தில் நிறைய சக்திகள் உள்ளன. அதேப்போல இலந்தை இலையிலும் அதிக மருத்துவ சக்திகள் உள்ளன.
*
2. இலந்தை இலையை மை போல் அரைத்து வெட்டுக் காயத்தின் மீது வைத்து கட்டினால் விரைவில் காணம் குணமாகும்.
*
3. இலந்தை இலையை அரைத்து எலுமிச்சை அளவு எடுத்து பசு மோரில் கலந்து குடித்து வர எருவாய் கடுப்பு குணமாகும்.
*
4. இலந்தை இலையை அரைத்து அந்த விழுதைக் கட்டிகள் மீது கட்டி வர விரைவில் கட்டிகள் பழுத்து உடையும்.
*
5. இலந்தை இலையை மைபோல் அரைத்து பூசி வர மயிர் புழுவெட்டு நீங்கும்.
*
6. இலந்தை இலையின் சாறெடுத்து அதனை உள்ளங்கை, உள்ளங் கால்களில் பூசி வர, அங்கு அதிகமாக வியர்வை சுரப்பது கட்டுப்படும்.
*
கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு ( இலந்தை இலை ):
*
1. தற்போதைய காலக்கட்டத்தில் பல பெண்களுக்கு கருப்பையில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன.கருப்பை பிரச்சினையால் மாதவிலக்கு சமயங்களில் அதிக வலி, கரு உருவாகாமை, அப்படியே உண்டானாலும் கருச்சிதைவு போன்றவை ஏற்படும்.
*
2. கருப்பை தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆங்கில மருத்துவத்தை விட இயற்கை வைத்தியமே நல்லப் பலனைத் தரும். இதற்கு இலந்தை இலை நல்ல மருந்தாக விளங்குகிறது.
*
3. இலந்தை இலை ஒரு பிடி அளவு எடுத்து, அதனுடன் 6 மிளகு, 4 பூண்டு பல்லு சேர்த்து அரைத்து மாதவிலக்கான முதல் மூன்று நாட்கள் உட்கொள்ள வேண்டும்.
*
4. இப்படி செய்து வந்தால் கருப்பை சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நீங்கி, வலியும் குறையும். கரு உருவாகும் வாய்ப்பும் ஏற்படும்
***
வயிற்றுக் கடுப்புக்கு மருந்து:
*
1. பல இடங்களில் பல வகையான உணவுகளை உட்கொண்டு நமது வயிற்றைக் கெடுத்து வைத்திருக்கிறோம்.அப்படி செய்வதால் வயிற்றுக் கடுப்புக்கு ஆளாவதும் நாம்தான்.அதற்கு மருந்து இலந்தை இலை மற்றும் பட்டையில் உள்ளது.
*
2. இலையையும், பட்டையையும் சம அளவு எடுத்து ஒன்றிரண்டாய் நசுக்கி 200 மில்லி நீர் விட்டுக் காய்ச்சி 100 மில்லியாக வற்றியதும் குடித்து வர கழிச்சலும், ரத்தம் கலந்து போவதும் குறையும்.
*
3. வயிற்றுக் கடுப்புக்கு இது ஒரு மாமருந்தாக அமையும்.
***
இளநரைக்கு இலந்தை மருத்துவம்:
*
1. தற்போது பெரும்பாலான இளைய தலைமுறைக்கு தலையாய பிரச்சினையே தலை முடிதான். தலை முடி உதிர்வது, இள நரை, பொடுகு போன்றவைதான்.
*
2. இவை பெரும்பாலும், சுற்றுச்சூழல் கெட்டிருப்பது மற்றும் பணிச் சுமை காரணமாக ஏற்படுகிறது.
*
3. இளநரையைப் போக்கும் தன்மை இலந்தை இலைக்கு உண்டு. இதை நன்கு அரைத்து தலையில் தடவி 10 நிமிடங்கள் வரை ஊறவிட்டு தலையை அலச இளநரை மாறும்.
*
4. இலந்தை இலையையும் சிறுகிளைகளையும் நன்கு அரைத்து கட்டிகள், கொப்புளங்களின் மீது வைத்துக் கட்ட அவை சீக்கிரம் பழுத்து உடையும்.
*
5. மேலும், இள நரை ஏற்பட்டதும் மனம் கலங்கிவிடாமல், உணவில் அதிகமான அளவு கறிவேப்பிலையை சாப்பிட்டு வர வெள்ளை முடிகள் மீண்டும் கருப்பாக மாறும்.
***
இலந்தைப் பழத்தின் நன்மை:
1. இழந்தை பழத்தில் வைட்டமின் ஏ, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.
*
2. இலந்தை பழம் சாப்பிட்டு வந்தால் உடல் வளர்ச்சி ப¦றும்.
*
3. எலும்பும், பல்லும் உறுதியடையும். இலந்தைக்கு பித்தத்தை தணிக்கும் குணம் உண்டு.
*
4. உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் ஆற்றல் இலந்தைப் பழத்திற்கு உண்டு.
*
5. கொட்டையை நீக்கிவிட்டு இலந்தை பழத்தை மட்டும் உலர்த்தி சாப்பிட்டு வர இருமல் தணியும்.
**
இலந்தை நினைவாற்றலுக்கு உகந்தது:
*
1. தினமும் காலையில் உணவிற்குப் பிறகு 5 முதல் 10 இலந்தைப் பழங்களை உண்டு வந்தால் பித்தம், மயக்கம், வாந்தி, வாய் குமட்டல் குணமாகும்.
*
2. இலந்தை பழம் நினைவாற்றலுக்கு ஏற்றது. மாணாக்கர்கள் இலந்தை சாப்பிட்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும்.
*
3. இலந்தைப் பழந்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது.
*
4. தொடர்ந்து அவ்வாறு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் வயிற்றெரிச்சல் ஏற்படும்.
*
5. இலந்தை பழத்திற்கு உடல் உஷ்ணத்தைக் குறைக்கும் ஆற்றலும் உண்டு.
*
6. மந்த புத்தியுள்ளவர்கள் இலந்தைப் பழத்தை தொடர்ந்து உண்டு வர மூளை புத்துணர்வு பெறும். ஒரு கைப்பிடி இலந்தம்பழத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டு அது 1_2 லிட்டராக சுண்டும் வரை கொதிக்க விட்டு தேன் அல்லது சர்க்கரை சேர்த்து எடுத்து வைத்து இரவில் படுக்கப் போகும் முன்பு இதை அருந்தி வர மூளை புத்துணர்ச்சி பெறும்.
*
7. பற்களில் ஏற்படும் கூச்சம், பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக் கசிவு போன்றவைகளுக்கு இலந்தையை மென்று தின்பது நல்ல பலன் தரும்.
*
8. இதில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் பற்கள் மற்றும் எலும்புகளுக்கு அதிக நன்மைகளை அளிக்கிறது.
*
9. எலும்பு மற்றும் பற்களுக்கு உறுதியும், உடம்புக்கு பலமும் தரும் வகையில் இலந்தை பழம் அமைந்துள்ளது.
*
1o. எல்லாப் பழங்களையும் உணவுக்கு முன்பு தான் சாப்பிட வேண்டும். ஆனால் இலந்தைப் பழத்தை பகல் உணவுக்குப் பின்பு உண்பதால் நன்கு ஜீரணமாவதும் பித்தமும் கட்டுப்படும்.
***
இலந்தையின் பண்புகள்:
*
1. இலந்தை பழம் மற்ற பழங்களோடு ஒப்பிடும்போது விலை மலிவு. ஆனால் அது தரும் பலன்களோ அரிது. 4000 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானதுதான் இந்த இலந்தை.
*
2. இதன் தாயகம் சீனா. வெப்பம் அதிகமாக உள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும் எனப்படுகிறது.
*
3. அவ்வளவு சின்ன பழமாக இருந்தாலும் அதில் அடங்கியுள்ள விட்டமின்கள் ஏராளம்.
*
4. 100 கி இலந்தையில் கிடைக்கும் கலோரி 74. இதில் 17 சதவீதம் மாவுப் பொருளும், 0.8 சதவீதம் புரதமும், கொண்ட இதில் விட்டமின் ஏ-வும், கால்ஷியம், பாஸ்பரஸ் போன்ற தாது உப்புகளும் இரும்பு சத்தும் கூட அடங்கியுள்ளன.
*
5. இது உடலுக்கு சூட்டை தணித்து குளிர்ச்சியைத் தரக் கூடியது. குளிர்ச்சியான உடல் வாகு கொண்டவர்கள் மதிய வேளையில் மட்டும் இதனை உண்ணலாம்.
***
நன்றி வெதுப்னியா.
Webdunia.com
***
4 comments:
நிறைய எழுதிறீங்க ப்ரபாக்கா. நானும் ஏதோ எக்ஸாமுக்கு படிக்கிற மாதிரி படிச்சிட்டே இருக்கேன். அதில நேத்து சில டிப்ஸ்சை அவசரத்துக்கு உதவுமேனு லப்டாப்பில் save பண்ணிட்டு, சின்சியரா நோட்புக்ல வேற எழுதிட்டிருந்தனா (என் ஹான்ட் பாக்கில் அந்த நோட் புக் எப்பவுமே இருக்கும்), அத பாத்திட்டு என் வீட்ல இருக்கிற மூணும் சிரிச்சிட்டிருக்காங்க.
நன்றி அனாமிக்கா உங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றிப்பா. உங்கள் தொடர் கருத்துக்கள் என்னை ஊக்குவிக்கிரது. மிக்க நன்றி தோழி.
அனாமிக்கா நான் இதில் ( ஒவ்வொரு பக்கதிலும் ) பிரிண்டு போடும் பட்டனை வைக்க டிரைப் பன்னிக்கிட்டு இருக்கேன். வைத்தால் பிரின்ட்டு எடுத்துக் கோங்கப்பா.
உங்க அதரவுக்கு மிக்க நன்றி தோழி.
ப்ரபாம்மா, சிங்கைல இலந்தைப்பழம் இருந்தால் கொஞ்சம் அனுப்பி உதவுங்க. எனக்கு மூளை கொஞ்சம் புத்துணர்வு அடையணும். ;)
இழந்தை பழம் இப்ப சீசனா தெரியலை இமா அம்மா. இருந்தால் அனுப்பிட்டாப் போச்சு. அதில் அதிக சத்து இருக்கு. ஆனா எனக்கு கொஞ்சம் அதை சாப்பிட கஷ்டம் அம்மா. ( என்ன செய்ய நல்லது எல்லாம் சாப்பிட்டா நான் எங்கையோ இருப்பேன்) ஹீ ஹீ ஹீ....
கருத்துரையிடுக