இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
ஒருவரது உடல் அமைப்பு, எடை, வயது, உடல் உழைப்பு ஆகியவற்றை பொறுத்து அவர் தனது உணவு முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
பருமனானவர்கள் எடையைக் குறைபதற்காக உணவுக்கட்டுபாட்டை மேற்கொள்ள வேண்டும். உணவின் அளவைக் குறைக்க வேண்டும். அதற்காக பட்டினி கிடக்கக் கூடாது. சிலர் அடிக்கடி காபி, டீ குடிப்பார்கள். அவற்றில் சர்க்கரை இருப்பதால் கூடுதலான கலோரி உடலில் சேர்ந்து அவர்களது உடல் எடை கூடி விடும். எடை குறைவானவர்கள் மருத்துவரது ஆலோசனையின் படி, உடல் எடையை சீராகக் கூட்டி பராமரிக்கும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
*
அதிகமாக சாப்பிட விரும்புபவர்கள் காய்கறி வகைகள், கீரை வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அவர்கள் பசியைக் கட்டுபடுத்தும்.
*
நெய், வெண்ணை, பாலாடை, ஐஸ்கிரீம், முட்டையின் மஞ்சள் கரு, பிஸ்தா, முந்திரிபருப்பு, பாதாம்பருப்பு, கொழுப்பு நிறைந்த இறைச்சி, தேங்காய், தேங்காய் எண்ணை, வனஸ்பதி போன்றவற்றில் கொழுப்பு பொருட்கள் அதிகளவில் இருப்பதால் அவற்றைத் தவிர்பது நல்லது. மாரடைப்பு, ரத்தக்கொதிப்பு, நீரிழிவு பாதிப்புக்குள்ளான நோயாளிகள் இளமையில் இருந்தே கண்டிப்பாக இந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.
*
தக்காளி, வெள்ளரிக்காய், பப்பாளி, கத்திரிக்காய், பாகற்காய், பீன்ஸ், அவரைக்காய், முட்டைக்கோஸ், காலிபிளவர், வெண்டைக்காய், கொத்தவரங்காய், புடலங்காய், முருங் கைக்காய், கோவக்காய், பூசணிக்காய், சுரை க்காய், சவ்சவ், நூக்கோல், பீர்க்கங்காய், முள்ளங்கி, வாழைபூ, வாழைத்தண்டு, காரா மணி, குடைமிளகாய், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, புதினா, கொத்துமல்லி, காய்கறி மற்றும் கீரைவகைகளை உணவில் தாராளமாக சேர்க்கலாம். கேழ்வரகு, கோதுமை போன்றவற்றை கூழாக உண்ணக்கூடாது. ஏனெனில், அவை உடனடியாக செரிமானமாகி சிறுகுடல் மூலம் உறிஞ்சபட்டு, ரத்தத்தில் கலந்து குளுக்கோசின் அளவைக் கூட்டி விடும்.
*
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவு முறைகள் ஒழுங்கான ஒரு கட்டமைப்பிற்குள் இருக்க வேண்டும். அப்போது தான் நமது உடல் வளர்ச்சி ஒரே சீராக நடைபெறும். அரிசி, கோதுமை, கேழ்வரகு, சோளம் போன்ற தானியங்கள் மற்றும் கிழங்கு வகைகளில் இருந்து தயாரிக்கபடும் மாவு வகைகள் நமது உணவில் 40 சதவீதம் இருக்க வேண்டும்.
*
நார்த்தன்மையை அதிகரிக்கும் கலோரி சக்தியற்ற காய், கனிகள் மற்றும் கீரை வகைகளையும், கலோரி சக்தி குறைவாக உள்ள பழங்களையும் 40 சதவீதம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். மீன், முட்டை, இறைச்சி, பருப்பு வகைகள், பால் மற்றும் பால் வகை புரதங்கள், எண்ணை மற்றும் கொழுப்பு வகை உணவுகள் 20 சதவீதம் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்
***
thanks google
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக