...

"வாழ்க வளமுடன்"

12 ஏப்ரல், 2011

உடல் ஆரோக்கியத்துக்கு பழங்கள் அவசியம் !

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
* உடல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் பழங்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் உடல் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை பழங்கள் எனலாம்.



*



பழங்களில் இரும்புச் சத்துடன், பாஸ்பரஸ், கால்சியம் உள்ளிட்ட ஏராளமான ஊட்டச் சத்துக்களும், வைட்டமின்களும் உள்ளன.



*



சில வகை பழங்களைத் தேனுடன் கலந்து சாப்பிடுவது மிகவும் நல்லது.



*



குறிப்பிட்ட சில பழங்களின் மருத்துவத் தன்மை, அவற்றால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மை குறித்து இதில் பார்ப்போம்.



*



ஆப்பிள் பழத்துடன் தேன், ரோஜா இதழ்கள் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நோய் மற்றும் நரம்புத் தளர்ச்சி நீங்கும். ஆப்பிள் சாறானது, குழந்தைகளின் வயிற்றுப் போக்கை குணமாக்கும்.



*



எந்த வயதினரும் எந்த நோயாளியும் சாப்பிடக்கூடிய பழம் ஆரஞ்சுப் பழம். இது உடலுக்கு புத்துணர்ச்சியையும், வலுவையும் தருகிறது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு ஆரஞ்சுப் பழம் மிகவும் நல்லது.



*



சர்க்கரை சேர்க்காத திராட்சைப் பழச்சாறு நீரிழிவு நோயை குணப்படுத்துகிறது. ஒரு அவுன்ஸ் அளவு திராட்சைச் சாறுடன் சிறிது கேரட் சாறு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வர, சிறுநீர் தாரைகளில் உண்டாகும் கல் கரையும்.



*



இதயம், குடல், சிறுநீரகம் நன்கு இயங்க மாதுளம் பழச்சாறு மிகவும் சிறந்தது. மாதுளம் பழத்தில் குளுக்கோஸ் சக்தி அதிகம் இருப்பதால், உடல் சோர்வை உடனடியாக போக்கும் தன்மை கொண்டது.



*



அன்னாசிப் பழம் இதயத்திற்கு மிகவும் நல்லது. புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்துவதற்கு அன்னாசிப் பழம் பயன்படுகிறது. உடல்சூடு உள்ளவர்களுக்கு அன்னாசிப் பழம் சாலச் சிறந்தது.



*



சப்போட்டா பழத்தில் அதிகளவில் இரும்புச் சத்து, பொட்டாசியம் சத்து, பாஸ்பரஸ் சத்துக்கள் உள்ளதால், உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. சப்போட்டா பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.



*



பப்பாளிப் பழத்தை துண்டுகளாக்கி சீரகப் பொடி, எலுமிச்சை பழச்சாறு கலந்து சாப்பிட்டால் அஜீரணம் குணமாகும். பப்பாளியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். தாய்ப்பால் அதிகம் சுரக்க பப்பாளிப் பழம் பயன்படுகிறது.



*



வாழைப்பழத்தில் எந்த வகையானாலும், அஜீரணத்தைப் போக்குவதுடன், உடலில் தங்கும் தேவையற்ற பொருட்களை வெளிக்கொண்டு வர பயன்படுகிறது. எனவே அன்றாடம் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுதல் சிறந்தது.



*** thanks news paper *** "வாழ்க வளமுடன்"


இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "