இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
உடல் பெருக்கக் காரணம்: * நமது உடலுக்கு ஆரோக்கியம் வந்தால் அழகும் தானாகவே வந்துவிடும். நொறுக்குத் தீனிகள் அடிக்கடி சாப்பிட்டால் உடம்பு பெருத்து விடும். கீரைகளை உணவில் சேர்த்துக் கொண்டால் மலச்சிக்கல் ஏற்படாது. *** அடிக்கடி நீர் குடித்தால்... * ஒரு நாளைக்கு 8 டம்ளர் நீர் பருகவேண்டும். இதனால் உடல் வறண்டு போகாமல் இருக்கும். அதேபோல் மாதத்திற்கு ஒருநாள் வெறும் திரவ உணவை உட்கொண்டால் உடல் உறுப்புகள் வலிமை பெறும். காலை உணவைக் கண்டிப்பாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பாக இயங்கும். *** சைவமா... அசைவமா? * சைவ உணவு சாப்பிடுவோரை விட அசைவ உணவு சாப்பிடுவோரே குண்டாகி வருகின்றனர். ஏனென்றால் அசைவ உணவில் கொழுப்புச் சத்துகள் அதிகமாக உள்ளன. ஆனால் அசைவ உணவில் உடலுக்குத் தேவையான புரதசத்தும், ஊட்டச் சத்தும் கிடைக்கிறது. *** எத்தனை கலோரி தேவை? * ஒரு நாளைக்கு ஒரு மனிதனுக்கு 1200 கலோரிகள் தேவைப் படுகிறது. அதற்கு மேல் நாம் சாப்பிடும்போது அவை ஜீரணமாகாமல் உடம்பிலேயே தங்கிவிடுவதால் நாளடைவில் பல்வேறு நோய்கள் நம்மைத் தாக்குகின்றன. *** வைட்டமின் சி குறைந்தால்... * முட்டைக்கோஸ், ஆரஞ்சு, கேரட், கீரை, வெங்காயம், தக்காளி, எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி உள்ளது. இது உடலில் குறைந்தால் உடல் எலும்புகள் பலவீனமாகும். பற்களில் பிரச்சினைகள் ஏற்படும். *** உதடுகள் வெடித்தால்... * கல்லீரல், கோழி, மீன், பால், பச்சைக் காய்கறிகள் ஆகியவற்றில் வைட்டமின் பி2 அதிகமாக உள்ளது. இது உடலில் குறைந்தால் உதடுகள் வெடிக்க ஆரம்பித்து விடும். *** ஆரோக்கியத்துக்கு அவசியம்! * வெண்ணை, பால், பச்சைக் காய்கறிகள், ஆரஞ்சு, எலுமிச்சை, இறைச்சி, வாழைப்பழம், அன்னாசிபழம் போன்ற உணவுகளில் வைட்டமின் ஏ உள்ளது. வைட்டமின் ஏ நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது. *** சாப்பிடும்போது இடையே... * உணவு சாப்பிடும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது. இவ்வாறு அதிகமாக நீர் அருந்தினால் உணவு ஜீரணம் ஆகாது. அதுபோல் உடலுக்குத் தேவைப்படும் தாதுக்கள், வைட்டமின்களை உடல் ஏற்றுக் கொள்ளாது. *** தூங்கி எழுந்தவுடன்... * தூங்கி எழுந்தவுடன் விடியற்காலையில் வெறும் வயிற்றில் ஒன்றரை லிட்டர் நீர் குடிப்பது உடல் ஆரோக்கியம் பெறும். இதனால் மலச்சிக்கலும் ஏற்படாது. மேலும் சிறுநீர் கற்களும் ஏற்படாது. *** நீர் குடிக்காவிட்டால்... * உடற்பயிற்சி செய்பவர்கள் வேர்வையாக வெளியிட்ட நீரை ஈடுகட்ட தாராளமாக நீர் அருந்துவதில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு சிறுநீர் கற்கள் ஏற்பட வாய்ப்புண்டு! அதேபோல், தக்காளி, பால், உப்பு போன்ற உணவுகளை அதிகமாக சாப்பிடுபவர்கள் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். *** வேப்பிலையின் நன்மை! * வேப்பிலைக் கொழுந்து கசக்காது! இதில் புரதச்சத்து, சுண்ணாம்புச் சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ உள்ளன. வேப்பிலைக் கொழுந்தை சுத்தம் செய்து துவையல் அரைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. இது ரத்தத்தை சுத்தப்படுத்தும். விஷக் கிருமிகளைக் கொல்லும். *** thanks மொதமேது *** "வாழ்க வளமுடன்"
2 comments:
நல்ல பகிர்வு..
//// Geetha6 கூறியது...
நல்ல பகிர்வு
////
நன்றி Geetha6.
உங்கள் போன்னா நேரத்தை ஆழ்கடலுக்கு சொலவிட்டதுக்கு மிக்க நன்றி :)
கருத்துரையிடுக