இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைகழக முன்னாள் பேராசிரியர் மேற்கொண்ட ஆய்வொன்றில், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பிற்காலத்தில் குற்ற செயல்களில் ஈடுபடுவார்களா? என்பதை அவர்களுடைய மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஸ்கேன் செய்து அதன் வழியாக அறிய இயலும் என தெரிவித்து உள்ளார். அவரது ஆய்வின்படி, மனிதர்களின் செயல்பாடுகள் மற்றும் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்தி கட்டுக்குள் கொண்டு வரும் மூளையின் பகுதிகளான அமிக்டலா மற்றும் ப்ரிப்ரென்டல் கார்டெக்ஸ் ஆகியவை குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு சிறியதாக உள்ளது தெரிய வந்துள்ளது.
இத்தகையோர்களுக்கு மூளையை வளப்படுத்தும் ஒமேகா 3 நிறைந்த உணவு கொடுப்பதனால் அவர்களுடைய நடத்தையில் மாற்றம் கொண்டு வர இயலும் என அவர் தெரிவிக்கிறார். மேலும், அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவுவது இல்லை என்ற பழமொழி இவர்களுக்கு பொருந்துவதில்லை. மாறாக, நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது தொட்டே கற்று கொடுத்து வருவதே அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதை காட்டிலும் மிக சிறந்தது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
*
கண்டிப்பு பிள்ளைகளிடத்தில் முதலில் பயத்தை ஏற்படுத்தி அதன்பின் வெறுப்பை ஏற்படுத்தும்..... இவர் யார் என்னை கட்டுப்படுத்த என்ற கோபம் பிறக்கும்.... அதிலிருந்து தான் எல்லா பிரச்சனைகளுக்கும் வழி காமிக்கும்...
அதனால் கண்டிப்புடன் இருப்பதை விட அன்புடன் அரவணைத்து நடத்தி சென்றால் எப்படிப்பட்ட குழந்தையும் அன்புக்கு கண்டிப்பாக கட்டுப்படும்..
by-மஞ்சு அக்கா
***
thanks ஈகரை
***
"வாழ்க வளமுடன்"
1 comments:
/// FOOD கூறியது...
//நல்ல பழக்க வழக்கங்களை சிறு வயது தொட்டே கற்று கொடுத்து வருவதே அவர்களை தண்டனைக்கு உட்படுத்துவதை காட்டிலும் மிக சிறந்தது என்றும் அந்த ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.//
நிஜம்தானே!
////
நன்றி food :)
கருத்துரையிடுக