...

"வாழ்க வளமுடன்"

16 ஜூன், 2011

ஆழ்ந்த துக்கம் இல்லையா? இதை படிங்க!!!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

வணக்கம் டாக்டர்!”


“வாங்கம்மா.. என்ன விஷயம்?”


“உறங்கும்போது உளறுகிறவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?”


”குழந்தைகள் உறங்கும்போது பேசறது, உளர்றது சகஜம்தான்.. பெரும்பாலான குழந்தைகளுக்கு இந்தப் பழக்கம் காலப்போக்கிலே தானாகவே சரியாயிடும்..!”


“எதனாலே டாக்டர் இப்படி?”


“சில பேர் தூக்கத்துலே கெட்ட கனவு கண்டு பயந்து போய் பிதற்றுவது உண்டு.. சில பேர் அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிக‌ள் சிலதை மனசுலே நினைச்சுக்கிட்டே தூங்குவாங்க.. அது தொடர்பாவே ஏதாவது கனவு கண்டு உளர்றதும் உண்டு. இதுக்காக ஒண்ணும் கவலைப்பட வேண்டியதில்லை!”


“அப்படிங்களா?”


“சிலப்பேர் நல்லா தூங்கிக்கிட்டிருக்கறப்போ திடீர்ன்னு பயந்து போய் முழிச்சிக்குவாங்க.. சிலபேர் தூக்கத்துலேயே எழுந்திரிச்சி நடக்க ஆரம்பிச்சுடுவாங்க.. இப்படி ஏதாவது இருந்தா டாக்டர் கிட்டே போகலாம்...”


“சரிங்க டாக்டர்..!”


“உங்க பிரச்சனை என்னங்கறதை இன்னும் சொல்லவே இல்லையே!”


“என் வீட்டிக்காரர் தூக்கத்துலே உளர்றார்.... என்னென்னமோ பேர்லாம் சொல்றார்.. சரியா புரியலே!”


“சரி.. அவர் உளர்றதை நிறுத்தணும்.. அதுக்கு மருந்து வேணும்.. அவ்வளவுதானே!”


“இல்லே டாக்டர்... அவரு சொல்ற பேரு என்னங்கறது எனக்குத் தெரியணும்.. அதனாலே அவர் கொஞ்சம் தெளிவா உளர்றதுக்கு ஏதாவது மருந்து வேணும் அவ்வளவுதான்..!” (நன்றி: வாரம் ஒரு தகவல்)




தூக்கம் மனிதனுக்கு கிடைத்த மிகப் பெரிய வரபிரசாதம். உடல் நலத்தை பேணுவதற்கும், அதே உடல் நலம் சீர்கெடுவதற்கும் தூக்கம் காரணமாகிறது. மனித வாழ்வில் தூக்கம் குறைந்தது 6 மணி நேரத்தில் இருந்து 8 மணி நேரம் வரை தூக்கம் அவசியமாகிறது. தூங்கும் சூழ்நிலையானது மிகவும் அமைதியகவும் இருக்க வேண்டும். தூக்கம் நன்றாக இருந்துவிட்டால் பகல் பொழுது நமக்கு சொர்கமாக இருக்கும். இரவில் தூக்கம் சரியில்லை என்றால் பகல் நமக்கு வேதனைதான்.


முதுகெலும்பு தரையில் படிம்படி படுத்துறங்கும் ஒரே விலங்கினம் மனிதன்தான். தூக்கத்திற்காக நாம் மது, தூக்க மாத்திரை போன்றவை பயன்படுத்துவதால் உடலின் நீர்ச்சத்துகளை உறிஞ்சி விடுவதால் தூக்கம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கின்றன. எனவே இவற்றை தவிர்க்க வேண்டியது அவசியம். இயல்பான தூக்கம்தான் மனிதனின் ஆயுளை அதிகரிக்கும்...


தூக்கத்தை வரவழைக்க சில டிப்ஸ்:

காபி, டீ, சாக்லெட், குளிர்பானங்கள் போன்ற வற்றை சுத்தமாகத் தவிர்த்து விடுங்கள். இவற்றிலுள்ள வேதிப்பொருட்கள், மெலட்டோனின் ஹார்மோனை கட்டுப்படுத்துகின்றன.

எந்தக் காரணம் கொண்டும் இரவு 8 மணிக்கு மேல் கம்ப்யூட்டரின் முன் உட்காராதீர்கள். 8 மணிக்கு கம்ப்யூட்டர் முன்பிருந்து எழுந்தால் தான் 10.30 மணிக்கு ஆழ்ந்து தூங்கமுடியும். குறைந்த வெளிச்சத்தில் தூங்குங்கள். தூக்க மாத்திரைகளை பயன்படுத்துவதை முழுவதுமாகத் தவிர்த்துவிடுங்கள்.

தூங்கும் முன் செல்போனை ஆஃப் செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் யாராவது போன் செய்வார்களோ என்று உங்கள் ஆழ்மனம் நினைத்துக்கொண்டே இருக்கும். படுப்பதற்கு இரண்டரை மணிநேரம் முன் இரவு உணவை முடித்துவிடுங்கள் (தீவிர சர்க்கரை நோயாளிகளுக்கு இது பொருந்தாது). இரவில் அரைவயிறு சாப்பிடுங்கள். காலையில் அதிகமாக சாப்பிடலாம்.

சிலருக்கு பால் குடித்துவிட்டு தூங்கினால் நன்கு தூக்கம் வரும். உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்வது தூக்கத்துக்கு அருமருந்து. ஆனால், படுக்கச் செல்லும் 4 மணி நேரத்துக்கு முன்பே உடற்பயிற்சியை முடித்துக்கொள்ள வேண்டும்.


***

மேலும் சில டிப்ஸ்:

http://www.mayoclinic.com/health/sleep/HQ01387

http://www.wenatex.ca/


***
thanks சித்ரா & கவிதை விதி
***





"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "