இன்னொரு படம் சின்ன வயசு காதல் சினிமால வர்ற ஹீரோ, ஹீரோயினுக்கு லெட்டர் தர்ற மாதிரியான சீன் பாத்து இவங்களுக்கும் அதே ஆசை. அதை அப்படியே செய்து பாக்குறாங்க.. இதுல சின்ன பசங்கள குறை சொல்ல முடியாது. அவங்களுக்கு முன்னாடி நாம எப்படி நடந்துக்கணும்ன்னு பெற்றவர்களும், சமூகமும் தான் புரிந்து நடக்க வேண்டும்..
*
பக்கத்து வீட்டு அக்கா, நேற்று மாலை வந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். ஏனோ முகம் மட்டும் வாடி இருந்தது.. கொஞ்சம் தனியாக அழைத்து விஷயம் என்ன வென்று கேட்க. அவர்கள் சொன்னதை கேட்டு அதிர்ந்தேன். அக்காவின் ஒரே பையன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான். எப்போதும் "சுட்டி டிவி" மட்டுமே பார்க்கும் பழக்கம் உள்ளவன். படிப்பிலும் படுசுட்டி..
*
ஒரு நாள் இரவு 8.15 -க்கு அவன் டிவி பார்த்து கொண்டிருக்க, அந்த பக்கம் வந்த அக்கா எதேச்சையாக டிவி பக்கம் கவனம் செலுத்தி உள்ளார். அதில் ஒரு கணவன் மனைவியுடன் படுக்கை அறையில் இருக்கும் காட்சி ஒளிபரப்பாகி கொண்டு இருந்திருக்கிறது. ஏதோ மொழி பெயர்ப்பு படம் என்று அக்கா புரிந்து கொண்டார். அதில் அடுத்த சீன்.. அவர்களின் குழந்தை வந்து கதவை தட்ட.. அந்த பெற்றோர் கதவை திறக்காமல் உள்ளேயே இருந்திருக்கிறார்கள்.
*
உடனே அந்த பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று கூறிவிட்டு போய் விட்டானாம்.. அவன் சலித்துக் கொண்ட விதமே அக்காவுக்கு விபரீதத்தை உணர்த்தி இருக்கிறது.. உடன் சென்று டிவியை அனைத்து விட்டு தூங்கு போய் என்று சொல்லிவிட்டு இனி மொழி பெயர்ப்பு படங்களை பார்க்க அனுமதிக்க கூடாது என்று முடிவு செய்து இருக்கிறார்கள்.
*
ஆனால் அதற்கு மறுநாள் மாலை அக்காவின் கணவர் உறங்கி கொண்டிருக்க. அக்கா ஒரு திருமணத்திற்கு போவதற்காக உடை மாற்ற கதவை தாழ் போட்டிருக்கிறார். பள்ளி விட்டு வந்த பையன் கதவை தட தட வென தட்டி இருக்கிறான்.. அக்கா இருடா வர்றேன் அம்மா டிரஸ் மாத்துறேன்னு சொன்னதும் பையன் "ச்சீ.. இவர்களுக்கு கதவை திறக்க கூட நேரம் இல்லை" என்று அதே வசனத்தை சொல்லி பின் அன்று முழுதும் கோபமாகவே இருந்தானாம்..
*
குழந்தைகளுக்கான சேனல் தானே என்று பார்க்க விட்டது தவறு என்று புலம்புகிறார். தவறு யார் மீது? சுட்டி டிவி மீதா? அதை பார்க்க அனுமதித்த பெற்றோர் மீதா? பார்த்து அதை அப்படியே செயல் படுத்திய குழந்தை மீதா?
*
குழந்தைகளுக்கான படம் தான் எனினும், தேவை இல்லாத காட்சிகளை நீக்கி விட்டு ஒளிபரப்பு செய்யலாமே. செய்வார்களா? *** thanks வ்யாஹரி ***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக