...

"வாழ்க வளமுடன்"

07 ஜூலை, 2011

குழந்தைகள் டீன் ஏஜ் வயதை அடையும் போது, கவனிக்க வேண்டியது !!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

டீன் ஏஜ் வயதை அடையும் ஆண் மற்றும் பெண் ஆகியோரின் பழக்க வழக்கங்கள் பற்றி ஸ்பெயினில் அமைந்துள்ள பேஸ்க் கன்ட்ரி பல்கலைகழகத்தில் ஆய்வாளர்கள் ஆராய்ச்சி ஒன்றை நடத்தினர். அந்த ஆரராய்ச்சியில் சிறுவயதினர் 13 வயது அடைவதற்கு முன்பாக தங்களது ஆரோக்கியமான வாழ்க்கை முறை பற்றி பெற்றோர்களிடம் இருந்து தெரிந்து கொள்ள வேண்டும் என தெரிய வந்துள்ளது.

இது பற்றி மார்தா அர்ரூ மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் 2,018 பேரிடம் ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். ஆய்வில் 13 முதல் 17 வயதினர் மற்றும் 18 முதல் 26 வயதினர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களின் வயது மற்றும் பாலினம் அடிப்படையில் ஆராயப்பட்ட அந்த ஆய்வில் ஆல்கஹால் உட்கொள்ளல், புகையிலை பயன்பாடு, தவறான பாலியல் தொடர்புகள், போதை பொருள் உபயோகம், போதிய ஆகாரமின்மை மற்றும் தேவையான உறக்கமின்மை ஆகியவை அவர்களின் சுகாதாரத்தை பாதித்த விசயங்களாக கண்டறியப்பட்டன.

அவற்றுள், இளம் வயதினர் 16 வயதை அடையும்போது தங்களது செயல்களில் மாற்றம் அடைகின்றனர். அவர்களின் பழக்க வழக்கங்கள் மாறுபடுகின்றன. அவர்களின் மன நலம் பற்றி அறிந்து கொண்டு செயல்படுவதோடு அவர்களுக்கு தேவையான பணம் தொடர்பான விசயங்களையும் பூர்த்தி செய்து கொடுத்தல் அத்தியாவசியமானது என்று அவர் குறிப்பிடுகிறார்.

மேலும் நல்ல பண்பட்ட வாழ்க்கை முறையினை மேற்கொள்வோர் அதிக சுய கவுரவத்தோடும், மனநலம் சார்ந்த செயல்பாடுகள் நன்றாகவும், மிக மகிழ்ச்சியாகவும் மற்றும் உடல் சார்ந்த விசயங்களில் ஆரோக்கியம் கொண்டவர்களாகவும் விளங்குகின்றனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.



***
thanks luxinfonew
***




"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "