இதை நீங்கள்
வது நபராக வாசிக்கிறீர்கள்
இன்றைய அவசர உலகில் மூன்று வயது குட்டி முதல் முதியவர் வரை அனைவருமே பரபரவென இயங்கிக் கொண்டிருக்கும் சூழல்.ஆதலால், உணவு, உடை மற்றும் இத்யாதிகள் அனைத்திலுமே பாஸ்ட் கலாச்சாரத்துக்கு மாறிவருகிறோம். அதை போலவே உடலின் ஆரோக்கியமும் வேகமாக கெட்டு வருகிறது. இதன் முதல் படிதான் உடல் குண்டாவது. இப்படி உடம்பு குண்டாகும்போது அது நோய்த்தாக்குதலுக்கு ஏதுவாக அமைகிறது.
*
ஆனால் எல்லாருக்குமே ஒல்லியாக உடம்பு அமையவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பட்டினி கிடந்தால் குண்டு உடல் குறைந்து விடும் என்று நினைப்பது தவறு. இதனால் உடலில் வேறு ஏதாவது நோய் ஏற்படும். ஆதலால் குறைந்த அளவில் சாப்பிடுங்கள்.
*
சரியான முறையான உடற்பயிற்சியை செய்து வர வேண்டும். மிகவும் கடினமான பயிற்சிகள் வேண்டாம். எளிமையான பயிற்சிகளை வீட்டில் இருந்தே பண்ணலாம். வீட்டுக்குள்ளேயே நடைப் பயிற்சி செய்யலாம். அதேபோல், வீட்டு வேலைகளுக்கு எவ்வித எந்திரத்தையும் பயன்படுத்தாமல் நீங்களாகவே செய்யலாம்.
*
துணி துவைப்பது, மாவாட்டுவது என உடலை இயக்கும் வேலைகளை செய்யுங்கள். உடற்பயிற்சியை முறையாகத் தொடர்ந்து செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் வலியோ, வேறு விதமான பிரச்சினைகளோ ஏற்படுவதில்லை.
*
உடல் வியர்க்கும் அளவுக்கு உடற்பயிற்சி செய்தால் போதும். இதய துடிப்பு உயரும். அதேபோல் சாப்பாட்டு விஷயத்தில் சில விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்.முதலில் நேரம் தவறாமல் சாப்பிடப் பழகுங்கள். தினமும் குறிப்பிட்ட அளவை சாப்பிடப் பழகுங்கள். அதாவது ஒருநாள் நன்றாக பசிக்குது என்பதற்காக அளவுக்கு அதிகமாக சாப்பிட வேண்டாம்.
*
இடையில் பசி எடுக்கும்போது... வீணாக சிப்ஸ், பிட்சா என கண்டதையும் வாங்கி சாப்பிடாதீர்கள். பசி எடுக்கும்போதே பழங்கள், ஜூஸ் என்று சாப்பிடுங்கள்.அசைவ உணவு வகைகளை தேர்ந்தெடுத்து குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. அதாவது சிக்கன், மட்டன் வகை உணவுகளில் கொழுப்பு, எண்ணை தவிர்த்து, வேகவைத்து சாப்பிடலாம். மீன் வகையில் பொரித்த... வறுத்த ஐட்டங்களை தவிர்க்கலாம்.
*
தினமும் குறிப்பிட்ட தூரம் வரை நடந்து செல்லுங்கள். காலையில் நடப்பது நல்லது... முடியாவிட்டால் அந்தி சாய்ந்த மாலையிலும் நடக்கலாம். கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகப்படுத்தலாம்.
*
எக்காரணம் கொண்டும் எண்ணை பொருட்களை சாப்பிடவேண்டாம். குறிப்பாக எண்ணையில் பொரிக்கும் அனைத்து வகைகளையும் தவிர்ப்பதே மிகவும் நல்லது.பால் வகை உணவுகளையும் தவிர்க்கலாம். ப்ரைடு, பப்ஸ், சமோசா போன்ற உணவுகளையும் தவிர்த்து தினமும் வாழைப் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள்.
*
உங்களுடைய வயது, உயரத்துக்கு தகுந்த எடை எவ்வளவு என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அடிக்கடி உங்களுடைய எடை என்ன என்பதை கவனியுங்கள். கொஞ்சம் கூடினாலும் உடனே குறைக்க முயற்சியுங்கள்.ஆறு மாதத்திற்கு ஒரு முறை உங்களுடைய உடம்பை முழு மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். ஏதாவது மாத்திரை, மருந்து சாப்பிடுவதாக இருந்தால் உங்களுடைய எடை அதிகமாகாமல் டாக்டரிடம் ஆலோசனை செய்யுங்கள்.
*
இரவு நேரத்தில் வேலை பார்க்கும் சில பெண்களுக்கு உணவு, உறக்கம் ஆகிய பழக்கம் மாறும். இவர்களுக்கு சீக்கிரமே உடலில் எடை கூடும். இவர்கள் உணவு விஷயத்தில் கொஞ்சம் கட்டுப்பாடாக இருப்பது நல்லது.
***
thanks இணையம்
***
"வாழ்க வளமுடன்"
0 comments:
கருத்துரையிடுக