...

"வாழ்க வளமுடன்"

11 ஜூலை, 2011

பிஸ்தா பருப்பின் ஸ்வீட்டு & சமையல் ( part - 3 )

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்
பிஸ்தா ஜாமூன்






வண்ணங்கள், வட்ட வட்டமாக சுற்றிவரும் பிஸ்தா ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார் சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.

தேவையானவை:




•இனிப்பில்லாத கோவா - 100 கிராம்

•பிஸ்தா 25 கிராம்

•சர்க்கரை - 200 கிராம்

•வெண்ணெய் அல்லது நெய் - ஒரு ஸ்பூன்.


செய்முறை:


•பிஸ்தா மற்றும் பாதியளவு சர்க்கரையை மிக்சியில் தனித்தனியாக மாவாக அரைக்க வேண்டும்.




•வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்தால் மெல்ல இளகும். சர்க்கரை நிறம் மாறக்கூடாது. இதனுடன் கோவாவை சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.




•வாணலியின் ஓரத்தில் கலவையை ஒட்ட வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.




•பிஸ்தா, சர்க்கரை மாவை ஒன்றாக பிசையும் போது ஒன்றோடொன்று ஒட்டி பச்சை நிறமாக மாறும்.





•இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.





•சமதளமான பரப்பில் நெய் தடவி, அதன் மேல் கோவா கலவையை பரப்பி சமமாக தேய்க்க வேண்டும்.





•அதன்மேல் பிஸ்தா கலவையை மெலிதாக பரப்பி, இரண்டையும் சேர்த்து இறுக்கமாக உருட்ட வேண்டும்.




•இதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருந்து, தேவைப்படும் வடிவத்தில் கத்தியால் வெட்டி பரிமாறலாம்.





•வெளியே இளமஞ்சள், உள்ளே பச்சைநிறம் என வித்தியாசமாக இருக்கும்.





•பிஸ்தாவை மெலிதாக சீவி மேலாக அலங்கரிக்கலாம்.



***
thanks தினமலர்
***


பிஸ்தா முந்திரி சாண்ட்விச் பிஸ்தா முந்திரி சாண்ட்விச்



தேவையானவை

பிஸ்தா - அரை கப்
சர்க்கரை - கால் கப்
ஏலக்காய்தூள் - அரை டீஸ்பூன்
புட் கலர் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 3 டேபிள்ஸ்பூன்
பாதாம், முந்திரி, வால்நட் போன்ற டிரை ஃப்ரூட்ஸ் - அரை கப்
குங்குமப்பூ - சிறிதளவு


செய்முறை

டிரை ஃப்ரூட்ஸை துண்டுகளாக உடைத்துக்கொள்ளவும். பிஸ்தாவை அரை கப் தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியவுடன் மேலே உள்ள தோலை உரித்து, பருப்பை மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.


சர்க்கரை மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, அதில் அரைத்த பிஸ்தா விழுது, ஏலக்காய் தூள் போட்டு, கடாயின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது தட்டில் கொட்டி, வட்ட வட்ட வில்லைகளாக வெட்டி எடுக்கவும்.


வேறு ஒரு பாத்திரத்தில் 3 டேபிள்ஸ்பூன் சர்க்கரையைப் போட்டு, அது மூழ்கும் வரை நீர் ஊற்றி, கம்பிப் பதத்தில் பாகு வைத்து, அதில் பொடித்த டிரை ஃப்ரூட்ஸ், குங்குமப்பூ ஆகியவற்றைக் கலந்து ஆறவிடவும்.


இப்போது இரண்டு பிஸ்தா வில்லைகளுக்கு நடுவில் இந்த டிரை ஃப்ரூட்ஸ் கலவையை வைத்து, அரை மணி நேரம் வைக்கவும். நன்றாக செட் ஆனதும், எடுத்துப் பரிமாறவும்.


***
thanks tamilkurinji
***


பிஸ்தா கீர் - pista kheer






கீர் பல வகையாக தயாரிக்கலாம். இது சிம்பிளாக அரைத்து செய்யும் கீர் இதில் நெய் கூட சேர்க்கவில்லை. டயபட்டீஸ் உள்ளவர்கள் கூட இதை லோ பேட் பாலில் செய்து சுகர் பிரி சேர்த்து செய்து சாப்பிடலாம். இது வாய் புண் மற்றும் வயிற்று புண் உள்ளவர்களுக்கு வெரும் பஞ்சி தோசைக்கு வைத்து கொடுக்க்லாம், மெயினாக குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதை பிஸ்தா சேர்க்காமல் வெரும் பாலில் ரவை சேர்த்தும் செய்யலாம்.


தேவையானவை


பிஸ்தா – 25 கிராம்
அரி்ி - 1 மேசை கரண்டி
பிஸ்தா – பொடியாக அரிந்த்து (ஒரு மேசை கரண்டி)
பால் - அரை லிட்டர்
ரவை – ஒரு மேசை கரண்டி
ஏலக்காய் – 2
பிஸ்தா எஸன்ஸ் – ஒரு துளி
சர்க்கரை – 50 கிராம்
கண்டென்ஸ்ட் மில்க் – சிறிய டின்


செய்முறை




அரிசியை 10 நிமிடம் ஊறவைக்கவும், பிஸ்தாவை வெண்ணீரில் 5 நிமிடம் ஊறவைத்து தோலை எடுக்கவும்.
பிஸ்தாவையும் , அரிசியையும் அரைத்து எடுக்கவும்।


பாலில் ஏலக்காய் சேர்த்து கொதிக்கவைத்து அரைத்த பேஸ்டை சேர்க்கவும்.




தீயின் தனலை குறைத்து ரவை தூவி கட்டி இல்லாமல் கிளறவும்.


கொதித்து திக்காகும் போது ஒரு துளி பிஸ்தா எஸன்ஸ் ஊற்றி பொடியாக




அரிந்த பிஸ்தாவை தூவி இரக்கவும்.



தோசை ,குட்டி பன்னுடன் சாப்பிட அருமையாக இருக்கும்



***
thanks rajendraa.blogspot.com
***




பிஸ்தா பருப்பின் ஸ்வீட்டு & சமையல் குறிப்புகளை எடுத்த தளத்திற்க்கு மிக்க நன்றி........


:)


***



"வாழ்க வளமுடன்"

இந்த வலைப்பதிவில் தேடு

தமிழில் எழுத உதவும் தூண்டில்

வானம் வசப்படும்

" முன்னேறு நண்பா முன்னேறு. நீ ஒவ்வொரு அடியும் ( கால் தடம் ) முன்னே எடுத்து வைக்கும் போது வெற்றி உன் வசப்படும் "